தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
தொடர்பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொடர்பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, மார்ச் 11, 2023
வியாழன், மார்ச் 09, 2023
செவ்வாய், மார்ச் 07, 2023
ஞாயிறு, மார்ச் 05, 2023
வெள்ளி, மார்ச் 03, 2023
விவாஹ(M)ரத்து (1)
அரேபியர்கள் ஒன்று முதல்
மூன்று வரை திருமணம் செய்து கொள்கிறார்கள் இது சரியா ? தவறா ? என்ற உள் விபரங்களுக்குள் தயவு செய்து போக வேண்டாம்
என்பதை முன் கூட்டியே நண்பர்களிடம் கேட்டுக் கொள்கிறேன் காரணம் அது வேறு விதமான
பிரச்சனைக்கு வழி வகுத்து விடும் பிறகு இந்த பதிவு எதற்கு ? எமது எமராத் வாழ்வில் தெரிந்து கொண்ட
அனுபவத்தை தங்களுடன் பகிர்கின்றேன் என்பதே குறிக்கோள்.
வியாழன், ஆகஸ்ட் 11, 2022
திங்கள், ஆகஸ்ட் 08, 2022
அண்ணன் நாகேந்திரன் (3)
முந்தைய தொடர்ச்சிகளை படிக்க
கீழே சொடுக்குக...
முன்பு...
ம்ம்.. சிங்கம் போல் உட்காந்திருந்தேன்....
சொல்லுங்க கில்லர்ஜி... ?
இல்லைணே
இனிமே உண்மையான பெயரையே சொல்லிடுறேன்.
இனி சொல்றது இருக்கட்டும் மேனேஜர் வரும்போது இவளுகள் இப்படி கூப்பிட்டால் ?
அவளுகள்ட்ட
சொல்லுங்கண்ணே அப்படி சொல்லக் கூடாதுனு...
வியாழன், ஆகஸ்ட் 04, 2022
அண்ணன் நாகேந்திரன் (2)
முந்தைய தொடர்ச்சியை படிக்க
கீழே சொடுக்குக...
முன்பு...
ஆங்... சூப்பர்வைசர் நாகேந்திரன் வந்து கொண்டிருந்தார்....
வேகமாக, நண்பர்கள் நிற்கும் இடத்தை நோக்கி போய்க் கொண்டிருந்தேன் நர்சிங்
ஸ்டேஷன் வளைவில் சூப்பர்வைசர் நாகேந்திரன் கில்லர்ஜி என்று பக்கத்தில் ஸ்டோர்
ரூமுக்குள் அழைத்தார்.
திங்கள், ஆகஸ்ட் 01, 2022
அண்ணன் நாகேந்திரன் (1)
உண்மைச்சம்பவம் 1996 அபுதாபி அல் முனியாண்டி மருத்துவமனை.
வார்டு மூன்று பேஷண்ட் ரூம் லேபர்கள் நான்கு பேருக்கும் ஏற்கனவே பிலிப்பைன்ஸ் (பெயர் லூஸ்வி மிண்டா) லேடீஸிடம் (Yours Hero) சொல்லி விட்டுச் சென்றதால் அவள் ட்ரேயில் கொண்டு வந்து தந்த ஐந்து தேநீரில்
நான்கு பேரும் எடுத்துக் கொள்ள மீதம் ஒன்று இருக்க.... சூப்பர்வைசர் திரு. நாகேந்திரன் வந்து விடுகிறார் அவளிடம்
ஆங்கிலத்தில் கேட்கிறார்...
வெள்ளி, டிசம்பர் 06, 2019
குயிலகம் (4)
பதிவின்
முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...
முகிலன் வருங்கால மாமனார், மாமியார், மைத்துனர்களிடம் கும்பிட்டு சொல்லி விட்டு நேராக ஜனனி அருகில் போனான் பக்கத்தில் நின்றிருந்த தோழிகள் சற்றே விலகி நின்றார்கள்
ஞாயிறு, டிசம்பர் 01, 2019
குயிலகம் (3)
பதிவின்
முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...
வெள்ளி மீசை
சொன்னது
என்னப்பா இது
மாப்ளேதான் பெண்ணுகிட்டே தனியா பேசுவார்னு பார்த்தால் மாமியாரும், மாமனாரும்
பேசுறாங்க ஹா... ஹா... ஹா... மாப்ளே நல்லா ஜாலியான ஆளுதான்
மரகதவள்ளி தட்டில்
பஜ்ஜியை மீண்டும் எடுத்து வைத்து...
