என் வாழ்க்கையில், உள்ள
கொள்கையே, எந்த மனிதனுக்கும் தீங்கு
செய்யாமல் வாழ்ந்து முடிக்க வேண்டும் என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும்
இருந்தேன், இருக்கிறேன், இருப்பேன். இதில் துளியளவும் ஐயமில்லை இருப்பினும் எனக்கு கஷ்டங்களும், துன்பங்களும் வரக்காரணம் என்ன ?
ஒருவேளை
நான் இறைவனுக்கு துரோகம் செய்திருப்பேனோ ?
செய்திருக்க
சாத்தியம் இல்லையே... நானறியாமல் எப்படி ? இந்தக் குழப்பத்தை
தீர்க்க சாமியாரை காணலாமா ? எனக்கு இதில் நம்பிக்கை
இல்லையே என்ன செய்யலாம் என ஆலோசித்துக் கொண்டு இருக்கும் போது... வாசலிலிருந்து, நோட்டீஸ்
ஒன்றை ஒரு சிறுவன் வீசி விட்டு சென்றான், எடுத்துப் படித்தேன் அதில்..
மனிதகுலமே... நமது,
இருளை விலக்க வந்த ஒளி விளக்கு,
அகத்தை அறிந்து வந்த அகல் விளக்கு,
சிந்தனையை சிலிர வைக்கும் சிமிழி விளக்கு,
குடும்ப உறவுகளை
குளிர விடும் குலவிளக்கு,
குழப்பங்களை
குறைத்து விடும் குமிழி விளக்கு,
கலக்கங்களை கசக்கி விடும் கலங்கரை விளக்கு,
சிவந்த பார்வையால் சுட்டெரிக்கும்
சிவப்பு விளக்கு,
துன்பங்களை துறத்தி விடும்
தூண்டா மணி விளக்கு,
சத்தியத்துக்கே, புத்தி
சொன்ன, புத்திரமாமணி
ஸுவாமிஜீ, குத்தியானந்தா
அவர்களின் சொற்பொழிவு
கேட்டு பக்திப் பழரசம் பருக வாரீர், வாரீர்.
இதைப் படித்ததும்,
இவரைப் போய் பார்த்தால் என்ன ? உடன் விசாரித்தேன், Appointment வாங்கினால் உடன்
காணமுடியும் என்றார்கள் எனது செல்வாக்கைப் பயன்படுத்தி M.P ஆசைத்தம்பி மூலம் Appointment வாங்கிப் போய் பார்த்தேன்
தனியறையில் சந்தித்தேன், எல்லா விவரங்களையும் சொன்னேன், என்னைப் பார்த்து, என் கண்ணைப் பார்த்து
மீண்டும் ஒருமுறை சொல் என்றார் என்ன அருள்
சினிமாவுல விக்ரம் கேட்டது மாதிரி கேட்கிறாரே ?
வேறு
வழியின்றி மீண்டும் ஒப்புவித்தேன்,
பிறகு வெள்ளி கூஜாவிலிருந்து... தங்கத்திலான சிறிய குப்பியில் அவரே ஊற்றித்தந்து பருகுங்கள் என்றார், எனக்குள் ஆச்சர்யம் மாநிலமே போற்றும் எவ்வளவு பெரிய சாமியார் அவரே பேதபாகுபாடின்றி தானே ஊற்றிக் கொடுக்கிறாரே, பருகியதும் அற்புதமான சுவையாக இருந்தது.
பிறகு வெள்ளி கூஜாவிலிருந்து... தங்கத்திலான சிறிய குப்பியில் அவரே ஊற்றித்தந்து பருகுங்கள் என்றார், எனக்குள் ஆச்சர்யம் மாநிலமே போற்றும் எவ்வளவு பெரிய சாமியார் அவரே பேதபாகுபாடின்றி தானே ஊற்றிக் கொடுக்கிறாரே, பருகியதும் அற்புதமான சுவையாக இருந்தது.
