மேலேயுள்ள புகைப்படத்தை பார்த்தீர்களா ? ஒரு மோட்டார் சைக்கிளில் யாரோ ஒரு கோமாளி விநாயகர் சதுர்த்தி அன்றாக இருக்கலாம். மக்களை கவர்வதற்காக இப்படியான கோமாளித்தனங்களை செய்யும் மனிதர்கள் உலகில் எங்கும் உண்டு இதுவொரு நகைச்சுவையாக எடுத்து பொழுதை கடத்தி விடவேண்டும். ஆனால் பக்கத்தில் நிற்கும் ஒரு மனிதர் அவனை பிள்ளையாரே வந்ததாக நினைத்து சாலையில் கும்பிடுவது முறையா ?
தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
சமூககோமாளிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூககோமாளிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், மே 01, 2025
புதன், ஜனவரி 29, 2025
கோமாவில்18 மாதங்கள்
தமிழ்
திரைப்படங்களில் எவ்வளவோ கோமாளித்தனமான காட்சிகளைப் பார்த்து வெறுத்து இருப்போம்,
நூறு நபர்கள் மிஷின்கன் கொண்டு சுட்டாலும் கசாநாயகனின்
காலில்கூட குண்டு படாது காரணம் அவ்வளவு கனகச்சிதமாக ஓடுவார். அதிலும் ஒடிக்கொண்டே
தனது கையிலிருக்கும் சாதாரண ஆறு குண்டுகள் உள்ள துப்பாக்கியால் அத்தனை பேரையும்
சுட்டு விடுவது, பிறகு எத்தி விடும்போது அவ்வளவு பேர்களும் வானத்தில் பறந்து போய்
விழுவது. அப்படியே சிலர் ஈட்டியை நெஞ்சில் குத்தினாலும் பிடுங்கி எறிந்து விட்டு
மீண்டும் சண்டை போடுவது, இப்படி நிறைய சொல்லலாம்.
ஞாயிறு, டிசம்பர் 15, 2024
அன்று உணர்வாய்...
வணக்கம்
நட்பூக்களே... மேலேயுள்ள சுவரொட்டியில் நண்பருக்கு திருமணம் இதற்கு வாழ்த்துகளை
தெரிவிப்பது மகிழ்ச்சியான விடயமே.. காரணம் அப்பத்தானே அவன் நமக்கு ஒட்டுவான்
இதுதான் அடிப்படை காரணம் மொய் செய்துதானே... மொய் பெறுகிறோம். என்பதே மெய். இதற்கு
மணமக்களின் புகைப்படத்தை போடுவது தவறில்லை அதைப்பார்த்து மாப்பிள்ளை பெருமைப்
படலாம்தானே...
புதன், நவம்பர் 20, 2024
காசிமேடு, காசுவெட்டி காசியம்மாள்
வணக்கம்
இந்தியா மட்டுமல்ல உலகம் அனைத்திலுமே அந்த நாட்டு நாணயங்களையோ, ரூபாய்த்தாள்களையோ
அழித்தல் வேலையில் ஈடுபடக்கூடாது. திரைப்படங்களில் அப்படி காட்சிகள் இடம் பெற
வேண்டிய நிலையிருந்தால் அதற்கான துறைகளிடம் சிறப்பு அனுமதி பெற்று அந்த மாதிரியான
ரூபாய்த்தாள்களை போலியாக அச்சடித்து. தீ வைப்பார்கள், அதனை அழிப்பது போல்
காட்சிகள் எடுப்பார்கள். இது உலகலாவிய சட்டம்.
ஞாயிறு, நவம்பர் 10, 2024
இதுவும் வேண்டுமடா...
உறவுகளே... இந்த இழிநிலைக்கு காராணம் யார் ? சேனல்காரர்களா ? இல்லை
இந்த நாடகங்களை தயாரிக்கும் நாதாரிகளா ? அல்லது
இதில் நடிக்கும் கூத்தாடிகளா ? நான்
சொல்லவா ? மக்குகளாகவே வாழும் நாம்தான். நாம் ஒவ்வொரு தினமும் எத்தனை
ஆயிரம் நபர்கள் இதைப் பார்க்கின்றோம் என்பதை துள்ளியமாக கணக்கிடும் கருவிகள் மூலம்
பார்த்து இதன் தாக்கத்தை பார்வையாளர்களிடம் அதிகரிக்கின்றார்கள்.
செவ்வாய், நவம்பர் 05, 2024
பூஜையும், பூசையும்
வணக்கம்
நட்பூக்களே... சுமார் இருபது வருடங்களுகு முன்பு கிராமம் மட்டுமல்ல, நகரங்களில்கூட
எங்கெங்கு காணினும் பெண்களுக்கு பேய் பிடித்து விட்டதாக சொல்லி சிலர் ஏர்வாடி தர்ஹாவுக்கு
அழைத்துப் போவார்கள் அதற்கென்று டிகிரி படித்தவர்கள் போல சில ஊரில் பூசாரிகள்
இருப்பார்கள், சவுக்கால் அடிப்பார்கள் இவர்கள் பேய் ஓட்டுபவர்கள் என்றும்
அழைக்கப்படுவார்கள் ஏதோ ஸ்டேரிங் பிடிக்கும் டிரைவர்கள் போல...
