Kalaiselvi Killergee
30.08.1991 – 30.08.2021
சேனா உனக்கு நிஜத்தில் தந்தவைகளை விட இன்று நிழல் படத்துக்கு
நான் தருபவை அதிகமாகி விட்டதே... அது முத்தம் மட்டுமல்ல... உனக்கு பிடித்தமான
மல்லிகைப்பூவும்தான். அன்று வெறும் இரண்டு ரூபாய்க்கு வாங்கி கொடுக்க முடியாத
வாழ்வு இன்று எவ்வளவுக்கும் வாங்கி கொடுக்கலாம் ஆனால் உனது படத்துக்குதானே கொடுக்க
முடிகிறது. என்னவொன்று இதில் பெண்கள் மல்லிகைப்பூ சூடிக்கொள்வதற்கான அடிப்படைக்
காரணத்தை நீ மறந்து, மறுத்து விடுவாய்.