தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜனவரி 30, 2015

ரத்த ஆறு


ஆண் மூட்டைப்பூச்சி-
நீ அடுத்த ரூம்ல, CHILDREN ஏரியாவா போயிட்டு சீக்கிரமா வீடு வந்துசேரு, நான் வேட்டைக்கு போயிட்டு வர்றேன்.

பெண் மூட்டைப்பூச்சி-
கவனமா போயிட்டு வாங்க நீங்களாவது, எனக்கு நிலைக்கணும் என் ஜாதகத்துக்கு எட்டாம் இப்படித்தான், முந்தா நாளு யேன் நாலாவது புருஷன் சொல்லிட்டுப் போனாரு, வேட்டைய முடிச்சுட்டு வரும் போதே, பாவிப்பய வழியிலேயே, நசுக்கிட்டானே..

ஆண் மூட்டைப்பூச்சி-
என்ன செய்யுறது, இந்தப் மனுசப்பயல்களே இப்படித்தான் ஜாதி, மதம்னு வெட்டிக்கிட்டு சாவாங்கே... ரத்தஆறு பூமியில ஓடும் அதெல்லாம் இவங்கெ கண்ணுக்கு தெரியாது நாம குடிக்கிற ஒரு சொட்டு மட்டும் பட்டுக்கிருச்சுன்னு, நசுக்கிடுவாங்கே.. இந்த லட்சணத்துல சொல்றாங்கே இவங்கெளுக்கு ஆறறிவாம். ஹூம் காலக்கிரகமடா கந்தசாமின்னு போகவேண்டியதான்.

சாம்பசிவம்-
ஐயா நீங்க எப்படி மூட்டை கடிச்சா, நசுக்க மாட்டியலா ?

KILLERGEE-
இல்லை யாம் விரலால் சுண்டி விட்டு விடுவோம் பிழைத்துப் போகட்டும் என்று.

சாம்பசிவம்-
அதாவது மத்தவனை கடிக்கட்டும்னு, கடைத்தேங்காய எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கிறது போல... சுண்டி விடுவோம்ன்னு சொல்றியலே சுண்டும்போது, எதுலயாவது மோதி மூஞ்சி மொகரை பேந்து செத்துப் போயிட்டா என்ன செய்வீங்கன்னு கேட்டா ? மண்டக்கனம் புடிச்சவன்னு சொல்வீங்க, அதான் கேட்க வேண்டாம்னு விட்டுட்டேன். (தனக்குள் இவன் பேரே சரியில்லையே இவனை எங்கே கடிக்கப் போகுது ?)

புதன், ஜனவரி 28, 2015

மான்செஸ்டர்


தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் ஒரு மாநகராட்சியின் நிலையை பார்த்தீர்களா ? பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வெளியே வருகிறது, ஒரு மாநகராட்சியே இப்படியிருந்தால் ? நகராட்சி, ஊராட்சி, பேருராட்சி, ஒன்றியங்களின் நிலை ? கிராமங்களில் இந்த நிலை கிடையாது காரணம் அவர்களே சுத்தப்படுத்தி மிகுதியை கொளுத்தீ விடுவார்கள், இப்படியே போனால் சுகாதாரத்துக்கு ஸூவாஹா சொல்லும் நிலைமை வந்து விடும், 

புதுப்புது வியாதிகள் முளைத்து மருத்துவமனைகள் நிரம்பி வழிவதற்கும், விவசாய நிலங்களை அழித்து மருத்துவமனைகள் கட்டிக்கொண்டு போவதற்கும், தெருவுக்கு பத்து மருந்துக்கடைகள் திறப்பதற்கும், போலி மருந்து நிறுவனங்கள் பெருகி வருவதற்கும், லட்சக்கணக்கில் செலவு செய்து குழந்தைகளை மருத்துவதுறைக்கு படிக்கச் சொல்லி வற்புறுத்துவதற்கும காரணம் இங்கிருந்துதான் புறப்படுகிறது.... 

