முதல்வராக இருந்தவர்கள்,
இருக்கப் போகின்றவர்கள் இவர்கள் சில நேரங்களில் எதிர்க்கட்சித் தலைவர்களாக
இருந்திருக்கின்றார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயமே... ஆனால் இவர்கள் அந்த நேரங்களில் சட்டசபைக்கு போய் இருக்கின்றார்களா ? போகவில்லையே ஏன் ? இவர்கள்
முதல்வராகத்தான் போவார்களோ ? இப்படிப்பட்டவர்களுக்கு
நாம் மீண்டும் வாக்களிக்காமல் ரிவிட் அடித்தால் என்ன ? நாம் செய்யமாட்டோம் இந்த நேரத்தில் எனக்கு நண்பர் திரு.
ஜார்ஜ் புஷ் சொன்ன அமெரிக்க பழமொழி நினைவுக்கு வருகின்றது ‘’Peat the rivet again not coming Political
man’’ உண்மைதானே
இதனால்தான் இவர்கள் தைரியமாக எதிரிக்கட்சித் தலைவராக ஆனதும் சட்டசபை செல்வதில்லை.
ஐயா திரு. ஜியெம்பி அவர்கள் சொல்வதைப் போல இவர்கள் மக்களின் நாடித்துடிப்பை
நன்கறிந்த மருத்துவர்களே.... (நான் மருத்துவர் திரு. ராமதாஸ் அவர்களை
சொல்லவில்லை) கொஞ்சம் சிந்தித்து
பாருங்கள் எவ்வளவு நெஞ்சழுத்தம் இவர்களுக்கு காரணம் என்ன ?
இப்பொழுது ஓட்டு
வாங்குவதற்காக டாஸ்மாக்கை மூடப் போகின்றார்களாம் இதற்குத்தானே தோழர் திரு. கோவன்
குரல் கொடுத்தார் இதற்காகத்தானே அவரை கைது செய்தார்கள் நள்ளிரவில் கைது செய்ய
வேண்டிய அவசியம் அவர் தீவிரவாதியா ? அவரென்ன திரு. விஜய்
மல்லையா போன்று வசதி படைத்தவரா ? விமானத்தில் பறந்து
விடக்கூடியவரா ? மக்களே என்பதை மக்கழே என்று உச்சரிப்பவனைக்கூட
தலைவனாக ஏற்றுக்கொண்டது தமிழனுக்கு இழுக்கல்லவா... !
இந்த அரசியல் வியாதிகள் அனைவருக்குமே தாம்
பேசுவது அனைத்தும் அக்மார்க் பொய் என்பது தெரியும் இருப்பினும் அவர்கள்
பேசுகின்றார்கள் காரணமென்ன ? கொளுத்தும் வெயிலிலும் காத்து
நிற்கின்றீர்களே.... இதுதான். அரசியல்வாதிகள் வரும் பொழுது ஒரேயொரு முறை யாருமே
போகாமல் இருந்து பாருங்கள் குடியா முழுகிப் போய்விடும் அவர்கள் சிந்திக்க
ஆரம்பித்து விடுவார்கள் போவதால்தான் நமது குடி மூழ்கி கொண்டு இருக்கின்றது
டாஸ்மாக்கை இன்று தொடங்கினால் தேர்தலின் முதல் நாளுக்குள் மொத்தமாக மூடிவிட முடியாதா ? முடியும் ஆனால் மூடமாட்டார்கள் மற்றொரு கோஷ்டி நாங்கள்
ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடி விடுவோம் என்று கூவுகின்றது திறந்து விட்டதே
இவர்கள்தானே தேர்தலுக்கு தேர்தல் ஒரு கட்சியில் கூட்டணி வைக்கின்றார்களே இவர்களை
டெபாசிட் இழக்க வைக்கவேண்டும்.
