தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
வியாழன், மே 30, 2019
வெள்ளி, மே 24, 2019
செல்வியின் கணவன்
முந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக...
தெருவில் நுழையும் பொழுதே கேட்கும் தனது
கணவரின் பைக் சத்தம் இந்நேரம் கேட்கின்றதே... பக்கத்து வீட்டு பரிமளாவுடன்
பேசிக்கொண்டு இருந்த செல்வி வெளியே வந்து எட்டிப் பார்க்க, தனது கணவர் வருவதைக்
கண்டதும் பரிமளாவிடம் சொல்லி விட்டு தனது வீட்டின் கேட்டைத் திறந்து விட்டு
வீட்டைத்திறந்து உள்ளே சென்றதும் ஆச்சரியமாக...
என்னங்க அதிசயமா இருக்கு சீக்கிரமே
வந்துட்டீங்க.... ?
இல்லை செல்வி தலை வலிச்சது அதான் சொல்லிட்டு
வந்துட்டேன்.
சரி ட்ரெஸ் மாத்துங்க காஃபி போட்டு வாறேன்.
வேண்டாம் காஃபி அப்புறமா சாப்பிடலாம் ராஜு
வரலையா ?