தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஏப்ரல் 19, 2024

விந்தை மனிதர்கள்

01.  தனது மகளுக்கு திருமணம் முப்பது பவுன் நகை போடுவதாக வாக்கு, சற்றே பற்றாக்குறை மனைவியிடம் கொஞ்சம் நகைகள் கேட்ட கணவனிடம் என்னோட நகையை நான் தரமாட்டேன் என்று சொன்ன பெண்மணியை கண்டு விட்டேன்.

திங்கள், ஏப்ரல் 15, 2024

தஞ்சாவூர், தம்பி தட்டுக்கெட்டான்

ணக்கம் வரதராஜன்ணே நல்லா இருக்கீங்களா ?
வாடாத்தம்பி தட்டுக்கெட்டான் நல்லா இருக்கேன்டா.. நீ எப்படி இருக்கே ?
 
நல்லா இருக்கேன்ணே... சில சந்தேகம் அதான் கேட்கலாம்னு வந்தேன்
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்றேன்.

வியாழன், ஏப்ரல் 11, 2024

விழி கொடுத்து ஒளி ஏற்றுவோம்

ணக்கம் நட்பூக்களே...
மேலேயுள்ள புகைப்படத்தை படித்தீர்களா ? இந்தியாவின் இன்றைய மக்கள் தொகை 118 கோடி தினசரி இறப்பு விகிதம் 62389 தினசரி பிறப்பு விகிதம் 86853 இன்றைய நிலவரப்படி பார்வை இழந்தோர்கள் 682497 மரணம் அடைந்தவர்கள் அனைவருமே கண் தானம் செய்தால் ? ? ? அடுத்த பதினொன்று 11 தினங்களில் இந்தியாவில் ஒரு குருடர்கூட இருக்க மாட்டார்கள்.

ஞாயிறு, ஏப்ரல் 07, 2024

ஆறு மனமே ஆறு


தை, எதையோ சாதிக்கணும்னு
நினைத்த நான், எதையாவது
சாதிப்போம்னு இறங்கி வந்து
எதையுமே சாதிக்க முடியாதுனு
தெரிந்தபோது எதுவுமே நம்
கையில் இல்லை என்பதை
தெரிந்து கொண்டதே எனக்கு
இறைவன் தந்த அனுபவப்பாடம்.
* * * * * * * * * * 01 * * * * * * * * * *

புதன், ஏப்ரல் 03, 2024

கற்புக்கரன்ஸி

 

திரைப்பட நடிகைகளை திருமணம் செய்யும் பெரும்பாலான கூமுட்டைகள் பிறகு விவாஹரத்து செய்வது. இதையும் பெரும்பாலும் அத்துறையில் இருப்பவர்களே திருமணம் செய்து கொள்கிறார்கள். அதாவது நடிகையின் வாழ்க்கையைப்பற்றி இவ்வுலகில் தெரியாதவர்களே இருக்க முடியாது. அவர்களின் வாழ்வு அப்படித்தான்... அதாவது அப்படித்தான் ஆம் அப்படித்தான். இதை குறை சொல்லவே முடியாது.

சனி, மார்ச் 30, 2024

நேர்மையற்ற சிந்தை

மது மக்களிடம் எவ்வளவு முரண்பட்ட சிந்தனைகள் காரணம் என்ன ? இறை பயம் இல்லை ஆகவே நேர்மையற்ற சிந்தை. எல்லோருக்கும் நியாய தர்மங்கள், தவறு எது ? சரி எது ? என்பது நன்றாகவே தெரிகிறது இருப்பினும் செயல்பாட்டில் பேச்சில் முழுக்க, முழுக்க தவறுகளே செய்கின்றனர்.

செவ்வாய், மார்ச் 26, 2024

தங்கரத்தினமே...

