திங்கள், ஜூன் 24, 2019

எட்டையபுரம், எழுத்தாளர் எட்டப்பன்ணக்கம் திரு. எட்டப்பன் ஐயா அவர்களே எங்களது ‘’அனாவின் கனா’’ பத்திரிக்கையிலிருந்து ‘’அந்தோ பரிதாபம்’’ நிகழ்ச்சிக்காக தங்களை பேட்டி காண வந்திருக்கின்றோம் ஆரம்பிக்கலாமா ?
தமிழ் வாழ அந்த தமிழோடு நாமும் வாழ நல்லது ஆரம்பிக்கலாம்.

சட்டங்கள் அதிரடியாக மாற்றம் கொண்டு வரும் குழுவிற்காக பல அறிஞர்களை மோடிஜி அரசு தேர்வு செய்து வருகிறது தங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால்... தங்களின் பங்களிப்புகள் எப்படியிருக்கும் ?

புதன், ஜூன் 19, 2019

உஜாரஹ் அல்தர்பீய வஜீர் வடுகநாதன்இப்பதிவின் முன் பாகத்தை படிக்க கீழே சொடுக்குக...

லேடரை ஓரமாக நிறுத்தி விட்டு ஸூட்கேஷை கீழே வைத்து விட்டு வந்தவன் கேட்பான்... (வரவைத்தவன் பேசத்தெரியாத அப்பாவி அதிராவைப் போல் ஓரமாய் நின்று கொள்வான்)

அரபாப் அதா ஸூரா ஒயின் ரெக்கப் ?
முதலாளி இந்த படத்தை எங்கே வைக்க ?
அதா மக்கான் ஃபோக் ரெக்கப் மர்கஷ்
அந்த இடத்தில் மேல் மையமாக வை

வெள்ளி, ஜூன் 14, 2019

அர்த்தம் அறிந்தால் அன்பே பெருகும்அன்பு நெஞ்சங்களே....
முட்டாப் பயல்களையும் தாண்டவக்கோனே...
காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே...

இந்தப்பாடலை அனைவருமே கேட்டிருபீர்கள் நான் அரபு நாடு வந்ததும், அரேபியர்களைப்பற்றி தெரிந்து கொண்டதும் இந்தப்பாடல் நினைவுதான் அடிக்கடி நினைவுக்கு வரும் எவ்வளவு பொருத்தமாக எழுதியிருக்கின்றார்கள் நமது அன்றைய கவிஞர்கள். அரேபியர்கள் சர்வ சாதாரணமாக பிற நாட்டவரை முக் மாபி (மூளை இல்லை) என்று சொல்லி விடுவார்கள் இந்த வார்த்தை சாதாரணமாக ஆச் என்று நாம் தும்முவோமே அதனைப்போல வந்து கொண்டே இருக்கும் இதை ஆதிகாலம் தொட்டே பிழைப்புத்தேடி வந்த நமது முன்னோர்களும் கேட்டு வாழ்ந்து பழகி நமக்கும் அதனை கற்றுக் கொடுத்து விட்டுப் போய் விட்டார்கள்.

ஞாயிறு, ஜூன் 09, 2019

பணயம் வைத்த பயணம்


நான் இரண்டு குதிரைகள் பூட்டிய ஸாரட் வண்டியில் உயிரை பணயம் வைத்து பயணம் செய்பவன் இரண்டு குதிரைகளையும் வெவ்வேறு திசைகளை நோக்கி செலுத்துவேன், ஆயினும் எனது பயணம் நான் போகின்ற இலக்கை நோக்கி சென்று கொண்டே இருக்கும்.

செவ்வாய், ஜூன் 04, 2019

அவன் நினைத்தால் ?


