தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 07, 2020

மாணிக்பாட்ஷாவுக்கு மணிமகுடம்

 

வணக்கம் நட்பூக்களே... நண்பர் திரு. இரா. அரவிந்த் அவர்கள் எனது மாணிக்பாட்ஷா மின்நூலை படித்து விட்டு விமர்சனம் எழுதி அனுப்பி இருக்கிறார். அதை தங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். இந்த விமர்சனத்தை படித்து நான் மெய் சிலிர்த்து நிற்கிறேன் காரணம் எனது எழுத்துகள் சரியான கோணத்தில் புரிந்து கொள்ளப்படுகிறதா ? என்ற ஐயப்பாடு எனக்கு வெகுகாலமாகவே இருந்து வந்தது.

வியாழன், ஆகஸ்ட் 03, 2017

என் நூல் அகம் 11


வணக்கம் நட்பூக்களே... என் நூலகத்திற்குள் நுழைந்து சிறிது காலமாகி விட்டதல்லவா... இதோ இனிய நண்பர் திரு.கரந்தையார் அவர்களின் மாணவர் திரு.கே.எஸ்.வேலு அவர்கள் தனது செல்வ மகளின் பெயரான நிவேதிதா என்ற பெயரில் எழுதிய நல்லதொரு குடும்பம் என்ற பல்கலைக்கழகத்தினுள் சென்று வருவோமா ?

திங்கள், மார்ச் 21, 2016

என் நூல் அகம் 10


 மனசு தளத்தின் பதிவர் நண்பர். திரு. சே. குமார் அவர்களின் மூலம் பழக்கத்துக்கு ஆனவர் மூஞ்சிப் புத்தகம் நண்பர் திரு. கனவுப் பிரியன் அவர்கள் நல்லதொரு பண்பான பழக்கத்துக்குறியவர் இவர் எழுதிய நூல்தான் ’’கூழாங்கற்கள்’’ நல்ல மனசுடன் நண்பர் சே. குமார் அவர்கள் வீட்டில் பெய்த மழை ரோட்டிலும் பெய்யட்டுமே என்று எனக்கும் இந்நூலை ஓசியில் படிக்க கொடுத்தார் ரோட்டிலும் பெய்த மழையின் பலனை ஏட்டிலும் கொடுப்போமே என்று கருதியது எனது மனசு இதோ தங்களுக்காக இணைய ஏட்டில் உங்களின் வீட்டில் A/c யை போட்டுக் கொண்டு கணினியின் தூசியை தட்டி விட்டு படியுங்கள் சிறுகதைகளின் கதம்பக் குவியல்.

சனி, மார்ச் 12, 2016

என் நூல் அகம் 9


வணக்கம் நட்பூக்களே... கடந்த வருடம் கவிஞர் திரு. நா. முத்து நிலவன் அவர்கள் வீட்டில் புதுக்கோட்டை பதிவர்களை சந்தித்தேன் என்று சொன்னேன் அல்லவா ! பதிவர் தோழர். திரு. மது அவர்கள் கவிஞர் திரு. கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய ‘’பித்தன்’’ என்ற நூலை அன்புடன் எனக்கு பரிசளித்தார்கள் அதனைப்பற்றிய எனது பார்வையில் இதோ....

திங்கள், பிப்ரவரி 15, 2016

என் நூல் அகம் 8


வணக்கம் நட்பூக்களே... கடந்த வருடம் கவிஞர் திரு. நா. முத்து நிலவன் அவர்கள் வீட்டில் புதுக்கோட்டை பதிவர்களை சந்தித்தேன் என்று சொன்னேன் அல்லவா ! பதிவர் கவிஞர். திருமதி. மு. கீதா அவர்கள் திரு. நகுலன் அவர்கள் எழுதிய ‘’நாய்கள்’’ என்ற நூலை அன்புடன் எனக்கு பரிசளித்தார்கள் அதனைப் பற்றிய எனது பார்வை....

திங்கள், பிப்ரவரி 08, 2016

என் நூல் அகம் 7


வணக்கம் நட்பூக்களே... கடந்த வருடம் புதுக்கோட்டை பதிவர்களை கவிஞர். திரு. நா. முத்து நிலவன் அவர்களின் வீட்டில் சந்தித்தேன் என்று சொன்னேன் அல்லவா ! அப்பொழுது அன்புப் பரிசாக 2 நூல்கள் தந்தார் அதில் ஒன்றுதான் ’’கம்பன் தமிழும் கணினித் தமிழும்’’

புதன், ஜனவரி 27, 2016

என் நூல் அகம் 6


வணக்கம் நட்பூக்களே... கடந்த வருடம் கவிஞர் திரு. நா. முத்து நிலவன் அவர்கள் வீட்டில் புதுக்கோட்டை பதிவர்களை சந்தித்தேன் என்று சொன்னேன் அல்லவா அப்பொழுது பதிவரும், கல்வி அதிகாரியுமான திருமதி. ஜெயலட்சுமி அவர்கள் திரு. வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் எழுதிய ‘’துரோகச் சுவடுகள்’’ என்ற நூலும் அன்புடன் எனக்கு பரிசளித்தார்கள் அதனைப்பற்றிய எனது பார்வையில் இதோ....

