சனி, ஜூன் 07, 2014

பவானியில், பவனிவரும் பவானி.

 
ஆவணியில், தாவணி போட்ட பவானி
ஆத்தோரமாய், ஏனின்று வரவில்லை பவனி

 
ஆசையாய், காத்திருக்கேன் கொஞ்சம் கவனி
ஆத்திரப்பட்டு, சொல்லாதே என்னை களவாணி

 
என்மனதில், வீற்றிருக்கும் கலைவாணி
உன்மனதை, விரைந்து தந்திடு மகராணி

 
சலசலத்து, செல்கிறதே இந்த தாமிரபரணி
நம்காதலை, சொல்லட்டுமே இந்த தரணி

 
வரும்போது, எதற்கு உன்அப்பா தண்டபாணி
காரணம், நானிங்கு நிராயுதபாணி

 
சர்க்கரை செய்தியோடு உன் சக்கரபாணி
கவலைப்படாதே, நானும் ஒருநாள் அம்பானி

 
அதன்பிறகு, என்னிடமிருப்பாய் அன்பாய் நீ
காத்திருக்கிறேன், வருவாய் அம்பாய் நீ
 
CHIVAS REGAL சிவசம்போ-
அவ, அப்பன் தண்டபாணி அம்போட வராம இருந்தா பொழைச்சே நீ.
 
தெருக்குரல்
அகராதி (36) ஆணவம் (19) அகங்காரம் (147)4
 
  எவரெல்லாம், இதை காப்பி தொடுப்பர்
அவரெல்லாம், ரத்த வாந்தி எடுப்பர்
 
   தெருநல்லவர்-                                                                                 35 கருத்துகள்:

  1. கலகல கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. முதல் வருகைக்கு முதல் வணக்கம் திரு. 'தளிர்' சுரேஷ் அவர்களே....

    பதிலளிநீக்கு
  3. தாவணி போட்ட பவானி
    .......
    என்னிடமிருப்பாய் அன்பாய் நீ

    என்று அழகாய் வடித்த கவிதை
    நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடமை தவறாது காண்பதற்கும், பாராட்டுக்கும் நன்றி ஐயா.

      நீக்கு
  4. பெயரில்லா6/07/2014 5:25 பிற்பகல்

    வணக்கம்

    புதுமையான வரிகள் புனைந்து சென்ற விதம் சிறப்பபு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. தங்களின், வருகைக்கும், எனது SWISS பயணக்கட்டுரை கண்டு தகவல் கொடுத்ததற்க்கும், எனது சார்பாகவும் பவானி சார்பாகவும் நன்றி நண்பரே....

    பதிலளிநீக்கு
  6. கவிதை தங்களிடம் அன்பாய்தான் இருக்கிறது
    அருமை
    வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான எதுகை மோனையில் அமைந்த அருமையான கவிதை !

    " Emergency " மேட்டர்லேந்து கில்லர்ஜி கூலாயிட்டாப்போல !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னசெய்வது ? நண்பா ''நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை''

      நீக்கு
  8. பவானி கவிதையில் அழகு ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  9. வரும்போது எதற்கு உன் அப்பா தண்டபாணி.......ஒரு நாள் நான் அம்பானி.....

    மிகவும் ரசித்தோம்! தண்டபாணி அம்புடன் வராமல் இருந்தால் சரி! பவானி பவனி வரட்டும் காதல் அம்புடன்!!!!!

    இறுதியில் தெரு நல்லவரின் குறளையும் ரசித்தோம்!!!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா, மன்னிக்கவும் தெருவில் நின்று ''குரல்'' தான் கொடுத்தேன்.

      நீக்கு
    2. கில்லர் ஜி அது குரல் என்று தெரியும் ஜி! குறள் வடிவத்தில் இருந்ததால் அப்படிச் சொன்னோம்! ஜி!....

      நீக்கு
    3. நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை ஐயா, நகைச்சுவைக்காக சொன்னேன், நன்றி.

