தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஆகஸ்ட் 15, 2014

வெட்கப்படுவோம்.


சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டது என்னத்த கண்டோம் ? ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆளும்போது அதாவது 1917லிலே இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு ரூபாய்க்கு அமெரிக்க டாலர் $ 13 கிடைத்தது ஆனால் இன்று அதே அமெரிக்க $ 1 டாலரை வாங்குவதற்கு நாம் 63 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது.. இது நமக்கு வெற்றியா ? 

சுதந்திரமான வாழ்க்கையில் கஷ்டப்படுவதைவிட கொத்தடிமை வாழ்வாயினும் சந்தோஷமான வாழ்வு பெரிதென்றே தோன்றுகிறது. அதற்க்காக சுதந்திரம் பெற்றது தவறென்ற கருத்தை நான்முன் வைப்பதாக அர்த்தமல்ல ! வெளியூர் திருடனிடமிருந்து உள்ளூர் திருடன் வசம் ஒப்படைத்து விட்டோம் இதனால் மக்களுக்கு பலன் உண்டோ ? தேர்தல் வரும்போது இலவசங்கள் கிடைக்கிறது இதுதானே... நம் கண்ணை குத்தி விட்டு அதன் குருதியில் மருந்தெடுத்து நமது கண்வலிக்கு மருந்து கொடுக்கிறார்கள் அப்படித்தானே... கண்ணை குத்தி விட்டது யார் ? குத்த விட்டது யார் ? பாமரப்பயல்களான நாம்தானே... அரசியல்வாதிகள் நம்மிடம் வாக்கு கேட்க வரும்பொழுது வணங்கி வாக்கு கேட்கிறார்கள்... அதே அரசியல்வாதி தேர்தலில் வெற்றி பெற்றவுடன் நமது பொதுப்பிரச்சனை என்றே வைத்துக் கொள்வோம், அவர் வீடு தேடிபோய் கேட்க முடியுமா ? முதலில் வீட்டுக்குள் SORRY பங்களாவுக்குள் நுழையத்தான் முடியுமா ? 

நாமெல்லாம் கருத்து சுதந்திரம் பெற்றவர்கள் என பீற்றிக் கொள்கிறோம் இதனால் பலன் ? பத்திரிக்கைகளில், ஊடகங்களில், வலைப்பதிவுகளில் வர்ணித்து, கார்டூன் போட்டு கிழிக்கிறோம், இதனால் அவர்கள் வெட்கப்படுகிறார்களா ? வேறென்ன  கிழித்து விட்டோம் ? ஆகவே இனியெனும் வெட்கப்படுவோம்.

41 கருத்துகள்:


 1. வணக்கம்!

  நாட்டின் நிலையினைக் காட்டும் பதிவிது!
  வாட்டும் மனத்தை வளைத்து!

  போற்றும் நிலையிழந்தோம்! பொங்கும் நலங்காண
  மாற்றம் வருமா மலர்ந்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வரவு இனிது...
   மலர்ந்தது எமது மனது...

   நீக்கு
 2. வணக்கம்
  சபாஷ் சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்
  இனியசுதந்திர தின வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரவுக்கும், வாழ்த்திற்க்கும் நன்றி எனது.

   நீக்கு
 3. எழுதுற நாம் ஏன் வெட்கப்பட வேண்டும் ?ஊழல்வாதிகள் அல்லவா இதற்கு வெட்கப் படணும்?
  ஊதுற சங்கை ஊதி வைப்போம் ,விடியாமலா போய்விடும் ?

  பதிலளிநீக்கு
 4. நாட்டின் நிலை வருந்தற்குரியதுதான்! அதற்கு காரணமும் நாம் தானே! இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருந்திபயன் இல்லை இனியெனும் திருந்துவோம்.

   நீக்கு
 5. ஹாஹாஹாஹா கில்லர் ஜி! சுதந்திரம் பெற்றிருக்கின்றோமா?!! //வெளிநாட்டுத் திருடங்கிட்டருந்து இப்ப உள்நாட்டு திருடங்கிட்ட..///ரொம்ப ச்ரியே.....ஆமாம் சுதந்திரம் பெற்றிருக்கின்றோம்...ஊழல் செய்யவும்...சட்டங்களை மதிக்காமல் வாழ்வதற்கும் இங்கு போல் எங்கு சுதந்திரம் இருக்கு சொல்லுங்க.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனஆறுதலுக்காக... இப்படியும் எடுத்துக்கொள்ளலாமோ....

   நீக்கு
 6. நமக்குள் நாமே ஓதுவோம் மிகச் சரியே.
  சுதந்திர தின வாழ்த்துக்கள் சகோ ....!

  பதிலளிநீக்கு
 7. நமக்குள் ஓதி பயனில்லை...மக்களிடம் ஓதுவோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓதுவார் ஓதி...
   ஓடியது ஓடம்,
   பாடுவார் பாடி
   படிப்பதா பாடம்
   என்ற ஞானி ஸ்ரீபூவுவின் வழிப்போக்கு பாடல் தான் நினைவு வருகிறது. வலிப்போக்கரே...

