தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, செப்டம்பர் 13, 2015

அக்குள் 99


வணக்கம், ஐயா ஆரம்பிக்கலாமா ?
நல்லது, நானும் தயார்.

ஐயா உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சறுக்கல் ஏதாவது உண்டா ?
ஆம், ஒரு முறை சாலையில் நடந்து செல்லும்போது வாழைப்பழத்தோல் சறுக்கி விட்டது.

பெருக்கல் ஏதும் உண்டா ?
முதன் முதலில் அரபு நாட்டில் எனது வேலையே சாலையை பெருக்குவதுதானே...

கழித்தல் ஏதும்...
ஆமாம் விபரமறிந்த நாளிலிருந்து தினம் காலையில் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.

வாழ்க்கையில் சிக்கல் ஏதாவது...
ஆமாம், பலமுறை போயிருக்கிறேன் ஏர்வாடியை அடுத்து இருக்கிறது, சின்ன வயதில் செந்தில் முருகன் டாக்கீஸில் சம்பூர்ண ராமாயணம் திரைப்படம் கூட அங்குதான் பார்த்தேன்.

ஐயா அழித்தல் ஏதும் உண்டா ?
ஆமாம் வலைப்பதிவில் எழுதும்போது... தவறாக வந்து விட்டால் உடன் அழித்து விடுவேன்.

வாழ்க்கையில், குலுக்கல் அப்படி ஏதும்...
நிறைய தடவை இதில் கலந்து கொண்டுள்ளேன் ஆனால் பரிசு இதுவரையில் விழுந்ததில்லை.

வாழ்வில் இளித்தல் அப்படி...
பல தடவை இளம் பெண்களை பார்த்து பல் இளித்து இருக்கிறேன்.

நக்கல் ஏதும்...
பலமுறை கொம்புத்தேனை நக்கி இருக்கிறேன்.

தாங்கள் வாழ்வில் கிறுக்கல், ஏதாவது...
அதைத்தானே வலைப்பதிவில் செய்து கொண்டு இருக்கிறேன்.

நல்லது ஐயா தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி, எங்களது நிறுவனத்தின் சார்பாக கேட்கப்பட்ட 9 கேள்விகளுக்கும் நவரத்தினமாய் பதில் அளித்த தங்களுக்கு எங்கள் அக்குள் 99 கம்பெனி வழங்கும் ஃபாடி ஸ்பிரே டப்பாக்கள் வழங்கப்படுகிறது. 
நன்றி, இதனைப்போல பல கேள்விகளுக்கும் பதிலளிக்க நான் காத்திருக்கிறேன், கடமைப் பட்டிருக்கிறேன் வணக்கம்.

56 கருத்துகள்:

  1. வணக்கம் ஜி!! ஒரே ஒரு கேள்வி உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி தோனுது?? காத்தல் விட்டுடிங்க!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா சும்மா இருக்கும் பொழுது சும்மாக் காச்சுக்கும் யோசிக்கிறது.
      தாங்கள் எனது நகைச்சுவைப் பதிவுக்கு முதல் முறையக வந்து இருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன் நேரமிருப்பின் மேலே நகைச்சுவை லேபிளைச் சொடுக்கிப் பாருங்கள்.

      நீக்கு
  2. கேள்வி-பதில் பதிவாயினும்
    சுவை மிகுந்த படைப்பு!
    இனித் தங்கள் பாணியை
    நானும் படியெடுத்து
    என் வலைப்பூவிலும்
    விரைவில் தருவேன்!

    நண்பா!
    எமது எழுத்தைப் படித்து
    மகிழ்வடையும் ஆள்கள்
    அதிகரித்தால் - அதுவே
    நமது வெற்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடருங்கள் நண்பரே உண்மையே நமது எழுத்தையும் 4 பேர் ரசித்து படித்து கருத்துரை எழுதும் பொழுது அது வெற்றிதானே...

