மன்னர் ஏன் கோபமாக இருக்கிறார் ?
போருக்கு வரமுடியாத சூழ்நிலையை விளக்கி தூது
அனுப்பிய புறா தனது ஜோடிப்புறாவுடன் ஓடிவிட்டதாம்.
மன்னர் வெளியில் கிளம்பும்போது மாறுவேஷத்தில்
செல்கிறாரே... கள்வர்களை பிடிக்கவா ?
அட நீ வேற சின்ன வீட்டுக்கு போகும் போது
யாரும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான்.
மன்னர் ஏன் புலவரை சிறையில் அடைத்து
விட்டார் ?
மன்னரை புகழ்ந்து கவி எழுதிய புலவர் வெற்றி
வீரன் என்பதற்க்கு பதில் வெட்டி வீரன் அப்படினு எழுதிட்டாராம்.
மன்னர் ஏன் கவலையில் இருக்கிறார் ?
மன்னருக்கு வெளியில் ஒரு சின்னவீடு இருப்பது
தெரிந்த மகாராணியார் தனக்கும் அதுபோல் ஒரு வீடு வேண்டுமென்றாராம்.
மன்னர் காவல் வீரனை ஏன் தூக்கில் போடச் சொன்னார் ?
மன்னர் வரும்போது ’’மன்னாதி மன்னரே’’ எனச்சொல்லாமல், ’’மண்ணாதி மண்ணரே’’னு அழுத்தி
சொல்லிட்டானாம்.
மன்னர் போருக்கு சென்று வெற்றியோடு வரும்போது
மகாராணி சந்தோஷமாக வரவேற்க வில்லையே ஏன் ?
மகாராணியார் நினைத்தபடி நடக்க வில்லையாம்.
மன்னர் ஏன் வேற்று நாட்டு ஒற்றனின்
வாயில் அமிலத்தை ஊற்றச்சொன்னார் ?
’’அறப்போருக்கு வாருங்கள்’’னு சொல்லாமல் ’’அக்கப்போருக்கு வாருங்கள்’’னு சொல்லிட்டானாம்.
மன்னர் அவைப்புலவரின் நாக்கை வெட்டச் சொல்லி
விட்டாராமே ?
கவி பாடும்போது, ’’மண்ணை ஆளும் மன்னா’’னு சொல்லாமல் ’’மண்ணில் வீழும் மன்னா’’னு பாடிட்டாராம்.
மன்னர் ஏன் ஓவியரின் கையை வெட்டச் சொன்னார் ?
மகாராணிக்கு வைத்த வரவேற்பு பலகையில் மகாராணி
கோமளவள்ளியே வருகனு எழுதாமல் மகாராணி கோமணவள்ளியே வருகனு எழுதிட்டானாம்.
மன்னர் ஏன் அந்தப்புரத்தை, ’’அந்த’’ப்புறம்னு சொல்றார் ?
அந்தப்புரம் என்றால் அரண்மனைக்கு உள்புறம் ’’அந்த’’ப்புறம் என்றால் வெளிப்புறம் அதாவது
சின்னவீடு.
கில்லர்ஜியிடம் பகவான்ஜி சாயல் தெரிகிறதே..! கேள்வியும் பதிலும் அருமை.
பதிலளிநீக்குமுதல் ஆளாக வந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
த ம 1
மீனாம்பாள்புரத்தில் வசிக்கும் B ஜியும், மீனாம்பாள் மகன் K ஜியும் ஒரே சாயலில் இருப்பது அதிசயமா ? S ஜி
நீக்குமுதல் வருகைக்கு சிறப்பு நன்றி.
ஓ! வரிகளைப் பிரதி எடுக்க முடியாது செட்டிங் செய்தாச்சு....
பதிலளிநீக்குஅனைத்தும் ரசிக்க முடிந்தது....
உதாரணம் தர முடியாது....எல்லாம் எழுத நேரமில்லையே...
நன்றி.
வாங்க மேடம் தாங்கள் எமது பதிவுக்கு வருவதே சிறப்புதான்.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
சொல்ல தேவையில்லை... வழமைபோல ... கேள்வி கேட்டு சத்தி விட்டீர்கள்... வாழ்த்துக்கள் த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருக ரூபன் பாராட்டுக்கு நன்றி.
நீக்குஅனைத்தும் அருமை. ரொம்ப ரசித்தது 1, 3,4
பதிலளிநீக்குநம்பர் கொடுத்து பாராட்டிய நண்பருக்கு நன்றி.
