தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மே 16, 2015

தெருவினையாடல்

டொங்கு நாட்டு மன்னன் கங்குதேவனை வாழ்த்தி பாடி பரிசுகள் பெற்று செல்வோமென கருதி புலவர் கருமி முத்தன் வந்தான், இளவயது புலவனென்றாலும், வார்த்தைகளில் முதுமையே ஓங்கி நிற்கும் இதனால் இவணுக்கு ’’முதுவாங்கி புலவன்’’ என்ற பெயரும் உண்டு.

மன்னரே... தங்களை புகழ்ந்து கவியொன்று கொண்டு வந்திருக்கிறேன்.
புத்துணர்ச்சி தரும்... புரட்சி புலவரே, புதுமை புத்தனே, புலம்புங்கள் புதுக்கவியை புலங்கட்டும், புதிராய், புரளட்டும் இந்த புவியெங்கும்....
நீர் வாழ்க ! மன்னா  
நீரே எம் அண்ணா  
எதிரியை வஞ்சம்
தீர்க்காமல் லஞ்சம்
கொடுத்து தஞ்சம்
அடைந்தாய்...
மக்கள் நெஞ்சம்
அடைத்தாய்...
நீர் வாழ்க ! மன்னா  
நீரே எம் அண்ணா  
ஆஹா, அற்புதம் முதுவாங்கி புலவா ! வா ! வாங்கிகொள் உமது பரிசை.
மன்னரே, சற்றுப்பொருங்கள்.
யாரது ஓ... பக்கீரரோ தாங்களும் இங்குதான் இருக்கின்றீர்களா ? கவியில் மயங்கி விட்டேன், ஆதலால் தங்களை காண மறந்து விட்டேன் சொல்லுங்கள் பக்கியாரே...
மன்னிக்க வேண்டும் மன்னா, இந்த கருமியிடம் நான் சற்று உரையாடிய பிறகு பரிசை கொடுக்கலாமே...
காரணம் என்னவோ பக்கி ?
இந்தக் கவியில் பிழை இருக்கிறது.
அப்படியா ? ஹும் தானும் படுப்பதில்லை, தள்ளியும் படுப்பதில்லை... நல்லது தொடங்கட்டும் உமது உரையாடல்கள்.
கருமியே, இந்தக்கவியை எழுதியது....
பால்பாயிண்டு பேனா கொண்டு.
அது எமக்கும் தெரியும், யார் எழுதியது ?
எமது புதல்வன் தமிழ்வாணன்.
எழுதிய தங்களது புதல்வன் தமிழ்வாணன் வராமல் தாங்கள் வருவது ஏன் ?
அவனுக்கு காலில் முள் குத்தி விட்டது நடக்க முடியவில்லை, ஆகவே யாம் வந்தோம்.
கவியின் பொருளை நான் எப்படி  தெரிந்து கொள்வது ?
எமக்குத்தான் தெரியுமே...
எழுதிய உமது மகன் தமிழ்வாணனுக்கல்லவா ! பொருள் தெரியும்.
புலவரே, எழுதியதுதான் புதல்வன், கவிதை என்னுடையது.
நீர் எழுதாமல், உமது புதல்வன் எழுதக்காரணம் ?
எமக்கு கை விரலில் நெகச்சுத்தி ஆகவே எமது புதல்வனை எழுதச் சொன்னோம்.
மகனுக்கு காலில் முள்குத்தி, தந்தைக்கு கையில் நெகச்சுத்தி, ஹும் நன்றாக இருக்கிறது உமது வேஷம்.
யார் வேஷமிடுவது ? அறுபது வயதான நீர், பணிப்பெண்கள் அருகில் நின்று சாமரம் வீசவேண்டும் என்பதற்காக ! வெண்தாடிக்கு கருப்பு டை அடிக்கும் நீரே வேஷதாரி.
புலவர்களே... Don’t talk about personal life கவிதைக்கு வேண்டிய விசயங்களை குறித்து மட்டும் உரையாடுங்கள்.
மன்னியுங்கள் மன்னா, என்னை வேஷமிட்டாய் என்றதால் கோஷமிட்டேன்.
புலவரே, உமது கவியின் ‘’அடைத்தாய்’’ என்பதின் பொருள் என்ன ?
மக்களை தாயைப்போல் அடை + காத் = தாய் என்று பொருள், நம்மை ஆண்டாள் நமது ஆத்தாள், நம்மை காத்தாள் அதாவது... கில்லர்ஜியை போன்ற பாமரர்கள்கூட சொல்வார்களே ’’அம்மா’’ என்று அதைப்போல்.
இல்லவே இல்லை நீர் மன்னரை பெட்டைக்கோழி எனபொருள்பட எழுதியுள்ளீர்... அதாவது மன்னரை பொட்டைப்பயல் என்கிறாய்.
சிவ சிவா என்ன, கொடுமை இது எனது பொருளில் இருளா ?
பக்கீரா, புலவரை வேதனை படவிடாதீர்...  Mr.சிவா எனக்கு சோதனை கொடுத்து விடப்போகிறார்.
நல்லது மண்ணே, புலவரே, எமது மூன்று வினாக்களுக்கும் விடையளித்து விட்டு நீர் பரிசை பெறலாம்.
நானும் தயார்.
சுவைக்க முடியாத காரம் எதுவோ ?
உம்மைப் போன்றவர்களின் அகங்காரம்.
கொள்கை இல்லாத மதம் எது ?
சோம்பேறிகளின், தாமதம்.
ஓட்ட முடியாத கார் ?
உம்மைப்பற்றி நான் மன்னரிடம் கொடுக்கப்போகும் புகார்.
எம்மைப்பற்றி பெட்டிஷனா ? உம்மை பொட்டிப்பாம்பாய் அடக்கி விடுவேன்.
(திடீரென மன்னரின் SAMSUNG செல்லுக்கு அந்தப்புரத்திலிருந்து NOKIA வில் ‘’அந்த’’ அழைப்புக்கு அர்த்தமாய் செல்லிருந்து MISSED CALL வர)
யாரங்கே ? சந்தடி சாக்கில் என்னை மண்ணு என்றும், பொட்டைக்கோழி என்றும் இழிவாக சொல்லி என்னை பழி வாங்கியவர்களை பலி கொடுக்கும் நேரம் வந்து விட்டது, பெட்டியென்றும், பொட்டியென்றும், வெட்டியாக பேசி அவையின் பொன்னான நேரத்தை கட்டிப்போட்ட பக்கீரர், கருமி முத்தன் இருவரையும் ஜட்டியோடு முட்டியில் தட்டிக்கொண்டே... ஆபரேஷன் தியேட்டருக்கு இழுத்துப்போய் தலையை வெட்டி விடுமாறு உத்தரவிடுகிறேன். (உடன் புறப்பட்டார் ’’அந்த’’புரத்தை நோக்கி)

