என்னிடம் சிறு வயது தொடங்கி
ஒரு பழக்கம் உண்டு ஏதாவது காரணத்தால் எனக்கு எதிரிகள் உருவாகி விட்டால் அவரை
எப்படியாவது நமது மரண காலத்துக்குள் நண்பராக்கி விடவேண்டும் என்பது காரணம் நாளைய
எனது மரணம் எந்தவொரு மனிதருக்கும் சந்தோஷத்தை கொடுத்து விடக்ககூடாது என்பது எனது
கொள்கை நண்பர்களை அதுவும் நான் எதுவுமே செய்திடாமல் எனக்கு மரியாதை செய்து
சந்தோஷப்படுத்தியவர்களுக்கு துரோகம் செய்வேனா ? எனக்கு துரோகம் செய்தவர்களை
நான் உடன் மறந்து விடுவேன் காரணம் அதனால் பழிக்குப்பழி வாங்கும் எண்ணங்களை உருவாக்கும் முடிந்த அளவு நன்மையை
கருதியே ஏதாவது செய்ய நினைப்பேன் அது சிலநேரங்களில் புரிதலின் காரணங்கள் மாறுபட்டு
என்னை கெட்டவனாக்கி விடுகிறது பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்
என்பார்கள் அது எனது தற்போதைய வாழ்க்கையில் நிகழ்ந்து கொண்டு வருகிறது கவலைகளும்,
வேதனைகளும் எனக்கு புதிய விடயங்கள் அல்ல ! அவைகளை கரும்புச்சக்கைகளைப் போல கசக்கி வாழ்ந்து வருபவன் நான்
ஆனால் வீண் பழிகள்தான் எனது மனதை வாட்டி வதைத்து
விடுகிறது.
யாரிடமும் பேசும்
பொழுதும் சரி, எழுதும் பொழுதும் சரி இவை சரியானவைகள்தானா ? என்பதை பலமுறை யோசித்தே வார்த்தைகளை வெளியேற்றுவேன்
குடும்பத்திலும் சரி, வெளியிடங்களிலும் சரி நான் நடுநிலையோடு பேசுவதால் கெட்டவன்
என்ற பெயரே எனக்கு கிடைத்து இருக்கின்றது ஒருவேளை பெயர் ராசிதான் காரணமோ...
என்னவோ... நான் தவறே செய்யாதவன்
என்று ஆணித்தரமாக சொல்லி விடமுடியாது அறியாது செய்த தவறுக்காக மனதால் வருந்தி
வெட்கப்படுபவன் நான்.
//ஒரு மனிதன் தவறுகளை குறைக்க வெட்கப்பட்டால்
போதுமானது//
இது ஒரு வேதத்தில்
சொல்லப்பட்ட வார்த்தை இதை எனக்கு விபரம் தெரிந்த வயதில் தேவகோட்டை வீதிகளில் யாரோ,
எவரோ சுவற்றில் எழுதி இருந்ததை படித்திருக்கின்றேன் அன்று முதல் நானும் வெட்கப்பட
ஆரம்பித்தேன் அதன் காரணமாக எனது தவறுகள் குறைந்தை வருவதை கவனித்தேன் அதையே எனது
கொள்கையாகவும் ஆக்கி கொண்டவன் காரணம் நான் சொன்னது யார் ? என்பதை பார்ப்பதில்லை சொன்னது என்ன ? என்பதை பார்ப்பவன் எனக்குப் பிடித்த, பிடிக்காத பெரியாரின்
கருத்துகளும் உண்டு, கிருபானந்த வாரியாரின் கருத்துகளும் உண்டு கூடுதலாக
பெரியாரின் கருத்துகள் பிடிக்கும் இதனால் நான் கெட்டவனாகி விடுகிறேன் .
எனது
மனதுக்கு தவறு என்று தெரிந்து விட்டால் என்னால் பாதிக்கப்பட்ட இதயம் என்னைவிட
அகவையில் உயர்வோ தாழ்வோ துளியும் தாமதிக்காமல் மன்னிப்பு கோருவதில் தயங்குவதில்லை
இதில் நான் வறட்டுக் கௌரவம் பார்ப்பதில்லை அதேநேரம் தவறில்லை என்றால்
என்னிடமிருந்து யாருமே மன்னிப்பை பெற முடியாது எனது தலையில் அகந்தையும் கிடையாது
சேரவிடுவதும் இல்லை சேர்ந்தாலும் தலையில் தட்டி இறக்கி விடுவேன் நான் தனிமை
விரும்பி தனிமையில் சிந்திக்கும் பொழுது மனம் விசாலமாகும் அதற்காக நண்பர்களை
ஒதுக்குபவன் என்று அர்த்தமல்ல ! இந்தியாவிலும் சரி, U.A.Eயிலும் சரி அதிக நண்பர்களை, அதிக நாட்டு
நண்பர்களை பெற்றவன் நான் எனது ஆசையே நாளைய எனது மரண ஊர்வலத்துக்கு நிறைய பேர்கள்
வரவேண்டும் என்பதே ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதை அவனது மரணநாள் அன்று கணித்து விடலாம் என்பது எனது தாழ்மையான
கருத்து அரசியல்வாதிகளின் மரணக்கூட்டத்தை இதில் சேர்க்க வேண்டாம் அதன் வகை வேறு
நான் சொல்வது என்னைப்போன்ற சாதாரணக்காரர்களின் மரணம்.
வாழ்க ! நலம்.
நல்லதை நினை நன்மை நடக்கும்
தொண்டு செய் மேலான நிலை அடைவாய்.
- குடமுருட்டி சிவமுத்தர்
ஸாது சுவாமிகள்
உன்னுடைய
மரணம் எந்த ஒரு மனிதனுக்கும் சந்தோஷத்தை
கொடுக்ககூடாது
அந்த முறையில் வாழ முயற்சி
- கில்லர்ஜி (எனது செல்வங்களுக்கு
நான் சொல்வது)
குறிப்பு - பதிவுகள் எழுத எனக்கு இந்த குருட்டு
சமூகத்தில் ஆயிரமாயிரம் விடயங்கள் கொட்டிக் கிடப்பது எனது கண்களுக்கு தென்படுகிறது
அதை தொடர்ந்து எழுதுவதற்க்கு தமிழ் மணம் ஓட்டுப்பெட்டி எனக்கு இடையூராக இருப்பது
போல் தோன்றுகிறது இனிய நண்பரொருவர் இல்லை என்கிறார் போகட்டும் காலம் பார்க்கலாம்.
என்றென்றும் இதே
நட்புடனே....
கில்லர்ஜி किल्लरजि കില്ലർജി కిల్లర్
జి Killergee كـــيللرجــــي
தேவகோட்டையான்