தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, மே 08, 2015

நந்தவனத்து ஆண்டி.


மலை முழுங்கி ஜவுளிக்கடல் கொடைரோடு.
கடையின் உள்ளே ஓரமாக உட்கார்ந்து சேரில் தூங்கி கொண்டு இருந்த கணவன் கண்ணப்பனை தனது சேலைத்தலைப்பைக் கொண்டு சட்டீர், சட்டீரென தட்டிக்கொண்டு இருக்க திடீரென முழித்தவன் கேட்டான்.
 
யேன்டி மாரியம்மா என்ன செய்யிறே ?
மனுஷன் இப்படியா ? தூங்குறது ?
எதுக்கு ? மூஞ்சியிலே சேலையை வச்சு அடிக்கிறே ?
எதுக்கா ? இப்படி ஒரே இடத்துலே உட்கார்ந்து தூங்கினா ? சிலந்தி கூடு கட்டாமல் என்ன செய்யும் ?
சிலந்தியா ? சேலை எடுத்துட்டியா ? இருட்டாயிருக்கு ? மணி என்ன ?
சேலை டிஸைனிங் ஒண்ணும் சரியில்லை நம்ம நந்தவனத்தார் சில்க்ஸ் போவோமா ?
மணி என்னடி ?
8 மணிதான் ஆகுது.
அடியே காலைலே 11 மணிக்கு உள்ளே நுழைஞ்சே இப்ப மணி ராத்திரி 8 ஆச்சு, இதுவரை என்னதான் செஞ்சே ? சேலை டிஸைனிங் சரியில்லைனு சொல்றே ?
ஆமாங்க, நான் கேட்கிற அமலாபால் புடவை இன்னும் வரலையாம்.
அதை காலையிலேயே கேட்டுத்தொலைக்க வேண்டியதுதானே ? ஆமா, அவ கட்டுன புடவையை நீ ஏன்டி கேட்கிறே ? மதியம் சாப்பிட்டியா ? நானும் அசதியிலே தூங்கிட்டேன்.
மதியம் ஜூஸ் கொடுத்தாங்க, பசி எடுக்கலை, நீங்க சாப்பிட்டீங்களா ?
நல்லா இருக்குடி, நீ கேட்கிறது... ஏசி சுகத்துல அப்படியே தூங்கிட்டேன். நீ போக வேண்டியதுதானே காலையிலே எந்திரிச்சு வருவேன்ல.
அப்படித்தான் நினைச்சேன் பர்சு உங்க பேண்ட்க்குள்ளே மாட்டிக்கிருச்சே...
ஏன் ? முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரிங்கிறது மா3 நீயும் என்னை இப்படியே விட்டுப்போயிருந்தா ? சிலந்திக்கு சிலை கொடுத்தாள் மாரினு நாளைக்கு சரித்திரம் சொல்லுமே...
சரி, கலைக்கானம் பேசாமல் சீக்கிரம் கிளம்புங்க நந்தவனத்தார் சில்க்ஸ் போகனும் கடையை பூட்டிருவாங்க...
எதுக்கு ? என்னைக் கொண்டுபோய் ஆண்டி மா3 நிறுத்தி வைக்கவா ?
தொனத்தொனனு பேசாமே கிளம்புங்க...
முதல்லே வீட்டுக்கு கிளம்புடி மணி 8 ஆச்சு எனக்கு பசிக்குது வீட்டுல என்ன வச்சுருக்கே ?
அதெல்லாம் ஒண்ணும் இல்லை ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு கடைக்கு போவோம்.
கடைக்கு நாளைக்கு போகலாம் எனக்கு அசதியா இருக்கு தூங்கனும்.
இன்னைக்கு ஏகாதசிதானே முழிச்சாத்தான் என்ன ?
நல்லாயிருக்குடி உன் நியாயம் ஏகாதசி எதுக்கு ? முழிக்கனும்னு விவஸ்தை தெரியாதவளே நட....டீ வீட்டுக்கு.
உங்களைக் கட்டிக்கிட்டு என்ன ? சுகத்தை கண்டேன்.
இதை நீ சொல்றியா ? நான் அபுதாபியிலே வேலை செய்யும்போதே கம்பெனியிலே வேலை செய்யிற ரெண்டு பிலிப்பைனிகள் சொன்னாளுக நாம கல்யாணம் செய்துக்கிறலாம்னு நாந்தான் கோட்டை விட்டுட்டேன்.
இப்ப மட்டும் என்னவாம் போய் கட்டிக்கிற வேண்டியதுதானே... யாரு ? புடிச்சுக்கிட்டு இருக்கா ?
கட்டிக்கிறலாம்தான் ஆனால் ? அவளுக புருஷன்மாரு ஒத்து வரமாட்டாங்கே...
ஹூம் நானும்தான் எங்க தேவகோட்டை மச்சான் கில்லர்ஜியைக் கோட்டை விட்டுட்டு இப்படி நிக்கிறேன்.
அவனுக்கு நல்லநேரம் உங்கிட்ருந்து தப்பிச்சுட்டான்.
என்னோட கெட்டநேரம் உங்கள்ட்டே மாட்டிக்கிட்டேன்.
ஒண்ணும் மட்டும் உறுதி அவளுகளைக் கல்யாணம் செய்திருந்தா தீபாவளி, பொங்கலுக்கு ஒரு டவுசரும், பனியனும் எடுத்தால் போதும் உன்னைப்போல பட்டுப்புடவை, ஒன்றரை முழத்துக்கு மல்லிகைப்பூ, ரெட்டை வடம் ஜெயினு இதெல்லாம் கேட்க மாட்டாளுக.
ஆமாமா, வீட்ல பட்டு புடவையை கோட்டை போலத்தான் குமிஞ்சு கிடக்கு ஜெயினு வாங்கிட்டாலும் இங்கே ஜெயிலு வாழ்க்கையாத்தான் இருக்கு.
பட்டுக்கோட்டைக்கு போகும் போதெல்லாம் பட்டுப்புடவை எடுக்கலையாடி ? அசோகன் ஆபரண மாளிகையில ஜெயின் வாங்கி தரலை ?
ஆமா, இப்படி குத்திக்காட்டிக்கிட்டே இருங்க...
ஆத்தா, தாயே ஹோட்டல் வந்துருச்சு எனக்கு பசி உயிரை எடுக்குது வாயை மூடிக்கிட்டு பேசாமல் சாப்பிடு.
வாயை மூடிக்கிட்டு எப்படி ? சாப்பிட முடியும் ?
அடடே அறிவுக்கொழுந்து.... வாத்தா நான் வாயை மூடிக்கிறேன்.
 
