தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, நவம்பர் 01, 2014

காற்று.

பழங்காலத்தில்... ஏன் இன்றும்கூட சிலமாநிலங்களில்... பலகிராமங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன... தன்னை உயர் ஜாதியென நினைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட மனிதர்களை தாழ்ந்தவர்கள் என பறைசாற்றி ஒதுக்கிவைத்து வாழவிட்டார்கள், அவர்களுக்கென்று குடிதண்ணீர் கிணறு, அவர்களுக்கென்று ஊரின் ஓரமாக வடக்கு திசையில் ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடுகள், தேனீர் அருந்த கடைக்கு வந்தால் தரையில் அமர்வது கொட்டாச்சியில் தேனீர் பிறகு அவர்களே அதை கழுவி வைத்து விடவேண்டும் இந்த இடத்தில்தான் எனது ஐயப்பாடு தலைதூக்கியது, அதாவது இப்படியெல்லாம் பேதபாகுபாடு காணும் உயந்த ஜாதிமனிதர்கள்..
கேவலம் தாழ்ந்த ஜாதிக்காரர்கள் தனது மூக்கு வழியாகவும் வாய் வழியாகவும் (வ்வே ஸோரி எனக்கு குமட்டுகிறது) சுவாசித்து வெளியே விட்ட வடக்கு திசையிலிருந்து வரும் காற்றை மட்டும் சுவாசிக்கிறார்களே அது ஏன் இவ்வளவையும் தாழ்ந்தவர்களுக்கு ஒதுக்கிகொடுத்த உயர்ந்த ஜாதிக்காரர்கள் காற்றை மட்டும் தனியாக பிரித்து கொடுக்க முடியாதா  இவ்வளவு ஏன் கோயில்கள்கூட அவர்களுக்கென்று தனியாக்கினார்கள் இறைவன்மீது முழுமையான நம்பிக்கை வைத்துதானே இதை கட்டினார்கள் அந்த நம்பிக்கையின் பால்தானே வணங்குகிறார்கள் அப்படியானால் தாழ்ந்த ஜாதிக்காரர்களின் தெய்வங்களால் தட்டிக்கேட்க முடியாதா அல்லது அதற்கான ''சக்தி'' இல்லையா ?
ஆனாலும் இந்த தாழ்ந்த ஜாதிக்காரர்களைவிட, அந்த உயர்ந்த ஜாதிக்காரர்களைவிட, தாழ்ந்த ஜாதிக்காரர்களின் தெய்வங்களைவிட, உயர்ந்த ஜாதிக்காரர்களின் தெய்வங்களைவிட, கோடிக்கணக்கில் பணம் சேர்த்த செல்வந்தர்களைவிட, பத்துப்பேரை கொலைசெய்து விட்டு தன்னையாருமே பிடிக்க முடியாதென இறுமாப்புடன் திரியும் ரௌடியைவிட, மாமூல் வாங்கிவிட்டு ரௌடியை பிடிக்கவக்கு இல்லாமல் அப்பாவியை பிடித்து தனது வீரத்தை காட்டும் போலீஸ்காரர்களைவிட, தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைவிட, தரையில் கால்பதியாமல் பறந்து பறந்து பத்துப்பேரை அடிக்கும் சினிமா கசாநாயகர்களைவிட, படித்திருந்தும் இது கிராபிக்ஸ் எனஉணராமல் கைத்தட்டி விசிலடிக்கும் வீட்டில் வளர்த்த விட்டில் பூச்சிகளைவிட, திருமணத்திற்கு முன் அப்படியும் வாழலாம், இப்படியும் வாழலாம், எப்படியும் வாழலாமென சான்றிதழ் வழங்கிய கற்புக்கரசியைவிட, என்னையும் மச்சான் என்றும், எனது மச்சானையும் மச்சான் என்றும், எனது சித்தப்பனையும் மச்சான் என என்றுமே அன்புடன் அழைக்கும் அர்த்தமறியா அர்த்தராத்திரி அழகியைவிட, நகைச்சுவையை மட்டுமே எழுதி பதிவுலக நண்பர்களுக்கு இலவசமாக வயிற்றுவலியை வாரிவழங்கும் பகவான்ஜியைவிட, தன்னை கடவுளின் அவதாரம்என பறைசாற்றி கொண்டு மலம் கழித்து உணவருந்தும் மனிதர்களைவிட, அனைத்துலக பேய்களையும் ஸைத்தான்களையும் கட்டிப்போடும் சாமியார்களைவிட, சில கொடுமைக்கார மாமியார்களைவிட, காற்று வருவதற்க்கு கதவை திறந்து வைத்தபோது கேமராமேன் உள்ளே வந்தது தெரியாமல் தியானத்தில் மூழ்கி நித்திரையான மகானைவிட, பலசாலி ஒருவர் இருக்கிறார். அவர் யார் தெரியுமா ? அவர் வரும்போது எவரும் போய் பாட்ஷா, பாட்ஷா, என்றாலும் முடியாது பல்லியை நசுக்குவதுபோல் நசுக்கி விட்டு அடுத்த நிமிடமே ! அடுத்த தெருவல்ல ! அடுத்த ஊரல்ல ! அடுத்த நாட்டில் இருப்பார் இத்தனைக்கும் இவருக்கு பாஸ்போர்ட் கிடையாது அவர்தான், Mr. Tsunami

