தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, மே 03, 2015

தர்மபுரி, தர்மஅடி தர்மராஜன்


தர்மபுரி சீனிவாச ஐயர், மளிகை கடையின் முதலாளி ரொம்பவும் ஆச்சாரமானவர், அழகாபுரி ஏரியாவில் தெரியாதவர்களே கிடையாது சிறுவர் தொடங்கி பெரியவர் வரை செல்லமாக ''ஐயரே'' என்றே அழைப்பார்கள், கடைக்குள் நுழைந்ததும் வேலையாட்களிடம் கேட்டார்.

ஏண்டா அம்பி அரிசி மூட்டையை வெளியே வைக்கலையா ?
இதோ ஆச்சு டேய் தூக்குடா,

ஆமாடா, கொழந்தே புரிஅடிராஜன் எங்கே ?
அவன் டீ வாங்க ஜவான் டீ ஸ்டால் போயிருக்கான்... ஐயரே.  

அடே அம்பிகளா கடையை தொறந்ததுமே டீ வேண்டுமே உங்களுக்கு, முதல்லே யாபாரத்தை கவனிங்கடா....
கல்லாவில் உட்காரும்முன், பெருமாளை வணங்கி விட்டு உட்கார்ந்து நிமிர்ந்தால் எதிரே.. புரிஅடிராஜன் நின்றான், சட்டை கிழிந்து இருந்தது தலை கலைந்து இருந்தது, கன்னமும் லேசாக உப்பி இருந்தது. 

ஏண்டா அம்பி, டீ எங்கே ஏன் முகமெல்லாம் வீங்கியிருக்கு ?
ஐயரே டீக்கடை மலைமேகம் என்னைப் போட்டு அடிச்சுட்டாரு..

என்ன திரிசமன் பண்ணியோ ஏன் அடிச்சாரு ?
அவருதான், பாய்லருல தண்ணி ஊத்துடான்னு... சொன்னாரு ஊத்துனதுக்கு அடிச்சுட்டாரு...

ஜலம் வார்த்தியா ஜலம் வார்த்ததுக்கா இந்த தண்டனை... சரி, வா விசாரிப்போம்.
இரண்டு கடை தள்ளி ஜவான் டீ ஸ்டால் இருந்தது ஐயர் கேட்டார்

ஏப்பா மலைமேகம் வாள் கொழந்தே என்ன பண்ணான் எதுக்கு கொழந்தையை இப்படி பணிஷ் பண்ணேள் ?
வாங்க ஐயரே... வியாபாரநேரம், அவசரத்துக்கு பாய்லருல தண்ணி ஊத்துடான்னு சொன்னா, மேலே ஊத்தி அடுப்பை அணைச்சுட்டான், அதுவுமில்லாம சீக்கிரமா டீ போடுய்யான்னு மண்டக்கனமா பேசுறான், அதான் ரெண்டு வச்சேன்.

அட, ஞானசூன்யமே பாய்லருக்கு ஜலம் எதுல வார்கணும்னு தெரியாதாடா நோக்கு ? எனக்குன்னு வந்து வாய்ச்சியே ! அபிஷ்டு ! வாடா !  
அவரும் ரெண்டு தட்டி, கூட்டிக் கொண்டு வந்தார், புரிஅடிராஜன் வயசு 24 இவன் எப்பவுமே இப்படித்தான் எதைச் சொன்னாலும் ஏடாகூடமா செய்துட்டு, ஊர்க்காரன்ட்ட அடி வாங்குவான், தினம் ஏதாவது ஒரு பிரச்சனையை கொண்டு வந்து ஐயர் தலையில கட்டிடுவான், ஊரான் அடிச்சது போதாதுன்னு அவரும் போட்டு அடிப்பார், ஆனா பத்தே நிமிஷத்துல மறந்து விடுவான், 13 வயதிலிருந்தே அவரிடம் வேலை செய்கிறான், (அடியும் வாங்குறான்) ஒரு தடவை இப்படித்தான் கடையில் சரக்கு நிறைய இருந்தது, 