நீக்குஇனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குதம +1
வாங்க நண்பரே இது எனது சட்டப்படியான தேதி உண்மையான தேதி வரும் பொழுது நான் வலைச்சர ஆசிரியராகலாம் என்ற எண்ணம் உள்ளது நண்பரே... இருப்பினும் கண்டுபிடித்து வாழ்த்தியமைக்கு நன்றி.
நீக்குநகைச்சுவையில் ஜோக்காளியையும், தளிரையும் மிஞ்சிவிடுவீர்கள் என நினைக்கின்றேன். அந்தப்புர நகைச்சுவையை இந்தப்புறத்திலிருந்து அதிகம் ரசித்தேன். பாராட்டுகள்.
பதிலளிநீக்குமுனைவருக்கு வணக்கம் அப்படி ஆசையெல்லாம் கிடையாது அவர்கள் சரவெடி நான் சாதா வெட்டி.
நீக்குநகைச்சுவையை இரசித்தேன்!
பதிலளிநீக்குரசித்தமைக்கு நன்றி நண்பரே....
நீக்குஅரண்மனை அந்தப்புரத்தில் கைகலப்பு ஆனாலும்
பதிலளிநீக்குஇந்தப் புறத்தில் நல்ல கலகலப்பு!..
வாழ்க நலம்..
வாங்க ஜி கைகலப்பை கலகலப்பாக்கிமைக்கு நன்றி.
நீக்குஎன்னங்க ஜி... நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்க...!
பதிலளிநீக்குரசித்தேன்...
என்ன ? ஜி இப்படிச் சொல்லிட்டீங்க... நவரசமாக இருக்கட்டும்னு நினைச்சேன். தோழர் திரு. மது அவர்கள் நகைப்பணி தொடர்கனு சொல்றாரு... உங்களுக்கு நான் கோபமாக எழுதினால்தான் பிடிக்குமா ? சரி இப்பவே கோபப்பட்டு அடுத்த பதிவை வெளியிடுறேன்.
நீக்குநகைத்தேன் நன்றாக நண்பரே.........
பதிலளிநீக்குநகை என்றாலே இனிப்பான தேன்தானே நண்பரே....
நீக்குநகை ஒரு தனிசுவை ..
பதிலளிநீக்குதொடர்க
தம +
தங்களின் கருத்தே தனிச்சுவைதான் தோழரே...
நீக்குகலக்கல் காமடி!
பதிலளிநீக்குஐயாவின் வருகைக்கு நன்றி.
நீக்குவி பு சி தோழர்!
பதிலளிநீக்குவித்தியாசமான, புதுமையான, சிரி(ற)ப்பா ? தோழரே....
நீக்குஅல்லது
விளங்காத, புரியாத, சில்லறையா ? தோழரே...
(தவறாக நினைக்காதீர்கள் நண்பரே... சும்மா டம்மாஸூ)
நகைச்சுவைக் காத்து அபுதாபி பக்கம் போலும். அனைத்தும் அருமை. நன்றி.
பதிலளிநீக்குவாங்க சகோ இங்கு மன்னர்கள் ஆட்சிதானே... சரி உங்களுக்கு வாக்குரிமை இருக்குதே ஓட்டுப் போடக்கூடாதோ... நான் ஏற்கனவே நின்று சம்பாரித்த வேட்பாளர் இல்லையே..
நீக்குஅதுபாருங்க சகோ,அதில் கொஞ்சம் சிக்கல்,அட என்ன இப்போ, உண்மையைச் சொல்கிறேன் சரியாக தெரியல, எவ்வாறு என்று கேட்கனும். இணைந்து விட்டேன். இன்னும் சரியாக பயன்படுத்தல.
நீக்குஇன்றே கேட்டு, இனி வாக்கோடு வருகிறேன்.
அதனால் என்ன இப்ப நின்றால் கூட போதும்,
நான் தான் ஏற்கனவே பாராளுமன்றம் வாங்கித் தருகிறேன் என்று சொன்னேன் இல்லையா?
சரி வாங்க, இல்ல நான் வாக்கோடு வருகிறேன்.
ஆனா அந்த டிசைன் நல்லா இல்லை. நன்றி,
பாராளுமன்றம் வாங்கித் தர்றீங்களா ? ஏதோ குச்சி மிட்டாய் வாங்கி கொடுக்கிற மா3 சொல்றீங்க..... வாங்க வாங்க...
நீக்குஅதானே பார்த்தேன் இன்னும் யாரும் நகையைப்பற்றி சொல்லவில்லையேனு...... இது அபுதாபி டிஸைனிங்க நம்மூரில் தெய்வ அலங்காரத்துக்கு போடுவது போல்தான் இருக்கும்.