மன்னிக்கவும், இருவரும் அந்த உயர் தரமான ஹோட்டலின் உள்ளே சென்று Family Roomக்குள் நுழைந்து கதவைச்சாத்திக் கொண்டதால் அவர்கள் இருவரும் அடுத்து என்ன ? பேசினார்கள் 80தை ஒட்டுக்கேட்க முடியவில்லை.
 
குறிப்பு - கடந்த குடை வள்ளல். பதிவுக்கு முனைவர் திரு. B. ஜம்புலிங்கம் அவர்கள் கருத்துரையை போட்டதோடு போகாமல் எனது கழுத்தில் கோடரியை போட்டு விட்டு போன காரணத்தால் அவசரமாக சிந்தித்து எழுதி இன்று வெளியிடுகிறேன் முனைவர் அவர்களே மகாராணிகள் எதிலுமே சிக்க மாட்டார்கள் மகாராஜாக்கள் வேண்டுமானால் ஒட்டடை அடிக்கும் நிலைக்கு தள்ளப்படலாம் இந்நிலை அன்றிலிருந்து இன்றுவரை இப்படித்தான் இந்தப்பதிவை எழுத வைத்தமைக்கு தங்களுக்கு எனது நன்றி இருந்தாலும் இப்படியுமா ? என்னை உடனடியாக கஷ்டப்படுத்துவது ? மறுநாளே எழுதி விட்டேன் 3  தினங்களாக வேலை காரணமாக அபுதாபியில் இல்லை அதனால்தான் யாருடைய பதிவுகளுக்கும் வரவில்லை பின்னூட்டமும் தரவில்லை மன்னிக்கவும் விடுபட்ட அனைத்து பதிவுகளுக்கும் வருவேன்.
 
