தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
திங்கள், அக்டோபர் 29, 2018
வெள்ளி, அக்டோபர் 26, 2018
ஆ(ட்)சீர் வாதம் 2
விழாவுக்கு வந்தவர்கள் பேச
வேண்டுமே காரணம் இனி அடுத்த தேர்தல் வரும்வரை பேசுவதற்கு மேடை கிடைக்க
சாத்தியமில்லை மேலும் பேசுவதை நிறுத்திக்கொண்டால் பேசுவது எப்படி ? என்பது மறந்து போகவும் கூடும்
பேச்சுத்திணறினால் சில நிருபர்கள் அவசியமற்ற கேள்விகளை தொடுத்து மூஞ்சியில் தூ
என்று துப்பும் அளவுக்கு கோபத்தைக் கிளறி விடுபவர்களும் உண்டு சிலர் கடைசி
காலம்வரை கல்யாணமே செய்யாமல் வாழும் கண்ணகிகளாககூட இருப்பார்கள் சரி விடயத்துக்கு
போவோம். பிறகு விழா மேடைக்கு வருவார்கள் சிலர் மேடைக்கு வராமலேயே பேசுபவர்களும்
உண்டு
செவ்வாய், அக்டோபர் 23, 2018
ஆ(ட்)சீர் வாதம் 1
நட்பூக்களே... எனக்கு நீண்ட
காலமாகவே மனதில் ஒரு சந்தேகம் இருக்கின்றது அது அரசியல் தலைமைகள் கலந்து கொள்ளும்
திருமண விழாவில் சராசரி திருமண சடங்குகள் எப்படி நடக்குமோ ? அது
அங்கு மாற்றி அமைக்கப்படுகின்றது அங்கு மேடை போட்டு இருக்கும் பேசுவதற்கு ஒலி
பெருக்கி இருக்கும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை உண்மை மனதுடன் வாழ்த்துச்
சொல்ல வந்திருக்கும் சொந்த பந்தங்கள் மூன்றாம் நிலைப்பாட்டில் காவல் துறையினரால் சோதனை
செய்யப்பட்டு நிறுத்தப்படுவார்கள் சூழ்நிலையின் காரணமாக மணக்கோலத்தில் இருக்கும்
மணமக்களை ஆசீர்வாதம் செய்ய அவர்களுக்கு அனுமதி இருக்காது மறுநாள் வீட்டில்
செய்யலாம் என்பது வேறு விடயம்.
சனி, அக்டோபர் 20, 2018
படிக்காதவன்
மனித
வாழ்வில் ஒருவன் முன்னுக்கு வருவதற்கும், பின்னுக்கு போவதற்கும் காரணகர்த்தாவாக
கண்டிப்பாக இன்னொரு மனிதர்ன் இருக்க வேண்டும் இது
எல்லோருடைய வாழ்விலும் உண்டு. தனது வாழ்க்கைக்குகூட பிரயோசனம் இல்லாதவன் என்று
முத்திரை குத்தப்பட்டவன் மற்றவருடைய உயர்வுக்கு காரணமாக இருப்பான் இதில் பலரும்
அனுபவப்பட்டு இருக்கலாம். எனது அபுதாபி வாழ்விலும் பலரும் வந்து இருக்கின்றார்கள்.
சாதாரண சம்பளத்தில் இருந்த என்னை உயர் வழிக்கு கொண்டு வந்த பெருமை அபுதாபியில்
இருக்கும் நான் வேலை செய்த அலுவலகத்தில் இருந்தவர் ஒரு அரபி
செவ்வாய், அக்டோபர் 16, 2018
குடிகாரனின் வில்லுப்பாட்டு
நட்பூக்களே... தொங்குணான்டி பாளையம்
கோவில் திருவிழாவில் குலசை முத்தாரம்மன் முத்துலட்சுமி குழுவினரின்
வில்லுப்பாட்டுக்கு ஏற்பாடு செய்யதிருந்தார்கள் அவர்கள் வந்த விமானம் டயர் பஞ்சரான
காரணத்தால் தாமதமானதோடு தங்களால் வர இயலாது என்பதை வாட்ஸ்-அப்பில் தெரிவிக்க, வேறு
வழியின்றி அவசரத்துக்கு உள்ளூர் வில்லுப் பாட்டுக்காரன் விடியாமூஞ்சி விருமாண்டியை
அழைத்து வந்து பாடச் சொன்னார்கள் அது மாலையானாலே மலையேறி விடும் இதோ அது பாடிய
வில்லுங்கப்பாட்டு... அவசரம் என்பதால் அவரது குழுவினர்
கிடைக்காத காரணத்தால் பின்னணி நாமும் சேர்ந்தே பாடுவோம்.