கொழந்தே ! புரிஅடிராஜா இந்த, உப்பு மூட்டையை எடுத்துண்டு போய் ஆத்துல போட்டுட்டு, வா ! 
இவனும் மூட்டையை முதுகில் தூக்கிப் போனவன் ஒரு மணி நேரமாகியும் வரவில்லை வீட்டுக்கு கடையிலிருந்து போக10 நிமிடம் போதும், எங்கே போனான்... யோசித்துக்கொண்டு இருக்கும்போதே 3 பேர் அவனை ரத்தக்களரியாக கூட்டி கொண்டு வந்தார்கள்.

என்னடா அம்பி ! ஏண்டா ஏன் இவ்ளோ ரத்தம் கொட்டறது ?         
என்ன... ஆச்சா ? ஐயரே இவன் ஆத்துல குளிச்சுக்கிட்டு இருந்த பொம்பளைங்க மேல, பாலத்துலருந்து மூட்டையை போட்டு கொல்லப் பாத்துட்டான், உங்களுக்காகத்தான் விட்டு வச்சோம் இல்லே தொலைச்சுப் புடுவோம் தொலைச்சு.... வாங்கடா... போவோம். (அவர்கள் போய் விட்டார்கள்)

ஏண்டா சமத்து கட்டி ! என்னடா செஞ்சே உப்பு மூட்டை எங்கேடா ? 
என்ன, ஐயரே நீங்கதானே சொன்னீங்க, ''ஆத்துல போட்டுவா'' ன்னு இப்ப நீங்களே உப்பு மூட்டை எங்கேன்னா நான் எங்கே போவேன் ? பாலத்து மேலே நின்னு போட்டேன் கீழே பொம்பளைங்க குளிக்கிறது எனக்கு எப்படித் தெரியும் நீங்களே சொல்லுங்க ? அதுக்கு இப்படிப் போட்டு அடிக்கிறாங்கே..  
? ? ?

இப்படித்தான், ஏதாவது ஏடாகூடமா செய்துட்டு ஊரான்ட்ட அடி வாங்கிட்டு வருவான், இவணுக்கு எப்படி, புரிஅடிராஜன் னுபேர்  தெரியுமா ? இவன் முழுப்பெயர் தர்மராஜன் எங்கே போனாலும் தர்மஅடி வாங்கி வருவான், சொந்த ஊரும் தர்மபுரி, ஊரையும், அடியையும், பேரையும், இணைச்சா.., 
தர்மபுரி 
தர்மஅடி 
தர்மராஜன் 
இதுல, தர்மத்தை தர்மம் பண்ணிட்டு சுருக்கமா புரிஅடிராஜன்னு, கூப்பிட்டு அடிப்பாங்க.

இந்த பதிவை நான் சிறப்பாக வெளியிட சிறிய அளவில் உதவிய பெரிய மனது படைத்த எமது நண்பர் ‘’தளிர்’’ சுரேஷ் அவர்களுக்கு கில்லர்ஜியின் நன்றி ! நன்றி ! !  நன்றி  ! ! !

53 கருத்துகள்:

 1. நானும் என்னமோ நினைச்சேன்,இதுக்கு வாங்கின தர்ம அடிதானா :)

  பதிலளிநீக்கு
 2. பள்ளியில் படிக்கும் போது முட்டாள் முனியன் என்றொரு நாடகம் நடத்தினோம். அதில் நான் முதலாளியாகவும் எனது நண்பன் வேலைக்காரனாகவும் நடித்திருந்தோம். அந்த மலரும் நினைவுகளை தூண்டிவிட்டு விட்டது. தங்களின் பதிவு.

  த ம 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாவம் உங்கள் நண்பர் உங்களிடம் அடி வாங்கி இருப்பாரே...