மூலகாரணம் பணம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பணம் கை மாறவேண்டும் அதற்காகத்தான் மனிதன் மனிதனை முந்திப்போக நினைக்கின்றான் இதன் விளைவு மனிதன் இறைவனிடமும் முந்திப் போய் விடுகிறான், போகும்போது பணம் அவனுடன் வருவதில்லை இதற்கு ஒரு சிலர் மட்டும் காரணமில்லை ஒட்டு மொத்த சமூகமும் இப்படித்தான்.... 

கண்ணை விற்று சித்திரம் வாங்குவதற்கும், சுகாதாரத்தை தொலைத்து பணம் சேர்ப்பதற்கும் வித்தியாசம் என்ன ? பணம் சேர்ப்பது சுகாதாரமாய் வாழ்வதற்கு எனக்கூட வாதாடலாம், இதுகூட கையில இருக்கிற வெண்ணையை தொலைச்சுப் புட்டு நெய்க்கு அலைந்த கதை போல ஆகிவிடும்.

CHIVAS REGAL சிவசம்போ-
அப்படீனா... பஸ் ஸ்டாண்டுக்கு முன்னால குப்பை கிடந்தால்... தீ வச்சுட்டு போகச் சொல்றீங்களா மாஸ்டர் ?

காணொளி

சனி, ஜனவரி 24, 2015

மதி, விதியின் வழியா ?

"என் விதி, அப்போதே தெரிந்திருந்தாலே...
கர்ப்பத்தில் நானே, கரைந்திருப்பேனே..."
- கவிஞர் வைரமுத்து
 
இது சாத்தியமா.. சாத்தியமென்றால் எத்தனை சிசுக்கள் தன்னைத்தானே கருவறையிலேயே கரைத்திருக்கும் ?
Including me & you is this Correct or no ? Yes, I know this is 100 % Correct.
பிறப்பு என்பது விதிதான், இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

வியாழன், ஜனவரி 22, 2015

பொன்னமராவதி, பொறுக்கி பொன்னுச்சாமி.


பொன்னுச்சாமி, இவனது அப்பா அழகர்சாமி ABUDHABI, ADNOC இவரது ரத்தத்தை உறிஞ்சு கொ(ல்ல)ள்ள பதிலுக்கு இவர் பணத்தை உறிஞ்சு INDIA அனுப்ப, இவனுக்கு வேலையே ஊர் சுற்றுவது, பெண்களிடம் லட்டர் கொடுப்பது, அவர்கள் இவன் முகத்தில் காறித்துப்புவது, கன்னத்தில் அறைவிடுவது லட்டரைக் கிழித்து எறிவது, பிறகு கிழித்தெறிந்த லட்டர்களை எல்லாம் பொறுமையாக உட்கார்ந்து பொறுக்கி எடுத்து விடுவது, இதனால் இவனை பொறுக்கி பொன்னுச்சாமி என்றே சொல்வார்கள், இதெல்லாம் சகஜமாகி விட்டது.

ஒருநாள் கலாவுக்கு, லவ்லட்டர் கொடுத்தான் அவள் வாங்கி கொள்ளவும் இவனும் சந்தோஷமாக பதில் எழுதிக்கொண்டு வருவாள் என மரத்தடியில் நின்றிருந்தான், இவனிடம் எப்பொழுதுமே லவ்லட்டர் ஸ்டாக் இருக்கும் ஜெனரலாக யாருக்கும் கொடுக்ககூடிய வகையில் கவிதை நடையில் எழுதி வைத்திருப்பான் அப்பொழுது அழகான ஒருத்தி தனியாக வந்து கொண்டு இருந்தாள், இவன் சட்டென ஒரு லட்டரை எடுத்து கொடுத்தான் அவள் வாங்கி நின்று படித்து விட்டு சொன்னாள்.

"இனிமேல் எனக்கு லட்டர் கொடுத்தே தொலைச்சிடுவேன் உன்னை" 

போதாக்குறைக்கு எச்சியையும் காறித் துப்பிவிட்டு சென்று விட்டாள், இவன் கலாவுக்காக காத்திருந்தான்.