சாம்பசிவம்-
சிறிய பதிவுக்கு, முனைவர் கொடுத்த சிறிய கருத்துரை அதைவிட பெரிய பதிவை கொடுத்துருச்சே....
சிவாதாமஸ்அலி-
கில்லர்ஜி கூட குடை வ.... ச்சீ கொடை வள்ளல்தான்.
Chivas Regal சிவசம்போ-
நாமலுந்தான் கடைக்குப் போறோம் இவ்வளவு நேரமா ? காசைக் கொடுக்குறோம் எடுத்து வைக்கிறான் மறுநிமிஷம் வெளியே வந்துடுறோம்.
காணொளி

51 கருத்துகள்:

  1. நந்தவனத்தில் பூ பறித்துக் கொண்டு இருக்கிறேன்!
    மாலை தொடுத்துக் கொண்டு பிறகு வருகிறேன்.
    த ம 1
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வந்து கழுத்தில் போடுங்கள் கோடரியை அல்ல மாலையை.

      நீக்கு
  2. ஏசியில நல்லாத்தான் தூக்கம் வரும்.

    பதிலளிநீக்கு
  3. பதிவைப் படித்துச் சிரித்தேன். காணொளி கண்டு ரசித்தேன். அது என்ன மாயம், அவர் விழாமல் அப்படி இருக்கிறார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், ரசித்தமைக்கும் நன்றி நண்பரே.

      நீக்கு
  4. ஒட்டுக் கேட்டதைப் போல் தெரியவில்லையே. நேரில் நடந்ததை அப்படியே பார்த்துப் பதிந்தது போல உள்ளது. பரவாயில்லை. அது உங்கள் திறமை எங்களுக்குத் தெரியும். கோடரி போடவில்லை, உங்களது எழுத்தின்மீதான ஆர்வத்தால் உங்களால் எழுதமுடியும் என்றேன். சரிதானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் நம்பிக்கையை காப்பாற்ற முயல்வேன் தொடர்ந்து...

      நீக்கு
  5. உங்களுக்கு நல்ல நேரம் ஜி... தப்பிச்சிட்டீங்க...! ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி, மாரியம்மாளிடமிருந்துதானே....

      நீக்கு
  6. ஆமாம் நண்பரே
    நிங்களும் கொடை வள்ளல்தான்
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இதுவரை இல்லை இனியெனும் முயல்வேன்.

      நீக்கு
  7. இந்த மகாராணிகளின் சமாச்சாரத்தில் மகாராஜக்களின் பாடு..மோசம்தான்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே நல்லவேளை தப்பித்தீர்கள்.

      நீக்கு
  8. நந்தவனத்தில ஒரு பூ!..

    இது கூட நல்லாத் தான இருக்கு!?..

    பதிலளிநீக்கு
  9. நல்ல நகைச்சுவையான பதிவு படித்து ரசித்தேன். காணொளியும் மிக அருமை சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், ரசித்தமைக்கும் நன்றி சகோ.

      நீக்கு
  10. பதில்கள்
    1. புலவர் அவர்களின் ரசிப்பிற்க்கு நன்றி.

      நீக்கு
  11. நானும் தான் எங்க தேவகோட்டை மச்சான் கில்லர்ஜியைக்கோட்டை விட்டுட்டு நிக்கறேன் உங்க போட்டியாளரோட கதையா? எழுத்துப் பிழைகளில் கவனம் தேவை ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா பிழையை குறிப்பிட்டமைக்கு நன்றி திருத்தி விட்டேன்.

