தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மே 19, 2015

வாழ்க்கை

எனக்கு, நல்ல வாழ்க்கை கொடுத்த இறைவா ! உனக்கு நன்றி.

நல்ல இதயம் படைத்த வலைப்பூ நண்பர்களை கொடுத்தாய் நன்றி, நல்ல மனைவியை கொடுத்தாய் நன்றி, மாமியார் வீட்டில் நான்கு கொளுந்தியாள்களை கொடுத்திருந்தாய் நன்றி, நல்ல படிப்பறிவை கொடுத்திருந்தாய் நன்றி, அதனால் நல்ல வேலை கிடைக்க வைத்தாய் நன்றி, நல்ல வருமானத்தை கொடுத்தாய் நன்றி, நல்லவீடு கட்ட வைத்தாய் நன்றி, வீடு நிறைய ஆறு குழந்தைகளை கொடுத்தாய் நன்றி, வீடு முழுவதும் ஆடம்பரப் பொருட்கள் உன் அருளால் நன்றி, நல்ல CAR வாங்கும் நிலையை கொடுத்தாய் நன்றி, வேலை காரணமாய் வாரத்தில் மூன்று முறை விமானத்தில் பறக்க வைத்தாய் நன்றி, அமெரிக்கர்களுடன் சரளமாக ஆங்கிலத்தில் பேசும் சந்தர்பத்தை கொடுத்தாய் நன்றி, SWISS ஸில் ACCOUNT தொடங்கும் அளவுக்கு உயர்த்தி விட்டாய் நன்றி, This Year INDIA TOP 10 னில் ஒருவராய் வர வைத்தாய் நன்றி, பத்திரிக்கைகளில், சேனல்களில் தினமும் எனது புகைப்படம் அதற்கும் நன்றி, அரசியல் பிரமுகர்களை சுலபமாக காணும் அதிகாரத்தை கொடுத்தாய் நன்றி, எனக்கு நீண்ட ஆயுளை கொடுத்து கடைசி காலம்வரை இப்படியே சந்தோஷமாய் வாழவைப்பாய் என்ற நம்பிக்கையில் அதற்கும் ஒரு நன்றி. ஆனால் இப்படியே போய்க் கொண்டிருக்கும்போது... 04.45 am க்கு மூஞ்சியில் மாடு மூத்திரத்தை அடிக்க வைத்து அய்யய்யோ என பதறியடித்து, நேரமாகி விட்டதோ ? என சொம்பை எடுத்து வந்து பால் கறக்கும் போதுதான் ச்சே... இத்தனை நேரம் கண்டதெல்லாம் கனவா ! என வெறுப்பேற்றி விட்டாயடா ! சண்டாளா ! எனக்கு நல்ல படிப்பை கொடுத்திருந்தால் என் வாழ்க்கை இப்படியாகி இருக்குமா ? தினம் இப்படி மாட்டோட, மாரடிக்க வைத்து விட்டாயே !

உனக்கு எப்படியடா நான் நன்றி சொல்ல முடியும் ? 

காணொளி

62 கருத்துகள்:

 1. um kuththamaa em kuththamaa ?
  yaara naanum kuththam solla.

  1.em kuththam thamizil marumoziyita mutiyavillai...!

  2.umakku vaakkalikka muyanraalum enthiram oththuzhaikka marukkirathu.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் வருகையே சந்தோஷம் தொடர்ந்தால் இதனினும் சந்தோஷம் முதல் வருகை தந்தீர் நன்றி.

   நீக்கு
 2. எப்படியோ
  இப்படியாவது
  உயிரோடு வாழ வைக்கும் - அந்த
  கடவுளுக்கு நன்றி கூறித் தான்
  ஆகவேண்டும் நண்பா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே உண்மையான வார்த்தை சொன்னீர் நன்றி.

   நீக்கு
 3. கனவிலாவது நல்லா இருந்தா சரி?

  பதிலளிநீக்கு
 4. கனவுகளின் சுகத்தைக் கலைத்த மாட்டுக்கு எதிர்ப்புப் பேரணி நடத்திடுவோம்!