வீட்டுக்கு வந்த கலா அம்மாவுக்காக காத்திருந்தாள், கதவு திறக்கும் சத்தம் கேட்டது திரும்பிப் பார்த்தாள் அம்மா மாலா வந்தாள், மாலாவுக்கு சிறு வயதிலேயே கல்யாணம் ஆகி விட்டதால் இன்னமும் சின்னப்பெண் போலவே இருப்பாள், இருவரும் தெருவில் நடந்து போகும்போது அக்கா-தங்கை போல இருப்பார்கள், தாயும் மகளும் தோழிகள் போலவே பழகுவார்கள் சட்டென லட்டரை அம்மாவிடம் கொடுத்து விட்டாள், லட்டரைப் படித்துப் பார்த்த மாலா கையெழுத்தை பார்த்தவுடன் கோபமாகி விட்டாள் உடனே லட்டருடன் வெளியேறினாள்.

கலாவுக்காக, காத்திருந்த பொன்னுச்சாமி சற்றுமுன் திட்டி விட்டுப் போனவள் எதிரில் தன்னை நோக்கி வந்து கொண்டிருப்பதை கண்டதும் சந்தோஷமானான், "ஆகா பட்சி மடங்கிருச்சு" நேராக இவனிடம் வந்தவள் சொன்னாள் 

"இனிமே எம்பொண்ணுக்கு லட்டர் கொடுத்தே தொலைச்சிடுவேன் உன்னை

மீண்டும் மிச்சமுள்ள, எச்சியையும் காறித்துப்பி விட்டு கோபமாக வந்து விட்டாள் அம்மா மாலா. 

திரும்பும்போது சட்டீரெ சப்தம் கேட்டு திரும்பிப் பார்க்க மேலத்தெரு, மேகலா அவனை அறைந்து கொண்டிருந்தாள். 

காணொளி

 

ரூபன் & யாழ்பாவாணன்  இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டிக்கு நிர்வாகக்குழு உறுப்பினர் என்ற முறையில் பதிவர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன் மேலும் விபரங்களுக்கு கீழே கிளிக்கவும்
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

செவ்வாய், ஜனவரி 20, 2015

பேசு மனமே பேசுஅன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம், மதுரை பதிவர் விழாவில் கலக்கலாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த எனது அன்புச்சகோதரி திருமதி. தமிழ்ச்செல்வியின் மகன் (K. விவேக்) தங்களில் பலருக்கும் தெரியுமென நினைக்கின்றேன் அவருடைய பிரதான தொழில் காணொளி தொகுப்பாளர் (Film Editor) முதன் முதலாக குறும்படம் ஒன்றில் நடித்திருக்கிறார் படத்தின் பெயர்: ‘’பேசு மனமே பேசு’’ இதன் இயக்குனர் நண்பர் திரு. மா.வல்லவன் அவர்கள் 

இன்றைய சமூகத்திற்கு வேண்டிய நல்லதொரு விசயத்தை உள்ளடக்கிய இது குறும்படம் மட்டுமல்ல சிறு பாடமும்கூட 25 நிமிடம், 23 வினாடிகள் ஓடக்கூடிய இந்த குறும்படத்தில் சரியாக 12 நிமிடம் 08 வினாடியில் ஒரு மனிதனின் உள்ளிருந்து வெளியே வந்து பேசும் மனசாட்சியாக நடித்திருக்கிறார் திரு. K. விவேக். 

இந்தக்காட்சிக்கான இடங்கள் மட்டுமல்ல இந்த தருணத்தில் ஒளிப்பதிவாளரும் மிகமிக அற்புதமான கோணங்களில் காட்சிகளை படம் பிடித்து நம் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் அவருக்கும் ஒரு சபாஷ் இந்தக் குறும்படத்தில் குழந்தை முதல் அனைவரும் சிறப்புடன் நடித்திருக்கிறார்கள் ஒரேயொரு சாராயக்கடை காட்சியில் தாதாவின் அல்லக்கைகளாக வரும் 
மூன்று நபர்களைத் தவிர

(உள்ளதை உள்ளபடி உரைக்கும் உண்மையானவன் நான் ஆகவே இதனையும் எழுதினேன்) 

தாங்களும் இதனைக்கண்டு தங்களது கருத்துக்களை பதியும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் இதன் YouTube இணைப்பு கீழே கொடுத்திருக்கிறேன் இங்கு தெளிவாக காணமுடியும் நன்றி.மனசாட்சியாக வெளிவரும் ’’விவேக்’’ மட்டும் நடித்த YouTube காட்சியை காண கீழே சொடுக்குக..


