திங்கள், ஜூன் 05, 2017

பாடகன்


கானா பாட்டு பாடுனவன் காணாம போயிட்டான்...
தானா பாட்டு பாடுனவன் தன்னால போயிட்டான்...
வீணா பாட்டு பாடுனவன் வீணாப்போயிட்டான்...

அந்தப்பாட்டு பாடுனவன் அம்போனு போயிட்டான்...
எப்படியோ பாடுனவன் எங்கிட்டோ போயிட்டான்...
பணத்துக்கு பாடுனவன் பார்க்குள்ளே போயிட்டான்...

பதநிச பாடுறவன் பாருக்குள்ளே நிற்பான்.
தாலாட்டா பாடுறவன் தரணியில நிற்பான்.
நெகிழ்வா பாடுறவன் நெஞ்சுக்குள்ளே நிற்பான்.

இதமா பாடுறவன் இதயத்திலே நிற்பான்.
மனமா பாடுறவன் மனசுக்குள்ளே நிற்பான்.
உணர்வா பாடுறவன் உயிருக்குள்ளே நிற்பான்.

இது நானா... எழுதலே... தானா... வருது...
இப்படிக்கு
சூனாபாணா.
(Subbiramani)

52 கருத்துகள்:

 1. என்ன இது!..
  நடுராத்திரியில?..

  சாமக் கோடாங்கி மாதிரி!..

  சூனாபானா..வுக்கு தூக்கம் வரல்லையா!..

  பதிலளிநீக்கு
 2. ஆனா ஆஷா போஸ்லே பாட்டுப் பாடும் அதிரா மட்டும் இங்கின இருக்கிறா:).

  பதிலளிநீக்கு
 3. இளையராஜாவுக்கு சற்றே தாமதமான பிறந்தநாள் வாழ்த்தோ? அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் ஜி உண்மையிலேயே இளையராஜாவுக்காகவே எழுதினேன் மறதியாக பிறந்தநாள் தேதி கடந்து விட்டது ஆகவே அவரது புகைப்படத்தை வெளியிடாமல் பதிவை கடைசி வரிகளில் மாற்றி விட்டேன்.

   நீக்கு
 4. ஆகா, சூணாபாணா நெஞ்சுக்குள் இறங்கிவிட்டார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல இசையை கொடுத்தவரை ரசனை உள்ளவர் மறக்க இயலாது நண்பரே

   நீக்கு
 5. தானா வரும்போதே இப்படி இருந்தா, சிந்திச்சா...எப்படி இருக்கும்..நினைச்சுப் பாக்க முடியலே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே அடுத்து சிந்தித்து அடுத்த பதிவை ஆழமாய் தருவேன்

   நீக்கு
 6. கலந்துகட்டிப் பாடுறவன் கில்லர்ஜியாய் ஜொலிப்பான்!

  பதிலளிநீக்கு
 7. நெகிழவாய் பாடுறவன் நெஞ்சுக்குள் நிற்பான்//

  உண்மைதான்.

  நல்ல பாட்டுக்கள் காலத்தால் அழியாமல் இருக்கிறது, அதை இசை அமைத்தவரும்
  நெஞ்சில், நினைவில் நிலைத்து நிற்பார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ சிலர் நம் மனதில் வாழ்கின்றனரே.

   நீக்கு
 8. தானா வர பாட்டே இப்படி இருக்கு என்றால் சூனாபாணாவே எழுதியிருந்தால் எப்படி இருக்குமோ? இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே யாரு.... கண்டா... நல்லாத்தான் இருக்கும் போலயே...

   நீக்கு
 9. பாட்டு தமாசு தான் சகோதரா....
  தமிழ் மணம் - 10
  எனது புது இணையம்...
  https://kovaikkothai.wordpress.com/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நன்றி
   கணினி பிரச்சனை தீர்ந்து விட்டது இனி தொடர்வேன் அனைவருக்கும் தமிழ் மணம் பதிப்பேன்.

   நீக்கு
 10. நீங்கள் எந்த வகை சாமக் கோழிபோல் கூவுகிறீர்களா மேலெ கண்ட பின்னூட்டங்கள் இப்படி எழுத வைத்தது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உறக்கம் களைந்து ஆண்டுகள் பல கடந்து விட்டது ஐயா அதைத்தான் சாமக்கோழி என்றேன்.

   நீக்கு
 11. கானா பாட்ட்டு மாதிரி இருக்குண்ணே

  பதிலளிநீக்கு
 12. அம்பேரிக்காவில் இருந்தவரைக்கும் நீங்க எழுதின பதிவை உடனே பார்க்க முடிஞ்சது! இப்போ எனக்கு அப்டேட் ஆகவே நேரம் ஆகுது! :) பாட்டு நல்லாவே இருக்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா அப்படீனாக்கா மறுபடியும் அமெரிக்கா போய் பேரன்-பேத்திகளோடு ஆறுமாதம் இருந்திட்டு வாங்கோ...

   நீக்கு
 13. சுனாபாணா சினிமாவுக்கு எழுதலாமே!!! முயற்சி செய்கிறாரா?!!! நல்லாருந்துச்சுனு சுனாபாணாகிட்ட சொல்லிடுங்க ஜி!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லது சொல்லிடுறேன் சினிமாக்காரங்கே நம்மளை நம்பமாட்றானே...

   நீக்கு
 14. பாடகன் பற்றி பாடிய பாடகனும் நெஞ்சுக்குள்ளே நிற்பான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் முதல் வருகையை அன்புடன் வரவேற்கிறேன்.

   நீக்கு
 15. உள்ளத்தைத் தொட்ட பாடலை பாடினால்
  உயிருள்ள வரை நினைப்போமல்ல...

  பதிலளிநீக்கு
 16. எனக்கொரு டவுட்டு ,எந்த பாட்டு பாடினவன் அம்போன்னு போனான் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழுதினால் "பீப்" "பீப்" போடவேண்டியது வரும் ஜி

   நீக்கு
 17. முதல்ல அந்த சூனா பானாவுக்கு ஒரு ஹாய் சொல்லிவிடுங்க ஜீ :)

  அவரோட பாட்டு மனசுல பதிஞ்சிடுச்சு.

  பதிலளிநீக்கு
 18. தானா வந்ததா
  அப்ப ஆசு கவிதான்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 19. அப்படியே மெட்டு போட்டு பாடிருங்க ஜீ
  அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் பாடினால் பதிவர்களின் வருகை குறைந்து விடும் கவிஞரே

   நீக்கு
 20. ஆஹா ! சூப்பர் வரிகள் .

  //இதமா பாடறவன் இதயத்தில் ,உணர்வா பாடறவன் உயிருக்குள்ள //

  அதனால்தானே என்றும் இன்னும் எவ்ளோ பிரச்சினை வந்தாலும் இளையராஜா அந்த குரலாலும் இசையாலும் நம் மனதில் அகலாது இருக்கார் ..
  இதைப்போல இன்னும் நிறைய பாட்டுக்கள் தானா வரட்டும் சுப்பிரமணிய வாழ்த்துகிறேன் .வாழ்த்துக்களை சேர்த்துடுங்க அவர்கிட்ட ..  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை இளையராஜாவின் பாடல் தமிழ் இனம் வாழும்வரை வாழும்.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...