தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சுயசரிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுயசரிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், நவம்பர் 09, 2023

மீண்டும் எமராத்தில் கில்லர்ஜி

வணக்கம் நட்பூக்களே...
மீண்டும் நான் எமராத் (United Arab Emirates) அபுதாபி வந்து இருக்கிறேன். நீண்ட கால ஆலோசனைகளுக்குப் பிறகு தனிமையை தேடி வந்து இருக்கிறேன். தொடர்ந்து தங்களுக்கு என்னாலான பதிவுகள் வந்து கொண்டே இருக்கும் அதில் இறுதி வரையில் உறுதி கொண்டவன்.

புதன், மே 17, 2023

திருகப்பட்ட மனங்களுக்கு திருமணம்


இதற்கு சாட்சிகள் ?
 
ஒன்று - மண்ணாங்கட்டி என்று சொல்லப்படும் அவனது மனசாட்சி.
 
இரண்டு - நிலக்கோட்டையிலிருந்து நிலத்தின் கோட்டைக்குள் சென்று விட்ட அவள் சாட்சி.
 
மூன்று - பொழுது போகாமல் அவனையும் அவளையும் படைத்து விட்டானே அந்த திருவாளியத்தவன் அவனே சாட்சி.

வெள்ளி, அக்டோபர் 28, 2022

அகவை எட்டு

 
    எனது முகவுரையில் நான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருப்பேன் இதெல்லாம் புதுமைக்காக சொல்லப்பட்டது அல்ல... என் அடி மனதின் ஆழத்தில் படிந்துள்ள உண்மையான படிமங்கள் ஆம் நண்பர்களே... எனக்கு சமூக அவலங்களை கண்டு பொறுக்க முடிவதில்லை இது விபரமறிந்து உலகையறிந்த நாள்முதல் உள்ளவை.

திங்கள், செப்டம்பர் 19, 2022

ஆயிரத்தில் கில்லர்ஜி

வணக்கம் நட்பூக்களே எமக்கு இது ஆயிரமாவது பதிவு (1000) தங்களது பேராதரவே எமது இந்த சிறிய சாதனைக்கு சாத்தியமாயிற்று. இதில் உங்களுக்கு பயனாக  நான் என்ன செய்தேன் ? என்பதை தாங்களே சொல்ல வேண்டும். அப்படி நானென்ன எழுதி விட்டேன் ? என்னை நானே கேட்டு கேள்விக்கென்ன பதில் கிடைத்தவைகள் இதோ...

வெள்ளி, மார்ச் 18, 2022

நூலுக்கு மரியாதை

இதம்பாடல் அழகிய கிராமம் எனது ஐயா ஞானி ஸ்ரீபூவு அவர்கள் வாழ்ந்து மறைந்த கிராமம். ஆம் கிராமிய மணம் கமலும் இங்குதான் கிராமத்தின் வஞ்சனையற்ற மனிதர்களையும், வாஞ்சையோடு பழகும் நல் உள்ளங்களையும், இதமான கிராமிய பாடல்களையும் நஞ்சற்ற சுவாசக்காற்றையும் சுவாசித்து வளர்ந்தேன். இங்குதான் எனது பள்ளி வகுப்பை ஒன்றில் தொடங்கி நான்காவதில் முடித்தேன். இத்தோடு எனது பள்ளி வாழ்க்கையும் அஸ்தமனம் ஆகியது. எஸ்தர் டீச்சர் எனக்கு முதலாம் வகுப்பில் அ படிக்க, எழுத கற்றுக் கொடுத்த முதல் தெய்வம்.

திங்கள், ஆகஸ்ட் 30, 2021

நிஜத்துடன் யுத்தம், நிழலுக்கு முத்தம்

 

Kalaiselvi Killergee
30.08.1991 – 30.08.2021
 
சேனா உனக்கு நிஜத்தில் தந்தவைகளை விட இன்று நிழல் படத்துக்கு நான் தருபவை அதிகமாகி விட்டதே... அது முத்தம் மட்டுமல்ல... உனக்கு பிடித்தமான மல்லிகைப்பூவும்தான். அன்று வெறும் இரண்டு ரூபாய்க்கு வாங்கி கொடுக்க முடியாத வாழ்வு இன்று எவ்வளவுக்கும் வாங்கி கொடுக்கலாம் ஆனால் உனது படத்துக்குதானே கொடுக்க முடிகிறது. என்னவொன்று இதில் பெண்கள் மல்லிகைப்பூ சூடிக்கொள்வதற்கான அடிப்படைக் காரணத்தை நீ மறந்து, மறுத்து விடுவாய்.