இந்த குறும்படத்தில் வரும் அம்மாவும் மகளும் உண்மையிலேயே அம்மாவும் மகளும் என்பது குறிப்பிடக்தக்கது.


தங்களின் கருத்தை பதியலாமே 
YouTubeப்பிலும் கூட......

  ’’விவேக்’’ மட்டும் நடித்த காட்சி.


பதிவர் விழாவுக்கு வரும் பொழுது
எண்ணமும், செயல்பாடும் கில்லர்ஜி, ஒருங்கிணைப்பு விவேக்

தமிழ்வாணனின் கைப்பேசியிலிருந்து.....

அன்புடன் உங்கள்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

சனி, ஜனவரி 17, 2015

என் நூல் அகம் 3

 
மதுரை பதிவர் விழாவில் பதிவுலகில் அன்புடன் ‘’வாத்தியார்’’ என்று அழைக்கப்படும் திரு. பாலகணேஷ் அவர்கள் தனது ’’சரிதாயணம்’’ என்ற நூலை கொடுத்தார்கள் 80 குறிப்பிடத்தக்கது (வாத்தியார் மன்னிக்கவும் பதிவு பெரிதாக போய் விடக்கூடாது என்பதற்காகத்தான் வார்த்தைகளை சுருக்குகிறேன் ஆகவே என்பது என்பதை 80 என்று போட்டிருக்கிறேன் காரணம் எனக்கு வழவழனு எழுதுவது பிடிக்காது 80 நண்பர் திரு. துளசிதரன் அண்டு திருமதி. கீதா அவர்களுக்கு தெரியும் (உள் மனது - பேசாமல் என்பது அப்படீனே எழுதி இருக்கலாமோ... ரொம்ப நேரம் டைப்ப (Typing) வேண்டியதாகி போச்’’சே’’) 

வியாழன், ஜனவரி 15, 2015

Germany Part – 2

You Want See Big size ? Just Click One Time Photo Inside.
பழத்தில் மனிதப்பொம்மை.

ஜெர்மனி பெர்லினில்தான் அந்நாட்டின் பாராளுமன்றம் இருக்கிறது எனது இனிய இந்திய பாராளுமன்றத்தில் நுழையாத கில்லர்ஜி ஜெர்மன் பாராளுமன்றத்தில் நுழைந்தது வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் இருப்பினும் சபாநாயகர் நாற்காலியில் உட்கார முடியவில்லையே என்ற ஆதங்கம் இன்றுவரை தொடர்கிறது...
(அவ்வ்வ்வ்வ் சகோ மைதிலி சத்தமில்லாமல் படிக்கோணும் கேட்டோ) 

பெர்லின் சுவர் மேற்கு ஜெர்மனியும், கிழக்கு ஜெர்மனியும் இரண்டு துண்டுகளாக பிரிக்கப்பட்டபோது சுமார் 111.9 கி.மீ நீளம் அளவுக்கு (1961 ஆகஸ்ட 13) குறுக்கே பெரும் சுவர் எழுப்பினார்க(ல்)ள் 

(இந்தச் சுவற்றின் பலம் இரண்டு டண் எடையுடன் கூடிய ட்ரக் வந்து மோதினாலும் ‘’ட்ரக் கண்டம்’’ அந்த அளவுக்கு பலமுடன் கட்டப்பட்டது நமது நாட்டு அரசியல்வாதிகள் குறித்துக் கொள்ளவும்) 

