தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
புதன், மார்ச் 29, 2017
திங்கள், மார்ச் 27, 2017
வெள்ளி, மார்ச் 24, 2017
செவ்வாய், மார்ச் 21, 2017
வெள்ளி, மார்ச் 17, 2017
செவ்வாய், மார்ச் 14, 2017
கோமளவள்ளி
ஏண்டி
கோமணவள்ளி கடைக்கு போறேன் ஏதும் வாங்கணுமா ?
உங்கள்ட்ட எத்தனை தடவை சொல்றேன் அப்படிக் கூப்பிடாதீங்கனு...
வாய்
தவறி வந்துடுச்சு அதுக்கேன் கோவிக்கிறே.... ?
ஒரு தடவை தவறுனாச் சரி எப்பவுமேவா ?
இதெல்லாம்
ஒரு பிரச்சனையா. ஒங்க அப்பா நல்லா பேராத்தான் வச்சாயென்ன ?
இப்ப அதான் குறைச்சலாப் போச்சா ?
அப்ப
யேண்டி... குரைக்கிறே ?
இஞ்சே பாருங்க இப்படி ரெட்டை அர்த்தத்துலே பேசுனீங்க.... ?
என்னடி...
செய்வே ?
எங்க ஊருக்குப் போயிட்டு வந்துடுவேன்.
யேன்..
ஒங்க ஊருலருந்து மச்சானுக்கு என்ன கொண்டு வரப்போறே.. ?
கொண்டு வரமாட்டேன் அங்கேயே வச்சுட்டு வந்துடுவேன்.
வச்சுட்டு
வந்துடுவியா ? மச்சானுக்காக ஊருக்குப்
போறவ... அங்கே ஏன்... வச்சுட்டு வர்றே... ?
இதெல்லாம் கொண்டு வரமுடியாது... எங்க ஊரு ஆத்துலதான் வச்சுட்டு வரமுடியும்.
என்னடி
ஒண்ணும் புரியலையே.... ஆத்துல என்ன... வைக்கப்போறே... ?
செய்வினைதான்.
? ? ?
என்ன... பேச்சைக் காணோம். ?
யேண்டி...
இதெல்லாம் கொஞ்சமாவது நியாயமாடி ?
உங்களை வாயைக்கட்டி வச்சாத்தான் சரியா வரும் பேசாமல் இருந்தாலும் பரவாயில்லை
சாப்பிட மட்டும் வாயைத் திறங்க போதும்.
அடியே
இனிமேல் அப்படிக் கூப்பிட மாட்டேன் எனக்கு வாயில அதான் வருது வேற ஏதாவது பேரு நீயே
சொல்லேன். ?
ஏன்... வள்ளினு கூப்பிட்டா என்ன ?
சரி
அதுக்கும் வள்’’ளுனு விழமாட்டியே ?
சுத்தி வளைச்சு உங்களுக்கு சொந்த ஊர் புத்திதானே வருது.
அடியே....
ராஜபாளையம் தமிழ் நாடு முழுக்க பேமஸு தெரிஞ்சுக்க.
இனிமே இப்படிப் பேசினீங்க... உடனே பஸ் ஏறிடுவேன் ஞாபகம் வச்சுக்கங்க...
ஹும்
அன்னைக்கே தரகர்கிட்டே சொன்னேன் எமனேஸ்வரத்துல பொண்ணு வேண்டாம்னு கேட்டாரா.... அந்த
ஆளு... எதுக்கெடுத்தாலும் ஊர்ப்புத்தியை காட்டிடுறா.... அந்த தரகர் மட்டும்
மாட்டுனான்....