சாம்பசிவம்-
பக்கீரர், கருமி முத்தனைவிட மன்னர் கங்கு தேவன் புலவர் போலவே பேசுகிறாரே... மண்ணே என்று சொன்னதை கப்புனு புரிஞ்சுக்கிட்டாரே... கற்பூரப்புத்தியோ...

சிவாதாமஸ்அலி-
சினிமா காண முடியாத தியேட்டர் எது ?

CHIVAS REGAL சிவசம்போ-
ஆபரேஷன் தியேட்டர்.

74 கருத்துகள்:

 1. வாக்கு இப்போது.

  வருகிறேன் மீண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு காலையிலேயே சந்தேகம் வந்தது அபுதாபியில் ஏன் ? தூறல் விழுகிறது... ஓஹோ இதுதானோ... ?

   நீக்கு
 2. வணக்கம்
  ஜி

  நல்ல உரையாடல்வழி நல்ல செய்தியை சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஜி த.ம 3
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ரூபன் நல்ல கருத்துரை தந்தமைக்கு நன்றி.

   நீக்கு

 3. பதிவை இரசித்தேன். ஆனால் உரையாடலின் இடையே முதுவாங்கி புலவன் தங்களை பாமரன் என்று சொல்வதை ஆட்சேபிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொன்னா சொல்லிட்டுப் போறான் விடுங்கள் நண்பரே இதை நான் கேட்கப் போயி மன்னன் கங்கு தேவன் எனது தலையையும் வெட்டி விடுவான்.