செவ்வாய், அக்டோபர் 22, 2024
இருள் முகங்கள்
வணக்கம் நட்பூக்களே...
மேலேயுள்ள புகைப்படச் செய்தியை பார்த்தீர்களா ? இது உ.பி.யில் மட்டுமல்ல,
தமிழகத்தில் பல இடங்களிலும் இப்படி கணவன் – மனைவிகள் போலியாக வாழ்க்கின்றார்கள்.
இது விஞ்ஞான வளர்ச்சியால் நமக்கு கிடைத்த சாபக்கேடு. எனக்கு நீ துரோகம் செய்தால்
உனக்கு நான் செய்வேன். குட்டு உடைபட்டு விட்டதா ? பரவாயில்லை அமைதியாக நீ
உன் வழியில் போ, நான் என் வழியில் போகிறேன்.
திங்கள், ஆகஸ்ட் 26, 2024
குட்டிச்சுவரு...
நண்பர்களே... ஜெயிலர் என்றொரு
திரைப்படத்தில் வந்த பாடல் வரிகள் ஒன்று என்னை மெய் சிலிர்த்து கேட்டு இரசிக்க வைத்தது
அதனைக் குறித்து எழுத வேண்டுமென்று வெகு நாட்களாக நினைத்திருந்தேன். பாடலின்
தொடக்க வரிகள் என்னவென்பதை என்னால் இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை காரணம் பின்னணி
இசையின் மெல்லிய நீரோட்டம் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது.
ஞாயிறு, ஆகஸ்ட் 11, 2024
பாஞ்சாலி
நண்பர்களே.. மேலே புகைப்படத்திலிருக்கும்
குடும்பம் ஹரியானா மாநிலத்தில் நாகரீகம் வளராத மலைவாசி மக்களின் குடும்பங்களில்
ஒன்று. முன்புறம் கையில் தான் பெற்ற குழந்தையுடன் நிற்பதுதான் குடும்பத்தலைவி
பின்புறம் நிற்பவர்கள் யார் தெரியுமா ? அவர்கள் இந்தப் பெண்மணியின் கணவர்கள். ஆம் ஐந்து நபர்களும்
கணவர்களே... வரிசைப்படி பிறந்தவர்கள்.
சனி, ஜூன் 01, 2024
தெய்வத்தின்ற பூமியில்...
கேரளாவில் திருச்சூரின் விஷ்ணு மாயா கோயிலில் திரைப்படக்
கூத்தாடி திருமதி குஷ்பு அவர்களுக்கு கும்பமரியாதை. அதாவது வருடத்திற்கு ஒருமுறை
ஒரு பெண்மணியை தேர்வு செய்து இப்படி மரியைதை சய்வது இக்கோயிலில் தொன்று தொட்டு நிகழும்
நிகழ்வாம். இதில் கடந்த 03.10.2023 தேதியில்
நடந்து இருக்கின்றது.
புதன், மே 01, 2024
கண்டாலே காண்டாகிறது
நட்பூக்களே...
நமது நாட்டில் திருமணம், கோயில் விசேஷம் போன்ற இடங்களுக்கு செல்லும் பொழுது
பெண்கள் தங்க நகைகள் அணிந்து செல்வார்கள், அதிலும் பெரும் செல்வந்தர்கள் என்றால்
வைர நகைகள் அணிந்து செல்வதும் வழக்கம். ஆனால் வீட்டில் சாதாரணமாக சும்மா இருக்கும்
பொழுது சமைத்து முடித்து வீட்டிலுள்ள வேலைகளை செய்து விட்டு குளித்து, முடித்து
சாதாரண சேலை உடுத்தி அல்லது இன்றைய தேசிய உடையான நைட்டியை அணிந்து சுத்தமாக இருப்பார்கள்.
வெள்ளி, மார்ச் 22, 2024
எம் வழி அதே வலி
நமது ஊர்களின் அரச மரத்தடியில் பார்த்து
இருப்பீர்கள் கண்ணாடி பிரேம் போட்ட பழைய சாமி படங்கள் பழையதாகி விட்டதாலும் நமது
மோடிஜியின் டிஜிட்டல் இந்தியாவால் மின்சார ஒளியோடு ஒலியும் தரும் அழகிய கண்ணைக்
கவரும் (கவனிக்க, கண்ணைக் கவரும் மனதை கவர அல்ல) அழகிய புதிய அவதாரமாக சாமி படங்கள் வாங்கிய
காரணத்தால் இவைகளை எடுத்து வந்து இங்கு போட்டுச் செல்வர்.