மன்னர் புராணம் ரசிக்க வைத்தது
பதிலளிநீக்குவாங்க ஐயா வருகைக்கு நன்றி.
நீக்கு
பதிலளிநீக்குமாமன்னரின் மாமன்றத்தில் சிரிப்பு மாமழை போட்டி!
1) கில்லர்ஜி மன்னா!
மை பூசும் மான்னா என்று சொன்னதற்காக?
இந்த மரண தண்டனை!
இல்லை!
நான் "டை " அடிக்கும் செய்தியை நாட்டு மக்களுக்கு அறிவித்த குற்றத்திற்காக!
(மீசைக்கு அடித்த மீதியைதான் பதிவின் எழுத்துக்கும் அடிப்பதாகவும் கூறுகிறார்களே).
2) மன்னா! அருவி அங்கப்பனை எதற்கு அவைக்கு
இழுத்து வரச் சொன்னீர்கள்?
அதுவா!
மறைந்து வாழ்ந்தபடியே "ஒற்றராக" வந்துபோகும்
வேற்று தேசத்து ஒற்றராக இருக்க கூடும் என்பதனால்!
த ம 13
நட்புடன்,
புதுவை வேலு
வாருங்கள் நண்பரே குட்டிப்பதிவே போட்டு விட்டீர்கள் எங்கோ எட்டி உதைப்பதுபோல் என் அறிவுக்கு 8கிறதே...
நீக்குநkaiத்தோம்!!!
பதிலளிநீக்குதலைப்புக்கேற்ற பதிலடியா.....
நீக்குகேள்வியும் பதிலும் நல்ல நகைச்சுவையாக இருந்தது சகோ. தலைப்பு நகை youங்கள் அதுவும் புதுமை !
பதிலளிநீக்குவருக சகோ வருகைக்கு நன்றி.
நீக்கு\\மன்னர் ஏன் ? கோபமாக இருக்கிறார் ?
பதிலளிநீக்குபோருக்கு வரமுடியாத சூழ்நிலையை விளக்கி தூது அனுப்பிய புறா தனது ஜோடிப்புறாவுடன் ஓடிவிட்டதாம். \\
நல்ல வேலை எதிரி மன்னன் அதைப் பிடித்து சுக்கா வறுவல் செய்யவில்லை!!
\\மன்னர் வெளியில் கிளம்பும்போது மாறுவேஷத்தில் செல்கிறாரே... கள்வர்களை பிடிக்கவா ?
அட நீ வேற சின்ன வீட்டுக்கு போகும் போது யாரும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான். \\
அரண்மனயில ஒரு இராணி, அப்புறம் நூற்றுக் கணக்கில் தாதிப் பெண்கள். இதையெல்லாம் மீறி வெளியில வேறயா? அட நாறப் பயலே............!!
\\மன்னர் ஏன் ? புலவரை சிறையில் அடைத்து விட்டார் ?
மன்னரை புகழ்ந்து கவி எழுதிய புலவர் வெற்றி வீரன் என்பதற்க்கு பதில் வெட்டி வீரன் அப்படினு எழுதிட்டாராம். \\
திறமையான புலவன் வேறு அர்த்தம் கற்பித்து விட்டு தப்பித்திருப்பார்!!
\\மன்னர் காவல் வீரனை ஏன் ? தூக்கில் போடச்சொன்னார் ?
மன்னர் வரும்போது ’’மன்னாதி மன்னரே’’ எனச்சொல்லாமல், ’’மண்ணாதி மண்ணரே’’னு அழுத்தி சொல்லிட்டானாம். \\ உண்மையில் நாம் தமிழ் உச்சரிப்பை மறந்து வருகிறோம். ழ, ல, ள வேறுபாடே பலருக்கும் தெரியாது. [நான் என்னையச் சொன்னேன்!!]
\\மன்னர் போருக்கு சென்று வெற்றியோடு வரும்போது மகாராணி சந்தோஷமாக வரவேற்க வில்லையே ஏன் ?
மகாராணியார் நினைத்தபடி நடக்க வில்லையாம். \\ அவள் என்ன நினைச்சாளாம்னு தெரிஞ்சாத்தானே சிரிக்க முடியும் கில்லர்ஜி?
\\மன்னர் ஏன் ? ஓவியரின் கையை வெட்டச் சொன்னார் ?