னக்கு அரேபியர்களிடம் ஆச்சர்யமாக நிறைய விசயங்களிருக்கிறது அதில் ஒன்று அரசாங்க அலுவலகத்தில் வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை இதில் எப்படியும் நான்கு நாட்கள் மீட்டிங் நடக்கும் காலை வந்தவுடன் மீட்டிங் தொடங்கி விடுகிறது. பேசுகிறார்கள், பேசுகிறார்கள், வேலை முடியும் நேரம்வரை பேசுகிறார்கள். பிறகு மறுநாள் மீண்டும் அதே பிறகு மறுநாள் மீண்டும் அதே பிறகு இரண்டு நாட்கள் விடுமுறை இதில் இன்னுமொரு ஆச்சர்யம் என்னவென்றால் அலுவலகத்தில் பேசியது போதாதென்று விடுமுறை நாட்களில் வெளியிடங்களில் ஸ்டார் ஹோட்டல்களில் அருசுவை உணவுகளோடு மீட்டிங். நான் பலமுறை இவர்களிடம் ஆச்சர்யப்பட்டு கேட்டிருக்கிறேன் இப்பொழுது பேசியவை எல்லாம் எப்போது நடைமுறைப்படுத்துவது ? அதற்கு இவர்கள் சொல்லும் ஒரே பதில்.

வியாழன், மே 30, 2019

சேனா உனது நாளில்...கலைச்செல்வி கில்லர்ஜி
30.05.2001

நீ இறந்து
நான் இருந்து
பலருக்கு
நல்வாழ்வு

சேனா... இன்று உனது 18-ஆம் ஆண்டு நினைவு தினம் உனது மரணத்தின் கடைசி தருணத்தில் உனக்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை முழுமையாக நிறைவேற்றி விட்டேன் என்பதில் எனக்கு ஆத்ம திருப்தி நாளை எனது ஆத்மாவுக்கும் திருப்தி.

வெள்ளி, மே 24, 2019

செல்வியின் கணவன்முந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக...

தெருவில் நுழையும் பொழுதே கேட்கும் தனது கணவரின் பைக் சத்தம் இந்நேரம் கேட்கின்றதே... பக்கத்து வீட்டு பரிமளாவுடன் பேசிக்கொண்டு இருந்த செல்வி வெளியே வந்து எட்டிப் பார்க்க, தனது கணவர் வருவதைக் கண்டதும் பரிமளாவிடம் சொல்லி விட்டு தனது வீட்டின் கேட்டைத் திறந்து விட்டு வீட்டைத்திறந்து உள்ளே சென்றதும் ஆச்சரியமாக...
என்னங்க அதிசயமா இருக்கு சீக்கிரமே வந்துட்டீங்க.... ?
இல்லை செல்வி தலை வலிச்சது அதான் சொல்லிட்டு வந்துட்டேன்.

சரி ட்ரெஸ் மாத்துங்க காஃபி போட்டு வாறேன்.
வேண்டாம் காஃபி அப்புறமா சாப்பிடலாம் ராஜு வரலையா ?

சனி, மே 18, 2019

பாலனின் மனைவிலுவலகத்தின் லஞ்ச் டைம் சாப்பிட்டுக் கொண்டே.....
பாலன் ஸார் இந்த ஆஃபீஸுல எத்தனை வருசமா வேலை செய்றீங்க ?
பதினெட்டு வருசம் ஆச்சு என்ன விசயம் திலீபன் திடீர்னு...

நான் இங்கே வந்து ஏழு வருசம் ஆச்சு எனக்குத்தெரிய நீங்க லஞ்சம் வாங்கியதே இல்லை இது எப்படி சார் சாத்தியம் ?
எனது மனைவிதான் காரணம்.

சனி, மே 11, 2019

ஆன்மீகமும், நாத்திகமும்

 வீட்டை கட்டிப்பார் தீயை வைத்துப்பார்
எவ்வளவு உதைத்தாலும் வாங்குவோம்.
கலிகாலம் இப்படியும் முளைக்கும்
ஆறே வாரங்களில் நிரூபிக்கப்பட்ட உண்மை

திங்கள், மே 06, 2019

அழகாகவே இருக்கிறது


நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...


மனிதனின் கற்பனை வாழ்க்கை அழகாகவே இருக்கிறது
ஆனால்
நடைமுறையில்தான் அலங்கோலமாகவே காட்சி தருகிறது.

பிறருக்கு அறிவுரைகள் வழங்குவது இனிப்பாகவே இருக்கிறது
ஆனால்
தனக்கு நடைமுறை படுத்த மட்டுமே மனதுக்கு கசக்கிறது.

புதன், மே 01, 2019

மே தினம் மேன்மை தினமே...