இன்று காலை இனிய இந்தியாவிலிருந்து விமானத்துல வரும்போது எழுதினேன் வந்ததும் அவசரமாக ஒரு புகைப்படத்தை தேடி போட்டேன்    


46 கருத்துகள்:

  1. ஆஹா என்ன ஆவேசமான எழுத்து..வலைப்பதிவர் சந்திப்பில் உங்களைப்பார்த்தது மிக்க மகிழ்ச்சி சகோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா, அபுதாபி வந்து இட்ட முதல் பதிவிற்க்கு தங்களது முதல் கருத்துரை, நன்றி. தங்களை மதுரையில் சந்தித்தது சந்தோஷமே...
      ஆவேசமான பதிவா ? என்ன செய்வது தங்களைப்போல் கீதம் பாடி தென்றலாக தீண்டத் தெரியவில்லையே எமக்கு, தங்களின் ‘’ஒரு கோப்பை மனிதம்’’ நான் இன்னும் பருகவில்லை காரணம் பதிவர் சந்திப்பு பதிவை பதிவிடும் பணியின் முனைப்பு பிரமாண்டமாக எதிர் பார்ப்பதாக நண்பர் திரு.தி. தமிழ் இளங்கோ அவர்கள் எழுதி எம்மை பயமுறுத்தி விட்டார் ஆகவே அதன் பயபக்தியும்.

      நீக்கு
  2. அன்பின் ஜி...
    அசத்தலான பதிவு!..

    அவசரமாகமாகப் போட்டாலும் -
    அவசியமானதாகப் போட்டிருக்கின்றீர்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள் நண்பரே... நல்ல மனிதரை சாந்தசொரூபியை ஆக்ரோஷமாக காண்பித்து எதிர்காலத்தில் அவரின் புகழை மறைத்து விடுவார்கள் என்றே தோன்றுகிறது.

      நீக்கு
  3. சரியான சாட்டையடி....! சாட்டையடி வாங்கி..வாங்கி மரத்துப்போய்விட்டது சாதி வெறியர்களுக்கு...அதனால்தான் அரசு மரியாதையோடு சாதிவெறி குல தெய்வத்துக்கு காது குத்துவிழா வருடந்தோறும் நடத்துகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாமே ஓட்டுக்காகத்தான் நண்பா.... இது மக்களுக்கு விளங்கவில்லையே....

      நீக்கு
  4. சிறப்பான பதிவு! இந்த பேதங்கள் என்றுதான் மாறுமோ தெரியவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பரே... தங்களை மதுரையில் சந்திக்க முடியாதது வருத்தமே...

      நீக்கு
  5. பாட்டுக் கேட்டுக் கொண்டு குப்பை அள்ளுகிறானே...சுனாமி வருவது அறியாமல்... (படம்)

    காற்றுப் போல் விரைவாய் ....
    சுனாமிபற்றி பதிவிட்டு விட்டீர்கள்..
    நிஜம் தான்...