பிறகு பெரும் முயற்சிக்குப் பிறகு மீண்டும் இணைக்கப்பட்டபோது... அந்தச் சுவர்களை இடிக்க ஆரம்பித்தார்கள் நகரின் மையப்பகுதியில் இருந்ததை குறுக்கே சாலைகளை அமைக்கும்போது அங்கும் இங்குமாக இடிக்கத் தொடங்கியது கழுதை தேர்ந்து கட்டெறும்பு ஆனது போல கொஞ்சம் கொஞ்சமாக இடித்தது போக தற்போது அங்கு மிங்குமாக சுமார் மூன்று கி.மீ மட்டுமே ஞாபகச்சின்னமாகவும், எதிர்கால தலைமுறையினர் காணவேண்டும் என்பதற்காகவும், குறிப்பாக வலைப்பதிவர் கில்லர்ஜி வந்து காணவேண்டுமே என்ற உயர்ந்த, உரத்த சிந்தனையின் காரணமாகவும் வைத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் உள்ளதெல்லாம் ’’திண்டுக்கல் பூட்டு’’ தான் சரி சாவி எங்கே ? கீழே நதி ஒடிக்கொண்டிருக்கிறதே... அதில்தான் ஏன் ? அதை வேறு பதிவில்தான் சொல்லமுடியும் காரணம் விசயம் அம் ’’பூட்டு’’

  
ஜெல் என்ற ஒரு வகையான மீன் தலையும் தெரியாது வாலும் புரியாது.

வானூர்தியின் இயந்திரம்.
 
  நண்பரின் அசாத்தியமான தைரியம்.
  சுவற்றின் ஓரம்....

பெண்கள் கூட்டத்தில் மாட்டிக்கொண்ட அப்பாவி.

 
நண்பர்களை உட்கார வைத்து மரியாதையாக நிற்கும் ஸ்கூல் பையன்.
  பின்புறம் ஐந்தறிவு.


ஏதாவது புரிகிறதா ?


You Want See Big size ? Just Click One Time Photo Inside.
  பென்ஸ் மியூசியத்தில் சரித்திரக்குறிப்பு சொல்லும் தாணியங்கி இயந்திரம்..நாடு இரண்டு துருவங்களாக பிரிக்கப்பட்டபோது காதலர்களும் பிரிக்கப்பட வேண்டிய சூழலும் அமைந்தது அப்பொழுது இருபுறமும் காதலர்கள் அழுது புலம்பி எழுதிய வார்த்தைகளும் சித்திரங்களும்தான் நாம் சுவற்றில் காண்பது இந்த சித்திரங்கள் கோணலும் மாணலுமாக இருப்பினும் அதிலும் சில நேர்காணல் இருந்ததை என்அகக்கண் உணர்த்தி என்முகக்கண் கசிந்தது உண்மையே... அந்தக் கண்ணீரில் ஒரு துளியை எடுத்து சுவற்றில் தேய்த்து விட்டேன் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும் என்று இந்த சுவற்றை அன்றிலிருந்து இன்றுவரை புதுப்பித்துக் கொண்டே வருவதுதான் அதன் சிறப்பு காரணம் பழமையை போற்றிப் பாதுகாப்பதில் இந்தியர்களைவிட ஜெர்மனியர்கள் உயர்ந்தவர்கள் என்பது எனது சிற்றறிவுக்கும் எட்டியதே... இதைச்சொல்வதில் எமக்கு துளியளவும் பயமில்லை காரணம் நான் படிக்காதவன் மட்டுமல்ல, எதற்கும் படியாதவனும்கூட மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்பதில் நான் உடன்பாடுள்ளவன்.

(மேலும் காரணம் மதுரை பதிவர் விழாவுக்கு வந்தபோது வாழ்வில் முதல் முறையாக மதுரை திருமலை நாயக்கர் மஹாலுக்குள் போனேன் என் கண்களால் சுட்டெடுத்தேன் சித்திரங்களை அந்த வேதனைகளை தங்களுடன் நிச்சயம் பகிர்ந்து கொள்வேன் விரைவில்)

 
எனது அப்ரூவல் கிடைத்தவுடன்...
எனது மேற்பார்வையில்...
முதன் முதலாக இடிக்கப்பட்டபோது...
பீர்த்திருவிழா ஆம் ’’பீர்’’ குடிப்பதற்கு (ஒரு வாரம்) திருவிழா.
 