   நீக்கு
 4. ஹா... ஹா... நல்ல துணுக்குகள் ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏதோ நம்மாலே முடிந்தது ஜி in வருகைக்கு நன்றி

   நீக்கு
 5. கவிதை கடல்போல் பொங்கி வரும்
  உம்மை பார்த்து "பாமரன்" என்று சொல்லுவதை
  அரச சபையின் அவைக் குறிப்பில் இருந்து நீக்கிவிடுங்கள்!
  இல்லையேல் பார்வையாளர்களாகிய எங்களது பக்கா போராட்டம்
  முக்காத் துட்டு அக்கா மன்றத்தில் இருந்து நாக்குமுத்து நகரசபை வரை தொடரும்!
  ஜோக்காய் நினைத்தால் வாக்கை இழக்க நேரிடும்!
  த ம வாக்கு 7
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா தேவையில்லாத பிரட்சினையை கிளப்பாதீர்கள் இதைக் கேள்விப்பட்டால் மன்னன் கங்கு தேவன் நமது நாக்கை வெட்ட உத்தரவிட்டு விடுவான்.

   நீக்கு
 6. அட! அட !அட !என்ன கற்பனை என்ன கற்பனை! ம்..ம்..ம். மூன்று கேள்வி பதில்களும் அசத்தல். வர வர ரொம்பவே அசத்துகிறீர்கள். ஜி...ரசித்தேன் . வாழ்க வாழ்க ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க, வாங்க நான் அசத்தலை குறைத்து வைத்துள்ளேன் 80தை அறிக காரணம் நான் நிறைய பதிவர்களை எதிர் பார்க்கின்றேன் சிலர் எனக்கு டிமிக்கி கொடுக்கின்றார்கள்... தங்களின் தொடர் வருகைக்கு நன்றி சகோ.

   நீக்கு
 7. நல்லாத் தானே போய்க்கிட்டு இருந்தது!..

  கருமி முத்தனுக்கு வந்த கஷ்டம் பெருங்கஷ்டமாகிப் போச்சே!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி பேராசை பெருநஷ்டம் ஏன் ? தேவையில்லாமல் போயி தலையைக் கொடுக்கனும்.

   நீக்கு
 8. ஹஹஹஹஹ்ஹ்

  ம்ம்ம் அடைத்தாய் பொருள்தான் எமக்குப் பேதம். புரியவில்லை அதனால் புலவருக்கு பரிசுப் பொருள் கான்செல்ட்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புலவருக்கு பரிசு கேன்சலா ? கருமி முத்தனுக்கு தலையே கேன்சலாகிப்போச்சு பரிசு வந்தால் என்ன ? போனால் என்ன ?

   ‘’அடைத்தாய்’’ என்றால் மன்னன் எதிரியிடம் தஞ்சம் அடைந்தது அறிந்து மக்களின் நெஞ்சை அதிர்ச்சியால் அடைத்து விட்டாய் என்று பொருள் உங்களுக்கு விளக்கம் சொல்லியே ஓய்ஞ்சு போயிடுவேனோ ? இதுக்குத்தான் வில்லங்கத்தார் 80

   இதற்க்கு மேல் வேண்டுமென்றால் தலை வெட்டுப்பட்ட கருமி முத்தனிடம் கேளுங்கள் இல்லை மன்னன் கங்கு தேவனின் பயம் இருந்தால் ? இப்போது நண்பர் திரு. ஊமைக்கனவுகள் வருவார் அவரிடம் கேளுங்கள்.

   நீக்கு
  2. ஹலோ தண்டனை எல்லாம் அந்தக்காலம்...இப்பல்லாம் இந்த மாதிரி தண்டனை எல்லாம் கிடையாது...கருமி ஏதோ க்ளோனிங்க்செய்து தன் தலையைக் காப்பாற்றிக் கொண்டு "தலை" மறைவாக வாழ்கின்றார். இது தெரியவில்லையா உங்களுக்கு...?!!!!!!!!!!!!!!!! அதான் பரிசு கான்செல்ட்....

   நீக்கு
  3. அப்படியா ? ஆள் எங்கே ? இருக்கானு கங்கு தேவனுக்கு மெயில் அனுப்புங்கள் இம்பூட்டு விபரம் எனக்கு இருந்தால் நான் ஏன் ? இப்படி இருக்கேன்.

