தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஏப்ரல் 21, 2017

வேதாளை, வேதனையில் வேலாயுதம்


காலங்களில் நீ கோடை
காலையிலே நீ பீடை
ஆண்டுகளில் நீ குறிஞ்சி
மாதங்களில் நீ ஆடி
கிழமையிலே நீ சனி
தேதிகளில் நீ எட்டு
நேரங்களில் நீ ராகு
ராசிகளில் நீ சிம்மம்
திசைகளிலே நீ வடக்கு
மலர்களில் நீ வாரமலர்
மரங்களிலே நீ கருவேலம்
செடிகளிலே நீ கள்ளி
கனிகளிலே நீ மங்குனி
காய்களிலே நீ நிக்காய்
விரதங்களில் நீ ஏழுநாள்
பறவைகளில் நீ பருந்து
ராகங்களில் நீ தோடி
இரவினிலே நீ இடிமழை
பகலினிலே நீ பத்ரகாளி
புன்னகையில் நீ வில்லி
அடிதடியில் நீ விஜயசாந்தி
பார்க்கும்போது நீ நமீதா
பேசும்போது நீ கண்ணாம்பாள்
பாடும்போது நீ கே.பி.சுந்தராம்பாள்
நெருங்கும்போது நீ நெருஞ்சிமுள்
தொடவந்தால் நீ தொட்டாசிணுங்கி
தொட்டுவிட்டால் நீ படார், படார்
கராத்தேயிலே நீ பிளாக்பெல்ட்
காரணம் உனது ஊர் எமனேஸ்வரம்.

ஊருக்காரன் பூராம் பொறணி பேசுறாங்களே... நமக்கு பத்து வருஷமா புள்ளை இல்லைனு எவனுக்குடி தெரியும் மேலேயுள்ள சமாச்சாரம் ?
வேதனையுடன்,
வேலாயுதம்,
வேதாளை.



சாம்பசிவம்-
இவனுக்கு... இந்தப்பேரு எதுக்கு ?

சிவாதாமஸ்அலி-
பேரே உனக்கு பொருத்தமில்லையே...

சிவாஸ் ரீகல் சிவசம்போ-
நமக்குதான்யா... பொருத்தமான பேரு வச்சுருக்காங்கே...

28 கருத்துகள்:

  1. அட்டகத்தி வேலாயுதம் என்று வேண்டுமானால் பெயரை மாற்றிக் கொள்ளட்டும் :)

    பதிலளிநீக்கு
  2. ‘எடக்குமடக்கு வேலாயுதம்’ என்றும் சொல்லலாமே!

    பதிலளிநீக்கு
  3. ரசித்தோம் ஜி!
    கீதா: ராசி சிம்மராசியாக்கும்!!!

    பதிலளிநீக்கு
  4. எங்கே போய் விடும் காலம் அது வேலாயுதத்தையும் வாழ வைக்கும்...

    பதிலளிநீக்கு
  5. நல்லவேளை நம்ம ராசியை விட்டுவிட்டீர்கள். (தனுசு).

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா... நல்லவேளை நானும் தப்பித்தேன்.

      நீக்கு
  6. நல்லா யோசிக்கிறீங்க!

    பதிலளிநீக்கு
  7. ஆஹா நீங்க கவிஞராடிட்டீங்க.. இனிப்பேருக்கேற்ப.. நம்மைக் கொல்லப்போறீங்க(ஹில்லர் )என்பது மட்டும் புரியுது..:).

    அதென்னது எப்பவும் நம் மூதாதையரின் படங்களையே போட்டுக்கொண்டிருக்கிறீங்க:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நமது மூதாதையர்களை மறக்க கூடாது

      நீக்கு
  8. காலங்களில் அவள் வசந்தம்
    கலைகளிலே அவள் ஓவியம்
    மாதங்களில் அவள் மார்கழி
    மலர்களிலே அவள் மல்லிகை
    என்ற பாடலை
    இந்த மாதிரி ஆக்கி
    "உனது ஊர் எமனேஸ்வரம்" என
    ஈற்றில் இறுக்கி விட்டீரே!

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா4/22/2017 1:06 PM

    ரசித்தேன் சகோதரா டி ஆர் போல..
    அசத்துங்கள்.
    தமிழ் மணம் - 6
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  10. காலங்களில் வசந்த த்தை நினைவுபடுத்தி விட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு