தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜூன் 07, 2017

அங்கீகாரம்

वनदे मातरम्

இந்த தமிழன் இந்தியாவை விட்டுப் போனதற்கு காரணம் யார் ? திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காததனால்தானே ! அமெரிக்க விண்வெளி ஓடத்தில் உயிரைத் துறந்தாரே நம் இந்தியப் பெண்மணி கல்பனா ஜாவ்லா அவரது மரணத்திற்கு நாமும் ஒரு காரணம் தானே ! இவர்களை எல்லாம் மக்களுக்கு அறிமுகமானதால் உலகிற்கு தெரிகிறது வெளியே தெரியாமல் திரையின் மறைவில் இருட்டுக்குள் வாழ்பவர்கள் எத்தனைபேர் எல்லாமே அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டு இதன் நஷ்டம் யாருக்கு ? நம் இந்தியாவுக்குத்தானே ! நாட்டுப்பற்று இல்லாதவர்களிடம் நாட்டையாளும் அதிகாரத்தை கொடுத்தது யார் ? கல்பனாவை இந்தியாவுக்கு உழைக்காமல் போனதற்கு குற்றம் சொல்பவர்களே... பின்னணி என்ன ?

01. பார்த்தீரா.... இராஜபாளையத் தமிழன் வி. ஏ. சிவா அய்யாத்துரையை இப்படித்தான் மறைக்கப்பட்டிருக்கிறது வரலாறு.

02. இலங்கை கடலை நீந்திக் கடந்து சாதனை புரிந்து இங்கிலீஷ் கால்வாயை நீந்திக் கடப்பேன் என சூளுரைத்தானே 11 வயதுச் சிறுவன் குற்றாலீஸ்வரன் அவன் எங்கே ? அவனுக்கு அங்கீகாரம் கிடைத்ததா ? இப்படித்தான் மறைக்கப்படுகிறது வரலாறு.

03. மூலிகை மூலம் பெட்ரோல் உண்டாக்கியதை அமெரிக்கா உள்பட உலகில் நான்கு நாடுகள் ஏற்று சான்றிதழ் கொடுத்தும் இந்தியாவில் மட்டும் ஓரங்கட்டப்பட்டாரே... ராமர் பிள்ளை இப்படித்தான் மறைக்கப்படுகிறது வரலாறு.

04. 1964 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவின் மரணச்சடங்கில் கலந்துகொள்ள வந்தாரே... நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அதற்கு முன்பே 1945 ஆம் ஆண்டு விமான விபத்தில் இறந்து விட்டதாக சொல்லப்பட்டதே... இப்படித்தான் மறைக்கப்பட்டிருக்கிறது வரலாறு.

05. தங்களது தொழிலுக்கு சம்பந்தமில்லாத திரைப்பட நடிகர்கள் இருவர் கோடிக்கணக்காண ரூபாய் மதிப்புள்ள யானையின் தந்தங்களை மறைத்து வைத்ததை ராணுவ கௌரவ பதவியின் அதிகாரத்தால் தகர்த்தெறிந்தார்களே... இப்படித்தான் மறைக்கப்படுகிறது வரலாறு.


மறைக்கப்பட்டவை மறைந்தவையாகவே இருக்கட்டும் இனியெனினும் ''விழிதெழு தமிழா'' ஏனெனில் தியாகிகள் நம்மிலும் உண்டு, தியாக உணர்வுகள் சிதறப்படுவது மறைக்கப்படுவதின் ஏக்கப் பெருமூச்சே இன்றாவது குரல் கொடு சிந்தித்து செயல்படு நாளை சிறகடித்து சிலிர்த்து உயரும் சிறந்த இந்தியா.

காணொளி

55 கருத்துகள்:

  1. மீதான்ன்ன் இங்கே 1ஸ்ட்டூஊஊஊஊ:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதான் பதிவைப் படிச்சேன்.. உண்மைதான் சொல்லியிருக்கிறீங்க.

      நீக்கு
    2. மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. இராமர் பிள்ளை பெட்ரோல் உண்மையில்லை என்றே நினைக்கிறேன் ,அது சாத்தியம் என்றால் நடைமுறைக்கு வந்திருக்கும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி நான்கு நாடுகள்பபரிசோதித்து ஏற்றுக்கொண்டது.

      திரு.மு.கருணாநிதி அவர்களின் முன்னிலையில் தயாரித்து TVS-50 ஓட்டிக் காண்பித்ததை டி.வியில் நானும் கண்டேன்.

      நீக்கு
  3. ஆதங்கத்தைப் பதிவு விதம் அருமை
    ஆம் இனியேனும் விழித்திருப்போம்
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  4. விழித்தெழு தமிழா..