    தாங்கள் குடும்பத்தார்களுடன் இனிமையாய் விடுமுறைகழித்து வந்திருப்பீர்கள். அனைவரும் நலம் தானே... நல்ல மழை போலலே அங்கு.
    குழந்தைகள் நலமா...தந்தையைக் கண்டு மிகவும் மகிழ்ந்து இருப்பார்கள்.

    நன்றி சகோ
    வாழ்க வளர்க
    உமையாள் காயத்ரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவரும் நலமே... நான் தேவகோட்டையில் கால்வைத்ததுமே வானமே மழைபொழிந்து வரவேற்றது இந்த விடுமுறையில் இரட்டிப்பு சந்தோஷம் காரணம் புரிந்திருக்குமே...

      நீக்கு
  6. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  7. தங்களை மதுரையில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எமக்கும் அதே மகிழ்ச்சி நண்பரே... தங்களது ‘’கரந்தை மாமனிதர்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள் அருமை.

      நீக்கு
  8. ஆகா அதகளம் ஆரம்பிச்சாச்சு போல..
    நல்ல இருக்கு ... ஜி தொடர்க ...
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. என்னமோ சொல்லப் போகிறீர்கள் என்று எண்ணிப் பார்த்தால் பறந்து பறந்து சுனாமியை எழுத்தில் கொண்டு வந்து விட்டீர்கள்!
    நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை ஒருகணம் மனிதன் உணர்ந்தான் என்றால் அகம்பாவம் அழிந்து விடுமே நண்பா...

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே.!

    நீங்கள் ௬றுவது சரியான வார்த்தைகள்தாம்.! அனைத்தையும் (சாதி மத பேதம் பார்க்காமல் )அடித்துக் கொண்டுச் செல்லும் சுனாமிக்கு நிகர் வேறு ஏது.?

    பொருத்தமான படத்துடன் உணர வைக்கும் பகிர்வும் அருமை.!

    நலமுடன் பயணம் அமைந்ததுவா?

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி சகோதரி அனைத்தும் நலமே...

      நீக்கு
  11. விமானத்தில் வரும்போது வித்தியாசமான கற்பனை...
    அருமை அண்ணா...
    மீண்டும் அமீரகம் வந்தாச்சா?
    15 நாள்தான் விடுமுறையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பா தங்களை ஒருநாள் சந்திக்கவேண்டும்.

      நீக்கு
    2. கண்டிப்பாக சந்திப்போம்... அபுதாபியில் எங்கு இருக்கிறீர்கள். நான் தங்கி இருப்பது எலெக்ட்ராவில் எல்டரோடா சினிமா அருகில்... தாங்கள்?

      நீக்கு
    3. சந்திக்கலாம் நான் இருப்பது முரூர் ரோடு போலீஸ் காலேஜ் எமது எண்ணில் அழைக்கவும் அல்லது தங்களது எண் கொடுக்கவும்.

      நீக்கு
  12. அருமை அருமை! இயற்கையின் முன் உயர் சாதி, தாழ்ந்த சாதி, ஏழை, பணக்காரன் இதெல்லாம் எதுவுமெ கிடையாது......
    நான் கோபம் வந்து பொங்கினா வருவேன்..கோபம் வந்தா எனக்குக் காணு மண்ணு தெரியாது....உங்களுக்கே தெரியும்ல கோபம் கண்ணை மறைக்கும்.....வந்து போகும் போது எனக்கு கைல, கண்ணுல அகப்பட்டதெலாம் வாரி சுருட்டிக் கிட்டுப் போவேன்....நீ உயர் சாதியா இருந்தா என்ன? பணக்காரனா இருந்தா என்ன? பெரிய பொஸிஷன்ல இருந்தா என்ன....எதையும் நான் கண்டுக்கிட மாட்டேன்....எல்லா சதியும் என்னுள்ளே சங்கமம்....." அபடினு மிஸ்டர் சுனாமி கூவுவது உயர் சாதின்னு சொல்றவங்க காதில் காதில் விழுதா? விழுந்து உணர்ந்தா சரி...

    ஸோ பேக் டு பெவிலியன்!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரணத்தின் கடைசி நொடியிலாவது உணரட்டும் நண்பரே... தங்களை மதுரையில் மிகவும் எதிர்பார்த்தேன்.

