திருவிழாக் காலங்களில்,
கோயில்களில், நடனம் என்ற பெயரில் ஆபாச நடனம் என்றுகூட சொல்லமுடியாது பள்ளியறையில்
கணவனும், மனைவியும் செய்வதில் முக்கால் பகுதியை செய்து காண்பிக்கிறார்கள்.
(இதனைப்பற்றி மேலும் விவரிக்கவும், ஆதாரத்துடன்
நிரூபிக்கவும், என்னால் முடியும் ஆனால், நான் விரும்ப வில்லை ஏனெனில் அவர்களுக்கும், எனக்கும் வித்தியாசம்
இல்லாமல் போய்விடும்)
அந்த மேடையின்
மையப்பகுதியில், ஸ்ரீமுத்து மாரியம்மன் துணை என்ற சுவரொட்டியோடு ஸ்வாமியின்
புகைப்படம் வேறு, மறுபுறம் திரைப்பட நடிகரின் புகைப்படம், இதன் முன்னிலையில் ஆபாச நடனம்,
இல்லை ஆபாச செய்கைகள். இதில் ஒன்றுக்கொன்று பந்தம் இருக்கிறதா ?
(இறை நம்பிக்கை மழிந்து கொண்டு வருவதற்கு
இதுவும் ஒரு காரணம்)
இந்த மேடையை சுற்றி நாளைய மன்னர்கள் என்று சொல்லப்படும் இளைய சமுதாயத்தினர்கள் இதை VIDEO எடுத்து எங்கள் ஊரிலும் நடந்திருக்கிறது என்று YOUTUBE ப்பில்போட்டு உலகம் முழுக்க பார்க்க வைக்கிறார்கள், இதை வெளியிடும் இளையசமூத்தினர் நடத்தும் அமைப்புகளுக்கு பெயர் இளையநிலா, வெண்ணிலா, பாடும்பறவைகள், வெட்கமாக இல்லை ? இந்தசமூகம் எதை நோக்கிப்போய் கொண்டிருக்கிறது ? இதை நடத்துபவர்கள் ஊரின் பெரிய மனிதர்கள். இதை நடத்திமுடிக்கும் வரை POLICE பாதுகாப்பு, இந்த சமூகம் கேடுகெடும் பாதையை நோக்கிப் போவதற்க்கு காரணம் யார் ?
இதை நடத்தும் ஊர்ப் பெரியவர்களா ?
இதைக்கண்டு ஆரவாரிக்கும் இளைய
சமூகத்தினரா ?
இதை நடத்த அனுமதி கொடுக்கும்
அரசாங்கமா ?
இது முடியும் வரை, பாதுகாப்பு
கொடுக்கும் காவல் துறையினரா ?
இதில் வெட்க உணர்வின்றி ஆடும்
நடனக் கலைஞர்களா ?
நடனக் கலைஞர்கள், இவர்களை குறை சொல்லமுடியாது ஏனெனில், அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக இதில் தள்ளப்பட்டவர்கள் பணம் கூடுதலாக கிடைக்கும்போது...முழுசும் நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு என்ற நிலையை கடந்தவர்கள். காவல்துறை, இவர்களை குறை சொல்ல முடியாது ஏனெனில், மேலிட உத்தரவு கொடுத்த வேலையை செய்கிறார்கள் சம்பளத்திற்காக... அரசாங்கம், இவர்களை குறை சொல்ல முடியாது ஏனெனில், கொடுக்கா விட்டால் வீணாக ஜாதிக்கலவரம் வரும், பிறகு ஓட்டுக் கிடைக்காது, எதற்கு வம்பு ? இளைய சமூகத்தினர், இவர்களை குறை சொல்லமுடியாது ஏனெனில், இவர்களுக்கு வயசுப் பிரச்சனை நல்லது கெட்டதை பிரித்தறியத் தெரியாத பருவம்.
ஊர்ப் பெரியவர்கள்,
இவர்கள்தான் முழுக்க, முழுக்க காரணவாதிகள் ஏனெனில் தீர்மானம் எடுப்பது இவர்களே நடனக் கலைஞர்கள்
இவர்களிடம் வந்து எங்களை இப்படி ஆட வையுங்கள் எனச் சொல்லவில்லையே ? காவல் துறையினர் இவர்களிடம் எங்களுக்கு வேலை
கொடுங்கள் எனச் சொல்லவில்லையே ? அரசாங்கம் இவர்களிடம் இந்த
மாதிரியே விழா நடத்துங்கள் எனச் சொல்லவில்லையே ? இளைய சமூகத்தினர் இவர்களிடம் இந்த மாதிரி ஆடினால்தான் பார்ப்போம் எனச் சொல்லவில்லையே ? ஆக, இந்த சமூகம் கெட்டுப் போவதற்கு
வழி வகுப்பவர்கள் அறிவில், அனுபவத்தில், முதிர்ந்தவர்கள் எனச்சொல்லப்படும்
பெரியவர்களே !
சாம்பசிவம்-
இதையெல்லாம், பார்க்கும்போது
காஞ்சிபுரம் தேவநாதனை குறை சொல்ல இந்த சமூகத்துக்கு என்ன, தகுதியிருக்கு ? அப்படின்னு கேட்கலாம்னு தோனுது சரி கேட்டால்
என்ன, உறைக்கவா போகுது அதனால, கேட்க வேண்டாம்னு தோனுது,
அதற்காக தேவநாதனை தேவதூதர் ன்னுசொல்றதா அர்த்தமல்ல ! துரோகி
துரியோதன்தான் அதில் மாற்றமல்ல !