திங்கள், ஆகஸ்ட் 17, 2020

துயரத்துள் துயரம்


வணக்கம் நட்பூக்களே...
சமீப காலமாக உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா எனக்கு பல விடயங்களை சொல்லிச் சென்றது ஆனால் என்னை அள்ளிச் செல்லவில்லை இதற்கு இறைவனுக்கு நன்றி சொல்வதா... வேண்டாமா ? என்பதில் சற்று மனக்குழப்பம். காரணம் இன்றைய வாழ்வு இன்பமா ? துன்பமா ? என்ற கேள்விக்கு விகடகவி என்று பதிலளித்தால் வினா எழுப்பியவரின் நிலைப்பாடு ? விகடகவி இடமிருந்து வலமாக படித்தாலென்ன ? வலமிருந்து இடமாக படித்தாலென்ன ? குழப்பமான வார்த்தைதானே...

புதன், ஜூலை 29, 2020

சனி, மே 30, 2020

தியாகி தீயாகி


கண்ணுக்குள் நிலவாகி
மனதுக்குள் நிலையாகி
என்னுடலில் உறவாகி
எனக்கும் உரமாகி

ஞாயிறு, ஏப்ரல் 26, 2020

கில்லர்ஜியின் பத்தாம் ஆண்டு



வணக்கம் வலையுலக உறவுகளே... நான் வலைத்தளம் உருவாக்கி பத்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது இன்றோடு 816 பதிவுகள் எழுதி வெளியிட்டு விட்டேன்.

சனி, ஏப்ரல் 11, 2020

நான் தகுதியை மீறியவன்



முன்குறிப்பு – யார் மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்டு எழுதியதல்ல நடந்த, நடக்கும் யதார்த்தமான உண்மைகளை சாதாரணமாக சொல்லிப் போக நினைக்கும் வழிப்போக்கன் நான் - கில்லர்ஜி

புதன், ஏப்ரல் 01, 2020

அமேசனில் தேடுங்கள்...


உங்கள் மனம் கவர்ந்த எமனேஸ்வரம், எழுத்தாளர் எமகண்டன் அவர்கள் எழுதிக் கொட்டிய கோப்பு மலைகளிலிருந்து...

கொங்காபுரி தேசத்தின் போர் வீரன் கொங்குமுடியின் வீரதீரச்செயல்கள் வெளிவராத உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் அழும் விழிகளும், விழும் துளிகளும்

வியாழன், மே 30, 2019

சேனா உனது நாளில்...


கலைச்செல்வி கில்லர்ஜி
30.05.2001

நீ இறந்து
நான் இருந்து
பலருக்கு
நல்வாழ்வு

சேனா... இன்று உனது 18-ஆம் ஆண்டு நினைவு தினம் உனது மரணத்தின் கடைசி தருணத்தில் உனக்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை முழுமையாக நிறைவேற்றி விட்டேன் என்பதில் எனக்கு ஆத்ம திருப்தி நாளை எனது ஆத்மாவுக்கும் திருப்தி.

சனி, அக்டோபர் 20, 2018

படிக்காதவன்


மனித வாழ்வில் ஒருவன் முன்னுக்கு வருவதற்கும், பின்னுக்கு போவதற்கும் காரணகர்த்தாவாக கண்டிப்பாக இன்னொரு மனிதர்ன் இருக்க வேண்டும் இது எல்லோருடைய வாழ்விலும் உண்டு. தனது வாழ்க்கைக்குகூட பிரயோசனம் இல்லாதவன் என்று முத்திரை குத்தப்பட்டவன் மற்றவருடைய உயர்வுக்கு காரணமாக இருப்பான் இதில் பலரும் அனுபவப்பட்டு இருக்கலாம். எனது அபுதாபி வாழ்விலும் பலரும் வந்து இருக்கின்றார்கள். சாதாரண சம்பளத்தில் இருந்த என்னை உயர் வழிக்கு கொண்டு வந்த பெருமை அபுதாபியில் இருக்கும் நான் வேலை செய்த அலுவலகத்தில் இருந்தவர் ஒரு அரபி

சனி, ஏப்ரல் 07, 2018

மீண்டு(ம்) வருமா ?


