वनदे मातरम्
வதனநூலில் (FACE BOOK) மலையாள நண்பர் ஒருவர் எனக்கு இந்த வாசகம் அடங்கிய புகைப்படத்தை அனுப்பி இருந்தார் படித்ததும் எனக்கு
தோன்றியது எத்தனை
சத்தியமான வார்த்தைகள், இதையேன் நாம் நம் தமிழர்கள் படிப்பதற்கு தமிழில் அனுப்பக் கூடாது ? எனதோன்றியது.
உடனே என் இனிய தமிழில் TYPE செய்தேன், பிறகு தோன்றியது
இதையேன் தமிழர்கள் அல்லாத நம் இந்தியர்கள் அனைவரும் படிப்பதற்கு ஹிந்தியில்
அனுப்பக் கூடாது ? எனதோன்றியது
(தமிழர்களுக்கு மட்டும்தானே ஹிந்தி
படிக்கத் தெரியாது)
உடனே எனது இந்திய மொழியான,
ஹிந்தியில் TYPE செய்தேன். பிறகு தோன்றியது இதை அரேபியர்களும் படித்தால் என்ன ? எனதோன்றியது.
உடனே அரபியில் TYPE செய்தேன், பிறகு தோன்றியது
இதையேன் நாம் உலகமே படிப்பதற்கு ஆங்கிலத்தில் அனுப்பக் கூடாது ? எனதோன்றியது.
உடனே ஆங்கிலத்தில் TYPE செய்தேன் பிறகு தோன்றியது
இதுவரை தெரிந்த மொழிகளில் TYPE செய்து விட்டோம், தெரியாத மொழி
ஒன்றில் செய்தால் என்ன ?
உடனே கொஞ்சம் பேசத் தெரிந்த தெலுகுவை, தேர்வு செய்து தெலுகுவில் TYPE செய்தேன், சத்தியமாக இந்த நிமிடம்வரை தெலுகு படிக்கத் தெரியாது ஆனால் நான்தான் இதை TYPE செய்தேன், எனது தெலுகு நண்பர்களான ராமுலு, சேகர், கௌதுவிடம் காண்பித்து, 100 % சரி செய்த பிறகே இதை வெளியிடுகிறேன்.
கடைசியில் என்ன ஆனது ?
நான் தற்காலம் தெலுகு படித்துக் கொண்டு இருக்கிறேன்.
கடைசியாக இப்படியும் தோன்றியது, நாளை நாம் இறந்து விட்டாலும் எனது சந்ததிகள், எனது குரலை INTERNET டில் எப்பொழுதும் கேட்க கூடுமே, ஆகவே இதை நாமே படித்துக் காண்பித்து நமது குரலை பதிவு செய்தால் என்ன ?
விளைவு இதோ.....
காணொளி
(Please ask Audio Voice)
(Please ask Audio Voice)
இந்தப் பதிவை எமது இனிய
நண்பர் திரு. துளசிதரன் தில்லை அகத்து மற்றும் திருமதி. கீதா
அவர்களுக்காக வெளி இடுகின்றேன் - கில்லர்ஜி.