   நீக்கு
 3. சாமி! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சுபோச்சு!
  தர்மபுரி தர்ம அடி தர்மராஜன், உப்பு மூட்டையை போட்ட இடம் ஆறு இல்ல சாமி! அது!
  கடல் சாமி! கடலு!
  அதான் கடல்தண்ணி உப்பு கரிக்குது சாமி! உப்பு கரிக்குது!
  தர்மத்தை ஆத்துல போட்டா அளந்து போடணும்!
  கடலில் போட்டா கணக்கில்லாமல் போடணும்!
  த ம் 4
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடல் தண்ணீர் உப்பு கரிக்கிறதுக்கான காரணத்தை வெளியில் சொல்லாமல் இருந்தேன் இப்படி போட்டு உடைச்சிட்டீங்களே... நண்பா...

   நீக்கு
 4. அய்யோ பாவம். இது புரி அடி ராஜனுக்கு.
  வாய்ப்பு வந்தால்
  எமதர்ம ராஜனையே பின்னியெடுக்கும் கொ(க)லைஞனைய்யா நீர். இது எம் அன்பு கொல்லர்ஜீக்கு. தம 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே அவரை பின்னியெடுக்குறதுக்குள்ளே அவரு நம்மை பெண்டைக்கழட்டி விடுவாரே... நிறைய இடைவெளி விடுறீங்களே நண்பரே...

   நீக்கு
 5. ஹா...ஹா... சபாபதி என்று ஒரு பழைய படம் உண்டு. அதில் காலி என். ரத்தினம் இப்படித்தான் சேட்டை செய்வார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன்னிக்கவும், காளி என். ரத்தினம் என்று படிக்கவும்.

   நீக்கு
  2. ஆம் நண்பரே காளி என். ரத்தினம் சிறந்த காமெடி நடிகர்தான்.

   நீக்கு
 6. என்னமோ சொல்ல வந்து, எங்கேயோ முடித்து விட்டதாக தெரிகிறது.
  பகவான்ஜீ என்ன நினைத்தார், எப்படி நினைத்து இருப்பார் என்று நினைத்துப் பார்த்தேன். சிரிப்புத்தான் வந்தது. நான் சொல்லப் போவதில்லை. இந்நேரம் அவர் இதனை வைத்து ஜோக் ஒன்றை ஜோடித்து இருப்பார்.
  த.ம.8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நானும் தாதா’’வாக சித்தரிப்பதாகத்தான் தொடங்கினேன் ஆனால் ? புகைப்படம் பொருத்தமில்லாத காரணத்தால் இப்படி முடித்தேன், நீங்க வேற எடுத்துக்கொடுத்து விட்டீர்களா ? உடனே பகவான்ஜி களத்தில் இறங்கி விடுவார்.

   நீக்கு
 7. உங்களுக்கு அடுக்குச் சொல் அரசர் என்று பெயர் சூட்டலாமா. எழுதும் போது பிழைகளைக் கூடியவரைத் தவிர்க்கலாமே. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பட்டம் பெறும் தகுதியல்லாம் எனக்கு இன்னும் வரவில்லை ஐயா வருகைக்கு நன்றி.
   உடன் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் ஐயா திருத்(ந்)திக்கொள்கிறேன் தவறுகள் பெரும்பாலும் தெரியாமல் வந்து விடுவதுதான் காரணம் இரவில் அறையில், அரையிருட்டில்தான் தட்டச்சு செய்வது வழக்கம் பிழைகளை திருத்தி விட்டேன் ஐயா மேலும் ‘’ஏன்டா’’ 80தை ‘’ஏண்டா’’ என்றும் சிலர் ‘’யேண்டா’’ என்றும் எழுதுகிறார்கள் இதில் எது ? சரி.

   நீக்கு
 8. ஏன்னா.. ஜி.. கேட்டேளா!..

  நம்ம த.த.தர்மராஜன் வேறொரு சேட்டையும் பண்ணியிருக்கான்.. தெரியுமோ!..

  அடுத்தவா அடிச்சாலும் ஐயரு அடிக்கலாமோ?.. புள்ளையாண்டான் பொழச்சுப் போகட்டும்!.. விட்டுடுங்கோ!.. புண்ணியமாகட்டும்!..

  பதிலளிநீக்கு
 9. கதையும் தலைப்பும் ரெம்ப ஜோக்கா இருக்கிறது நண்பரே...

