அரிசிக்கும், அரசிக்கும் வித்தியாசம் சொல்லு ?
அரிசி மக்களுக்கும் உபயோகம், அரசி மன்னருக்கு
உபயோகம்.
ஆசாரிக்கும், பூசாரிக்கும் வித்தியாசம் சொல்லு ?
ஆசாரி மணியை வடிப்பாரு, பூசாரி மணியை அடிப்பாரு.
மெய்க்கும், பொய்க்கும் வித்தியாசம் சொல்லு ?
குடும்பத்தலைவி அழுதால் மெய், நடிகை அழுதால்
பொய்.
காதலுக்கும், மோதலுக்கும் வித்தியாசம் சொல்லு ?
காதலாலே மோதல் வரலாம், மோதலால காதல் வராது.
காதலிக்கும், மனைவிக்கும் வித்தியாசம் சொல்லு ?
எது பேசினாலும், தேன்போல இனித்தால் காதலி,
என்ன பேசினாலும் தேள்போல கடித்தால் மனைவி.
அதிர்ஷ்டம், துரதிஷ்டம் வித்தியாசம் சொல்லு ?
அது இஷ்டத்துக்கு வந்தால், அதிர்ஷ்டம்,
துறத்திக்கொண்டு போனால் துரதிஷ்டம்.
இயற்கைக்கும், செயற்கைக்கும் வித்தியாசம்
சொல்லு ?
10 மாதம் கழித்து குழந்தை பிறந்தால் இயற்கை, 8 மாதத்துல ஆபரேஷன் செய்து
எடுத்தால் செயற்கை.
மணமேடைக்கும், பிணமேடைக்கும் வித்தியாசம்
சொல்லு ?
கழுத்துல மாலையோட நடந்து போனால் மணமேடை,
மாலையோட தூக்கிகிட்டு போனால் பிணமேடை.
மகளுக்கும், மருமகளுக்கும் வித்தியாசம்
சொல்லு ?
இருக்கிறதை, அள்ளிக்கிட்டு போறவ மகள்,
இருக்கிறவனை தள்ளிக்கிட்டு போறவ மருமகள்.
உலோக தங்கத்துக்கும், மாமாமகள்
தங்கத்துக்கும் வித்தியாசம் சொல்லு ?
உலோக தங்கத்தை உரசினால் சேதாரமாகும், மாமன் மகள்
தங்கத்தை உரசினால் சேர்மானமாகும்.
பலனுக்கும், பிரதிபலனுக்கும் வித்தியாசம்
சொல்லு ?
காதலிக்கு, கேட்காமலே வாங்கிகொடுப்பது பிரதிபலனை
எதிர்பார்த்து, மனைவி கேட்டாலும் வாங்கி கொடுக்காமலிருப்பது பலன் இல்லை
எனதெரிந்து.
பலி கொடுப்பதற்கும், பழி வாங்குவதக்கும்
வித்தியாசம் சொல்லு ?
நம்ம பணத்துல, ஆடுவாங்கி கொடுத்தால் அது பலி,
பிடிக்காதவன் ஆட்டைப்புடிச்சு கொடுத்தால் அது பழி.
மகனுக்கும், மருமகனுக்கும் வித்தியாசம்
சொல்லு ?
கொஞ்சம், கொஞ்சமா சுரண்டுவாரு மகன், மொத்தமா
வரண்டுவாரு மருமகன்.
பணக்காரனுக்கும், பிச்சைக்காரனுக்கும் வித்தியாசம்
சொல்லு ?
பிச்சைக்காரனுக்கு, நினைத்த இடமெல்லாம்
தூக்கம் வரும், பணக்காரனுக்கு நினைத்தாலும் தூக்கம் வராது.
கோயிலில் நிற்கும் பக்தனுக்கும், திருடனுக்கும்
வித்தியாசம் சொல்லு ?
கோயில் உண்டியல்ல, பணத்தை போடுறவன் பக்தன்,
அந்த பணத்தை எடுத்துக்கிறவன் திருடன்.
அன்றைய அரசியல், இன்றைய அரசியல் வித்தியாசம்
சொல்லு ?
அன்றைய அரசியல்வாதிகள் நாட்டு மக்களுக்கு
உழைத்தார்கள், இன்றைய அரசியல்வாதிகள் வீட்டு மக்களுக்கும், சின்னவீடுகளுக்கும்
உழைக்கிறார்கள்.
ORIGINALலுக்கும், DUPLICATEக்கும்
வித்தியாசம் சொல்லு ?
ஸூட்டிங்கில, ORIGINALலா
பல்டி அடிக்கிறவருக்குபேரு DUPMASTAR, சும்மா நடிச்சு
காண்பிச்சவருக்கு பேரு ORIGINAL.
ABU DHABI க்கும், DUBAI க்கும் எழுத்து
வித்தியாசம் சொல்லு ?
ABU DHABI யிலிருந்து,
DUBAI எடுக்கலாம், DUBAI யிலிருந்து ABU DHABI முழுமையா
எடுக்கமுடியாது.
ரயிலுல நாம ஏறுவதற்க்கும், ரயிலு நம்ம மேலே
ஏறுவதற்கும் வித்தியாசம் சொல்லு ?
ரயிலுல நாமஏறினா போறஇடம் இராமேஸ்வரம், ரயிலு
நம்ம மேலே ஏறினா போறஇடம் எமனேஸ்வரம்.
முட்டாளுக்கும், அறிவாளிக்கும் வித்தியாசம்
சொல்லு ?
என்னத்தையாவது கேட்கிறவன் முட்டாள், எதையாவது
சொல்லி சமாளிக்கிறவன் அறிவாளி.
சரி எனக்கு வேலையிருக்கு, நான் வர்றேன்.