.
ணக்கம் நட்பூக்களே... அனைவருக்கும் எமது இனிய மே தின நல்வாழ்த்துகள் உரித்தாகுக உழைப்பே உயர்வுக்கு உறுதுணை உண்மையான உழைப்பு என்றுமே நம்மை கை விடுவதில்லை.

வியாழன், ஏப்ரல் 25, 2019

விழுப்புரம், விளக்கவுரை விவேக்அண்ணே வணக்கம்ணே..
வாடா... தம்பி நல்லாயிருக்கியா ?

ஏண்ணே எல்லாத்துக்கும் வெளக்கம் சொல்லுவியலாமே...
ஆமாடா உனக்கு என்ன தெரியணும் ?

அண்ணே எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருக்கு வெளக்கம் சொல்லுங்கண்ணே...
கேளுடா தம்பி அண்ணேஞ் சொல்றேன்.

வியாழன், ஏப்ரல் 18, 2019

இதுவும் ந(க)டக்கலாம்...பெண்கள் முன்பைவிட எல்லாவற்றிலுமே முன்னேற்றமே இதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க சாத்தியமில்லை. அதேநேரம் விவாஹரத்துகள் இன்று நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பெருகி வருகிறது. இதன் அடிப்படை காரணம் எங்கு தொடங்குகிறது ? எட்டையபுரத்தான் தொடங்கி வைத்த புதுமைப் பெண்களிடமிருந்தா ?

சனி, ஏப்ரல் 13, 2019

பூக்களை ரசிப்போமா ?பூக்கள் என்றுமே அழகுதான்
இதுவும் வேண்டுமடா எமக்கு
இன்னமும் வேண்டுமடா
குரங்கிலிருந்து வந்தவனே மனிதன்
ஏத்தா சேலையை மாத்திட்டு வரக்கூடாது
செஞ்சோற்று கடன் தீர்க்க செய்யாத செயல் செய்து
தேசத்தை அழித்தாயடா கள்வா வஞ்சகர் மக்களடா

செவ்வாய், ஏப்ரல் 09, 2019

பொய்யாமொழியர்கள்நாற்பதுக்கு நாற்பது திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெறும்.
மு.க.ஸ்டாலின்

இந்தக் கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும்.
பிரேமலதா விஜயகாந்த்

நாட்டு மக்களின் நலனுக்காகவே கூட்டணி அமைக்கிறோம்.
அன்புமணி ராமதாஸ்

நண்பர் ரஜினிகாந்த் ஆதரவு கொடுப்பார் என்று நம்புகிறேன்.
கமல்ஹாசன்

வியாழன், ஏப்ரல் 04, 2019

கே. ஊ. கி. நாட்டாமை


தவிக்காக எவனும், எவனோடும் கூட்டணி அமைத்துக் கொள்வான் என்பது இந்த தேர்தலில் நமக்கு மிகவும் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இதை மக்களாகிய நாம் சற்றேனும் நமது எதிர்கால சந்ததிகளுக்காக ஆலோசித்து வாக்களிக்கப் போகிறோமா ? இல்லை வழக்கம் போலவே கிடைத்தவரை லாபம் என்று இரண்டு பக்கமும் பணத்தை வாங்கி கொண்டு வாக்களிக்கிறேன் என்ற  பெயரில் நமக்கு நாமே வாக்கரிசி போடுகிறோம்.

சனி, மார்ச் 30, 2019

வாழ்த்துப்பா


வதனம் வளம் பெறவே
வசந்தம் வழி வரவே
வளமை வரும் பெறவே
வலிமை வலம் வரவே

மங்கா மனம் பெறவே
மனதில் மழை வரவே
மனையாள் மகிழ் பெறவே
மகன்/ள் மனை வரவே

ஞாயிறு, மார்ச் 24, 2019

ஸ்காட்லாண்டில், ஸ்வாஹா


ஸ்காட்லாண்ட்
ஸ்வாகத்
ஸ்டார் ஹோட்டல்
ஸ்விம்மிங் ஃபூல்
ஸ்வாமிகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் கையில்
ஸ்காட்ச் கிளாசுடன்
ஸ்மார்ட் போனில் பேசிக்கொண்டிருந்தார்
ஸ்வாமிகள் கிஸ்ஸியானந்தா அருகில்

புதன், மார்ச் 20, 2019

தியாகங்கள்தியாகங்கள் இங்கு ஆராதிக்கப்படுவதில்லை
மாறாக உதாசீனப்படுத்தப்படுகிறது.

