அன்பு நெஞ்சங்களே....
கடந்த வருடம் இதே தேதியின் தமிழ்ச்சங்கு என்ற பதிவில்
சொல்லி இருந்தேன் இரவு 8 மணிக்கு மேல் 7 ½ என்று அதை சற்று மறந்து விட்டேன் ஆனால்
பாருங்கோ... கரீக்டா மறு வருடம் ஞாபகம் வந்துடுத்து... ஹி... ஹி... ஹி...
ஆம் மகன் தமிழ்வாணன்
பிறந்த சந்தோஷத்தில் பக்கத்தில் இருந்த உணவகத்தில் போய் சாப்பிட்டு விட்டு
மருத்துவமனைக்கு வந்தேன் (சாப்பிடும் போதே நினைத்தேன் மகனுக்குப் பிடித்த கோழி 65 வாங்கிக் கொண்டு போவோமா ? நாளைக்கு நேரடியாக கூட்டிக் கொண்டு வருவோமே) ஒரு அம்மாள் மாலை 05.00 மணிக்கு மகளை பிரசவத்திற்க்கு அழைத்து வந்தவர் முகத்தில் கவலையோடு அங்கும்
மிங்குமாக நடந்து கொண்டு இருந்தார் நான்தான் ஆறுதல் சொன்னேன் எல்லாம் நல்லபடியாக
நடக்கும் கவலைப்படாதீங்க அம்மா, கூடவே ஒரு பெரியவரும் கணவராக இருக்கும் அவரும் ஒரு
நிலையில் இல்லாமல் இருந்தார் எனக்கு எம்மெஸ்வி அவர்களின் பாடலொன்று நினைவுக்கு
வந்தது.
பெத்தெடுத்த வயிறுதானே
பத்திக்கிட்டு எரியூ.....ம்
பிள்ளை குட்டி இல்லாத
எவனுக்கென்ன புரியும்...
உண்மையான
வரிகள்தானே... உள்ளே நுழைந்தவுடன் கேட்டேன் குழந்தை பிறந்துருச்சாம்மா ? ஆமாப்பா... பின்னேயேன் கவலையா இருக்கீங்க ? இல்லைப்பா பொம்பளைப் புள்ளையா போச்சு.. என்னம்மா
நீங்க பிரசவம் நல்லபடியா முடிஞ்சதுக்கு சந்தோஷப்படாமல் நீங்களே இப்படிச் சொல்றீங்களே...
அவரு இப்ப வந்துருவாரு நானென்ன சொல்றது ? யாரு ? மாப்பிள்ளை இதுனாலே என்னம்மா இருக்கு சொல்லித்தானே ஆகணும்
எல்லாம் நம்ம கையிலேயா இருக்கு ? இல்லை தம்பி ஏற்கனவே ரெண்டு பொம்பளைப் புள்ளைங்க, இது
மூணாவது இப்பவும்... கவலைப்படாதீங்கம்மா... அவர் வந்ததும் நான் பக்குவமா சொல்றேன்.
சொன்னால் நம்புவீர்களோ இல்லையோ... ராஜ்கிரனோட ராசாவின் மனசிலே படம்
பார்த்திருப்பீங்க அதில் வந்த வடிவேலு எப்படி ? இருந்தார் இப்பக்கூட பார்க்கலாம் அப்படியேதான்
ஒருத்தர் வந்தார் இந்த அம்மாள் முந்தானையை எடுத்து ஒரு மாதிரியாக போர்த்திய போதே
எனக்கு தெரிந்து விட்டது இவர்தான் அந்த மாப்பிள்ளை அந்த அம்மாவைப் பார்த்து
என்னாச்சு என்றார் மிடுக்காக.. அந்த அம்மா சொன்னார் நல்லபடியா பொறந்துடுச்சு தலையை
குனிந்து கொண்டே சொன்னார் சிறிது நேரம் மௌனம் நிலவியது கொஞ்சம் அதட்டலாக கேட்டார்
மறுபடியும் பொட்டக் கழுதையா ? (எனக்குள் சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்) அந்த அம்மாள் மௌனமாக நின்றார்... இவர் வெடுக்கென ஹும்
என்று சொல்லி விட்டு வெளியே போய் விட்டார் அந்த அம்மாளின் கன்னங்களில் கண்ணீர்
தாரை தாரையாக ஓடியது அம்மா இப்படி உட்காருங்க சுவரோரமாய் கிடந்த பெஞ்ச்சில் உட்கார
வைத்து விட்டு இவனென்ன ? வந்ததும் குழந்தையை
பார்க்காமல் உடனே வெளியேறி விட்டான் வெளியே வந்து எட்டிப் பார்த்தேன் தெருமுனையில்
ஒரு அம்மாளும், இவனும் கையை காலை ஆட்டி பேசிக்கொண்டு நிற்க... நான் போனேன் உடனே
அவனிடம் கேட்டேன் என்ன பிரச்சினை ? அந்த அம்மாவும் இவனும் என்னை ஒரு மாதிரியாக
