நம் முன்னோர்கள் தான்
வாழ்ந்ததின் அடையாளமாக பல விடயங்களை நமக்கு கொடுத்து விட்டுச் சென்றார்கள் அந்த
வகையில் நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள் நம் இந்தியாவில் ஏராளம் அப்படி நமக்கு
கிடைத்தவைகளில் தஞ்சை பெரியகோவில், பூதங்கள் கட்டியதாக சொல்லப்படும் ஆவுடையார்
கோவில், செஞ்சி கோட்டை, தாஜ்மஹால், மைசூர் அரண்மனை, மதுரை திருமலை நாயகர் மஹால்,
வீரபாண்டிய கட்டப்பொம்மன் மறைந்திருந்த தேவகோட்டை சங்கரபதிக்கோட்டை இங்கிருந்து
புதுக்கோட்டை தொண்டைமான் அரண்மனைவரை பூமிக்குள் குதிரையில் போகும் சுரங்கப்பாதை
உள்ளது இப்பொழுது பராமரிப்பின்றி மூடிவிட்டது இப்படி எவ்வளவோ விடயங்கள் சொல்லலாம்
கணக்கில் அடங்காது புதிதாக கட்டவில்லை என்றாலும் பரவாயில்லை இருக்கும் பழமை
வாய்ந்த கட்டடங்களை பராமரிப்பதில் அரசு கவனம் செலுத்துவதில்லை.
பழனி கோவில் போன்று
மக்களிடமிருந்து வருமானம் வரும் இடமெல்லாம் பராமரிப்பு சிறப்பாக இருக்கிறது
சென்னையில் பல பாலங்கள் கட்டி முடிக்கப்படாமல் அரையும், குறையுமாக நிற்கிறது
காரணம் தொடங்கியது மற்றொருவர் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி அவைகள்
முடிக்கப்படாமல் இருந்தால் இதுவரை கட்டியவைகளும் வீணாகும் என்பது அரசுக்கு தெரியாமல் இல்லை போனால் போகட்டும்
நமக்கென்ன ? மக்களின்
வரிப்பணம்தானே எவன் கேட்கப்போகிறான் கேட்டாலும் காவல்துறை நமது கையில்தானே.. பிறகு
பார்த்துக்கொல்லலாம் புதிதாக கட்டப்பட்ட
சட்டமன்றம் கூட மீண்டும் மாற்றப்பட்டு அவை மருத்துவமனையாக மாற்றப்பட்டது ஏதோ
பங்காளிச்சண்டை போல் பரிமாறிக் கொள்கிறார்கள் ஒரு அரசு அலுவலகத்தை இடம் மாற்றுவது
என்றால் சாதாரண காரியமா ? நாமெல்லாம் நமது வாடகை
வீட்டை மாற்றுவதற்க்கே எவ்வளவு செலவு செய்யவேண்டியது இருக்கிறது இவர்கள் நமது
பணத்தை இப்படியெல்லாம் வீண் விரயமாக்குகின்றார்கள் காரணம் என்ன ? மக்கள்
நிச்சயமாக கேள்வி கேட்கப்போவதில்லை.
ஐந்து வருடத்துக்கு
ஒருமுறை சென்று கும்பிட்டு கைத்தடிகள் மூலம் ஓட்டுக்கு ஐநூறு ரூபாய் வீதம் எறிந்தால் போதுமே வேலை முடிந்து
விட்டது பிறகு விலைவாசி ஏறும்போது மட்டும் டீக்கடையில் உட்கார்ந்து வாய்
கிழியப்பேசுவது அர்த்தமற்ற பேச்சுக்களால் பயன் என்ன ? அவசியமற்ற வார்த்தைகளை
பேசிக்கொண்டே இருப்பவனும் முட்டாள், அவசியம் வரும்பொழுது பேசாமல் இருப்பவனும்
முட்டாள்.
நாம் பல நல்ல வாய்ப்புகளை
தவற விட்டு விடுகிறோம் இன்றைய அரசியல்வாதிகளின் செயல் கோமாளித்தனமாகவே இருக்கிறது
காரணம் அவர்கள் அடிப்படையில் கூத்தாடிகள் என்பதே உண்மை நாம்தான் ஒரு கூத்தாடி இரண்டொரு
திரைப்படங்களில் அநியாயத்தை தட்டிக்கேட்கும் வீரனாக
(டப்பிங் வாய்ஸ் காரணம் தமிழ் தெரியாது)
பேசி
நடித்தவுடன் வருங்கால முதல்வரே வா என்று பதாகைகள் வைத்து விடுகின்றோமே.. அவனும்
மனிதன்தானே ஆசைகள் இருக்காதா ? அவன் புத்தன் இல்லையே
உடனே அவனது கைத்தடிகளான வீட்டில் வளர்த்த விட்டில் பூச்சிகளை வைத்து மன்றம்
தொடங்குகிறான் அதை அப்படியே கட்சியாக்குகின்றான், கொடி பிடிக்கின்றான் மிகவும்
சுலபமாக தலைவனாகி முதல்வனும் ஆகிவிடுகிறான் அவர்களது பழக்கதோஷம் கோமாளி ஆட்சி
நடத்துகின்றார்கள் இதைத்தான் நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள் கேனப்பய ஊருல
கிறுக்குப்பய நாட்டாமை என்று உண்மைதானே ஆண்டாண்டு காலமாக கொடிப்பிடித்து
மக்களுக்காக தெருவில் நின்று குரல் கொடுத்தவனை, மக்கள் என்றுமே மதிப்பதில்லை
காரணம் அவர்கள் பகட்டாக இல்லையே இது பகட்டு உலகம்
(நான் கம்யூனிஸ்டுகாரர்களை
சொல்வதாக கூட நினைக்கலாம் அதுவும் பொருத்தமாகத்தான் இருக்கிறது)
நான்
கட்சிகளுக்கு அப்பாற்பட்டவன் இதிலொரு வேடிக்கை சொல்லட்டுமா ? உழைக்கும் வர்க்கமான
தமிழர்கள் உழைப்பாளிகளுக்கு ஆதரவு கொடுக்கும் கம்யூனிஸ்டுகளை மதிப்பதில்லை ஆனால் உழைக்க மறுக்கும் சோம்பேறிகளான மலையாளிகள்
தக்க தருணத்தில் கம்யூனிஸ்டுகளை ஆதரிப்பார்கள் காரணம் அவர்கள் உழைக்காமலே
பிழைக்கத் தெரிந்தவர்கள் நம்மவர்கள் உழைத்தும் பிழைக்கத் தெரியாதவர்கள் இதுதான்
உண்மை.