(ஒரு முறை நான் உகாண்டா போயிருந்தபோது PARரில் சாப்பிட்டதும்
இதைப் போலவே இருந்தது, இருப்பினும் இதை அதனுடன் ஒப்பிடக்கூடாது தவறு கன்னத்தில்
போட்டுக் கொண்டேன்)
பிறகு வீட்டுக்கு
வந்து மனைவி செல்வியிடம் சொன்னேன், அவள் தடுத்தும் கேட்காமல் தாலிச் செயினை தவிர பீரோவைத் திறந்து வீட்டுப் பத்திரங்கள், நகைகள், வெள்ளி நகைகள், பணம், அத்தனையையும்
ஒரு பெட்டியில் எடுத்துக் கொண்டு அவர் சொன்னபடியே பௌர்ணமி வெள்ளியன்று இரவு
ஆஸ்ரமத்திற்க்கு போனேன், பூஜையறையில், ஸுவாமிஜீ, ஒரு சீடரி (பெண்பால்)
நான்,
வெள்ளி கூஜா, தங்க குப்பி, பூஜை ஆரம்பித்த
சிறிது நேரத்தில் தங்ககுப்பியில், ஒழுகப்பட்டு சீடரியால் எனது வாயில்
வார்க்கப்பட்டு, மீண்டும், மீண்டும், பிறகு சீடரி எனது கையில் எதையோ
கொடுக்கப்பட்டது போல்... I Thing Pen கையெழுத்து பெறப்பட்டது
போல்... சுள்ளென்று
வெயில் முகத்தில் அடிக்க... கண் விழித்தேன் என்னஇது நாம் எங்கிருக்கிறோம்
எழுந்து பார்த்தால் ? ஆற்று மணலில்
கிடந்திருக்கிறேன், தூரத்தில் ஒத்தக்கடை விருசுழி ஆற்றுப்பாலம் அதில் வாகனங்கள்
போய்க் கொண்டிருந்தது, வேகமாய் மேலே வந்து ஒரு டாக்ஸியை மறித்து வாடியார் வீதி போ
என்றேன், வீட்டிற்குள் போனேன், மனைவி டாக்ஸிக்கு பணம் கொடுத்து விட்டு வந்தாள்.
என்னங்க போனகாரியம் என்ன
ஆச்சு உங்க
கார் எங்கே ?
எல்லாமே
புரிந்தது, வெட்கமாக இருந்தது, மனைவி பேயாட்டம் ஆடினாள் நண்பர் சாம்பசிவத்தை
அழைத்துக் கொண்டு Police Station போய் விபரம் சொன்னேன்,
அவர்கள் சிரித்து விட்டு கீழ்ப்பாக்கம் போகச் சொன்னார்கள், M.P ஆசைத்தம்பி வீட்டுக்கு
போனேன் அவர் டெல்லி போய் விட்டாராம், கூடாது,
கூடாது, இரவு முழுவதும் யோசித்து காலையில் M.Pக்கு போன் செய்து
விபரத்தை சொல்லாமல் எனது நண்பர் சாம்பசிவத்திற்கு ஸுவாமிஜீயை காண Appointment வேண்டுமென கேட்டு
வாங்கினேன், உடன் ஓடியன் மணி சலூனுக்கு போய் மொட்டையடித்து மீசையை மட்டும்
வைத்துக் கொண்டேன், ஸுவாமிஜீயை காணப் போனேன், பூஜையறையில் நானும், அவனும் (ஸுவாமிஜீ) விபரத்தை சொல்லி எங்கேடா என்னோட நகை, பணம், பத்திரங்களெல்லாம் ? அவன் அலாரம் பெல்லை அடிக்க முயல சட்டென தேங்காயை எடுத்து
அவன் கையில் அடித்தேன் இருவரும் கட்டிப்புரள, எனது கையில் குத்து விளக்கு கிடைக்க,
அடுத்த நிமிடம் குத்து விளக்கு அவன் வயிற்றுக்குள்... ஜில்லென்று முகத்தில்
யாரோ தண்ணீர் அடிக்க... கண் விழித்தேன்,
''ஏண்டா இன்னுமா தூங்குறே போய் வேலையப் பாருடா''
கேட்டவர் – ஜெயிலர், ஜெயபால்
இடம் – வேலூர்.
எனக்கு கஷ்டங்களும், துன்பங்களும்
வரக்காரணமென்ன ? ஒரு வேளை நான் இறைவனுக்கு
துரோகம் செய்திருப்பேனோ ? செய்திருக்க
சாத்தியம் இல்லையே... நானறியாமல் எப்படி ?
ஒரு வேளை
செய்யப் போகிற கொலைக்காகத்தான் கஷ்டத்தையும், துன்பத்தையும் ஏற்கனவே கொடுத்துட்டாரோ ?
அப்படினா
இப்ப எதற்கு கஷ்டம் ?
CHIVAS REGAL சிவசம்போ-
குலவிளக்கு போல வந்த ''குத்தியானந்தா''வ ''குத்து விளக்கு''ல குத்திட்டீயலே....
காணொளி