      நீக்கு
  3. கணக்கு சரியாதான் இருக்கு

    பதிலளிநீக்கு
  4. கேள்விக்கான பதில்கள் சிரிப்பு....ச்சே... சிறப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறப்பாக கருத்துரை தந்தமைக்கு நன்றி

      நீக்கு
  5. அருமை நண்பரே
    ரசித்தேன்
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  6. இப்படியெல்லாம் யோசித்து எழுத எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்கிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுக்குத்தான் அவர் ஆபீஸ் போகிறார்.

      --
      Jayakumar

      நீக்கு
    2. நண்பர் திரு. வே.நடனசபாபதி அவர்களுக்கு...
      எல்லா மனிதர்களுக்குமே என்ஜாய்மெண்ட் என்று சொல்வார்களே அது கண்டிப்பாக இருக்கும் எனது நண்பரொருவர் தினமும் ‘’தண்ணி’’ அடிப்பதற்க்கு மட்டும் 4 மணிநேரம் செலவு செய்வார் வீட்டில் மனைவியிடமிருந்து ஏன் ? போண் வரவில்லை என்று கேட்கும் பொழுது நேமில்லைடி என்பார்.
      பக்கத்தில் ஒரு நண்பர் சுமார் 5 மணிநேரம் மனைவியுடன் ஸ்கைப்பில் பேசிக்கொண்டு இருப்பார்.
      இன்னொரு நண்பர் யாரையுமே கிச்சனுக்குள் விடாமல் அவரே எல்லோருக்கும் சமைத்து சாப்பிட வைத்து அதில் பாராட்டுப் பெறுவதே தனது கொள்கை என்று வாழ்கிறார் (செலவு மட்டும் எல்லோரும் ஷேரிங்)
      வேலை நேரம் போக மீதி நேரத்தை பலரும் பலவிதமாக செலவு செய்கின்றார்கள் இதில் என்வழி இவ்வழி.
      நிகழ்வுகள், கவலைகள், நகைச்சுவைகள் 80 நமது அன்றாட வாழ்வில் நம்மைச்சுற்றி ந(க)டந்து கொண்டே இருக்கிறது அதை கொஞ்சம் கற்பனையுடன் கோர்த்து எழுதத்தெரிந்தவன் எழுத்தாளன் ஆகிறான் இதுதான் அடிப்படை உண்மை என்று எனது சிற்றறிவுக்கு 8கிறது.
      கேள்வி கேட்டு எனது சிந்தனையை ரணகளப்படுத்தி விட்டீர்கள் இனி தங்களுக்காகவே ஒரு பதிவு இடவேண்டும்.

      நீக்கு
    3. வாங்க நண்பர் ஜெயக்குமார் அவர்களே... கேமராவின் இணைப்பு உங்களுக்கும் கொடுத்துட்டாங்களா ? அரபிக்காரங்கள்ட்ட பணம் இருக்கு இந்தியா மட்டுமல்ல, இங்கிலாந்திலும் வைப்பாங்கே...

      நீக்கு
  7. வாழ்வின் கிறுக்கல் - வலைப்பதிவு!..

    உண்மை!.. உண்மை!..

    அப்படியிருக்க - உங்களுக்கு எதற்கு டைகர் பாம்.. கோடாலி தைலம்!?..

    உடனடியாக - அந்த மன்னார் & கம்பெனியின் அயிட்டங்களை - ஏனைய சபையோர்களுக்கு பார்சல் செய்து விடவும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக சொன்னீர்கள்,,

      நீக்கு
    2. வாங்க ஜி நமது மறைவுக்குப் பிறகும் நிற்பது நமது இவ்வகை சிந்தனைகள் மட்டுமே ஆகவே நானும் கிறுக்கி கொன்று இருக்கிறேன்.
      சிந்தனை ரணகளப்படும் பொழுது வேதனையைப் போக்கிட நான் உபயோகிப்பது கோடரித் தைலமே...
      மேலும் அன்புடன் கொடுத்த பரிசுகளை திருப்பிக் கொடுப்பது தமிழர் பண்பாடு இல்லையே.. ஜி

      நீக்கு
  8. அன்புள்ள ஜி,

    ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல...’ கழித்தல் - பெருக்கல்... நக்கல்... இந்த நக்கல்தானே வேணாங்கிறது...!
    இரசித்தோம்.

