சிலர் ஆபூர்வமான
சிந்தனையாளர்களாக இருப்பார்கள், சிலர் மிகவும் திறமையானவர்களாக இருப்பார்கள் இதைக்காணும்
நாம் நாமும் இவர்களைப் போல் முயன்றால் என்ன ? என்று தோன்றக்கூடும் எனக்கும் இப்படித்தான் இதோ கீழே காணும்
காணொளியில் இந்த ஜப்பான் நாட்டான் விசிட்டிங் கார்டை வைத்து செய்யும் வேலைகளைப்
பார்த்தேன் எனக்குள் ஒரு சந்தேகம், சந்தேகத்தை தீர்க்க இவன் யாரென இணையத்தில்
உலாவினால் அது பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்தது ஆம் இவன் ஜப்பான் நாட்டுக்காரனாக
இருந்தாலும் பூர்வீகம் இந்தியா, தமிழ்நாடு அதுவும் தேவகோட்டையாம் எனக்கு ஒரு
சந்தேகம் என்று சொன்னேன் அல்லவா அது இதோ இதேதான் நம்மூருக்காரன் இவ்வளவு
திறமைசாலியாக இருக்கின்றானே.... என்று சந்தோசப்பட்டு உடன் நாமும் இதனைப் போல்
செய்வோம் என்று நினைத்தேன் அதேநேரம் நாம் இவனைப் போல் செய்யாமல் வித்தியாசமாக
செய்வோமே என்று தோன்றியது காரணம் கில்லர்ஜி என்றாலே சராசரி நபர்களிடமிருந்து வேறு
படவேண்டும் அதனால்தான் வாழ்க்கை வீணாகப் போனது என்பது வேறு விடயம் சரி
விடயத்துக்கு வருவோம்.
01.இவன் என்ன செய்கின்றான் ? ஒருத்தியை காற்றுள்ள பலூனை உயரத்தில் வீசவைத்து
அதை விசிட்டிங் கார்டை வீசி உடைத்து எறிகின்றான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
பெரிய தீப்பந்தம் ஒன்று
கொளுத்தி வைத்துக் கொண்டு என்னருகே வீச சொன்னேன் பலூன் பக்கத்தில் வரவும் தீயைக் காட்டினேன் அதனைப்
போலவே டமார் என்ற சப்தத்துடன் வெடித்தது.
02.பிறகு கொக்ககோலா டின்னை
டேபிளின் மீது வைத்து விசிட்டிங் கார்டை வீசி கீழே சாய்க்கின்றான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
டேபிளில் பெப்ஸி டின்னை
வைத்து ஒரு அடி தூரத்திலிருந்து சுத்தியலை வீசினேன் அதனைப் போலவே சடார் என்று கீழே
விழுந்தது.
03.பிறகு சிறிய ப்ளாஸ்டிக்
டம்ளர்களை வரிசையாக அடுக்கி வைத்து விசிட்டிங் கார்டை வீசி கீழே சாய்க்கின்றான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
பெரிய சாம்பார் வாளிகளை
அடுக்கி வைத்து மண்வெட்டியை எடுத்து வீசினேன் அதனைப் போலவே சடச்சடவென்று கீழே
விழுந்தது.
04.பிறகு ஒரு டேபிளில்
மார்ல்போரோ சிகரெட்டை நிறுத்தி வைத்து விசிட்டிங் கார்டை வீசி கீழே
சாய்க்கின்றான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
முருகன் சுருட்டை ஒருவன்
வாயில் வைத்து சினிமாவில் காண்பிப்பது போல கையில் தீப்பந்தம் வைத்துக் கொண்டு
வாயில் பெட்ரோலை கொஞ்சம் வைத்துக் கொண்டு ஊதினேன் தீ சுருட்டை பிடித்தவன் முகத்தை
பதம் பார்த்து அவன் முகமே கருகி விட்டது.