  இது பேருந்துகள் செல்லும் சாலை அல்ல எட்டாவது மாடி.

  எங்கள் தி கிரேட் தேவகோட்டையில் இதை ராட்டிணம் என்போம்.
  பெர்லின் ஜூ வின் முகப்பு.
 
எனது கைப்பேசிக்கு ஜெர்மன் தூதரகத்திலிருந்து வந்த குறுஞ்செய்தி கைப்பேசி அரபு மொழியில் இருப்பதால் அரபியுடையதோ... என எண்ணவேண்டாம் எனது கைப்பேசியை அரபு மொழியில்தான் வைத்திருப்பேன் ஐயமெனில் கீழே காண்க....

  எனது அன்றைய கைப்பேசி.
 
  கொல்லப்பட்டவர்களின் நினைவாக...

நாடு இணைக்கப்பட்டாலும் நெருக்கடியான நகரத்தின் மையத்தில் சாலையின் நடுவில் யூ.எஸ்.ஏ ராணுவம் செக் பாய்ண்ட் அமைத்து இன்று வரை நின்று கொண்டு இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விடயம். பின்னணி அரசியல் சரி அது வேண்டாம் நமது நாட்டு திருடர்களையே நாம் கேள்வி கேட்கத் திராணியில்லாதபோது... நமக்கெதற்கு ? மேலும் நண்பர்கள் எல்லோரும் யூ.எஸ்.ஏ ராணுவ வீரர்களுடன் புகைப்படம் எடுக்கும்போது நான் என்ன ? செய்தேன் என்றால் யூ.எஸ்.ஏ அலுவலகத்தில் 10 யூரோ கட்டணம் வாங்கிக்கொண்டு நமது கடவட்டையில் (PASSPORT) ஆர்மி முத்திரைகள் குத்திக் கொடுக்கிறார்கள் கீழே புகைப்படத்தில் எனது கடவட்டை காண்கவும்.

 
 எனது கடவட்டை (Passport) ஆர்மி முத்திரைகள்.
நாம் இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம் என்பது ஊர்ஜிதமாவது மட்டுமல்ல, உலகில் எங்கு சென்றாலும் அந்த முத்திரைகளை கண்டதும் நமக்கு வாழ்த்து சொல்வதோடு நம்மை பெருமையோடும் பார்க்கிறார்கள் என்பதைதை நான் உணந்திருக்கிறேன் ஒருயொரு நாட்டைத் தவிர அது எந்தநாடு ? வேறு எந்தநாடு நமது இனிய இந்தியாவில்தான் ஆம் மதுரை பதிவர் விழாவுக்கு வரும்போது தமிழ்ச்சங்கம் வளர்த்த மதுரை விமான நிலையத்தில்தான் சுங்க அதிகாரியுடன் சண்டை எனது கையில் கோடரி இல்லாத காரணத்தால் ? அவரு(னு)க்கு ஆயுசு கெட்டி 

(உண்மையில் நம் தமிழன் அந்த இடத்திற்கும் சென்று வந்திருக்கிறானே, என பெருமைப்படவேண்டிய விடயம் நண்பர்களே... சத்தியமாக சுயநலத்திற்க்காக சொல்லவில்லை) 

அதென்ன சண்டை ? இதையெல்லாம் சுற்றுலா வந்த இடத்திலேயா  சொல்ல முடியும் வேற எங்கே... வேற எங்கே ? வேற பதிவுதான்.


  பூங்காவில்...

முன்பதிவை காணாத நண்பர்களே கூடுதல் புகைப்படங்கள் காண கீழே சொடுக்குக...
மேலும் புகைப்படங்கள், காணொளி அடுத்த பதிவில்...

எனக்கு ஆச்சர்யம் என்னவென்றால்  நான் எதற்காக ஜெர்மனி வந்தேன் என்பதை திரு. தில்லை அகத்தார் அவர்கள் முதல் பதிவில் சரியாக கருத்துரை சொல்லி இருந்ததுதான்.