சனி, அக்டோபர் 13, 2018
இந்தப்படை போதுமா ?
நட்பூக்களே... இனிவரும் காலங்களில் தமிழக மக்கள் இன்னும் பல
இன்னல்களை சந்திக்க வேண்டியது வரும். ஆம் விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில்
பிள்ளையாரை கட்டிட அளவு உயரத்துக்கு வடிவமைத்து அதை தெருக்களில் கொண்டு சென்று
மக்களுக்கு பல இடையூறுகளை கொடுக்கின்றனர். நண்டு முதல் சிண்டுவரை தலையில் ரிப்பன்
போன்ற காவி துணிகளை கட்டிக்கொண்டு ஆட்டம் போடுகின்றனர் அந்த ஆட்டமும் நாக்கை
துறுத்திக் கடித்துக்கொண்டு, இலவு வீட்டில் போடும் குத்தாட்டம் போலவே இருக்கிறது
அனைவருமே ஃபுல் போதை இதுவா பக்தி ?
புதன், அக்டோபர் 10, 2018
சாத்தான்குளம், சாமியார் சாரங்கபாணி
இப்பதிவின்
முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...
எமராத் லைசென்ஸ் இண்டர்நேஷனல்
லைசென்ஸுக்கு இணையானது இதை வைத்து நான் ஜெர்மனி, ஒமான் நாடுகளில் விசிட்டிங்கில்
ஓட்டியிருக்கிறேன். அதன் பிறகு கார் வாங்குவதற்காக ஆறு மாதம்
காத்திருந்தேன் காரணம் லைசென்ஸ் எடுத்து ஆறு மாதங்களுக்குள் ஏதாவது சிறிய விபத்து
நடந்தாலும் லைசென்ஸ் மீண்டும் பறிக்கப்பட்டு ஸ்கூலில் போய் படித்து வா என்று
அனுப்பி விடுவார்கள் பிறகு கார் வாங்கி ஓட்டிய பிறகுதான் நம்மிடமும் இவ்வளவு திறமை
இருக்கின்றதே... என்ற நம்பிக்கை வந்தது காரணம் நான் சிறிய வயதில் நாற்பது K.M வேகத்தில் நடைவண்டி ஓட்டியவன்.
ஞாயிறு, அக்டோபர் 07, 2018
அந்த தருணங்கள்
இப்பதிவின்
முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...
என்னை இவன் போலீஸ்
டெஸ்டுக்கு ரெடியா ? என்ற டெஸ்டுக்கு அனுப்பி வைத்தார்கள் அதற்கு வந்த மாஸ்டர் பாக்கிஸ்தானி அடி வயிறுவரை
தாடி வைத்திருந்த அவனைக் கண்டதுமே எனக்கு அடி வயிற்றைக் கலக்கியது பயமில்லை
இருப்பினும் எனது குடுமி இன்று இவனது கையில்தானே இவன் என்ன நினைக்கின்றானோ ? அதுதானே நடக்கும்.
வியாழன், அக்டோபர் 04, 2018
உலகம் தோன்றியதிலிருந்து...
இப்பதிவின்
முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...
மறுநாள் முதல் எஜிப்திய
மாஸ்டர் வந்தார் பொதுவாக எஜிப்தியர்கள் அதிகம் பேசுவார்கள் இது அவர்களின்
ரத்தத்துடன் கலந்த பிறவிக்குணம காரணம் வாய் காதுவரை இருக்கும் ஏதாவது தவறுகளால்
போலீஸார் காரைப்பிடித்து நிறுத்தினாலும் பேசிப் பேசியே அவர்களைக் கொன்று
விடுவார்கள் இதன் காரணமாகவே பல போலீஸ்காரர்கள் அபராதம் எழுத வேண்டியவர்களைகூட
என்னை விடுடா சாமி என போய் விடுவார்கள்.
திங்கள், அக்டோபர் 01, 2018
நீயும், நானும் பொணம்டா...
இப்பதிவின்
முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...