தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜூன் 16, 2017

இசைக்கடவுள்


அபுதாபியிலிருக்கும் பொழுது ஒருமுறை DUBAI SCHOOL ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு போயிருந்தேன் பொதுவாகவே எனக்கு எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள், இசைக் கலைஞர்களிடம் ஒருவித ஈர்ப்புணர்வு உண்டு, காரணம் சராசரி மனிதர்களைவிட அவர்களிடம் ஒரு கூடுதலான விசயத்தை இறைவன் அவர்களுக்கு அளித்துள்ளார் என்பது எனது கருத்து அந்த STADIUM மில் சுமார் 2000 பேர் அமர்ந்திருப்பார்கள், அந்தப் பாடகர் மேடைக்கு வரும்போது சாதாரண பாடகி ஒருவர் இப்படிச் சொன்னார்,

//இசைக்கடவுள் மேடைக்கு வருகிறார் அவருக்கு நாம் அனைவரும் எழுந்து நின்று மரியாதை கொடுத்து வரவேற்போம்.//

என்று உடனே அமர்ந்திருந்த அனைவருமே எழுந்து பலத்த கை தட்டலுடன் கரகோஷமாய் வரவேற்றார்கள் இதில் ஒரேயொரு ஜீவராசி மட்டும் எழவில்லை காரணம் கோபம் கோபத்திற்கு முக்கிய காரணம் சிறிய பாடகர்கள் காலைத்தொட்டு வணங்க வரும்பொழுது சோபாவில் அமர்ந்திருந்தபடி ஷூக்காலை தூக்கி கொடுத்ததை திரையில் கண்டதால் ஜீவராசியின்  ரத்தம் கொதித்தது தமிழனுக்கு இது தேவையா... ? ஆனால் அந்த ஜீவராசி சிறிய அளவில் கை மட்டும் தட்டியது பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் அந்த ஜீவராசியிடம் கேட்டார்.

நீ ஏன் எந்திரிக்கவில்லை ?
நான் ஏன் எந்திரிக்கவேண்டும் ?

எவ்வளவு பெரிய பாடகர் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டாமா ?
ஐயா உங்க வயசு என்ன... நீங்க போயி எந்திரிச்சு மரியாதை கொடுத்தது என்னைப் பொருத்தவரை தவறு.

அது எப்படி தவறாகும் ? இவரு எவ்வளவு பெரிய திறமைசாலி எவ்வளவு பாட்டு பாடியிருக்கார் அந்த திறமைக்கு மரியாதை கொடுத்துதான் ஆகணும்.
அவரு என்ன சும்மா பாடுனாரா ? இல்லை இப்பகூட பணத்துக்காகத்தானே பாடுறாரு...

எல்லோருமே பணத்துக்காகத்தானே... வேலை செய்றோம்.
அந்தப் பெண் ஏன் அவரை கடவுள்னு சொன்னது ? இவர் மூலம் தனக்கு சினிமாவில் சந்தர்ப்பம் கிடைக்கும்னுதானே.

என்ன சாதாரணமா சொல்லிட்டே ? இந்தியா முழுக்க இவரை தெரியாதவங்க கிடையாது.
சினிமாவுல பாடும்போது தெரிஞ்சுதான் ஆகும் அது நீங்களா இருந்தாலும் சரி, எனது பேரனாக இருந்தாலும் சரி. 

இவரைப்போல... திறமையாக யாராவது பாட முடியுமா ?
திறமைங்கிறது வேற... சுயநலத்துக்காக மனுசனை கடவுள்னு சொல்றதை எப்படி ஏற்க முடியும் ?

கடவுள்னு சொல்றது தவறுதான் சரி கச்சேரி முடிஞ்சதும் நாம விவாதத்தை வச்சுக்கிருவோமா
சரி.

ஐந்துமணி நேரத்திற்கு பிறகு SCHOOL -ன் வெளியே...

சொல்லு இவரைப்போல எல்லாரும் பாடமுடியுமா
ஐயா உங்க பாணியிலேயே கேட்கிறேன் ஐயா T.M.சௌந்தரராஜன் பாடுனாரே //முத்தை தரு பத்தித் திருநகை// இந்த பாடலை உச்சரிப்பு மாறாமல் எவனாவது இப்போது பாடமுடியுமா ? இவனையெல்லாம் கடவுள்னு சொன்னா T.M.Sசை என்னானு சொல்வீங்க ? அதற்காக T.M.Sசை கடவுள்னு நான் சொல்லவில்லை அவரும் நம்மைப்போல மனிதர்தான்.

இருந்தாலும் உனக்கு ரசனை இல்லாத மாதிரி பேசுறியே.. பின்னே எதற்கு செலவு செய்து பார்க்க வரணும் ?
ஐயா இதே விழாவுக்கு ஒரு நடிகரோ, நடிகையோ வந்திருந்தால் நான் நிச்சயம் வந்துருக்க மாட்டேன் உங்களைவிட ரசனையாளன் நான் ரசிக்கத் தெரிந்தவன் தான் மனிதன், ஆனால் நாம அடிமையாகி விடக்கூடாது சுயசிந்தனை அடகு போககூடாது இதுதான் எனது கொள்கை.