  பதிலளிநீக்கு
 10. நல்லா புரி.......ந்து அடி வாங்கும் ராஜனாக்கும்....தம +1

  பதிலளிநீக்கு
 11. ஹாஹா! நல்லதொரு நகைச்சுவை! இந்த பதிவை எழுதுவதற்குதான் முன்பொரு சமயம் உதவி கேட்டீர்கள் போல! நானே மறந்திட்ட வேளையில் பதிவிட்டு என்னை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே இது எழுதி இரண்டு வருடமாகி விட்டது தங்களிடம் உதவி கேட்டு ஒரு வருடமாகி விட்டது ட்ராப்டில் கிடந்து வெளியிட தாமதமாகி விட்டது வருகைக்கு நன்றி

   நீக்கு
 12. கடையைத் திறந்ததும்
  டீ வேண்டிக் கிடக்கா
  முதல்ல வியாபாரத்தைப் பாரென்று
  முதலாளி,,,
  அங்கால
  தண்ணீர் ஊற்று...
  பதிவு
  சுவையாக இருக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

   நீக்கு
 13. வணக்கம்
  ஜி
  செம கிட்டாக உள்ளது எல்லாவற்றையும் சொல்லி விட்டு இறுதியில் சொல்லிய உப்பு மூட்ட நகைச்சுவை நன்று.. த.ம 14

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 14. பரமார்த்த குருவின் சீடனாய் இருந்திருப்பான் போலிருக்கே!!

  பதிலளிநீக்கு
 15. நகை சுவையை இப்படிப் பின்னி எடுக்கிறீர்களே எப்படி என்று ஆச்சரியமாகவே உள்ளது.ரசித்தேன் வெகுவாக. நன்றி நன்றி வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
 16. பழைய என் எஸ் கிருஷ்ணன் நகைச்சுவைகள் நினைவிற்கு வந்துவிட்டன. ஆத்துல உப்பு போட்டதை அதிகம் ரசித்துப் படித்தோம். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவரின் வருகைக்கும், ரசித்தமைக்கும் நன்றி.

   நீக்கு
 17. அன்புள்ள ஜி,

  தர்மம் தலைகாக்கும்...தக்க தருணத்தில் உயிர் காக்கும்- இதுதானோ?
  நன்றி.
  த.ம.18.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தர்மராஜனுக்கு தர்மஅடி கொடுத்து ரத்தக்களரி ஆக்குறாங்கே... உங்களுக்கு நக்கலா, இருக்கா ?

   நீக்கு
 18. தர்ம அடிக்கு த ம 19.

  மீண்டு வந்தேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீண்டு வந்தீங்களா ? ஏன் ? கவிஞரே பாலத்துக்கு நீங்களுமா ? போனீங்க...

   நீக்கு
 19. சொன்னதை செய்தா அங்கே.அடி விழுது. சொன்னதை செய்யலேன்னா இங்கு திட்டு விழுகுது....ஆத்துல உப்பு போட்டதை சொல்கிறேன் நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்ம அரசியல்வாதிகள் ஓட்டு போடாதவனுக்கும், போட்டவனுக்கும், சேர்த்து வயித்துல அடிக்கிறதில்லையா ? அதைப்போலதான் நண்பரே..

   நீக்கு
 20. ரசித்தேன்,சிரித்தேன். இப்படி எழுதினால் சிரிக்காமல் இருக்கமுடியாதே என்னால்.
  அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரசிக்கும் போது சிரிப்பு வருவதுதான் முறை.

   நீக்கு
 21. அடி வாங்கியது யார்? தர்மராசன் போல் தெரியலேயே,,,,,,,,,,,,

  பதிலளிநீக்கு
 22. ஹஹஹ்ஹஹஹ் என் ராசா தர்ம ராசா இப்படி அடி வாங்கலாமா?!!! இது முட்டாள் சீடர்கள் செய்வாங்களே அது போல..ஹஹஹ்

  பதிலளிநீக்கு