   நீக்கு
 8. வீட்டுக் கொருவர் விரைந்தே புறப்பட்டால்
  நாட்டைநாம் காக்கலாம் நன்று!

  மன உளைச்சல் மலிந்ததுதான் மிச்சம்.
  சிறந்த சிந்தனை! அருமை!
  வாழ்த்துக்கள் சகோதரரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொச்சம் மனிதர்கள், களைத்தால் அச்சம், எட்டிடலாம் உச்சம்.

   நீக்கு
 9. ஓதுவது கேட்கட்டும் அவர்களுக்கு...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புல்லாங்குழல் கொண்டு ஊதினாலும்... காது கேட்காது அவர்அழுக்கு....

   நீக்கு
 10. அந்த காலத்து ரூபாயின் மதிப்பு தெரியாத தகவல்.
  கண்டிப்பாக ஒரு புரட்சி வரும் நண்பரே, அப்பொழுது உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கலாம். ஆனால் நம் காலங்களில் அந்த உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்போமா என்று தான் தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்காலத்தில் காண வேண்டுமென்ற பேராசையெல்லாம் வேண்டாம் நமது சந்ததிகளுக்கு கிடைத்தால் போதுமே.....

   நீக்கு
 11. உங்கள் தளத்திற்கு இன்று என் முதல் வருகை, இனிமேல் அடிக்கடி வருவேன்.உங்களின் பதிவுகள் சிறப்பாக இருக்கிறது.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது தங்களின் இரண்டாவது வருகை நண்பரே... தேடினாலும் கிடைக்காத அன்பை நாடிவரும் போது ஓடிவந்து வரவேற்பேன், தங்களது கருத்தரைக்கு கோடி நன்றிகள்.

   நீக்கு
 12. அருமை சகோதரரே....
  ரூபாயின் மதிப்பு எவ்வளவு வித்தியாசம்...!
  முன்பு வந்து கருத்திட்டேன்.... காணவில்லை ஏன் என தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி சகோதரி சில நண்பர்களும் இதையே சொன்னார்கள் காரணம் அறியேன்,...

   நீக்கு
 13. நியாயமாக நாம் அனைவரும் இதற்காக வெட்கப்படவேண்டும். நல்ல சிந்தனைக்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் ஐயா அவர்களே..

   நீக்கு
 14. நாம் அனைவருமே வாய்ச் சொல்லில் வீரர்கள்தான்.

  முதலில் வெட்கப்படக் கற்றுக் கொள்வோம். அப்புறமாவது வீரம் வருகிறதா பார்ப்போம்.

  உள்மனக் குமுறலை உணர்ச்சி மயமான வார்த்தைகளால் வடித்தெடுத்திருக்கிறீர்கள்.

  பாராட்டுகள் கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உலகை அளந்தவரின் உன்னதமான பாராட்டுக்கும் நன்றி நண்பரே...

   நீக்கு

 15. தொடருங்கள்! வாழ்த்துக்கள்!


  பதிலளிநீக்கு
 16. வெட்கப்பட்டாலும் அறிவு வந்துவிடவா போகிறது..ஜீ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பா ஒருமனிதன் குற்றங்களை குறைக்க வழி வெட்கப்பட்டால், போதுமானது... வெட்கப்படும்போது தவறுகள் குறைகிறது தவறுகள் குறையும்போது அவன் நல்லவன் என்ற பெயர் கிடைக்கிறது அவன் நல்லவன் என்றால் ? அறிவுள்ளவன் என்றுதானே அர்த்தம்.
   ஆகவே தொடக்கம் இன்றாகட்டும் 100 வது சுதந்திரதினம் கொண்டாடுவார்களே நமது பேரன்-பேத்திகள் அவர்களுக்காவது உண்மையான சுதந்திர இந்தியாவை காணட்டுமே...

   நீக்கு
 17. சிறந்த விழிப்புணர்வுப் பகிர்வு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் சகோதரரே!
  அருமையான பதிவு! ஆழமான வரிகள்! ஆழ்ந்த சிந்தனை! சுதந்திரத்தின் முழுமையான பலனை நம் சந்ததியினராவது முழுமையாக அனுபவிக்கட்டும்
  ஒரு ரூபாயின் மதிப்பை தெரிவித்தமைக்கு நன்றி!
  வாழ்த்துக்களுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றியும் சுதந்திரதின வாழ்த்துக்களும் சகோதரி.

   நீக்கு
 19. வெட்க அல்ல வேதனைப்படவும் அல்ல
  குரல் எழுப்ப அழுத்தமாய்ப் பதிவு செய்ய
  துவங்க வைக்கும் ஒரு ஜோர் பதிவு
  வாழ்த்துக்கள் கில்லர்

  பதிலளிநீக்கு
 20. வருகைக்கு நன்றி நண்பரே....

  பதிலளிநீக்கு