05.பிறகு விசிட்டிங் கார்டை
பூட்டப்பட்ட கடைகளின் கண்ணாடி கதவுகளின் இடைவெளிக்குள் வீசி உள்ளே தள்ளினான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
அலுவலகத்தில் எனக்கு
கொடுத்திருந்த விசிட்டிங்க கார்டை அதைப் போலவே வீசினேன் வீசும் பொழுது கையில்
கட்டியிருந்த ராடோ வாட்ச் கழன்று கீழே விழுந்து உடைந்து விட்டது.
06.பிறகு ஒரு தக்காளியை
டேபிளில் வைத்து விசிட்டிங் கார்டை வீசி தக்காளியில் சொருகினான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
காய்கறிக் கடைக்குப் போய்
ஐந்து ரூபாய்க்காசை எடுத்து தக்காளியை நோக்கி வீச அது நேராக காய்கறிக் கடைக்கார
பொம்பளையில் கண்ணாம்பட்டையில் அடிக்க காய்கறி மார்க்கெட் சங்க நிர்வாகிகள்
அனைவரும் என்னை ஓட ஓட விரட்டி விட்டார்கள்.
07.
பிறகு மாடியில் திறந்திருந்த
விண்டோரை நோக்கி விசிட்டிங் கார்டை வீசி அதன் வழியே உள்ளே விழ வைத்தான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
பால்கனியில் நிற்கும்
பெண்ணை நோக்கி எனது விசிட்டிங் கார்டை வீச அவள் என்னை தவறாக புரிந்து கொண்டு
சட்டென மண்தொட்டியை எடுத்து எனது தலையில் போட்டு உடைத்து விட்டாள் எனக்கு
தலையெல்லாம் மண்ணு பிறகு வீட்டுப் போயி குளித்தேன்.
08.பிறகு டேபிளில் எரிந்து
கொண்டு இருந்த ஒரு மெழுகுவர்த்தியை விசிட்டிங் கார்டை வீசி விளக்கை அணைத்தான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
விளக்கை அணைப்பது
தவறுதானே... ஆகவே விளக்கை ஏற்றுவோம் என்று மெழுகுவர்த்திக்கு பக்கத்தில் வைத்து
அதில் பிடிக்க வைப்போம் என்று குச்சியால் தட்டி விட்டேன் அது பறந்து போய் பக்கத்து
வீட்டு கூரையில் பிடிக்க இதற்கு போய் தெருவோடு என்னை துறத்தி அடிக்க
வருகின்றார்கள்,
09.பிறகு உயரத்தில் காற்றுள்ள
பலூனை தொங்க விட்டு அதை விசிட்டிங் கார்டால் வீசி உடைத்தான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
நாமும் பலூன் உடைப்போமே
என்று அதைப் போலவே கட்டித் தொங்க விட்டு கல்லை எடுத்து எறிந்தேன் கல் நேராக
பக்கத்தில் கட்டியிருந்த போகஸ் லைட்டை பதம் பார்த்து வீட்டையே இருட்டாக்கி விட்டது.
10.பிறகு ஒருவன் தலையில் டம்ளரை
நிறுத்தி வைத்து விசிட்டிங் கார்டால் வீசி டம்ளரை கீழே வீழ்த்தினான்.
நான் என்ன செய்தேன் தெரியுமா ?
இதுதாங்க என்
வாழ்க்கையில் சோதனையைக் கொடுத்து இப்பொழுது உங்களுக்கு தகவல் சொல்ல வைத்து
இருக்கின்றது நானும் அவனைப் போலவே ஒருவனை உட்கார வைத்து தலையில் டம்ளரை நிறுத்தி
வைத்து டம்ளரை கீழே வீழ்த்துவதற்காக கோடரியை வீசினேன் அது குறி தவறி அவனது
கழுத்தைப் பதம் பார்த்து விட்டது இப்ப அவன் அந்தோ மருத்துவமனை ஐ.ஸி.யூ.வில்
இருக்கின்றானாம் இதுக்குப் போயி போலீஸ்ல சொல்லி என்னை கைது பண்ணி உள்ளே வைக்க சொல்றாங்க இது நியாயமா ?
Chivas Regal சிவசம்போ-
நாயை அடிப்பானேன்... பீயை சுமப்பானேன் ?
காணொளி