திடீரென வீட்டுக்குள் நுழைந்த ஆறு வயதில் ஆணும், நாலறை வயதில் பெண்ணுமான இரண்டு வாண்டுகள் வந்து தாத்தா.... அம்மாச்சி... என்று
பெரியசாமி ஐயாவையும், கோமளவள்ளி அம்மாளையும் கட்டிப்பிடிக்க... அடடே.... வாங்க
வாங்க செல்லங்களா... தங்கம் வாங்க, தங்கம் வாங்க மாப்பிள்ளை, வாம்மா, வாங்க
மாப்பிள்ளை... நல்லாயிருக்கியாம்மா..... ஏங்க சேர் எடுத்துப்போடுங்க... வாங்க
உட்காருங்க...
கோமண..... அது... அது... வந்து சீக்கிரம் தூக்குச்சட்டியை எடுத்தா கடைக்குப் போயிட்டு
வர்றேன்
என்ற பெரியசாமி ஐயாவை கோமளவள்ளி அம்மாள் முறைத்து விட்டு தூக்குச்சட்டியை
எடுத்துக் கொடுத்ததை மதுரையில் இருந்து வீட்டுக்கு விருந்தாளி வந்த இளைய மகளும்,
மருமகனும், பேரனும், பேத்தியும் கவனிக்கவில்லை ஐயா தனது T.V.S.50-யை எடுத்துக்கொண்டு பேரன்
முகேஷை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு விரைந்தார் கறிக்கடையை நோக்கி... சரி அவங்க
சந்தோஷமாக இருக்கட்டும் நீங்க கருத்துரையை போட்டுப் போங்க... நான் ய்யேன் வேலையைப்
பார்க்கிறேன் அடுத்த பதிவைப் போடணும்...
சாம்பசிவம்-
நாற்பது வருஷமா கூப்பிட்டு வந்த பேரை மாற்ற முடியுமா ?
Chivas Regal Sivasambo-
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் தரகரு
இன்னும் உசுரோட இருக்காரா ?
சிவாதாமஸ்அலி-
பெருசுக.. இந்த வயசு வரைக்கும் சந்தோஷமாக
விளையாடுதுகளே இதெல்லாம் எல்லோருக்கும் கிடைக்குமா ?
நகைச்சுவை பதிவு எழுத வைத்த நண்பர் திரு.
நெல்லைத்தமிழன் அவர்களுக்கு நன்றி. நான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முயல்கிறேன்
என்னால் பிறர் சிரித்து மகிழட்டும் என் சோகம் என்னோடுதான்.
சனி, மார்ச் 11, 2017
வறுமையின் நிறம் இருட்டே...
வறுமையின் நிறம்
இருட்டே...
இறைவா என்னை இந்நிலையில் வைக்காதிருந்தமைக்கு முதற்கண் நன்றி.
இறைவா என்னை இந்நிலையில் வைக்காதிருந்தமைக்கு முதற்கண் நன்றி.
நீ படைத்த இவர்களை என்னை
காண வைத்தமைக்கும் நன்றி.
கண்டு இவர்களுக்கு என்னை
உதவ வைத்தமைக்கும் நன்றி.
இவர்களுக்கு உதவ என்னை
செல்வந்தனாக்கியதற்கும் நன்றி.
என் சந்ததிகளை
இந்நிலைக்கு ஆகவிடாமல் என்னை தடுக்க வைத்தமைக்கும் நன்றி.
பின்குறிப்பு
ஆக்கமாட்டாய் என்பதற்கும் நன்றி.
இருப்பினும் என் வாழ்க்கையை நாசமாக்கி விட்டாயடா... சண்டாளா...
என் நெஞ்சிருக்கும்வரை என் நினைவில் நிற்க வேண்டியவை.
நட்பூக்களே கீழ்காணும் இவையனைத்தும் முதலில் எனக்கே பிறகே தாங்களுக்கு.
ஸ்ரீ சாரதா சக்தி பீடம் சென்னை.
சிவானந்தா சரஸ்வதி சேவாஸ்ரமம் சென்னை.
தி யுனைடெட் பேஸிக்கிலி ஹேண்டிகேப்பிட் ஸ்கூல் கோவை.