ண்ணிக்குடம் எடுத்து போகும்
தங்க ரத்தினமே தங்க நானும்
வாறேன் தங்க வைக்கணுமே

வெள்ளி, மார்ச் 22, 2024

எம் வழி அதே வலி


மது ஊர்களின் அரச மரத்தடியில் பார்த்து இருப்பீர்கள் கண்ணாடி பிரேம் போட்ட பழைய சாமி படங்கள் பழையதாகி விட்டதாலும் நமது மோடிஜியின் டிஜிட்டல் இந்தியாவால் மின்சார ஒளியோடு ஒலியும் தரும் அழகிய கண்ணைக் கவரும் (கவனிக்க, கண்ணைக் கவரும் மனதை கவர அல்ல) அழகிய புதிய அவதாரமாக சாமி படங்கள் வாங்கிய காரணத்தால் இவைகளை எடுத்து வந்து இங்கு போட்டுச் செல்வர்.

திங்கள், மார்ச் 18, 2024

ஆத்திர ஜாதி

ணக்கம் நண்பர்களே... ‘’நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு’’ என்ற கவியரசர் கண்ணதாசனின் அற்புதமான பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.

வியாழன், மார்ச் 14, 2024

மன்னார்குடி, மளிகைக்கடை மன்னார்

டேய் மங்கோந்தை... எதுக்குடா... எண்ணையிலே மண்ணைப் போடுறே ?
நீங்கதானே முதலாளி மண்-எண்ணை அஞ்சு லிட்டர் ஊத்தச் சொன்னீங்க...

சனி, மார்ச் 09, 2024

பாலூற்றி பாழாகும் சமூகம்

ணக்கம் நண்பர்களே.... நமது இந்திய நாட்டில் ஒருவேளை உணவுடன் உறங்கின்றவர்களின் எண்ணிக்கை பல லட்சங்கள் உண்டு இருப்பினும் நமது சமூகம் அவர்களைப் பற்றிய துளியும் சிந்தை இல்லாது கேளிக்கைகளிலும், பொழுது போக்குகளிலும் நாட்டம் செலுத்துபவர்களின் மோகம் பெறுகி கொண்டே செல்கிறது. காரணமென்ன ? இறைவன் இவர்களுக்கு பசியின் அருமையை உணர விடாமல் நல்வாழ்வு அளித்திருப்பதால்தானோ ?

செவ்வாய், மார்ச் 05, 2024

அழகான மடு

 
ழகிய செம்மறி ஆடு
உனக்கு பெரியது மடு
வயிறு படுத்தும் பாடு
எனக்கும் பால் கொடு

வெள்ளி, மார்ச் 01, 2024

தர்மம் தலை கேட்கும்

ணக்கம் நட்பூக்களே... தன்மக்களிடம், மக்கள் சொல்லொன்று, செயலொன்றாய் வாழ்ந்து காட்டுகிறோம் இது முரண்பாடு இல்லையா ? தென்னை ஒன்று நட்டால் பனை ஒன்றா முளைக்கும் ? நாம் நமது மக்களுக்கு நல்லதை சொல்லும் முன் நாம் செல்லும் பாதை சரியா ? என்பதை முதலில் அறிவோம்.

ஞாயிறு, பிப்ரவரி 25, 2024

வடக்கோஸ்ரமா மடாலயம்

இடம் - வடக்கோஸ்ரமா தியான மடாலயம். அரவங்காடு.
 
வணக்கம் ஐயா வடக்கு நேசன் அவர்களே சமூக கட்டுக்காப்பாளரான தங்களை பேட்டி எடுக்க அனுமதி வழங்கியமைக்கு எங்களது காத்தாடி பத்திரிக்கையின் வாயிலாக முதற்கண் நன்றி. பேட்டியை துவங்கலாமா ?
வணக்கம் வடக்கின் வனவாசத்துடன் வரவேற்கும் உங்கள் வடக்கு நேசன்.