செவ்வாய், ஜனவரி 19, 2016

என் நூல் அகம் 5


வணக்கம் நட்பூக்களே... கடந்த வருடம் புதுக்கோட்டை பதிவர்களை கவிஞர். திரு. நா. முத்து நிலவன் அவர்களின் வீட்டில் சந்தித்தேன் அப்பொழுது அன்புப் பரிசாக 2 நூல்கள் தந்தார் அதில் ஒன்றுதான் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே ! இவ்வளவு காலம் கடந்த பிறகா விமர்சனம் எழுதுகின்றாய் என்று யாரும் கோபித்தல் கூடாது காரணம் புறப்படும் பொழுது சென்னையில் புத்தக மூடை கை மாறி விட்டது  மீண்டும் என் கையில் கிடைக்க நம்பிக்கையான கை வேண்டுமே ஆகவே தாமதம் இதை Too late என்று சொல்வதைவிட Too too too late என்றே சொல்லலாம் அதுவொரு பெரிய கதை அதை விலாவாரியாக எழுதினால் விலா எலும்பு புட்டுக்கிட்டு அதுவே 4 பதிவாகி விடும் ஆகவே வேண்டாமே..

செவ்வாய், பிப்ரவரி 24, 2015

என் நூல் அகம் 4

 
மதுரை பதிவர் விழாவில் ஆவியைப் பார்த்தேன் பயந்து விடாதீர்கள் வலைப்பதிவர் கோவை ஆவி அவர்களைத்தான் சிறிய வயதிலும் யாரிடமும் பழகத் தெரிந்த பெரிய மனிதர் எனக்கு தனது ‘’ஆவிப்பா’’ என்ற தனது நூலை கையொப்பமிட்டுத் தந்தார் படித்தேன், தேன், ஆம் அனைத்தும் தேன் ஹைக்கூ கவிதைகள் குயிலைப் போல் கூக்கூக்வென கூவியிருக்கிறார் இந்த ஆவி.

சனி, ஜனவரி 17, 2015

என் நூல் அகம் 3

 
மதுரை பதிவர் விழாவில் பதிவுலகில் அன்புடன் ‘’வாத்தியார்’’ என்று அழைக்கப்படும் திரு. பாலகணேஷ் அவர்கள் தனது ’’சரிதாயணம்’’ என்ற நூலை கொடுத்தார்கள் 80 குறிப்பிடத்தக்கது (வாத்தியார் மன்னிக்கவும் பதிவு பெரிதாக போய் விடக்கூடாது என்பதற்காகத்தான் வார்த்தைகளை சுருக்குகிறேன் ஆகவே என்பது என்பதை 80 என்று போட்டிருக்கிறேன் காரணம் எனக்கு வழவழனு எழுதுவது பிடிக்காது 80 நண்பர் திரு. துளசிதரன் அண்டு திருமதி. கீதா அவர்களுக்கு தெரியும் (உள் மனது - பேசாமல் என்பது அப்படீனே எழுதி இருக்கலாமோ... ரொம்ப நேரம் டைப்ப (Typing) வேண்டியதாகி போச்’’சே’’) 

வெள்ளி, டிசம்பர் 26, 2014

என் நூல் அகம் 2

 
மதுரை பதிவர் விழாவில் இனிய தோழி கவிஞர். திருமதி. மு.கீதா அவர்கள் எழுதிய நூலை கையொப்பமிட்டு கொடுத்தார் ‘’ஒரு கோப்பை மனிதம்’’ பருகினேன் பருகப் பருக...

வெள்ளி, நவம்பர் 21, 2014

என் நூல் அகம் 1


மதுரை பதிவர் விழாவில் கலந்து கொண்டதே ஒரு மகிழ்ச்சியான விசயம் அதில் பெரும் மதிப்பிற்குறிய ஐயா ஜியெம்பி அவர்களை சந்தித்து பேசியதும், அவரிடம் பெற்ற ஆலோசனைகளும், தன்கைப்பட ஒப்பமிட்டு கொடுத்த ‘’வாழ்வின் விளிம்பில்’’ என்ற நூலை தந்தது ஒரு அளப்பெரிய பொக்கிஷம் பெற்றதைப் போன்ற உணர்வைப் பெற்றேன் இதை எழுத்துக்களில் தங்களிடம் விவரிக்கும் பக்குவம் இந்தக் கத்துக்குட்டிக்கு போறா.... இதை படித்து முடித்து விட்டேன்.