   நீக்கு
 9. ஒரு புலவர் மன்னனைப் புகழ்ந்து ‘கன்னா,பின்னா, மன்னா தென்னா’ என்று எழுதிவர அதற்கும் ஒரு புலவர் பொருளுரைத்த கதை நினைவுக்கு வந்தது. படம் உங்கள் கைவரிசையா? பெயரெல்லாம் எழுதி இருக்கிறதே. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா வருகைக்கு நன்றி படம் இணையத்தில் எடுத்து பெயர் எழுதினேன், எனது பதிவில் வரும் காணொளிகள், புகைப்படங்கள் அனைத்திலும் எனது கைவரிசை கண்டிப்பாக இருக்கும் ஐயா.

   நீக்கு
 10. வரவர உங்கள் குறும்பு தாங்க முடியவில்லை! அதிலும் இந்த பெயர் சூட்டும்
  முறை! அது உங்களுக்கு மட்டுமே கை வந்த கலை! கலக்கல்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன ஐயா இப்படிச் சொல்லிட்டீங்க ? அதுக்குள்ளேயா ? இனிதானே இருக்கு எனது குறும்பு எனக்கு பள்ளி நினைவுகள் வருகிறது ஐயா எனது நண்பர்கள் என்னைக்கண்டால் ? தெறித்து ஓடுவார்கள் அனைவருக்கும் நான்தான் பெயர் வைப்பேன் எனக்கு எவனுமே பெயர் வைக்ககூடாது வைத்தால் ? ? ?

   நீக்கு
 11. பெயரில்லா5/16/2015 12:02 PM

  நிறைந்த பெயர் சூட்டு விழா
  ரசனை எப்படித்தான் கற்கனை வருகிறதோ....

  பதிலளிநீக்கு
 12. அங்காவது சும்மா தூறல்தான்..........
  இங்கு உங்கள் பதிவைப் படித்து ஒரே சிரிப்பு மழை........!

  :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வான் மழை நல்லது கவிஞரே.... சிரிப்பு மழை பக்கத்தில் உள்ளவர் மீது எச்சில் தெறித்து சண்டையை மூட்டி விடும்.

   நீக்கு
 13. சிந்தனைக் களஞ்சியர் என்று பட்டம் சூட்டுகிறேன். இன்று முதல்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க, வாங்க என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே.... ?

   நீக்கு
 14. யாரை கிண்டல் பண்றீங்க, விளங்க மாட்டேங்குதே!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொஞ்சம் யோசியுங்கள்.... நண்பா.... கொஞ்சம் அரசியல், கொஞ்சம் நீதித்துறை, கொஞ்சம் காமெடி.

   நீக்கு
 15. ரசித்து மகிழ்ந்தேன்! நல்ல நகைச்சுவை பதிவு! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 16. அந்த தருமியயைவிட...இந்த பக்கியும் கருமியுமு் உரையாடல்தான் சிறப்பாகவும் சிரிப்பாகவும்..எனக்கு இரட்டை வாக்குரிமை இருந்தால் இரண்டு தடவை வாக்களிப்பேன். ஒருத்தருக்க ஒரு ஒட்டு என்பதால் அதை மட்டும் போட்டுவிட்டேன் இந்த அவைக்கு.......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா மிக்க மகிழ்ச்சி நண்பரே எவ்வளவு உயர்ந்த மனது உங்களுக்கு சிலர் தமிழ் மணம் ஓட்டு போட முடிந்தும் போடாமல் கருத்துரை மட்டும் இடுகின்றார்கள் சிலர் பழைய பதிவுக்கு ஓட்டுப்போட்டு புதிய பதிவுக்கு கருத்துரை போட்டு டிமிக்கி கொடுக்கும்போது தாங்கள் இப்படி எழுதியது கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 17. நல்லா இருக்கு நல்லா இருக்கு.....ரசித்து மகிழ்ந்தேன் சகோ. ...தம +1

  பதிலளிநீக்கு
 18. எப்படி எப்படி உங்களால முடியுது??
  நல்ல கற்பனை...