புதன், பிப்ரவரி 21, 2024

கூத்தாடிகளின் உபரி வருமானம் (1)

 

ன்றைய சூழலில் சராசரி மனித வாழ்வில் குடும்பத்தை நடத்துவதே கஷ்டமான காரியம்தான் ஆனால் திரைப்படக் கூத்தாடன், கூத்தாடிகள் தங்களது வருமானத்தை பெருக்க பல வழிகளிலும் இதர தொழில்களை நடத்தி வருகிறார்கள் என்பதை நான் தமிழ்நாட்டில் பல இடங்களுக்கும் சென்று வரும்போது கண்டேன் அவ்வகையில் இதோ முதலாவது பதிவு.

சனி, பிப்ரவரி 17, 2024

அந்தமான் அழகு

ணக்கம் நண்பர்களே... அந்தமானைப் பாருங்கள் அழகு’’ என்ற மிகவும் எனக்கு பிடித்தமான கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்

செவ்வாய், பிப்ரவரி 13, 2024

கோவில் அல்ல கோயில்


ம்மை படைத்தது இறைவன் என்பதில் பலருக்கும் ஐயமில்லை. என்னவொன்று தனி மனிதனின் தலைமை ஆசையால் மனங்கள் பிளக்கப்பட்டு, மதங்களாக பிரிக்கப்பட்டு கடவுள்களையும் படைத்து விட்டோம். தொடக்கத்தில் நம்மை படைத்தது இறைவன், என்ற வார்த்தை மாறி மனிதன் கடவுளை படைத்தான் என்ற நிலைக்கு வந்து விட்டோம்.

வெள்ளி, பிப்ரவரி 09, 2024

பசும்பொன், பசுமை பசுமதி

சுமை படர்ந்த பச்சை கம்பளமே
பத்து மணிக்கு வந்தது சம்பளமே
கூடுலாக கிடைத்தது கிம்பளமே
பசுமதியும் வந்தது நொம்பளமே

செவ்வாய், பிப்ரவரி 06, 2024

பழம் வியாபாரி


பழம் வியாபாரம் செய்து பிழைப்பதற்கு
தலைஞாயிறு சந்தைக்கும்
அடுத்து,
திங்களூர் சந்தைக்கும்

வெள்ளி, பிப்ரவரி 02, 2024

நீ நடிகனே அல்ல !

 

ணக்கம் தமிழக மக்களுக்கு அதாவது ரசிகர்களுக்கு ரசனை இருக்கிறதா ? காரணம் நமக்கு நன்றாகவே தெரிகிறது, இந்தப்படத்தில் இதன் நாயகன் மிகவும் கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறார், சமூகத்துக்கு பழைய வரலாற்றை சரியாகவோ, புதுப்பித்தோ, மாற்றுக்கருத்தை வலியுருத்தியோ எடுத்து தருகிறார். இருப்பினும் நாம் அந்த மாதிரியாக திரைப்படங்களை பார்த்து வெற்றியடைய வைக்காமல் இருக்கிறோமே... இது தவறு என்பது விளங்கவில்லையா ?

திங்கள், ஜனவரி 29, 2024

எல்லோரும் இந்நாட்டு மன்னர்

 

புகைப்படம் தந்த திரு.சுப்பு தாத்தா அவர்களுக்கு நன்றி.
 
ணக்கம் நட்பூக்களே... முன்பெல்லாம் எல்லா ஊர்களிலும், நகரங்களில்கூட கண்மாய், ஊரணி, குளம், குட்டை, அருவி, ஆறு, ஓடை, பொதுகிணறு என்று இருந்தது அதில் மக்கள் குளிப்பார்கள் அவைகள் இப்பொழுது தொண்ணூறு சதவீதம் ஒழிந்து விட்டது. இப்பொழுது வீட்டினுள் சிறிய அறைக்குள் குளிக்கின்றார்கள்.

வியாழன், ஜனவரி 25, 2024

டீக்கடை அரசியல்


வான் டீக்கடை அரசியல் அலசல்...
 