மகாராணிக்கு வைத்த வரவேற்பு பலகையில் மகாராணி கோமளவள்ளியே வருகனு எழுதாமல் மகாராணி கோமணவள்ளியே வருகனு எழுதிட்டானாம்.\\ கில்லர்ஜி !! ஏதும் உள்குத்து இருக்கா? தற்போது தமிழ்நாட்டையே பேய் மாதிரி உலுக்கும் ஒரு பிரபலத்தின் பெயரும் இதே தான்!! எப்படியோ, மாத்தினவன் சூப்பரா மாத்திட்டான்!!
நண்பரே மொத்ததையும் மாற்றி எழுதுனீங்க சரி கடைசியிலே வேற ஏதோ கோர்த்து விட்டு என்னைய மாத்துல விட முயற்சி பண்ணுறீங்களோனு சந்தேகமாக இருக்கு.
நீக்குகில்லர்ஜி பக்கம் கிளுகிளுப்பில் பஞ்சமில்லை
பதிலளிநீக்குசொல்லாடல் ஊட்டும் சுவை !
மன்னருக்கு ஏற்ற மகாராணி ஜாடிக்கேத்த மூடி
படித்தேன் ரசித்தேன் வாழ்த்துக்கள்
தம +1
நண்பரின் வருகைக்கு நன்றி.
நீக்குஇருந்தாலும் உங்களுக்கு ...இல்லை இல்லை ...மகாராணிக்கு இவ்வளவு நல்ல எண்ணம் இருக்கக் கூடாது :)
பதிலளிநீக்குஇதென்ன அரசர் ஸ்பெசலா ,அடுத்து டாக்டர் ஸ்பெசலை எதிர்பார்க்கிறேன் :)
வாங்க ஜி தங்களின் கோரிக்கையை ஏற்று டாக்டர்களை விரைவில் உருட்டுகிறேன்....
நீக்குமன்னருடன் நேர்காணலா?
பதிலளிநீக்குமின்னலடிக்கும் கேள்விகள்
வெடித்துச் சிதறும் பதில்கள்
தமிழுக்குள்ளே
ஆங்கிலம் கலக்கும் பதிவராக வர
முயற்சிப்பதேன்?
எ-கா: நகைyouங்கள்
தமிழுக்கு முன்னுரிமை வழங்கி
பிறமொழிகளை அடைப்புக்குள் அடைத்து
எழுதாதது ஏன்?
எ-கா: நகையுங்கள் (you)
வருகைக்கு நன்றி நண்பரே மன்னிக்கவும் தங்களின் கருத்துரையை ஏற்று பகுதி சரி செய்து விட்டேன்....
நீக்குஜோடியோடு ஓடிய புறா நன்கு சிரித்தேன்....ஆமா மன்னரை இந்த வாறு வாரலமா பாவம் மன்னர்....சூப்பர் சகோ.
பதிலளிநீக்குவாறனும்னு முடிவு செய்த பிறகு மன்னர் என்ன ? மங்கோந்தை என்ன ? வருகைக்கு நன்றி சகோ...
நீக்குதாமதமாக வருவதற்கு நீங்கள் கோபப்பட்டாலும் நான் நகைத்தேன்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
வாங்க கவிஞரே இந்த வசனக் கேஸட்டு இன்னுமா ? இருக்கு....
நீக்குநான் கண்வைத்தது நகைமேல்தான் இப்படி பளபளக்கிறது.சும்மா சொன்னேன் எனக்கு நகையென்றால் அலர்ஜி. நகை(யும்)ச்சுவையும் அருமை. சிரிக்காமல் இருக்கமுடியுமா.
பதிலளிநீக்குவாங்க சகோ பதிவுகளை மிஸ் பண்ணுறீங்க...
நீக்குதலைக்கு வந்தது தலைப்பாவோடு போய்விட்டது என்று அமைதி அடையாமல் மன்னர் கோபம் கொள்வதில் அர்த்தமில்லை..நண்பரே...
பதிலளிநீக்குமன்னரு மண்ணு முக்குழியாக இருப்பாரோ....
நீக்குகலகலப்பு........சிரிப்பை...சிலவற்றில் அடக்கமுடியவில்லை.....நகைச்சுவை கைவந்த கலையாக இருக்கிறது...உங்களுக்கு....தம+1
பதிலளிநீக்குதாமத வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
நீக்குஹஹஹஹஹஹஹ் செம போங்க....எல்லாமே ரசித்தோம்...
பதிலளிநீக்குகீதா: அதென்னங்க வில்லங்கமுனு சொல்லுவீங்க...சரி..... இப்ப என்னையப் போட்டுத் தாக்கியிருக்கீங்களே...ஹஹஹஹ கடைசிக்கு முந்தியது.....
அடடே கடைசி பஸ்ஸில் வந்துட்டீங்களே..
நீக்கு