தீர்ப்புகள் இங்கு எழுதப்படுவதில்லை
மாறாக எழுதிக் கொடுக்கப்படுகிறது.

சாபங்கள் இங்கு பலிக்கப்படுவதில்லை
மாறாக பாவங்களாக பிரதிபலிக்கிறது.

மனக்காயங்கள் இங்கு ஆற்றப்படுவதில்லை
மாறாக மேலும் விரிவாக மாற்றப்படுகிறது.

வாக்குகள் இங்கு வழங்கப்படுவதில்லை
மாறாக இருபது ரூபாயால் வாங்கப்படுகிறது.

வெள்ளி, மார்ச் 15, 2019

சற்றே சிரிக்கலாமா ?

 ஊரின் பெரிய மனிதர்கள்
இந்தியனுக்கு தெரியலை இந்தோனிஷியாக்காரனுக்கு தெரியுது.
உன்னாலயே பலபேர் தூக்குப் போடப்போறான் பாரு...
கார்பெண்டரை வரச்சொல்லவா ?
பணக்காரன் வீடு போல தெரியுதே...
ரிவர்ஸில் போவது தப்பாயா ?

ஞாயிறு, மார்ச் 10, 2019

அபிநந்தனுக்கு அபிநந்தனம்ணக்கம் நட்பூக்களே... முதலில் திருமிகு. அபிநந்தன் அவர்களுக்கு எமது வணக்கங்களையும், வாழ்த்துகளையும் சொல்லிக் கொள்கிறேன். மேலும் இவர் தமிழன் என்று அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியும் கொள்கிறேன்.

செவ்வாய், மார்ச் 05, 2019

காது குத்தும்போது...ணக்கம் நட்பூக்களே... கடந்த ஜனவரியில் உறவினரின் குலதெய்வக் கோவிலுக்கு (சகோதரியின் பெயர்த்திக்கு) காது குத்த வரச்சொன்னார்கள். எனக்கு அல்ல குழந்தைக்கு காது குத்தல் அவ்விழாவுக்கு எனக்கும் அழைப்பு. இடம் சாயல்குடி அருகில் எட்டு கி.மீ தூரத்தில் எஸ்.தரைக்குடி என்ற கிராமம் இருக்கிறது. அழகிய கிராமம் என்றே சொல்லலாம். சாயல்குடி என்ற ஊர் பரமக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் ஐம்பதாவது கி.மீ.ரில் இருக்கிறது..

வியாழன், பிப்ரவரி 28, 2019

சமயநல்லூர், சந்தேகப்புயல் சந்திரபாண்டி


ட்பூக்களே... எனக்கு புரியாத விடயங்கள் நிறைய இருக்கிறது தங்களிடம்தானே கேட்டு தெளிவு பெறமுடியும். ஆகவே தாருங்கள் பதிலை...

திரைப்படங்களில் நடிக்கும் கசாநாயகர் மிகவும் அறிவாளியாகவும், நேர்மையாளராகவும், கீழே விழப்போகும் கிழவிகளை சட்டெனப் பிடித்து காப்பாற்றுபவராகவும், பலசாலியாகவும், அரசியல்வாதிகள் செய்யும் அட்டூழியங்களை தைரியமாக எதிர்த்து கேட்கின்றார்.
(சித்தரிக்கப்படுகிறார் என்பதே உண்மை)

புதன், பிப்ரவரி 20, 2019

மீண்டும் இனிய விழா
 தேவகோட்டையில்

வணக்கம் நட்பூக்களே... சற்றே நீண்ட இடைவளி நலம்தானே ?
இறையருளாலும், தங்களது ஆசீர்வாதத்தாலும் நலமுடன் எமது செல்வங்கள் தமிழ்வாணன் – பிரியங்கா திருமணம் பரமக்குடியில் நலமுடன் நிகழ்ந்தது. அலைபேசியிலும், கட்செவி வழியாகவும் வாழ்த்திய உள்ளங்களுக்கு எமது நன்றிகள் கோடி. எனது இரண்டாவது கடமையும் செவ்வனே முடிந்தது என்றே கருதுகிறேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...