எனது ஐயா ஞானி
ஸ்ரீபூவுவின் கொள்ளுப்பேத்தியின் மகள் எம்.விஷாலி
மரியாதை
தண்ணீர் எடுக்கும் பாவையிடம்
சொன்னேன்
ரொம்ப அழகாக இருக்கீங்க
என்று
செருப்பு பிஞ்சுடும் என்றாள்
நல்ல வார்த்தைதானே சொன்னேன் ?
* * * * * * * * * * 01
கணவன்
அவனைப் பார்த்து உங்கள்
மனைவியாக வர வேண்டும்
என்றேன் அவன் சொன்னான்
நீ வர-தட்சிணை வேண்டும்
என்று.
* * * * * * * * * * 02
செழிப்பு
மரம் கேட்டது மேகத்தைப்
பார்த்து
நான் செழித்து வளர மழை தா
என்று
உடன் மேகம் மழையுடன்
காற்றையும்
கொடுத்து மரத்தை
வீழ்த்தியது.
* * * * * * * * * * 03
பருப்பு
ஐஸ்வர்யா அழகி அவளை அழைப்பது
போல் ஐஸ் வண்டியை அழைத்தேன்
ஐஸ் என்று ஐஸ் வாங்கி
கொண்டிருந்தவள்
என்னிடம் சொன்னாள் இங்கே
பருப்பு வேகாது.
* * * * * * * * * * 04
கண்ணீர்
மாப்ளே எம்மக கண்ணீர்
வடிக்காமல்
பார்த்துக்கோங்க மாமனார் கலங்கிட,
மருமகன் சொன்னான் இனி
குழம்புக்கு
வெங்காயம் வாங்க மாட்டேன்
மாமா.
* * * * * * * * * * 05
அகம்பாவம்
இமை சொன்னது விழிகளிடம்
உனக்கு பாதுகாவலனே நான்தான் என்றதற்கு
வேல்விழியாள் என்று கில்லர்ஜி
வர்ணிப்பது உன்னையல்ல என்னையே
* * * * * * * * * * 06
சினம்
இரயில் கேட்டது தண்டவாளங்களை
செருப்புகளா சௌக்கியமா ? சினம் கொண்ட
தண்டவாளம் சொன்னது இரயிலை
நாங்க காலை விரிச்சோம் ? டப்பா கழன்றுமுடீ...
* * * * * * * * * * 07
எழுத்து
நான் ரொம்ப அழகாக எழுதுவேன்
ஸார்
அவன் மேலாளரிடம்
சொல்லும்போது
விரல் நினைத்தது நம்ம எழுத
மூதேவி வாய் பெருமை
பேசுதே...
* * * * * * * * * * 08
பழிச்சொல்
இவன் லாரியால மொக்கைராசுவை
ஏத்திக் கொன்னதை நான்
பார்த்தேன் ஐயா
பார்த்தசாரதி சாட்சி சொல்ல,
எமன் நினைத்தான்
பிறகு என்னை எதுக்கு பழி
சொல்றாங்கே ?
* * * * * * * * * * 09
சிரிப்பு
குழந்தை அழுவதை இரசித்துப்
பார்த்து
உறவுகளோடு சிரித்தனர்
தாயும், தந்தையும்
யாருக்கும் கவலையில்லை
காரணமென்ன ?
இதோ இப்பொழுதுதானே குழந்தை
பிறந்தது.
* * * * * * * * * * 10
Chivas Regal சிவசம்போ-
ஹைக்கூவுல நம்ம ஐயிட்டத்தை பத்தி வரவேயில்லையே ?