பார்த்தார்கள் மேலிருந்து கீழ் சொல்லுங்க ஏன் ? குழந்தையை
பார்க்காமல் இங்கே நிற்கிறீங்க ? நீங்கயாரு ? அது கிடக்கட்டும் குழந்தை என்ன தப்பு செஞ்சுச்சு ? அந்த அம்மாள் சொன்னார் மூணாவதும் பொட்டைக் கழுதையை
பெத்துருக்கா... அதுக்கு அந்தப் பெண்ணு என்ன ? செய்ய முடியும் பொம்பளையான நீங்களே பொட்டக் கழுதைனு
சொல்றீங்க... அப்புறம் ஆம்பளை சொல்லாமல் என்ன ? செய்யிவான் ? உங்க மகளுக்கு இப்படி பிறந்தால் என்ன ? செய்வீங்க... யேன் மவ ரெண்டு சிங்க குட்டிகளை
பெத்தவ... எதுக்கு இவளைப் போல பெறப்போறா ? சரிம்மா அந்த சிங்க்க் குட்டிகளுக்கும் நாளைக்கு ஒரு
பெண் குட்டி வேணுமுள்ள அதுக்கு இந்த குட்டிகள் உதவும்ல... இதுவரை சும்மா நின்ற
மாப்பிள்ளை என்னை கேட்டா(ன்)ர் மொதல்ல நீங்க யாரு ? பார்த்தவுடன் கணித்து விட்டேன் இது கஞ்சாக் கிராக்கி
கன்னாபிஸ் சாடிவா ஈசியா தட்டி
விடலாமென பொம்பளைப்புள்ள பிறந்ததுக்கு யாரு ? மீது யாரு ? கோபப்படுறது ? உங்க மனைவி உங்க மேலே கோபப்பட்டா ? நீங்க என்ன சம்பந்தம் இல்லாமல் பேசுறீங்க ? நான் சம்பந்தம் இல்லாமல் பேசுறேனா ? உங்க குழந்தைதானே... யோவ் மரியாதையா ? பேசு... இப்பக் கோபம் வருது என்ன காரணம் ? எங்க குடும்பத்துல தலையிட நீ யாரு ? நான் யாருமில்லை சரி வா போலீஸ் ஸ்டேஷனுக்கு போவோம் ஏன் ? இப்படிச் சொன்னேன்... எனக்கே குழப்பம். உடனே அந்த
அம்மாள் சரிதான் குழந்தையை பார்க்க வந்த மருமகனை ஆளை வச்சு அடிக்க ஏற்பாடா ? ஏன்டி... சிரிக்கி மவளே... எம்புள்ள ஆம்பள சிங்கம்டி இன்னும்
மூணு கல்யாணம் பண்ணுவான் உரக்க கத்தினாள் (இவன்
சிங்கமா ?) நம்ம தலையிட்டது குடும்பத்துல வேற பிரச்சினையை
உருவாக்கிடுச்சே அந்தப் பக்கமாக வந்த எனது மாமனார் அந்த சிங்கத்திடம் போய் தம்பி
மன்னிச்சுக்கங்க அவரு தேவையில்லாமல் பேசிட்டாரு என அவன் கைகளை பிடித்துக் கொண்டு
அசிங்கப்படுத்திக் கொண்டு இருக்க... முந்தைய பதிவில் வந்த அந்த சண்முகம் ஓடி வந்து
என்னை பிடித்து உங்களுக்கு ஏன் ? தேவையில்லாத வேலை என்று என்னை மருத்துவமனைக்கு
இழுத்துக் கொண்டு வந்து விட்டார். அந்த அம்மாவை பார்த்தேன் அப்படியே உட்கார்ந்து
வெளியே நடந்தது எதுவும் தெரியாமல் அழுது கொண்டு இருந்தார் என்னால் வந்த புதிய பிரச்சினை
தெரிந்தால் இந்த தாய் மேலும் அழுமோ ? என் மனம் கசியத் தொடங்கியது நான் செய்தது சரியா ? தவறா ?
இந்த சம்பவத்தை எனது மாமனார் வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை என்றே நினைக்கின்றேன் (இறந்து விட்டார்) காரணம் எனது மனைவிகூட இதனைப் பற்றி கடைசி வரை கேட்டதில்லை.
அன்புச் சகோதரிகளே.... பெண்களே
பெண் குழந்தைகளை ‘’பொட்டக்கழுதை’’ என்று இழிவு படுத்தலாமா ?
Chives Regal சிவசம்போ-
பொம்பளைப் புள்ளைகளை வேண்டாம்னு சொல்றவன் கல்யாணம் செய்துக்கிறதுக்கு மட்டும்
ஏன் ? பொம்பளைப் புள்ளே கேட்கிறான்...
சாம்பசிவம்-
இதொரு குடிகார
மட்டை எதையாவது குண்டக்க மண்டக்க கேட்கும்.
சிவாதாமஸ்அலி-
மட்டையா இருந்தாலும்... கேள்வி சரிதா’’னே....