ஏண்ணே கொ.இ.க தலைவர் அளவுக்கு மீறி அளந்து விடுறாரே இது நியாயமா ?
எவன்தான் பொய் பேசலை.. ? வியாபாரத்துல எல்லா வியாபாரியும் பொய் பேசுனாத்தான் வாழ முடியும்டா...

ஞாயிறு, ஜனவரி 21, 2024

வச்சானே சாப்ட்டீங்களா...


டம் மூணாறு மூன்ஷி மூன்று ஸ்டார் ஹோட்டல் அறை எண் 1002 உள்ளே இயக்குனர் சாம்பசிவம், இசையமைப்பாளர் சிவாதாமஸ்அலி, பாடலாசிரியர் Chivas Regal சிவசம்போ, பாடல் எழுதுவதற்காக காத்திருக்கின்றனர்.

புதன், ஜனவரி 17, 2024

ஆண் மோகப்பணி


புஸ்டாக் சுவாமிகள் இவரைத் தெரியாதவர்களே இருக்க முடியாது சுற்றியுள்ள பதினெட்டு பட்டிகளுக்கும் இவர்தான் அருள் வாக்கு சொல்வார். வீட்டில் நடக்கும் திருமணம், பூப்புனித நீராட்டு, காதுகுத்து, வீடு வாங்குவது, கிரஹப்பிரவேசம், புண்ணியானம், வளைகாப்பு, ஏன் சுன்னத் கல்யாணம்கூட இவர் சம்மதம் சொன்னால்தான் செய்வார்களாம், இதில் சில நேரங்களில் வளைகாப்பு வேண்டாம் என்று சொன்னாலும், குழந்தை பிறந்த பிறகு வளைகாப்பு நடத்துவார்களாம்.

சனி, ஜனவரி 13, 2024

எள்ளுப்பெயரன் ஆளட்டும்

த்திய அரசும் சரி, மாநில அரசும் சரி மக்களுக்காக சேவை செய்யிறோம்னு சொல்லி விட்டு தனது மக்களுக்கு சொத்து சேர்ப்பதே குறிக்கோளாக இருக்கின்றார்களே இந்த பெட்ரோலுக்கான வரிகளை நீக்கினால்தான் என்ன ? மற்ற அனைத்து விலைவாசிகளும் ஏறுவதற்கு இதுதானே மூலகாரணம். உலக அளவில் எல்லா நாடுகளுமே கச்சா எண்ணை விலை குறைவால் பெட்ரோலின் விலையை குறைத்து விட்டது.

செவ்வாய், ஜனவரி 09, 2024

கவலை வேண்டாம் கண்மணி

வனோடு ஓடி விட நினைத்தாள் அவள்
வளை விட்டு ஓட்டம் எடுத்தான் அவன்
 
ண்மையானவன் என்று நினைத்தோமே
டலையும் கொடுத்திழந்து விட்டோமே

வெள்ளி, ஜனவரி 05, 2024

உன்னைப்போல் ஒருவன்

 

ணக்கம் நட்பூக்களே... மேலேயுள்ள புகைப்படச் செய்தியை பார்த்தீர்களா ? இவர்களைத்தான் நாட்டை ஆள வா தலைவா என்று கூவுகின்றனர் தமிழகத்து கூதரைகள்... உங்களுக்கு எல்லாம் சிந்திக்கும் திறன் இருக்கிறதா ? இல்லையா ? மக்களே... தமிழ்நாட்டில் எவ்வளவு கோடிகளை பெற்றார்கள் இவர்கள். ஏன் இந்த மோசடி ?

திங்கள், ஜனவரி 01, 2024

கீழக்கரை, கீரைவடை கீர்த்திவாசன்

ணக்கம் நண்பர்களே... ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே’’ என்ற கவிஞர் கா.மு.ஷெரீஃப் அவர்களின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்
இதோ எனது பாடல்...