தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஏப்ரல் 26, 2021

மதுக்கரை, மருத்துவர் மது


எமன்
உயிரை விடமாட்டேன் என்றது உடம்பு
காப்பாற்றி விடுவேன் என்றார் மருத்துவர்
Titan கடிகாரத்தில் நேரம் பார்த்தார் எமன்

வியாழன், ஏப்ரல் 22, 2021

இன்நன்று நன்றல்ல...

 

01. நாம் பிறருக்கு செய்த உதவியை மறப்பது நன்று.
பிறர் நமக்கு செய்த உதவியை மறப்பது நன்றன்று.
 
02. தனது மனைவியை நினைத்திருப்பது நன்று
பிறருடைய மனைவியை நினைப்பது நன்றன்று.

ஞாயிறு, ஏப்ரல் 18, 2021

சீரியல் சீராழிகள்

 

வணக்கம் நட்பூக்களே... கொரோனா காலத்தில் நானும் தொலைக்காட்சி நாடகத்தை பார்க்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டேன். இந்த லட்சணத்தில் இதற்கு LOCKDOWN SPECIAL என்ற பெயர் வேறு. நெஞ்சு பொறுக்குதில்லையே... என்று பாரதி பாடியது இப்படி எல்லாம் நாடக காட்சிகளை அமைப்பார்கள் என்று தெரிந்துதானோ... கீழே 26 நொடிகள் மட்டுமே உள்ள காணொளியை காணுங்கள். இதில் கணவனும், மனைவியும் பேசிக்கொள்கிறார்கள். கணவனை அவன் என்றும், போடா, வாடா, என்றும் சொல்லும் மனைவியை கணவன் போங்க, வாங்க என்று பேசுகிறான். இதில் கணவனை செல்லமாக லூசு என்றும் சொல்கிறாள்.

புதன், ஏப்ரல் 14, 2021

பதினெட்டாம் பலி


விழிகளால் கதை பேசியவளே...
உளிபோல் குத்தி விடுபவளே...
பலியாடாக என்னை ஆக்கியவளே...

சனி, ஏப்ரல் 10, 2021

எனது விழியில் பூத்தது (4)

 

  ணக்கம் நட்பூக்களே.... இது எனது விழியில் பூத்த நான்காவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது மாற்றங்களையோ, திருத்தங்களையோ (Edit) செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம் நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம். இவைகளை ரசித்தால் ? ? ? கருத்து மழை பொழியலாம் அன்பன் - கில்லர்ஜி
 
வாருங்கள் ரசிப்போம்...

செவ்வாய், ஏப்ரல் 06, 2021

அறியாமையே வெல்லும்

மீபத்தில் மனிதன் என்ற திரைப்படத்தை சிறிது நேரம் தொலைக்காட்சியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் படத்தின் கசா'நாயகன் உதயநிதி ஸ்டாலின் நீதிமன்றத்தில் வழக்கில் தோற்று விட்டு தான் தங்கி இருக்கும் குடியிருப்பு பகுதிக்கு வருகிறார். அப்பொழுது மழை வருகிறது அதில் வீடில்லாத ஏழைகள் குழந்தை, குட்டிகளுடன் குடைகூட இல்லாமல் பாத்திரங்களை தலையில் வைத்து மழையிலிருந்து நனையாமல் சற்றே தங்களை பாதுகாக்கிறார்கள்.

வியாழன், ஏப்ரல் 01, 2021

மாதவனூர், மாவுடியான் மாதவன்

 

கிஷோர் அபுதாபிக்கு வந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாகின்றது ஒரு மாதிரியான பேர்வழி சட்டென யாரையும் கலாய்த்து விடுவான் ஒருமுறை இந்தியப் பிரதமர் மோடிஜி சார்ஜா வந்து பொதுக் கூட்டத்தில் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது அவரையும் கலாய்த்தான் தனியாக நின்று கொண்டு கலாய்த்ததால் யாரும் அவனைக் கண்டு கொள்ளவில்லை. திருமணமாகி மூன்று வருடமாகின்றது ஒரு வயதில் பையன் இருக்கின்றான். ஒரு அலுவலகத்தில் வரவேற்பில் வேலை நல்ல சம்பளம் அவன் தங்கியிருந்த கட்டடம் இடிக்கப் போவதால் தற்போது இந்த அறைக்கு குடி வந்து இருக்கின்றான் அறை எடுத்திருந்த மாதவன் கொஞ்சம் சிடுமூஞ்சி தனக்குப் பிடிக்காத அடுத்த அறைக்காரர்களிடம் இந்த அறையில் இருப்பவர்களும் பேசக்கூடாது என்று நினைப்பவன் கிஷோர் வந்து மறுநாள்...