      நீக்கு
  12. எல்லோரும் இப்படியே தப்பிச்சுட்டோம், மாட்டிக்கிட்டோம் என்று சொன்னால்,,,,,,,,,
    என்ன செய்வது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, பாரியைப்பற்றிய பதிவுக்கு அடிக்க வந்தீங்க.... சரினு இப்படி ஒரு பதிவு போட்டால் ? இதுவும் தவறா ? இந்தக்கேள்வியை கண்ணப்பனையோ, மாரியம்மாளையோ கேட்கனும் என்னைக் கேட்கப்படாது சொல்லிப்புட்டேன் ஆமா....

      நீக்கு

  13. நந்தவனத்து ஆண்டியின் தூக்கம்
    நந்தவனத்து ஆன்ரியின் சேலைத்தேடல்
    காலை 11 - இரவு 8 வரையா!
    நந்தவனத்து ஆண்டி சிக்கினாராம்
    நந்தவனத்து ஆண்டியின் மனைவி சொன்னாராம்
    நம்ம கில்லர்ஜி தப்பினாராம்!

    சிறந்த பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மையைத்தானே சொன்னேன்.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே.

    நல்ல நகைச் சுவை பதிவுதான். ரசித்து சிரித்துப் படித்தேன். ஒட்டுக் கேட்ட விஷயங்கள் பதிவானது சுவாரஸ்யம் !. கீழே விழாமல் சமாளித்து மேஜிக் செய்யும் மனிதரின் கானொளியும் நன்றாக இருந்தது. நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை நிறுத்த வழி கிடைக்கவில்லை ஆகவே கதவைச்சாத்தி ஒட்டுக்கேட்க முடியவில்லை என்று முடித்து விட்டேன்.

      நீக்கு
  15. வழக்கம் போல அசத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  16. அடிக்கடி பத்திரிக்கை ஜோக்குகளில் படித்த ஒரு விஷயத்தை சுவைபட எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே!

    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதைச்சொல்கிறீர்கள் ? நண்பரே நான் பிறருடையதை காப்பி அடித்ததில்லையே....

      நீக்கு
  17. நொந்தவனத்து ஆண்டி என்றே தலைப்பிட்டிருக்கலாம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா ஜி முதலில் அப்படித்தான் நினைத்தேன், பிறகு வருபவர்கள் நொந்து போகவேண்டாமே என்றுதான்....

      நீக்கு
  18. அன்புள்ள ஜி,

    நந்தவனத்தில் ஓர் Anti நம்ம ஆண்டிய இந்த வாங்கு வாங்கிடுச்சே...!எதுக்கும் ஒரு டவுசரும் பனியனும் போதுமுன்னு நெனக்கிறேன்...! யாரு போட்டா என்னா? போட்டு அழகு... பாக்க வேண்டியதுதானே...!

    நன்றி.
    த.ம.13.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் மணவையாரே இன்றைய விலைவாசிக்கு இனிமேல் இப்படித்தான் வாழனும் போல என்ன செய்வது ?

      நீக்கு
  19. வணக்கம் நண்பரே..!

    உங்களின் தனி முத்திரையோடு ஆன நகைச்சுவை........ அருமை!

    தொடருங்கள்.

    நன்றி

    பதிலளிநீக்கு
  20. வணக்கம்
    ஜி
    தாமதத்துக்கு மன்னித்து விடுங்கள் நேற்று அலுவலகத்தில் அதிகம் வேலை.. ஒன்று கூடல்கள் வந்ததால் மிகவும் கஸ்டமாக இருந்தது வலைப்பக்கம் வர...

    பதிவை கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு அசத்தி விட்டீர்கள் எங்கதான் பிடித்தீர்கள் இவர்களை... முகரி இருந்தால் தாருங்கள்...... ஆகா...ஆகா...ஜி.. த.ம 15
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரூபன் நான் கேள்வி கேட்கா விட்டாலும் கேட்க வச்சிடுறீங்களே......