  வாழ்க வளமுடன்...

  பதிலளிநீக்கு
 19. நல்ல கற்பனை. இடையிடையே நகைச்சுவை. பள்ளி நாட்களில் நாடகத்தில் நடித்த அனுபவம் இருப்பது போல் தெரிகிறது.
  த.ம.13

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நான் அந்த நிலைக்கெல்லாம் பள்ளியில் இருக்கவில்லையே....

   நீக்கு
 20. தெருக்குரலின் எதிரொலியோ இந்த பதிவு ?:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா இப்படித்தானே ஜி இருக்கு நாட்டு நிலைமை.

   நீக்கு
 21. அன்று
  திருவிளையாடல்
  இன்று
  தெருவினையாடல்
  நன்று
  திறமையான ஆற்றலை
  பதிவிலே வெளிப்படுத்தியமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே சரியாக சொன்னீர்கள் நன்றி.

   நீக்கு
 22. ஆரம்பிச்சிட்டீங்கலா நீங்களும், தாயை விட முடியாதா? உங்களுக்கு,
  சரி தருமி உரையாடல் நாடகமாக சின்ன பிள்ளையில் நடித்தது. இன்று தங்கள் கதை, உரையாடல் இவைகளுக்கு மேடை கொடுக்கலாம் என்று தோன்றுகிறது. ஒப்பு அளிப்பீர்களா? ஆசிரியரே,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க டீச்சர் எனக்கு அப்படி வாழ்க்கையெல்லாம் கிடைத்ததில்லை
   இதை தாங்கள் நாடகமாக்கினால் அதைவிட பெருமை வேறு என்ன இருக்கிறது தாங்கள் உரிமையோடு அனுமதி கேட்டீர்களே... பலர் பதிவுகளை திருடி தனது கதைபோல மற்ற தளங்களில் இடுகின்றார்கள்.

   கூடுதல் தகவல்கள் வேண்டுமெனில் தொடர்பு கொள்க...
   sivappukanneer@gmail.com

   நீக்கு
 23. மீண்டும் தருமி நாடகத்தை நகைச்சுவையாய் அமைத்து மகிழ்வூட்டியமைக்கு நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 24. அன்புள்ள ஜி,

  நவீன தெ(தி)ரு விளையாடல் கண்டு களித்தோம்.

  ‘காலில் முள் குத்தி... கையில் நெகச்சுத்தி...‘ மொதலில் உங்களுக்கு சுத்திப் போடவேண்டும்... திஷ்டி பட்டுவிடப் போகிறது.

  நன்றாக இரசித்துப் படித்தோம். அருமை...!

  நன்றி.
  பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு பெறுக.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மணவையாரே தாமத வருகை தந்ததால் ஐஸ் கட்டியை தலையில் கட்டி விட்டீர்களே...

   நீக்கு
 25. நகைச்சுவை வழியாக நல்ல செய்திகளைப் பகிரும் தங்களின் பாணி போற்றத்தக்கதாகும். நல்ல விறுவிறுப்பான உரையாடல். தொய்வே இன்றி தொடராக எழுதியுள்ள விதம் படிப்பவர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவரின் வருகைக்கும் விஸ்தாரமான கருத்துரைக்கும் நன்றி.

   நீக்கு
 26. நல்ல கற்பனை...வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தோழமையின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

   நீக்கு
 27. நான் மிகவும் (சிறுவயதிலே) ரசித்த நகைச்சுவையை ,அதற்கு சற்றும் குறையாமல் நீங்களும் எழுதி சிரிக்கவைத்திட்டீங்க. உண்மையில் மிகவும் அருமையாக இருக்கின்றது. யாருக்காகவேனும் எழுதும் எழுத்தை குறைக்கத்தேவையில்லை.
  sorry.weekend busy.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ மகிழ்ச்சி என் மனதில் படுபவை சோகமோ, சந்தோஷமோ, கோபமோ, நகைச்சுவையோ, அவைகளை எழுதிக்கொண்டே இருப்பேன் என் உயிர் மூச்சு உள்ளவரை என்னைத் தடுக்க என்னால் மட்டுமே முடியும் (Without GOD)