      நீக்கு
  10. வரும்போது எதற்கு உன் அப்பா தண்டபாணி.......ஒரு நாள் நான் அம்பானி.....

    மிகவும் ரசித்தோம்! தண்டபாணி அம்புடன் வராமல் இருந்தால் சரி! பவானி பவனி வரட்டும் காதல் அம்புடன்!!!!!

    இறுதியில் தெரு நல்லவரின் குறளையும் ரசித்தோம்!!!!!!!!

    பதிலளிநீக்கு
  11. அடடா...! கலக்குறீங்க...!

    முடிவில் பஞ்ச் சூப்பர்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த பார்ட்டியை முடிக்கத்தானே இந்த ''பஞ்ச்''

      நீக்கு
  12. தங்கள் கவிதை திருக்குறளை நிணைவூட்டுகிறது ஜீ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது ''தெருக்குரல்'' வள்ளுவரின் ''திருக்குறள்'' க்கு இணையாக்காதீர்கள் Please

      நீக்கு
  13. தங்களின் கவிதை டி.ராஜேந்தரின் பாணியை நினைவுபடுத்தியது. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ஐயா... தொடர்கிறேன், தொடருங்கள்.....

      நீக்கு
  14. உங்க வீட்டம்மாவோட மின்னஞ்சல் முகவரியை கொஞ்சம் தறீங்களா ப்ரதர்!!!!

    உங்களுடைய இந்த சாபம் அந்த திருட்டு நபருக்கு பலிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  15. MOGANA
    THIYAGIKAL ROAD
    65.KUPPAN STREET
    112/36 # LOS ANGELES
    GERMANY

    பதிலளிநீக்கு
  16. அடுக்குத்தொடர் கவிதையும் அருமை.அதை ‘படி’ எடுக்க நினைப்போருக்கு கொடுத்த எச்சரிக்கையும் அருமை.

    பதிலளிநீக்கு
  17. தங்களின் வாழ்த்துக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  18. அடிமனதை இதமாய் வருடிக்கொடுத்த கவிதை.

    தாமதமான வருகைக்கு வருந்துகிறேன் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  19. ''லேட்டா'' வந்தாலும், ''லேட்டஸ்டா'' மனதை வருடிவிட்டீர்கள் ஐயா நன்றி.

    பதிலளிநீக்கு
  20. ரிப்ளை பட்டனை அழுத்தி பதிலிடுக..

    அம்பானிகளிடம் மட்டும் தான் பவனிகள் அன்பாய் இருப்பார்கள். விவரம் இல்லாத விடலைப் பிள்ளைகள் வேண்டுமேன்றால் அப்படி இருப்பார்கள்.

    பெண்களுக்கு பணமே பொருளோ தேவையில்லை அவர்களுக்கு தேவை நிறய கவனம், காதல் ரொமான்ஸ் இவ்வளவுதான் ...
    இதை பொருள் கொடுக்காது...
    காதல்தான் தரும்

    இதற்கும் ஒரு கவிதை எழுதினால் மகிழ்வே

    http://www.malartharu.org/2014/06/time-management-part-one.html

    பதிலளிநீக்கு
  21. அம்பானிகளிடம் பவானிகள் இருப்பது இன்று
    அன்பானவர்களிடம் பவானிகள் இருந்தது அன்று
    மீண்டும் இந்நிலை வருவது என்று ?

    குறிப்பு-
    போட்டிக்காக எழுதவில்லை, கேட்டீர்கள் அதனால் எழுதினேன் நண்பரே... நன்றா ?

    பதிலளிநீக்கு
  22. காலத்தை வென்று நிற்கும் உங்கள் கவிதை(மற்றும் பதிவுகள் ) ,அதனால்தான் உங்கள் தளத்தில் எந்த இடத்திலும் தேதி இல்லையோ ,கில்லர் ஜி ?

    பதிலளிநீக்கு
  23. முகப்பு பக்கத்தில் மட்டும் இருக்கிறது பகவான்ஜீ....

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...