நான் அரபு மொழியில்
உருவாக்கிய படம்
இந்தப்பதிவுக்கு
வரும் நட்பூக்கள் கடந்த பதிவின் குழறுபடிகளை சரி செய்து விட்டேன் கீழ்காணும்
இணைப்பை சொடுக்கி மேலோட்டமாக படித்து விட்டு இதைத்தொடர்ந்தால் தங்களுக்கு
விளங்கும் நன்றி – கில்லர்ஜி
அந்த
சங்கடம் என்னவென்றால் நவால் என்றொரு பெண் எல்லோருடைய பெயரைப்போல் இவளது பெயரையும்
பதிவேட்டில் எழுதி வைத்துக் கொண்டே வந்தேன் மூன்று மாதம் கடந்த பிறகு அமல் என்றொரு
பெண்தான் அந்த தவறை கண்டு பிடித்தாள் சத்தமில்லாமல் என்னிடமோ அல்லது நவாலிடமோ
சொல்லி இருந்தால் பிரச்சனை சுமூகமாக மூக்கும் மூக்கும் வைத்தாற்போல்
முடிந்திருக்கும் இவள் பதிவேட்டை எல்லோரிடமும் எடுத்துக்கொண்டு போய் காண்பித்து
கில்லர்ஜி எப்படி எழுதி இருக்கிறான் பாருங்கள் என்று சொல்ல அலுவலகம் மொத்தமே
சிரித்தது நவாலுக்கு வெட்கம் எனக்கு சங்கடம் ச்சே இப்படி ஆகிவிட்டதே
நவால்
Nawal
نوال
இப்படித்தான் எழுத வேண்டும்
ஆனால் நான் எழுதியது இப்படி
بوال
ஏதும் வித்தியாசம் தெரிகிறதா
அந்தப்புள்ளி
மேலே உள்ளது மேலிலும் கீழே உள்ளது கீழிலும் இருக்கிறதா இதுதான் பஞ்சாயத்து எனக்கு
மிகவும் சங்கடமாகி விட்டது அவளிடம் மன்னிப்பு கேட்டேன் அவள் தலையில்
அடித்துக்கொண்டு சிரித்தாள் உன்னால எல்லோரும் சிரிக்கிறாங்க எத்தனை தடவை இப்படி
எழுதினேன் கணக்கு எடுத்தால் சுமார் இருநூறுக்கும் மேல் இந்த தருணத்தை பயன் படுத்த
நஜாஹ் ஸ்கேலை எடுத்துக்கொண்டு வந்தாள்
என்ன
இருநூறு
அடி வாங்கிக்க
ஏன்
செய்த
தவறுக்கு
அப்படினா
உன்னைத்தான் அடிக்கணும் நவால் நீ அடி நஜாஹ்தானே சொல்லிக் கொடுத்தது
ஆமா
அதுவும் சரிதான் நீ வேணும்னே இப்படி எழுதகச் சொல்லி இருக்கே என அவளுடன் சண்டைக்கு
கிளம்பி விட்டாள் நம் வேலை எப்பூடி
அதன்
பிறகு அனைத்தையும் உட்கார்ந்து கரெக்சன் பென் வைத்து கீழுள்ள புள்ளியை அழித்து
விட்டு மேலே ஒரு புள்ளியை கொடுத்து விட்டேன் வேலை முடிந்து விட்டது இந்த மாதிரி
அரபு எழுதும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் சரி ஒரு புள்ளிதானே எலவு மேலே
கிடந்தால் என்ன கீழே கிடந்தால் என்ன என்று கேட்கின்றீர்களா அதாவது
மேலே புள்ளி வைத்தால்
நவால்
கீழே புள்ளி வைத்தால்
புவால்
அதனாலென்ன
நவால் என்றால் ஒரு
பெண்ணின் பெயர்
ஓகே
புவால் என்றால் என்றால்
என்றால்
மூத்திரம்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்