    தமிழன் உறங்கிக் கொண்டா இருக்கின்றான்!..

    உறங்குவதைப் போல நடித்துக் கொண்டிருக்கின்றான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஆம் உறங்குவதுபோல் நடிக்கின்றான்.

      நீக்கு
  5. ராமர் பிள்ளை பற்றிய தகவல்கள் உண்மையில்லை ......

    பதிலளிநீக்கு
  6. தமிழன் மட்டும் விழித்து எழுந்தால் மட்டும் போதாது இந்தியாவே ஒன்று சேர்ந்து எழ வேண்டும் ஆனால் அதற்கு இப்போது வாய்ப்பே இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே மிகச்சரியாக சொன்னீர்கள்,
      ராமர் பிள்ளையைப்பற்றி நானும் டி,வி.யில் கண்டேனே...

      நீக்கு
  7. வணக்கம்
    ஜி
    தாங்கள் கேட்கும் ஒவ்வொரு வினாவிலும் நியாயம் உள்ளது.. சிந்திக்கவைக்கும் வரிகள் த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. இந்தியாவில் மட்டுமல்ல
    இலங்கையிலும் தான்
    தமிழர் அடையாளங்கள்
    தமிழராலே மறைக்கப்படுகிறது...

    பதிலளிநீக்கு
  9. ராமர் பிள்ளை பெட்ரோல் உண்மையில்லை. நேரு மரண நிகழ்ச்சியில் சுபாஷ் பொஸ் கலந்து கொண்டதாகச் சொல்வதும் யூகமே. சுபாஷ் பொஸ் விஷயத்தில் இன்னொரு பெரிய யூகம் இருக்கிறதே, அதை மறந்து விட்டீர்களே.... கும்நாமி பாபா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கும்நாமி பாபாதான் நேரு மரணமடைந்தபோது கலந்துகொண்டவர். வெளிப்படையாகச் சொன்னால் பல நாட்டுக்குப் பிரச்சனை, இந்தியதேசத்துக்கு நல்லதல்ல என்பதால் உண்மை வெளியே வரவில்லை என்று படித்தேன். எந்த புதிய கண்டுபிடிப்பும் அமெரிக்கரால் இல்லையென்றால் அது வெளிப்பட இயலாது.

      நீக்கு
    2. திரு. ஸ்ரீராம் ஜி, மற்றும் நண்பர் நெல்லைத்தமிழரின் அறியாத விடயம் அறிய வைத்தமைக்கு நன்றி

      நீக்கு
  10. தமிழன் விழித்துஎழுவது கடினமே நண்பரே
    தம+1

    பதிலளிநீக்கு
  11. மறைக்கப்பட்ட வரலாறுகள் வெளிப்பட்டன உங்கள் பதிவில் தம+

    பதிலளிநீக்கு
  12. மறக்கக் கூடாதவைகளை மறக்கவே கூடாது...

    பதிலளிநீக்கு
  13. தமிழ் நண்டு கதை தெரியும்ல்லண்ணே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தெரியும் இதுதான் முன்னேற்றத்தின் முட்டுக்கட்டை. வருகைக்கு நன்றி

      நீக்கு
  14. மறைக்கப்பட்டதாக கூறும் செய்திகள் பெரும்பாலானவை எல்லாம் யூகத்தின் அடிப்படையே என்று தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவின் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

      நீக்கு
  15. தமிழன் விழித்தெழ மாட்டான் என்பதோடு விழித்திருக்கிற நம்போன்றவர்களையும் தூங்கச் செய்துவிடுவான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மறுக்க முடியாத உண்மையை சொன்னீர்கள்

      நீக்கு
  16. ஆதங்கங்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  17. உறைக்கும் உண்மைகளை எழுதி இருக்கீங்க ஜீ. இந்த நிலை மாற வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை பதிந்தமைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  18. ஜீ,

    என்னை நண்பரே என்று அழைப்பதில் ஒரு அந்நியம் தெரியுது :) :)

    நாமதான் பிரெண்ட்ஸ் ஆச்சே..! 'றஜீவன்' என்றே அழைக்கலாமே? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் எப்படி அந்நியம் ஆகும் ?
      தங்களின் விருப்பப்படியே... இனி மீள் வருகைக்கு நன்றி றஜீவன்.

      நீக்கு
  19. ராமர் பிள்ளை பெட்ரோல் சரியான கண்டுபிடிப்பாக இருந்திருந்தால் கொஞ்சமேனும் கசிந்து அதன் மணம் பரவியிருக்கும். அமுக்கப்பட்டாலும் நாற்றம் வெளியில் வராமல் போகாதே...