  :))))))))))))

  பதிலளிநீக்கு
 5. ஹ ஹா ஹா
  எப்படி இப்படியெல்லாம்...

  பதிலளிநீக்கு
 6. இறைவா, கில்லர்ஜி என்ற நல்ல நண்பரைக் கொடுத்தாய், அவர்மூலமாக நல்ல பதிவுகளைக் கொடுத்தாய்.. அவரைப் புலம்பவும் வைத்தாய். இது கனவல்ல. நிஜம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் நிஜமான கருத்துரை தந்தீர் நன்றி.

   நீக்கு
 7. கனவிலும் இத்தனை பேராசைகளா...!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கனவில்கூட ஆசைப்படக்கூடாதா ? ஜி இருப்பினும் கருந்துரை தந்தீர் நன்றி.

   நீக்கு
 8. அருமை! அருமை! வழக்கம் போல உண்மையென்று நம்பி நானும் ஏமாந்து போனேன். கடைசியில் எல்லாம் கனவு தானா!

  த ம 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொடநாடு சுற்றுலா சென்று வந்த உடன் வருகை தந்து ஏமாந்து போனீர் நன்றி.

   நீக்கு
 9. இப்படியான கனவு காண்பதும் ஒரு சுகமே.

  பதிலளிநீக்கு
 10. எல்லாமே அல்நாஷர் கண்டதுபோல் பகல் கனவுதானா? இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
 11. நானும் என்னமோ.. ஏதோ..ன்னு பயந்து விட்டேன்!..
  வழக்கமான ஒன்று தானே- இது!..

  டிடர்ஜண்ட் கலந்த பாலை ஆற்றி ஆற்றிக் குடிக்கச் சொன்னால் எல்லோருக்கும் பிடிக்கும்!..

  இப்படி சாணி மூத்திர வாசனையுடன் - பட்டியில் பால் கறந்து காய்ச்சிக் குடிப்பது பிடிக்கவே பிடிக்காது!..

  விந்தையான உலகம் - ஐயா இது!..

  சம்சாரி வீட்டுக்கு ஒரு பசுமாடு!..ன்னு சொன்னார் கண்ணதாசன்..

  ஆனாலும் கனவு கனவாகப் போகட்டும்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி நான் கனவு காணுவது உங்களுக்கு வழக்கமாகி விட்டது இல்லையா ? விரிவான கருத்துரை தந்தீர் நன்றி.

   நீக்கு
 12. கனவு காண்பது நல்லது என்றால் அதற்காக இப்படியா பேராசையாக காணுவது. வாழும் வாழ்க்கைக்கே யார் நன்றி சொல்கிறார்கள். காணொளி அருமை.!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ நான் என்ன ? செய்வது ஐயா அப்துல் கலாம் அவர்கள்தான் கனவு காணச்சொன்னார் கண்டேன் இது தவறா ? உடனடியாக வந்தீர் நன்றி.

   நீக்கு
 13. எனக்கு கனவிலும்கூட இப்படிபட்ட வசதிகளை கொடுக்காததினால்...அந்த இல்லாத ஒன்றிடம் எதுவும் கேட்பதில்லை. அதனால் கொடுக்க மடியாது என்பதினால்................

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா அவரால் கொடுக்கமுடியாது என்றீர் நன்றி.

   நீக்கு
 14. கனவுகள் காணுங்கள் சகோ நல்லது தான் அப்பதானே அதில பாதியாவது பலிக்கும்.ஆனால் ஒன்று பகல் கனவு தான் பாதியாவது பலிக்கும் ஏனென்றால் அப்ப தான் முயற்சி செய்ய தோன்றும். தங்கள் எண்ணங்கள் ஈடேற வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இது அதிகாலை கனவு பலிக்கட்டுமென எனக்கு 4 கொழுந்தியாள்கள் கிடைக்க வாழ்த்தினீர் நன்றி

   நீக்கு
 15. பதிவை ரசித்து படித்து கொண்டிருக்கும் பொழுது இடையில் நான்கு கொழுந்தியாள், ஆறு குழந்தைகள் என்று வரும் பொழுது ஒரு சிறிய சந்தேகம் ஏற்பட்டது. நான் நினைத்தது போல கனவு தான். உங்கள் பதிவு புதுமை அருமை சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு 4 கொழுந்தியாள்கள் இருக்ககூடாது என நினைக்கின்றீர் நன்றி.