நான் சிரிக்கத் தெரியாதவன் அல்ல சிரிப்பை ரசிப்பவன் ரசித்து சிரித்தவன் ஆனால் சிரிப்பை இழந்து மறந்தவன், ஒரு காலத்தில் நான் இருக்குமிடம் எந்த மொழி நண்பர்களானாலும் எப்பொழுதுமே என்னால் பிறருக்கு சந்தோஷமாக இருக்கும். (Not Now) அந்தக் காலத்தின் இடைவெளி அளவு தூரம் எனது தற்போதைய ஆயுளின் நான்கில் இரு பகுதியை ஆக்கிரமித்து கொண்டது. 

செவ்வாய், ஜனவரி 16, 2018

இரை தேடி உழைத்ததில் இறை தந்த பரிசு



வணக்கம் நட்பூக்களே... இவ்வருடம் ஜனவரி ஒன்று அதிகாலை கோயமுத்தூர் ஆதி மோட்டார்சில் MURUTI SUZUKI WagonR என்ற மகிழ்வுந்து ஒன்றை என்னைச் நேசிக்கும் நல்ல உள்ளங்களின் ஆசியால் வாங்கினேன். குடும்பத்தோடு முதலில் அம்மாவின் ஆசைப்படி பிள்ளையார் கோவிலுக்கு சென்று மகிழ்வுந்துக்கு பூஜை போட்டு பிறகு எனது ஆசைப்படி Coimbatore The United Physically Handicapped School சென்றோம் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக முதல்நாளே இனிப்பு (லட்டு) வாங்கி வைத்து விட்டேன். லட்சங்கள் செலவு செய்து மகிழ்ச்சிக்காக மகிழ்வுந்து வாங்குகின்றோம். 

ஞாயிறு, டிசம்பர் 31, 2017

கட்டிலா ? தொட்டிலா ?

கட்டில் சுகம் என்னை கை விட்டது
தொட்டில் சுகம் பின்னும் தொடர்ந்தது...

சிலருக்கு இந்த உலகில் ஒன்றைப் பெற ஒன்றை இழந்தே தீரவேண்டும். இது இறைவன் வகுத்த நியதி இதில் நானும் ஒருவனே. வாழ்வில் எதையும் பெறாத என்னை இன்று தொட்டில் சுகமும் கை விடுகின்றது...
என் கணக்கு தவறு, விதியின் கணக்கே சரி.

600th Post Finish 
(மனஆறுதல் தரும் இந்தக் கணக்கையாவது இறுதிவரை நம்பி வாழ்வோம்)


Good bye 2017 Welcome 2018

ஞாயிறு, டிசம்பர் 10, 2017

திங்கள், நவம்பர் 27, 2017

நான் சொல்வதெல்லாம் உண்மை


அந்தக் குழந்தை பிறந்ததும் குடும்பத்தில் குதூகலம் காரணம் ஆண் குழந்தை அதன் அழகைப் பார்த்து ஆனந்தக் கூத்தாடினர் அவனது தாத்தா பேரனின் காலை தரையில் படாமல் காலின் தடம் பதிக்கும் இடத்தில் எல்லாம் டிஸ்யூ பேப்பர் போட்டு கொண்டே சென்று பார்த்து, பார்த்து வளர்த்தார். அவரே அழகான பெயரும் வைத்தார். இருப்பினும் கண்ணே, மணியே, பொன்னே, முத்தே, ராசா, தங்கம் என்றே அழைத்து வந்தனர். ஒன்றரை வயது நிறைவடைந்ததும் நல்லதொரு திருவோண நட்சத்திர தினத்தில் எல்.கே.ஜி.யில் சேர்த்தார்கள்.