    நேருவின் இறுதிச் சடங்கில் சுபாஷ் சந்திரபோஸ் கலந்து கொண்டதாகச் சொல்லப்படுவதும் ஒரு ஊகம் தானே அல்லாமல் உறுதியல்ல. கப்தான் பாபா/கும்நாமிபாபா வை போஸ் என்று நினைத்து வதந்தீ பரப்பியதால் நிலவிய செய்தி. அது போஸ் அல்ல.

    ப்ரெய்ன் ட்ரெய்ன் என்று இங்கு சொல்லப்படுவதுதான் கல்பனா சவ்லா மற்றும் இன்னபிற பலர் ஏன் 8 வருடங்களுக்கு முன்பு கெமிஸ்ற்றியில் நோபல் பரிசு வாங்கிய சிதம்பரத்தைச் சேர்ந்த தற்போது லண்டனில் வாழ்ந்துவரும் திரு ராமகிருஷ்ணன் அவர்கள் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். இங்கு இருந்திருந்தால் தன்னால் இதைச் சாதித்து இருக்க முடியுமா என்று...

    காரணம் நமது கல்வி முறை. ஆராய்ச்சிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியும், அதற்கான சூழ்நிலையும் மிக மிக மோசமான நிலைமையில் தள்ளப்பட்டதால் வரும் விளைவுகள். இங்கு சினிமா துறைக்கும், விளையாட்டு குறிப்பாக கிரிக்கெட்டிற்குக் கொடுக்கப்படும் ஆதரவு விஞ்ஞான வளர்ச்சி, நல்ல இலக்கிய வளர்ச்சி, ஆராய்ச்சிகளுக்குக் கொடுக்கப்படாததன் காரணமே. இதற்கு அரசோ அரசியல் வாதிகள் மட்டும் காரணமல்ல. மக்களும் காரணம். விழிப்புணர்வு, கல்வி அறிவு இல்லாமையும் ஒரு காரணம் எனலாம். எத்தனை வீடுகளில் குழந்தைகளை ஆராய்ச்சி செய்வதற்கு ஊக்குவிக்கிறார்கள்? பணம் போனால் போகிறது என்று மேற்படிப்பு படிக்க வைக்கிறார்கள்? எல்லாருமே உடனடி வருமானத்தைத் தேடித்தானே ஓடுகிறார்கள்? பிள்ளைகளும் அப்படித்தானே வளர்க்கபப்டுகிறார்கள். குற்றாலீஸ்வரன் விஷயத்தில் நம் அரசுதான் காரணம் நிச்சயமாக. கிரிக்கெட்டைத் தவிர வேறு எதுவும் அவர்களுக்குப் பிரதானம் இல்லை. இதனைப் பற்றிப் பேச வேண்டுமென்றால் நிறைய பேசலாம் ஜி. பதிவாகிவிடும்...மட்டுமல்ல சில கருத்துகளை வெளிப்படையாகச் சொன்னால் விவாதமாகிவிடும் என்பதால் தவிர்க்கிறோம்

    நல்ல கேள்விகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
    2. பொதுவுடமை காதலன் அசுரனை நண்பர் கில்லர்ஜி சந்தித்து பேசியிருப்பார். அப்படி பேசியதினால் ஏற்பட்ட தாக்கமே இந்த பதிவு என்று நம்புகிறேன்.

      நீக்கு
    3. நண்பர் வேகநரியின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  20. நாட்டு பற்று இல்லாதவர்களிடம் நாட்டை கொடுத்துவர்களுக்கும் நாட்டுப் பற்று இல்லை நண்பரே............

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச்சரியான வார்த்தை நண்பரே வருகைக்கு நன்றி

      நீக்கு
  21. இன்றைய சூழ்நிலையில் நம் நாட்டில் அரசியல்வாதிகளைத் தவிர அறிவியல் அறிஞர்கள் வளர வாய்ப்பில்லை. எனவே நாம் வெறுமனே அங்கலாய்த்துக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.
    காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே அறிஞர்கள் வளர்வது படிக்காத அரசியல்வாதிகளின் கையில் சிக்கி விட்டதே என்ன செய்வது ?

      நீக்கு
  22. குற்றாலீஸ்வரன் பிரபலமாகாமல் போனதுக்கு அரசியல் தான் காரணமா? :( என்னவோ போங்க! நம் நாடு எப்போத் தான் மாறுமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக அரசு இப்படிப்போன்றோரை ஊக்குவித்து பயன்படுத்தவில்லை என்று சொல்கிறேன்.

      நீக்கு