அதனால்தான் பிழைக்க வந்த
பிற மாநிலத்தான் தமிழ் திரைப்படத்துறையில் பெரிய அளவில் நட்சத்திரம் என்று
அறியாமைகள் சொல்கின்றார்களே ஆகவே நானும் அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காக
சொல்கிறேன் தமிழ் நட்சத்திரமாக ஜொலிக்கின்றார்கள் தமிழர்கள் வயிற்றுப்பசி போக்க
அன்றாடக் கூலிக்கு அவர்கள் ஜொலிப்பதற்காக லைட்பாய்களாகவும், கசக்கி எறியப்பட்டு
முழுதும் நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்ற நிலைக்கு வந்த தமிழச்சிகள் பலரும்
டூயட் பாட்டுக்கு லாலா லாலா லா... லா.. லா... என்று பாடிவருகின்றார்கள் அடுத்தொரு
முறை திரைப்படம் காணும்பொழுது கவனியுங்கள் கோஷ்டியில் பாடும் பெண்களின் முகத்தை
அதிகபட்சமாக தமிழச்சிகளின் முகமே... பிற மாநிலத்தான் ஆணும், சரி பெண்ணும் சரி
கோடிகள் சம்பளம் பெறுகின்றார்கள் அதை அவர்கள் உடனடியாக அவர்களது மாநிலத்திலேயே
முதலீடு செய்கின்றார்கள் இதை தொலைநோக்கு பார்வையுடன் கூர்ந்து கவனித்தால் தெரியும்
நம்மில் பலருக்கு தொலைநோக்கு பார்வை கிடையாது தொலைந்து போன பார்வையே உண்டு தமிழா
விழிப்புணர்வு பெறு இல்லையேல் விழி இல்லாமல் இரு.
என்று தமிழன்
கட்டவுட்டிற்க்கு பாலாபிஷேகம் செய்வதை நிறுத்துகின்றானோ ? என்று தமிழன்
விபச்சாரிகளுக்கு கோவில் கட்டுவதை நிறுத்துகின்றானோ ? என்று தமிழன் பிறமொழிக்காரனை
தலைவா என்று சொல்வதை மறக்கின்றானோ ? அன்றுதான் தமிழ்நாடு மோட்சம்
பெறும் இல்லையேல் பி.எஸ்.வீரப்பா அவர்கள் வசனம் பேசியது போல் இந்த நாடும், நாட்டு
மக்களும் நாசமாகப் போட்டும் என்று சொன்னது உண்மையாகும்.
புதுக்கோட்டை பதிவர்
திருவிழா நடத்தும் மின் இலக்கிய போட்டிகள் 2015க்காக
எழுதப்பட்டது (வகை 2) விழிப்புணர்வு கட்டுரைப்போட்டிக்கு ‘’கட்டுரை’’ என்ற வகையில் நான் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரையை என்னுடையது என்று
உறுதி தருவதோடு போட்டிகள் முடியும் வரை வேறு தளங்களில் வெளியிட மாட்டேன் என்றும்
உறுதி தருகிறேன்.
நான் போட்டிக்கு அனுப்பிய
பிற படைப்புகளை காண கீழே சொடுக்குக...
2015 புதுக்கோட்டை பதிவர் விழாவுக்கு அனைவரையும்
வருக வருக என அன்புடன் அழைக்கும்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
குறிப்பு - நேற்றோடு எமது
போட்டிக்கான பதிவுகளை நிறுத்தி விடுவோம் என்று நினைக்கும் தருவாயில் நேற்றைய
பதிவுக்கு கருத்துரையிட்ட நண்பர் திரு. கரந்தையார் அவர்கள் என்னை உசுப்பேற்றி
விட்டார்கள் ஆகவே உடனடியாக யோசிக்காமல் எழுதியது காரணம் போட்டியில் நுழைய இன்னும் நான்கு மணி நேரம் மட்டுமே உள்ளது இதற்க்கு பரிசு கிடைத்தால்
அதற்கு காரணம் நண்பரே..