    த.ம.4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணவையாரின் கருத்துரைக்கும், ரசிப்பிற்க்கு நன்றி.

      நீக்கு
  9. சகோ எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிப்பிங்களோ?
    கிறுக்கல் சூப்பர்.ஹஹ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணு வச்சிடாதீங்க அப்புறம் மூளை மந்தமாகிடும்

      நீக்கு
  10. நானும் அதைதத்தான் நண்பரே..வலைப்பதிலில் கிறுக்கிக் கொண்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோ, பதுக்கல்?????,,
    எல்லா கல்லும் நல்லா தான் இருக்கு,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதுக்கல் இல்லாததால்தான் ஓட்டுப் போடாமல் பதுக்கிட்டீங்களோ..

      நீக்கு
    2. அய்யோ அப்பப்ப மறந்துபோறேன் சகோ, சரி அடுத்த முறை இரண்டு இல்ல மூன்று,,,,,,,,,, சரி ஒன்னு தானே போடுகிறேன் ,,,,,,,,,,,,, ஓட்டு தான் சகோ,

      நீக்கு
  12. கேள்வியும் பதிலும் அருமையாகவும், நகைச்சுவையாகவும் இருக்கு சகோ.

    பதிலளிநீக்கு
  13. ஹீக்...ஹ்ஹீக்....ஹ்ஹீ...க் ஹீக்...ஹ்ஹீக்....ஹ்ஹீ...க்

    வேரொன்னுமில்ல ஜீ

    படிச்சு முடிச்சதும்
    முதலில்
    பேச்சடைச்சது

    அப்புறம்
    நாக்கடைச்சது
    கடைசியா....

    மூச்சடைச்சது
    அவ்வளவுதான்...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்து நண்பா பிறகு என்னை பழி சுமத்திடாமல்....

      நீக்கு
    2. விக்கல் வந்ததுன்னு சொல்றேன்
      கேட்டுட்டு குடிக்க தண்ணி தராம வேற எதையோ சொல்றீங்களே இது நியாயமா?
      உங்க ஊரு கர்நாடகாலையா இருக்கு?

      நீக்கு
    3. தண்ணீர் கொடுத்தால் பாலைவனத்து உப்புத்தண்ணீரா ?அப்படினு கேட்பீங்களோனு நினைச்சேன் நண்பரே....

      நீக்கு
  14. பதில்கள் புல்லரிக்க வைத்தன,இந்த அரிப்புக்கு அக்குள் 99யை பயன்படுத்தலாமா :)

    பதிலளிநீக்கு
  15. அருமையான கிறுக்கல்கள்.நன்றி.

    பதிலளிநீக்கு
  16. ஹஹஹஹஹ் கேள்விகளும் பதில்களும் செம!!!!!

    வாழ்வில் காத்தல் உண்டா?
    டேய் கேனத் தலையா கேள்விய ஒழுங்கா கேளு...காத்தல் நா நான் காத்துக் கிடந்ததைக் கேக்குறியா இல்ல நான் காப்பதைக் கேக்குறீயா? தெளிவு ம்ம்ம்ம்ம்

    சரி இருந்தாலும் சொல்லுறேன்.....டெய்லி அதத்தான் செஞ்சுகிட்டிருக்கேன்...பதிவு போட்டுட்டு நண்பர்களின் பதிலுக்குக் காத்திருக்கேன்...

    சுற்றல்?

    அதுவும் தினம் சுற்றிக்க்கிட்டுதான் இருக்கேன்....வலைல, எங்க ஊர்ல, என் தளத்துலயும்...நல்லா ரீல் சுற்றுறேன்ல (கற்பனைப் படைப்புகளாத்தான் சொல்லுறோம்...தப்பா எடுத்துக்காதீங்க..)

    நீங்க ஆடல் செய்ததுண்டா...

    கண்ணில் நீர்....

    என்ன சார் தப்பா கேட்டுட்டமோ...

    அதுக்குக் கொடுப்பினை இல்லாமப் போச்சு பல வருஷமா...

    ஓ! மன்னிச்சுக்கங்க சார்..ஸாரி சார்...அத அழித்தல்ல போட்டுருங்க சார்

    ஓடல்?