தம்பி
சாப்பிடுங்கப்பா
இல்லை போதும்
நிறைய சாப்பிட்டாச்சு
தம்பி நீங்களும்
சாப்பிடுங்க
திங்கள், நவம்பர் 25, 2019
குயிலகம் (2)
பதிவின்
முந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக...
‘’ஜனனி’’
ஜனனி சட்டென நிமிர்ந்து பார்த்தாள் அவன் தனது பெயரை முதன்முறையாக அழைத்தது ஒரு பரவசத்தை தூண்டியது காரணம் அவளும் முகிலனை கணவனாகவே ஏற்றுக்கொண்டு விட்டாள் இனி வேறொரு ஆடவன் வேண்டாம் மேலும் தனது குடும்பத்தில் அப்பா, அம்மா, பாசமான அண்ணன்கள், அண்ணிகள், தம்பி அப்பத்தாள் அனைவருக்கும் மகிழ்ச்சி என்றால் நமக்கும் மகிழ்ச்சிதானே...
ஜனனி சட்டென நிமிர்ந்து பார்த்தாள் அவன் தனது பெயரை முதன்முறையாக அழைத்தது ஒரு பரவசத்தை தூண்டியது காரணம் அவளும் முகிலனை கணவனாகவே ஏற்றுக்கொண்டு விட்டாள் இனி வேறொரு ஆடவன் வேண்டாம் மேலும் தனது குடும்பத்தில் அப்பா, அம்மா, பாசமான அண்ணன்கள், அண்ணிகள், தம்பி அப்பத்தாள் அனைவருக்கும் மகிழ்ச்சி என்றால் நமக்கும் மகிழ்ச்சிதானே...
செவ்வாய், நவம்பர் 19, 2019
குயிலகம் (1)
அந்த நடுத்தர வர்க்கமான வீடு சந்தோஷத்தில் குளிதித்துக் இருந்தது காரணம் ஜனனியை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் மாப்பிள்ளை முகிலனோடு முறையாக வந்து பந்துக்களோடு ஹாலில் உட்கார்ந்து இருக்கின்றார்கள். முகிலன் டி.சி.ஓ.சி வங்கியில் மேலாளராக நல்லதொரு சம்பளத்தில் இருக்கிறான் அழகானவன் அவனுடைய மீசையை ஒரு சாயலில் பார்க்கும்போது வலைப்பதிவர் கில்லர்ஜியைப் போலவே இருப்பான்.
வியாழன், ஆகஸ்ட் 29, 2019
மூஸாலி கோயில் (8)
முந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக...
‘’அய்யோ... ஆத்தா...’’ சிவமணியின் அலறல் சத்தம் கேட்டு வடங்காடு கிராமமே எழுந்திருக்கும் அப்படியொரு
அலறல் அவனது கயிற்றுக் கட்டிலுக்கு அருகில் பாயை விரித்து படுத்துக் கிடந்த அவனது
ஆத்தா வீராயி திடுக்கிட்டு எழுந்து சிமிழி விளக்கை ஏற்றி விட்டு, ஏண்டா பேதியில
போக பொழுது சாய்ஞ்சா கணாக் கண்டுக்கிட்டு கத்தி ஊரைக்கூட்டுறியே எருமை மாடு நல்லா
பொழிகழுதை மாதிரி தின்னுப்புட்டு ஊரைச்சுத்துறியே... நான் காடு கரையில வேலை
செஞ்சுட்டு வந்து ஒனக்கு கஞ்சி ஊத்துறேன்ல.. என்னைச் சொல்லணும் காலாகாலத்துல
ஒனக்கு ஒரு கால்கட்டு போட்டாத்தான் நீ சரிப்பட்டு வருவே நாளைக்கே போறேன்
வலசைக்காட்டுக்கு எந்தம்பி மக கோமளவள்ளிய பரிசம் போட...
திங்கள், ஆகஸ்ட் 26, 2019
மூஸாலி கோயில் (7)
முந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக...
அந்தரத்திலிருந்து இறங்கிய
தேவகோட்டை தேவையறிந்த தேவதை அம்மனைக் கண்டதும் மீண்டும் உயிர் வந்ததைப்போல்
உணர்ந்தான் சிவமணி ஆஹா முகமே தெரியவில்லையே உடைகள் மட்டுமே பறக்கின்றது ஆண் முகம்
போலவும் இருக்கின்றதே எப்படியோ இனி நமக்கு விடுதலை விடுதலை விடுதலை அனைவரும்
நடுங்கிக் கொண்டு நின்றார்கள் தேவதை சிவமணிக்கு முன்னால் இறங்கி நின்றது சுடிதார்
போன்ற உடையணிந்து எவ்வளவு அழகான முகம் தேவகோட்டை அல்லவா ஆணோ, பெண்ணோ எல்லோருமே
அழகாகத்தானே இருக்கின்றார்கள் அப்படியானால் தெய்வமும் அழகாய்த்தான் இருக்கும்
அதுவும் காக்கும் கடவுளாயிற்றே... கனிவான முகத்தைக் காட்டிய தேவதை சடக்கென்று
திரும்பிக் கூட்டத்தைப் பார்த்துக் கேட்டது...