   நீக்கு
 16. எல்லாவற்றுக்கும் கடவுளை கூப்பிடுபவர்கள் கதி இதுதானோ.?

  பதிலளிநீக்கு
 17. நண்பரே ! கனவு நனவாக வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கனவு நனவாக வாழ்த்து சொன்னீர் நன்றி.

   நீக்கு
 18. கொடுத்த வாழ்க்கைக்கு நன்றியை கனவிலாவது சொல்ல நினைத்தீர்களே...
  நல்ல கனவு தான்.

  பதிலளிநீக்கு
 19. கனவையாவது நல்லா காணலாமே...

  அப்படியாவது...சுகமா இருந்தால் சரி...

  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீண்டும் கனவு காணச்சொன்னீர் நன்றி.

   நீக்கு
 20. பெயரில்லா5/19/2015 2:26 PM

  கனவு மெய்பட வேண்டும் என்று வேண்டினான் பாட்டிற்கு ஒரு புலவனாக மிலேச்சர்களை மிரள வைக்கும் கவிதைகள் வரைந்த கண் ஜோதி பிரகாசன் நம் பாரதி.கனவு என்பது வேறு நினைவு என்பது வேறு என்றாலும் கூட கற்பனைக்கும் கனவுக்கும் பிரதிபளிப்பான பின் பிம்பச் சாளரத்தின் சன்னலான தொடர்பு உள்ளது மெய்தானே.விழிப்பற்ற நிலையில் விடைகளை அறிய முடியா பேரமுத சஞ்சார நிலையில் வருவது தான் கனவு. ஆனால் விழிப்பு உள்ள நிலையில் இத்தர நிமிடத்தின் இம்சை கலைந்த நல்ல தீர்வுகளின் நேர்கோர்ப்புகளாக வன்னமே இல்லாமல் வருவதே கற்பனை என்றாலும் கூட கற்பனையை விட கனவு கந்தவர்வ சுகந்தம் நிறைந்தது. ஏனெனில் கற்பனை என்பது நம் கட்டுப்பாடில் கைகட்டி வாய் மூடி நிற்க வைக்கத் தக்கது. ஆனால் கனவை நம்மால் கட்டிப்போட முடியாது ,ஏனென்றால் அதைக் கட்டிப்போட நம்மால் இயலாது நம் எண்ணத்திற்கு ஏற்ற வகையில் நம் உணர்வுக்கு உகந்த வகையில் பாரிஜாத அமிர்தமாக ,நம் இன்பத்திற்கு பொருத்தமான வகையில் ,நம் நடைமுறை வாழ்க்கைக்கு தகுந்த வகையில் , மானசீக மத்தப்பாக்க முடியவே முடியாது. கனவு நிலையில் இருப்பவனால் சிந்திக்க முடியாது என்று சொல்லும் அதே வேளையில் சிந்தனை கதவுகள் தட்டப்படும் போது அன்பு கருணை நெஞ்சில் ஊற்றெடுக்கும் போது அன்பின் இலக்கணங்களை கருணையின் திருஉருவங்களை இரக்கத்தின் பிம்பங்களைக் காண முடியும் என்பதை பரிசேயன் வீட்டில் உணவு உபசரிப்பை ஏற்கும் விளக்கத்தில் இறைவன் எப்படி கையானடர் என்பதை சுவிசேஷ உரையில் இப்போது கேட்டென் என்பதையும் கூறிட விரும்புகிறேன்.

  “டெராபைட்” தாமஸ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் ''டெராபைட்'' தாமஸ் எமது பதிவையே சிறியதாக்கி விட்டீர் நன்றி.