    இதுவும் தெளிவான கேள்வி இல்லை. வாழ்க்கையை அஞ்சி ஓடலா? இல்லை தப்பித்து ஒடலா......ம்ம்ம்ம் நான் இப்பவும் ஓடிக்கிட்டுத்தான் இருக்கேன்...வாழ்க்கையை ஜெயிக்க...

    வாசித்தல்....?
    ஜி நாங்க வாசித்தல் செய்யணும்லா அதான் லேட்டாகுது....

    ஓ கேள்விகள் 9 தானா சரி சரி நாங்க 99 னு நினைச்சுட்டோம்...அதான் ஹிஹிஹி...

    அது சரி சிக்கல் தான் கொஞ்சம் சிக்கலா இருக்கோ..ஜி?!!!! ஊரைத்தான் சொன்னோம்...ஹஹ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா இதுவே ஒரு குட்டிப் பதிவாகிப்போச்சே ஸூப்பர்

      நீக்கு
  17. சிந்தனைகள் வேறு விதம் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. ஒரே ஒரு டவுட்டு...,

    இந்த நாத்த மருந்த புஸ்ஸ் புஸ்ஸ் ன்னு அடிச்சுக்கிட்டு வெளிய போனா, டிவில காட்டுற மாதிரி பொம்பள புள்ளைங்க எல்லாம் போட்டது போட்டபடி விட்டுட்டு நம்ம பின்னாலேயே ஓடியாருவாங்களா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலரின் நினைவுகளின் முதல் வருகைக்கு பூக்கள் விரிப்பூ
      சரியா சொல்லிப்புடீங்களே...

      நீக்கு
  19. பரிசு கொடுக்க வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
  20. உங்களால் மட்டுமே இப்படியெல்லாம் எழுதிட முடிகிறது!

    நகைச்சுவை + பொருட்சுவை = அசத்தல்!

    வாழ்த்துக்கள்!

    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கவிஞரே பதிவுகளில் இடைவெளி விடுதல் தெய்வகுற்றமாகி விடும் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  21. அருமை நண்பரே.... உங்கள் மூளையோ மூளை தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா மனிதன் இதுவரை 10 % மூளையை மட்டுமே உபயோகப்படுத்தி இருக்கின்றான் நான் சொல்வது திரு. அப்துல் கலாம் போன்றவர்கள் அப்படியென்றால் நாமெல்லாம் ¼ % மே.... அதிகமே...

      நீக்கு
  22. சிரிக்காமல், அதே நேரம் எப்படி எல்லாம் நீங்க எழுதுறீங்க என சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. கலக்கல்.!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ சிந்தனையைக் குறித்து மேலே நண்பர் செந்தில்குமார் அவர்களுக்கு கொடுத்துள்ளேன் பார்க்கவும்.

      நீக்கு
  23. பதிவுகளில் இடைவெளி விடுதல் தெய்வக் குற்றமாகிவிடும்....ஆமாம் பதிவுலக பிரம்மாக்கள் மறந்துவிடுவார்கள்....ஞாபகம் செய்வதற்குள் போதும் போதுமென்றாகிவிடும்....
    நிற்க...
    எமக்காகவே எழுதப்பட்ட பதிவு!....
    ஹா...ஹா... நிறையவே யோசிக்கின்றீர்கள்!
    அமேசான் தைலம் வாங்கி கைவசம் வைத்துக்கொள்ளுங்கள்!
    தலைக்குத் தான் சொன்னேன்...
    சீரியசாகிவிடாதீர்கள்...
    நகைச்சுவையுடன் தொடருங்கள்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கருத்துரைகள் இப்படித்தான் ஜாலியாக இருக்க வேண்டும் இதற்காக நான் கோவித்தால் அப்புறம் எதற்காக இப்படியெல்லாம் எழுதவேண்டும் க்ரைம் எழுதிக்கொண்டு போய் விடுவேனே... நன்றி நண்பரே...

      நீக்கு
  24. கேள்விகளும் பதில்களும் கலக்கல்........ தொடரட்டும் நகைச்சுவை!

    பதிலளிநீக்கு