   நீக்கு
 28. பெயரில்லா5/18/2015 12:29 PM

  மயங்கொலிச் சொற்களால் மடுவிய அதிமதுர வேற்றுமை மயங்கியல், விளிமரபு ஆகிய இரண்டும் அச்சர பெயர் எழுவாயாக நின்று பயனிலை கொள்ளும்போது போது வினை உவமை, பயன் உவமை கொண்டு நிபுனத்துவத்துடன் கூடிய சொற் கட்டமைப்புகளால் ஏற்படும் வேற்றுமைப் பாங்கினை உணரும் போது நகைச்சுவை ததும்பி ததும்பி திள் பிரளயமாக பிரவாகித்து என்னை இரு நாழிகைகள் நகைமுகனாக்கியதுடன் உதர விபோகம் என்கிற வயிறு கப்பிய கடுவன் வலி கண்டது போங்கள். நகை நகை என்றே கடைப் பொழுதும் கரைந்ததால் தாங்கள் செப்பிய நீதி/அரசியல் எங்கோ மகோதிவனமான மாயா முற்றத்தில் இருந்தது என்றே அறியவில்லை.வேற்றுமை உருபும் அதன் பயனும் சேர்த்து மறைத்துவிட்டால் 'உடன் தொக்க தொகையாகி அது நவீன நகைச்சுவையாய் மாறும் என்பதை தக்கனப் பிடித்து அதி அற்பதமாக பாசாங்குத் தனம் இல்லாத செப்பழகுடைய திருவாந்திர நகைச்சுவை நாடகம் படைத்து விட்டாய் நண்பா! இதை மேடையேற்ற ஒரு முன்வரும் போதே உனரலாம் இதன் ஆதார் சாங்கியத்துவத்தின் புதிய கட்டமைப்பின் நேர்த்தியை. நீர் இது போல் பல நல்ல படைப்புகளைத்தாரும் ரசிக்க தாங்க வாசிக்க நாங்க.
  டி-பிரிட்டோ தமிழன்
  “டெராபைட்” தாமஸ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் ‘’டெராபைட்‘’ தாமஸ் அவர்களின் விரிவான பாராட்டிற்க்கு நன்றி.

   நீக்கு
 29. சிரித்தேன்..
  வாக்கும் உண்டு ..

  பதிலளிநீக்கு
 30. பெயரில்லா5/20/2015 1:46 PM

  பதிவருக்கு பல வணக்கங்கள்.

  அண்ணே! கருமி முத்தன்னு பெயர் வைத்திருப்பதற்கு பதில் கருமி கத்தன் என்று வைத்திருக்கிலாம் ரைமிங் -அ ஆ இருப்பதோடு டைமிங் அ ஆ வும் இருந்திடுக்கும். நிறைய சிரிப்பு கொஞ்சம் கருத்துன்னு களக்கி இருக்கீங்க தம்பீ.திருவிளையாடல் புரானத்தில் தருமி கேரக்டரே இல்லை தெரியுமாங்கண்ணா. ஒரு தகவலுக்கு சொன்னேன்.
  அண்ணே! பின்னூட்டங்கள் எல்லாம் பெரிசா எடுத்துக்கப்படாது அவை கற்பனைக் கணனி உலகின் மாயைகள். உங்கள் பொண்ணான பதிவுகளை அவைகள் பாதிக்காது இருக்கட்டும் நான் வனங்கா அந்த இறைவன் அருள்க.

  தருமி தங்கப்பன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் வருகைக்கும், கருத்துரைக்கும், யோசனைக்கும் நன்றி.

   நீக்கு
 31. சகோதரி சசிகலா அவர்களிடமிருந்து
  சிந்தனைக் களஞ்சியர்
  என்னும் பட்டம் பெற்றுள்ளீர்கள்
  வாழ்த்துக்கள் நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
 32. பொதுவான விதயங்களை எழுதும்பொழுதே உங்கள் நடையில் நக்கலும் நையாண்டியும் விளையாடும். இதில் நகைச்சுவைக்கெனவே தனிப் பதிவு எழுதினால் கேட்கவா வேண்டும்? அருமை ஐயா! குறிப்பாக, கடைசி பத்தியின் இயைபு அபாரம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் நன்றி நண்பரே...

   நீக்கு