சனி, மார்ச் 09, 2024
பாலூற்றி பாழாகும் சமூகம்
வணக்கம்
நண்பர்களே.... நமது இந்திய நாட்டில் ஒருவேளை உணவுடன் உறங்கின்றவர்களின் எண்ணிக்கை
பல லட்சங்கள் உண்டு இருப்பினும் நமது சமூகம் அவர்களைப் பற்றிய துளியும் சிந்தை
இல்லாது கேளிக்கைகளிலும், பொழுது போக்குகளிலும் நாட்டம் செலுத்துபவர்களின் மோகம்
பெறுகி கொண்டே செல்கிறது. காரணமென்ன ? இறைவன் இவர்களுக்கு பசியின் அருமையை உணர விடாமல்
நல்வாழ்வு அளித்திருப்பதால்தானோ ?
செவ்வாய், பிப்ரவரி 06, 2024
வெள்ளி, ஜனவரி 05, 2024
உன்னைப்போல் ஒருவன்
வணக்கம் நட்பூக்களே... மேலேயுள்ள புகைப்படச் செய்தியை
பார்த்தீர்களா ? இவர்களைத்தான் நாட்டை ஆள வா தலைவா என்று கூவுகின்றனர் தமிழகத்து கூதரைகள்...
உங்களுக்கு எல்லாம் சிந்திக்கும் திறன் இருக்கிறதா ? இல்லையா ? மக்களே... தமிழ்நாட்டில் எவ்வளவு கோடிகளை பெற்றார்கள் இவர்கள். ஏன் இந்த மோசடி ?
புதன், டிசம்பர் 20, 2023
இலவச இணையம்
நட்பூக்களே... குறுகிய
காலத்தில் அரசியல்வாதிகள் பெரும் செல்வந்தர் ஆகின்றார்கள், திரைப்படக்
கூத்தாடன்கள் செல்வந்தர் ஆகின்றார்கள், மட்டைப்பந்து அடிப்பவர்கள் செல்வந்தர்
ஆகின்றார்கள். இதனுள் ஏதும் தவறான சூட்சுமம் இருக்கிறதோ, இல்லையோ ஆனால்
நரம்பில்லாத நாக்கு சட்டென இவர்கள் மீது குற்றம் சுமத்தி விடுகின்றனர்.
புதன், நவம்பர் 22, 2023
உடைத்தாயே உன் வாழ்க்கை
இந்த வகையான பிரச்சனைகள் நாட்டில் பல இடங்களிலும்
இப்படி நிகழ்கிறது இதற்கு காரணம் பெற்றோர்கள்தானே ? திருமணம் நிச்சயிக்கும் முன்பே மணப்பெண்ணிடம்
மட்டுமல்ல, மாப்பிள்ளையிடமும் இன்று தீர்க்கமாக கேட்க வேண்டியது இருக்கிறது
இல்லையெனில் இப்படித்தான் இருபுறமும் மனஉலைச்சலும், சண்டையும், அவமானங்களும் வந்து
சேரும்.
ஞாயிறு, அக்டோபர் 08, 2023
ஆயிரம் ஆண்டுகள் வேண்டும்
வணக்கம்
நட்பூக்களே... நான் பெரும்பாலும் பிறருடைய எழுத்துகளை எனது தளத்தில்
வெளியிடுவதில்லை இந்த கருத்து புலனத்தில் (What-app) வெளி
வந்தது. எனது எண்ண ஓட்டத்தை பிரதிபலிப்பது போலிருந்தது ஆகவே இதனை தங்களுக்கு
பார்வைக்காக வைக்கின்றேன் – கில்லர்ஜி
வியாழன், செப்டம்பர் 28, 2023
குன்றக்குடி, குடிமகன் குருநாதன்
நாட்டின்
குடிமகன்
என்பது இவர்களுக்கே
பொருந்தும்... ஆனால்
குடிக்காத என்னை
குடிமகன் என்பது
முறையில்லை அரசே
இது முறையில்லை...
என்பது இவர்களுக்கே
பொருந்தும்... ஆனால்
குடிக்காத என்னை
குடிமகன் என்பது
முறையில்லை அரசே
இது முறையில்லை...
வியாழன், செப்டம்பர் 14, 2023
நீலகிரி, நீட்தேர்வு நீலாவதி
நீட் தேர்வு எழுத
நீட்டாக உடை அணிந்து சென்ற மாணாக்கர்களை குறிப்பாக பெண்களை இப்படி தலைவிரி கோலமாக
அலங்கோலப்படுத்தி உள்ளே அனுப்புகின்றார்கள். தேர்வு நேரலை காணொளியில்தான்
நிகழ்கிறது மேலும் ஆசிரியர்கள் குழுவும் சுழன்று வருகிறது அதன் மத்தியில் தேர்வு
எழுதுபவர்கள் தவறு செய்து விடமுடியுமா ? அரபு
நாடுகளிலும் தேர்வு நிகழத்தான் செய்கிறது அங்கு பெண்களை முக்காடு போடக்கூடாது
என்று சொல்ல முடியுமா ?








.jpg)





.jpg)
.jpg)

.jpg)

.jpg)