வெள்ளி, ஆகஸ்ட் 23, 2019
மூஸாலி கோயில் (6)
முந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக...
சட்டீரென முகத்தில்
தண்ணீர் அடிக்கப்பட மயக்கத்திலிருந்த சிவமணி கண் விழித்தான் தாகம் எடுக்க
முகத்தில் அடித்த தண்ணீரை நாவால் ஈரப்படுத்திக் கொண்டான் எதிரே ஒருவன்
வேப்பங்கொத்தை வைத்து சிவமணி உடல் முழுவதும் நீவி விட்டு ஒதுங்கி நிற்க தலைவன்
கத்தினான்.
செவ்வாய், ஆகஸ்ட் 20, 2019
மூஸாலி கோயில் (5)
முந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக...
சிவமணி பயந்து நடுங்கி
கொண்டு இருக்க அந்த உருவம் அசைந்து அசைந்து அவனருகில் வந்தது அவனுக்கு முன்புறம்
நின்று வானத்தை நோக்கி யானையைப் போன்றே பிளிர அந்த உருவத்துக்குப் பின்னால்
வெள்ளையாக ஒளிவட்டம் சிவமணிக்கு சர்வநாடியும் ஒடுங்கி விட்டது அருகில் அவனின்
பக்கத்தில் மண்டியிட்டு உட்கார்ந்தது
சனி, ஆகஸ்ட் 17, 2019
புதன், ஆகஸ்ட் 14, 2019
மூஸாலி கோயில் (3)
முந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக...
கண் விழித்த சிவமணிக்கு
கண்கள் கூசியது காரணம் சூரிய ஒளி. விடிந்து விட்டது திறந்த வெளியில் தன்னை தரையில்
பரப்பி படுக்க வைத்து கை கால்களை கட்டியிருந்தார்கள் உடம்பு முழுவதும் கருப்பு
நிறத்தில் மையை தடவி இருந்தார்கள் எதிரே பார்த்தான் இதுதான் மூஸாலி கோயிலோ
கையெடுத்து வணங்கி வேண்ட வேண்டும் போல் இருந்தது கைகள் கட்டப்பட்டு இருக்கிறதே..
பக்கத்தில் வெள்ளை உடையணிந்த ஒருவன் ஏதோ செய்து கொண்டிருந்தான் சூழ்நிலையை
பார்க்கும் பொழுது இரவு முழுவதும் ஏதோ பூஜை நடந்திருக்கின்றது என்பதை உணர
முடிந்தது நேற்றிரவு நமது குருதியைக் குடிக்க சண்டை போட்டவர்களில் ஒருவனைக் காணோமே
ஒருவேளை அவனை இவன் கொன்று விட்டானோ ?
ஞாயிறு, ஆகஸ்ட் 11, 2019
மூஸாலி கோயில் (2)
முந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக...
தவசியைக் காணவில்லை
சிவமணிக்கு உடல் முழுவதும் ஒரு நொடியில் வியர்த்தது தவசி தவசி என்று அலறி விட அந்த
சத்தம் மலையில் எதிர் முகட்டிலிருந்து எதிரொலித்து மீண்டும் இவன் காதுக்கே வந்து
பயமுறுத்த என்ன செய்யலாம் யோசித்தவன் அப்படியே கீழே உட்காரந்து கண்களை
மூடிக்கொண்டு தனது குலதெய்வம் குலோத்துங்கன் சாமியை வேண்டினான் சாமி நீ என்னை
மட்டும் வீட்டுக்கு பத்திரமாய் கொண்டு போயிட்டா இந்த வருஷம் களரிக்கு கிடா
வெட்டுறேன்... மனதுக்குள் இப்படியே நினைத்துக் கொண்டு இருந்தவனுக்கு திடீரென
தூக்கி வாரிப்போட்டது காரணம்.
%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20(5).jpg)
%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20(4).jpg)
%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20(2).png)
%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20(1).jpg)
.jpg)