இந்த தேர்தலில் தலைவர்களை
அனைவரையுமே தோற்கடிக்க வைக்கவேண்டும் அப்பொழுதுதான் அடுத்த நமது சந்ததிகளுக்கு
நல்ல வாழ்க்கை அமையலாம் வேட்பாளர்கள் அந்த தொகுதிக்குள் பிறந்து வளர்ந்தவராக
இருக்க வேண்டும் அவர் சுயேட்சையாக இருந்தால் என்ன ? அவருக்கு வாக்களிக்க கூடாதா ? மேலூரில் பிறந்து வளர்ந்த கிராமராஜன் திருச்செந்தூரின்
கடலோரத்தில் வெற்றி பெற்றார் அந்த தொகுதி மக்களுக்கு பலன் கிடைத்ததா ? இதன்
காரணமென்ன ? அவர் சினிமா நடிகர் நன்றாக பால் கறப்பார்
என்பதால்தானே.... இந்த அறியாமை என்று ஒழிகின்றதோ அன்றுதான் அக்கம் பக்கத்து
மாநிலத்தான் தமிழனை மதிப்பான் அவன் தமிழனை என்ன நினைக்கின்றான் என்பது அயல்
தேசத்தில் வாழும் தமிழர்களுக்கே தெரியும்.
கட்சியை மறந்து, ஜாதியை மறந்து மனிதனை
நினைத்து வாக்களிப்போம் வாக்களிக்க விருப்பம் இல்லையா ? இதோ
இருக்கின்றது நோட்டோ அதற்கு முத்திரை பதியுங்கள் கண்டிப்பாக நோட்டோவுக்கு பதியுங்கள்
இல்லாவிடில் தேசத்துரோகிகள் நம்நாட்டில் நிறைய உண்டு அவர்கள் உங்களது வாக்குகளை
பயன் படுத்தி விடலாம் நாடறிந்த நடிகர் திரு. சிவாஜி கணேசன் அவர்களின் ஓட்டையே
போட்டவர்கள், இந்தியாவின் முதல் குடிமகன் என்ற நிலையிலிருந்த மறைந்த ஜனாதிபதி
திரு. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் சகோதரரின் ஓட்டையே போட்டவர்கள் நம்மவர்கள்
ஆகவே நோட்டோவை மறக்காதீர்.
வாக்காளப் பெருங்குடி மக்களே எதை
வேண்டுமானாலும் மறக்கலாம் ஆனால் குறிப்பாக சென்னை மக்கள் சமீபத்தில் வந்த
வெள்ளத்தை மறக்ககூடாது இதில் அனைத்து கட்சிக்காரர்களும் செய்த ஊழை வேலைகளை மறக்கவே
கூடாது அதிலும் சவப்பெட்டியில் ஸ்டிக்கர் ஒட்டியதை கண்டிப்பாக மறக்க கூடாது மக்களே
அதிகமாக சிந்திக்க வேண்டாம் தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல்வாதிகள்
மக்களைத்தேடி வருகின்றார்களே மற்ற நேரங்களில் வந்து மக்களின் குறைகளை கேட்டு
நிவர்த்தி செய்வதில்லையே ஏன் ? கேட்டால்
மக்களுக்கு சேவை செய்வதற்காக சட்டமன்றம் சென்றோம் என்பார்கள் தேர்தல் அறிவித்த
நாள்முதல் தமிழக சட்டமன்றம் திண்டுக்கல் பூட்டு போட்டு இருக்கின்றதாமே...
இப்பொழுது மக்களுக்கு சேவை செய்வது யார் ?
இதை
மட்டும் யோசியுங்கள் மாநிலங்களிலேயே மொழியின் பெயரைக் கொண்டது நமது தமிழ்நாடு மற்ற
மாநிலத்துக்கு இல்லாத பெருமை சமீபத்தில்தான் தெலுகுதேசம் என்று உருவானது ஆகவே...
இனியாவது தமிழ்நாட்டை தமிழன் ஆள்வதற்கு வழியென்ன ? கொஞ்சம்
சிந்திப்போம் இந்த சிந்தனை நமக்காக அல்ல ! மாற்றம் என்பது உடன் நிகழ்ந்து விடும் செயலும்
அல்ல ! அதற்கு காலஅவகாசம்
வேண்டும் எப்பொழுதுமே மரத்தை நட்டவன் கனியை சுவைப்பதில்லை இன்று நமது சிந்தனையை
தொடங்கினால் நாளைய நமது சந்ததிகள் வாழலாம் நாம் சொத்து சேர்த்து வைக்கத் துடிப்பது
நமது சந்ததிகளுக்காகத்தானே முதலில் அவர்களை மானமுள்ள தமிழனாக வாழ வைப்போம் பிறகு
மற்றதை அவர்கள் தேடிக் கொள்வார்கள் - கில்லர்ஜி
காணொளி