அழகன்குளம்,
‘’அருவா‘’ அழகர்
and
ஜெகதாபட்டணம்,
‘’ஜெயின்‘’ ஜெயந்தி
ஏங்க,
வீட்டுல யாரும் இல்லையா ?
வாங்க,
யாரு ?
‘’கத்திக்குத்து’’ கதிர்வேலு
இருக்காருங்களா ?
அவரு ‘’பிளேடு’’ பிச்சைய பார்க்கப்
போயிருக்காரு.
நீங்க..... ?
நான்,
அவரு மனைவி ‘’ஜெயின்’’ ஜெயந்தி, நீங்க யாரு ?
நான்
‘’அருவா’’ அழகர்.
என்ன
விசயமா வந்தீங்கன்னு சொன்னீங்கன்னா ? அவரு வந்ததும் சொல்றேன்.
நம்ம
‘’வேல்கம்பு’’ வேலாயுதமும், ‘’திருக்கைவாலு’’ திருமாலும் சமரசமா போறதா
சொல்லிட்டாங்க அந்த விசயமா பேசனும் ‘’முச்சந்தி’’ முனுசாமி கடைக்கு
வரச்சொல்லுங்க, உங்களை எங்கேயோ பார்த்தது போல இருக்கே...
‘’சோடாபாட்டில்’’ சோமன் வீட்டுல
பார்த்திருப்பீங்க...
யாரு
‘’ஆசிட்’’ ஆறுமுகத்தோட
மச்சானைத்தானே சொல்றீங்க,
ஆமா,
ஆமா, அவருதான்.
சரிதான்,
அப்ப நான் கிளம்புறேன், வேலையிருக்கு ‘’மான்கொம்பு’’ மாயாண்டி வீட்டுக்கு
போகனும்.
வந்தீங்க
ஒருசெம்பு ‘’கள்ளு’’ அடிச்சுட்டு போனிங்கன்னா
நல்லா இருக்கும்.
பரவாயில்லே,
இப்பத்தான் வீட்ல எம்மனைவி சாரதா ‘’சாராயம்’’ கொடுத்தா
அடிச்சுட்டுதான் வர்றேன்.
யாரு ‘’கஞ்சா’’ கபாலியோட தங்கச்சி சாரதாவா ?
ஆமா
அவதான்.
உங்க
மனைவியை எனக்கு நல்லாத்தெரியுமே..
அப்படியா ? எப்படிப் பழக்கம் ?
நம்ம ‘’சாராயக்கடை’’ சாமுண்டியோட ‘’சால்னாகடை’’ யில ரெண்டு பேரும்தானே ஒன்னாவேலை
செஞ்சோம்.
அப்படியா ? ரொம்ப சந்தோஷம்.
அப்ப
உங்களுக்கு ‘’பிராந்திக்கடை’’ பிரியாவதியத் தெரியுமே ?
ஆமா
ஏங் கொளுந்தியாதானே அவ.
இப்ப,
அவ எங்கே இருக்கா ?
இப்போதைக்கு,
‘’வீச்சருவா’’ வீராசாமி வீட்டுல
இருக்கா.
அதுசரி,
ஒருவிசயம்... யெந்தங்கச்சி ‘’அபின்’’ அபிலாசாவுக்கு ஒரு மாப்பிள்ளை பார்தீங்கன்னா
நல்லாயிருக்கும்.
உங்க
வீட்டுக்காரரோட தம்பி ‘’திராவகம்’’ திராவிடமணிய முடிக்கலாமே...
அவருக்கு
ஏற்கனவே ‘’பிட்பாக்கெட்’’ பிரமிளாவோட தொடர்பு
இருக்குதாம்.
உங்களுக்கு,
யாரு சொன்னா ?
வெள்ளி,
செவ்வாய்க்கு வீட்டுக்கு வர்ற ‘’கடப்பாரை’’ கணேசன் சொன்னாரு.
அப்ப
நம்ம ‘’மண்வெட்டி’’ மகேஷை முடிப்போமா ?
அவரு,
என்நாத்துனா ‘’வெளக்கமாரு’’ வெள்ளையம்மாளோட ஆளாச்சே,
முறை சரியா வராதே...
சரி
நம்ம ‘’தீப்பொறி’’ தீனதயாளனை செய்வோமா ?
போன மாசந்தானே
அவனுக்கும், என் தங்கச்சிக்கும் ஆகாம தீர்த்து வெச்சோம்.
அப்படியா ? எனக்கு தெரியாதுல, நம்ம ‘’சாட்டையடி’’ சாமிநாதனே..
வேண்டாம்
அவனுக்கும், எனக்கும் ஏற்கனவே ஆகாது.
அப்ப,
நம்ம ‘’பட்டாக்கத்தி’’ பட்டாபிய, முடிப்போமா ?
அந்த மூதேவி,
பட்டப்பகல்லயே பட்டச்சாராயம் அடிக்குமே.
உங்களுக்கு,
எப்படித்தெரியும் ?
நான்,
சால்னாகடையில வேலை பார்க்கும்போது, அதுதானே வீட்டு வாடகை கொடுத்துகிட்டு
இருந்துச்சு.
சரிநம்ம,
‘’சூரிக்கத்தி’’ சூரியா சும்மாதானே
திரியிறான் அவனுக்கு முடிச்சு வைப்போம்,
அவன் சும்மாதான்,
திரியிறானா... சரி தற்போதைக்கு முடிச்சு வெப்போம் Futureல அவ பார்த்துக்கிருவா.
அதான்
சரி.
நீங்க
வந்ததுல சந்தோஷம், அவரு வந்ததும் சொல்றேன், சனிக்கிழமை அவரு ஆஞ்சநேயர் கோயிலுக்கு
போயிடுவாரு, சும்மாயிருந்தா வாங்க கல்யாண விசயமா விரிவா பேசலாம்.
சரி,
நல்லது கட்டாயம் வர்றேன்.
‘’சாவக்கட்டி’’ சாம்பசிவம்-
விரிவா பேசுறீங்களா ? அப்ப இவ்வளவு நேரம் பேசுனது சுருக்கமா ? சமூகத்துல உயந்த அந்தஸ்துள்ள குடும்பங்களா,
இருக்கும் போலயே...