      நீக்கு
  13. முதலில் முத்துநிலவன் ஐயாவின் வலைப்பூவிற்கு சென்று பாருங்கள். அங்கு உங்களுக்கு ஒரு பெரிய அதிசயம் காத்துக் கொண்டிருக்கிறது.

    அப்பப்பா, சுனாமிக்கு பயங்கரமான ஒரு பில்ட்அப்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவலுக்கு நன்றி நண்பரே தினமலர் தற்போது எமது கையில்.
      பில்லரையே தூக்கி வீசுற சுனாமி கிட்டேபோயி பில்டப்பு கொடுக்க முடியுமா ?

      நீக்கு
  14. அருமை ஜி...

    தளம் இன்னும் .in என்றே இருக்கிறது... மாற்ற வேண்டும்... மாற்றுகிறேன் ஜி...

    Contact me...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ண்ண்ண்ண்ண்ட இடைவெளி விட்டு வந்தமைக்கும், மதுரையில் சந்தித்தமைக்கும் மகிழ்ச்சி நண்பரே com என்றுதானே இருக்கிறது....

      நீக்கு
  15. இந்த சுனாமியில் நானும் மாட்டிகிட்டேன் போலிருக்கே :)
    மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா என்ற வாலியின் கவி வரிகள் நினைவுக்கு வருகிறது ..சுனாமியின் முன்னால் நீயென்னா,நானென்னா எல்லாம் ஓரினம்தான் என்றே பாடத் தோன்றுகிறது !
    உங்கள் பதிவு உடனே கிடைக்க வேண்டுமென்பதால் .முகநூலில் சேர்ந்து விட்டேன் ,தாமதமாய் வந்ததற்கு மன்னிக்கவும் !

    பதிலளிநீக்கு
  16. நீங்கள் மட்டுமா ? கொழுந்தியாள் கோகிலாவும் கூட...
    ஸூப்பர் ஒப்பினை பகவான்ஜி.

    பதிலளிநீக்கு
  17. அருமையான பகிர்வு ஜி.பதிவர் விழா பற்றியும் எழுதுங்கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி அந்த வேலையில்தான் இருக்கிறேன்.

      நீக்கு
  18. செத்து போன பிணத்துக்கும் சாதி பாரத்துதான் சாதி க்கார சுடுகாட்டுல பொதைக்குறாங்கே..ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகமொத்தம் மரணம் வரை மனிதன் உணரவில்லை என்பதையே விளக்குகிறது நண்பா,,,,

      நீக்கு
  19. என்ன வந்தாச்சா vacation முடிஞ்சு போச்சா அந்தக் கடுப்பில தான் இந்தப் பதிவா விமானத்தில தானே வந்தீங்க அப்புறம் எப்படி சுனாமி பயம் வந்துச்சு.கடலை எட்டிப் பார்த்து பயந்து விட்டீர்கள் போல் தெரிகிறது சகோ .ம்..சும்மா kidding சகோ.
    ஆமா. வீட்டில பிள்ளைகள் மற்றும் அனைவரும் சுகம் தானே. தேவையான நல்ல பதிவே வாழ்த்துக்கள் சகோ ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி பிள்ளைகள் நலமே... நான் பயந்த சுபாவம்னு உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா ?

      நீக்கு
  20. பெயருக்கும் பயந்த சுபாவத்துக்கும் சம்பந்தமே இல்லையே..கில்லர்ஜீ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படீனா ஏன் ? எல்லோரும் என்னை அப்பாவினு சொல்றாங்க ?

      நீக்கு
  21. கவிதையில் ஏன் அவ்வளவு கோபம்? தங்களை மதுரையில் சந்தித்ததும், விவாதித்ததும் மனதிற்கு நிறைவைத் தருகிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமூகத்தின் மீது கொண்ட காதல் தான் ஐயா.

      நீக்கு
  22. சாதி மத பேதமெல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம்...................

    பதிலளிநீக்கு
  23. ஒவ்வொரு மனிதனும் தன்னை தானே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகளும் பதில்களும் உங்கள் பதிவில்..

    நன்றி தோழரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கு நன்றி தோழா தொடர்க,,,

      நீக்கு