FACE BOOK கில் ஒரு நண்பர் மேற்கண்ட கடிகாரப் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் தமிழ்
எண்களை படியுங்கள் என்று, இதை நாம் எங்கு படிப்பது ? யாரிடம் படிப்பது ? நாம் சிறுவயது தொடங்கி பள்ளிக்கூட ஆசிரியரிடம்தான்
படித்து வருகிறோம் ஆனால் நமக்கு இந்தத் தமிழ் எண்களை சொல்லித் தரவில்லையே காரணம் என்ன ? முதல் காரணம் நமது அரசாங்கம் இந்த எண்களை
அங்கீகரித்து நடைமுறை படுத்தவில்லை அதன் காரணமாய் நமது ஆசிரியர்களில்
பெரும்பாலானோருக்கும் இந்த எண்கள் தெரியவில்லை
1985 ம் ஆண்டு தேவகோட்டையில் ஒரு பெரியவர் பாலபாடம் என்ற 1910 ம் ஆண்டு
பழந்தமிழில் அச்சடித்த பெரும்பாலான எழுத்துக்கள் இப்பொழுது கிடையாது புரட்டும்போதே
உடைந்து விடும் அந்த நிலையிலான பழங்கால நூல் ஒன்று வைத்திருந்தார் சுமார் 400 பக்கங்கள்
இருக்கும் அவர் செல்வந்தரும்கூட நான் அடிக்கடி அந்த நூலை எடுத்துப் படிப்பேன்
ஒருநாள் அவர் நூலை புரட்டிக் கொண்டே இருந்தார் நான் என்ன ஐயா தேடுறீங்க ? எனக்கேட்டேன் அதற்கு அவர் ''கள்ளுன்னலின்
கொடுமை'' நேற்று படித்தேன் கொஞ்சம் பாக்கியிருக்கு அதான் தேடுகிறேன்
என்றார் அதற்கு தலைப்பும் பக்கமும் போய்ப் பார்த்தால் உடனே கிடைத்து விடுமே என்றேன்
எண்கள் தமிழில் இருக்கும் எப்படி பார்ப்பது ? எனக்கேட்டார் எனக்குத் தெரியும் என்றேன் எங்களுக்குள்
தொடங்கிய விவாதம் சவாலாகி இரண்டு ரூபாய் பந்தயத்தில் வந்து நின்றது இரண்டே
நிமிடத்தில் எண்களைப் பார்த்து பக்கத்தை விரித்து வைத்தேன் சொன்னபடியே இரண்டு ரூபாயை
கொடுத்து விட்டு, இதுதான் பள்ளிக் கூடத்திலேயே கிடையாதே இத்தனை வயதான எனக்கே
தெரியவில்லை உனக்கு எப்படித் தெரியும் ? நான் விவேகானந்தரிடம் (காலண்டர்) படித்தேன் என்றேன் அன்றே எனக்குள் தொடங்கிய முயற்சிதான்
இன்றும் யாருடைய உதவியுமின்றி COMPUTER ரில் நானாகவே பல மொழிகளை
படிக்கவும் TYPE செய்யவும் கற்றுக் கொண்டேன்.
இந்த தமிழ் எண்கள் COMPUTERரில்
TYPE செய்யும்
போது பூஜ்யம் மட்டும் ஆங்கில எண்களைப் போல் தான் வருகிறது உண்மையான தமிழ் பூஜ்ய எண் 90
% மலையாள
எழுத்தான ''ய'' வைப்போல் இருக்கும் (மலையாள(യ) ஏனோ தெரியவில்லை
COMPUTER ரில் வருவதில்லை மேலும் தமிழ் எண்களைப் போல்
தெலுகு, ஹிந்தி, மலையாளம், அரபிக் மொழிகளிலும் எண்கள் உண்டு அதேபோல் மலையாளம்,
அரபிக் இரண்டு மொழிகளைத் தவிர மற்ற மொழிகளின் பூஜ்ய எண் ஆங்கிலத்தில்தான் வருகிறது
ஆனாலும் சமீபத்தில் சில இடங்களில் பூஜ்யத்தை பார்த்தேன் அது எப்படியென தெரியவில்லை
இதனைக் குறித்த எனது ஐயங்களை தீர்ப்பார் யாருமில்லை இன்றும் நம்மூரில் சில வாகனங்களில்
இந்த எண்களை காணலாம், அப்பொழுது எனக்குள் ஒரு சந்தோஷம் தோன்றும்.
தமிழ் வாழ ! அந்த தமிழோடு நாமும் வாழ !
காணொளி