      நீக்கு
  21. நல்ல நகைச்சுவை...சிரிப்பை என்னால் அடக்கமுடியவில்லை...நல்ல வேளை அவர்கள் சாப்பிட உள்ளே போனார்கள்...

    தொடர்ந்து அசத்துங்கள் சகோ....

    நீங்கள் தப்பி விட்டீர்கள்...ஹஹஹா....

    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா அவங்க உள்ளே போகலைனா.... நானும் அநங்க பின்னாடியே... போகவேண்டியது இருந்திருக்கும் நல்லவேளை அதிலிருந்தும் தப்பித்தேன்.

      நீக்கு
  22. சிரிப்பை நிறுத்த முடியல. நின்னதும் வந்து கம்மென்ட் போடறேன்

    பதிலளிநீக்கு
  23. ஆமா எங்க என் கருத்து தேடி தேடி பார்க்கிறேன் காணலையே. ம்..ம்..ம் நீ போட்டா தானே இருக்கும் என்ன இது கேள்வி. ஓ அப்ப நான் போடலையா. சரி சரி
    ஆமா இது என்ன ஒட்டு கேக்கிற பழக்கம் அதுவும் புருஷன் பெண்சாதிக்குள்ள நடக்கிற பேச்சு வார்த்தைகளை ம்..ம்..ம் too bad. இருந்தாலும் ரசித்தேன் இல்ல சூப்பரா இருக்கு ஜி ஆமா இப்படிப் பதிவுகள் போட்டா நல்லா வாங்கிக் கட்டப் போகிறீர்கள் ஜி கவனமா இருங்கள். மூக்கை தள்ளி வைத்திருந்தீர்களா இல்லையென்றால் கதவை சாத்த மூக்கல்லவா அடி பட்டிருக்குமே. ஹா ஹா ....
    எல்லாம் ஒரு அக்கறையில தான் சொல்கிறேன் நீங்க அடி வாங்கினா நமக்கும் கவலை தானே அதான் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஓட்டுப்போட்டு விட்டு மறுநாள் கருத்துரை போட வர்றது இதென்ன பழக்கம்.

      நீக்கு
  24. பந்திக்கு முந்தோனும் இல்லையேல் கஷ்டம். தகவலுக்கு நன்றி.தெரிந்திருக்காது.
    ரசித்தேன், சிரித்தேன்.காணொளி அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தெருக்குரலில் என்ன சொல்லி இருக்கிறேன் அதேதான் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  25. அது சரி நந்தவனமா நொந்தவனமா ஜி?! ஹஹஹ எங்க வீட்டுல எல்லாம் இந்தப் பிரச்சனையே இல்லப்பா...எல்லாரும் அவங்கவங்க தனித்தனியாதான் ட்ரெஸ் எல்லாம் வாங்கிக்குவோம்.....ஒருவருக்கொருவர் பிறரது நேரத்தை மிகவும் மதிப்போம். இது போன்று பல நகைச்சுவைக் கட்டுரைகள், நிகழ்வுகள் வாசிக்க நேர்ந்தாலும் இப்படியுமா இருக்கும் யதார்த்தத்தில்? மெய்யாலுமே என்று தோன்றும். இங்கு அந்தப் பழக்கம் இல்லை என்பதால்...ஆனால் நடக்கின்றது என்பதை என்னைச் சுற்றி நடந்த ஒரு சில நிகழ்வுகள் மெய்தான் என்றும் சொல்லியது.

    சரி எனிவே கில்லர்ஜி தப்பித்தார்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடையின் பெயர் ‘’நொந்தவனத்தார் சில்க்ஸ்’’ என்று வைத்தால் யாராவது போவார்களா ? ஆமா நல்லவேளை நான் தப்பித்தேன்.

      நீக்கு
  26. அந்த ரெண்டு பிலிப்பைனிங்கதான் போட்டோல இருக்காங்களா ஜீ...

    உரையாடல் இயல்பாய் இருந்தது.

    God Bless You

    பதிலளிநீக்கு