   நீக்கு
 21. ஆனாலும் இவ்வளவு கூடாதுப்பா,,,
  விடியற்காலை கனவு எனில் பலிக்கும் என்பார்கள்,,,,,,,,,,,,
  அப்படியே ஆகட்டும்,,,,,,,,,,,,,,,,,
  அருமை. தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் நல்ல வாழ்வு வாழ்வதில் பொறாமை கொண்டு முடிவில் அருமை என்றீர் நன்றி.

   நீக்கு
 22. பெயரில்லா5/19/2015 5:00 PM

  முதலில் இந்த அழகு தமிழை தங்கிலீசில் எழுதுபவர்களைஇஇஇஇஇ........
  எவ்வளவு கஷ்டம் தெரியுமோ எழுத்தக் கூட்ட.....ஈஈஈஈ
  அடுத்தது சிரிப்பு வந்தது.. மாமியார் வீட்டில் நாலு கொழுந்தியா தந்ததற்கு....
  எல்லாம் கனவா??!!!!!!பூ..பூ...பூ..!!!!!....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிரித்து முடிவில் பூவென ஊதி விட்டீர் நன்றி.

   நீக்கு
 23. பானை விற்கிறவன், பணக்காரனாகி அந்த ஊர் கோடிஸ்வரன் மகளை கல்யாணம் செய்து, அவள் செய்த சாப்பாட்டில் உப்பில்லை என்று எட்டி ஒரு உதய் விட்டானாம், அன்றைக்கு விர்க்கவிருந்த பானைகள் அத்தனையும் உடைந்து போக கண் விழித்துப் பார்த்து, இன்னைய பொழப்பு போச்சேன்னு புலம்பினானாம். அந்த கதையா இருக்கு!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகான, பொருத்தமான குட்டிக்கதையை போட்டு உடைத்தீர் நன்றி.

   நீக்கு
 24. உங்கள் தளத்திலேயே எனக்கு ரொம்ப பிடித்தது ,தொடர்ந்து வரும் டெராபைட் தாமஸின் அரிய,பெரிய கருத்துக்கள்தான் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படூனாக்கா... என்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டீர் நன்றி

   நீக்கு
 25. ஹஹஹஹஹஹ் நீங்க ஆரம்பிச்ச உடனேயே தெரிஞ்சு போச்சுக் கனவுனு. அதுவும் மாடு படம் வேற....ஆனால் என்ன மாடுதான் எழுப்பிய விதம் தான் மாத்தி யோசிச்சுட்டோம்...மாடு காலால எட்டி உதைச்சு மா நு கத்திருக்கும்னு நினைச்சுட்டோம்....ரசித்தோம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படிக்கும்போதே கணித்து விட்டீர் நன்றி.

   நீக்கு
 26. அன்புள்ள ஜி,

  மாடுன்னா செல்வம் தானே. செல்வத்தோடு ஒரு கனவு. செல்லும்போது இருந்த பூமிக்கு நன்றி சொல்லிச் செல்ல வேண்டும். ‘ நன்றி....நன்றி.... நன்றி...! ’ என்று சொல்லி கனவு கண்டது நனவாக வேண்டும்.

  த.ம. 16 -க்கு மேலும் ஒன்று பெற வேண்டும்.

  பதிலளிநீக்கு
 27. உண்டென்றால் அது உண்டு....

  இல்லை என்றால் அது இல்லை நண்பரே!

  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கூட்டணியாய் வந்து உண்மையைச் சொன்னீர் நன்றி.

   நீக்கு
 28. நண்பா!
  நீ காணும் கனவுகள்
  யார் காணக் கூடும்?
  ஒருவராலும்
  ஒருபோதும்
  ஒ(உ)ன்னைத் தவிர!
  த ம + 1
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 29. கனவு கானுங்கள் என்று ஒரு விஞ்ஞானி கூவியதாக..நிணைவு.....அதன்படி தாங்கள் கனவு காணுங்கள்...

  பதிலளிநீக்கு