ஏதோ தெரியலை உனது பேச்சு எனக்கு பிடிச்சுருக்கு இப்ப நேரமில்லை நான் உன்னிடம் நிறைய பேசவேண்டி இருக்கிறது உனது நம்பர் கொடு.
நம்பர்கள் பறிமாறப்பட்டு, அடுத்தநாள் முதல் தொலைபேசியில், வாதங்களும் தொடங்கப்பட்டு, ஜீவராசி துபாய் போனாலும் ஐயா அபுதாபி வந்தாலும் நேரிலும் வாதங்கள் வார்க்கப்பட்டு, பல வருடங்களாக தொடரப்பட்டு, முடிவில் ஒருநாள்.... (அவர் இறப்பதற்கு ஒருவாரம் முன்பு)

உன்னை நான் முழுசா புரிஞ்சுக்கிட்டேன் நீ ஜெயிச்சுட்டே வெற்றி உனக்குத்தான்டா.
இல்லை ஐயா இது வெற்றினா இந்த வெற்றியை, உங்க காலடியில போடுறேன் மிதிச்சுடுங்க இத்தனை வருஷத்துல உங்கள்ட்டருந்து நிறைய படிச்சுருக்கேன் அதற்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும், குறிப்பா மனுசனை கடவுள்னு சொன்ன அந்த பெண்மணிக்கும். 

அந்த ஐயா– Jadagopan Ayer Internet City Dubai. (Hometown, Thiruvannamalai)
அந்த ஜீவராசி– Killergee Pension Authority Abu Dhabi. (Hometown, Devakottai)

 காணொளி

57 கருத்துகள்:

  1. வணக்கம் கில்லர்ஜி. நலமா..??

    பதிலளிநீக்கு
  2. அந்த ஜீவராசி கில்லர்ஜி தான் என்பதை முற்கூட்டியே ஊகித்தேன் :) :)

    சமூக முன்னேற்றத்துக்க இப்படி strict ஆக குரல் கொடுக்கும் உங்களை மனதார வாழ்த்துகிறேன் ஜீ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது யூகத்திற்கு வாழ்த்துகள் றஜீவன்.

      நீக்கு
  3. நாம் எதை வேண்டுமானாலும் ரசிக்கலாம். ஆனால் எதற்கும் அடிமையாகிவிடக் கூடாது என்பதை முன்பும் உங்கள் பதிவுகளில் வலியுறுத்தியிருந்தீர்கள். பணி தொடரட்டும் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சுயசிந்தனை அடகு போககூடாது அதனால்தான் இன்று நாடு அல்லோலப்படுகிறது.

      நீக்கு
  4. உங்கள் கருத்து சரியானது. நாம பொதுவா, ஒரு அதீத திறமையாளனை வணங்குறோம்னா, அவனை/அவளை வணங்கறோம்னு அர்த்தம் இல்லை (அப்படி அவங்க நினைச்சுக்கிட்டாங்கன்னா, காலம் அதை அவர்களுக்கு உணர்த்தும்). அந்தத் திறமையின்மூலம நமக்குக் காட்சிதரும் இறைவனை வணங்குகிறோம்னுதான் பொருள். அதனால்தான் 'சரஸ்வதி கடாட்சம்' 'லட்சுமி கடாட்சம்' என்றெல்லாம் சொல்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அழகான கருத்துரை தந்தீர்கள்

      நீக்கு
  5. வணக்கம் ஜி !

    ஹா ஹா ஹா யார்கிட்ட கில்லர் கிட்டே நடக்குமா வாக்குவாதம் பண்ணி ஜெயிக்கமுடியுமா(நல்லனவற்றுக்காய் ) கடைசியில் அந்த ஐயாவுக்கு தெரிந்து போச்சு பூவைப்பறிக்கக் கோடரி எதற்கு என்று

    அருமை ஜி
    தமன்னா 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவலரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
  6. இன்று நான் முதலாவது இல்லை என ஆணித்தரமாக நம்புறேன் கில்லர்ஜி...

    உங்கட திறமையை நான் வியக்கேன்ன்.. உண்மையில் நீங்க வாதாடியதில் என்ன தப்பு இருக்கு.. மனிதனைக் கடவுள் என்றால் எனக்கும் கெட்ட கோபம் வரும்... மரியாதை கொடுக்கலாம் ஆனா கடவுளோடு ஒப்பிடலாமா...

    சரி விடுங்கோ.. நமக்கு உயிர் கொடுத்தோரை... அல்லது படு துன்பத்தில் இருக்கும்போது காப்பாற்றியோரை கடவுள் என அக்செப்ட் பண்ணுவதில்லையா.. அப்படி நினைத்து மனதை ஆற்ற வேண்டியதுதான்ன் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உயிரைக் காப்பாற்றிய மருத்துவரைக்கூட கடவுள் என்பதை இறைவன் ஏற்றுக் கொள்ளமாட்டார் இருப்பினும் நன்றி மறத்தல் கூடாது வருகைக்கு நன்றி

      நீக்கு
    2. இன்னொன்று சொல்ல மறந்திட்டேன் கில்லர்ஜி...

      எய்தவர் இருக்க அம்பை நோகலாமோ?:).. கடவுள் என சொன்னது அந்த எனவுன்ஸ்சர் தானே?:) பாடகர் சொல்லவில்லையே தன்னை அழைக்கச்சொல்லி?:)... ஹா ஹா ஹா சரி போகட்டும்..

      உயிர் கொடுத்தோர் எனச் சொன்னது.. பெற்றோரைச் சொன்னேன்... கணவனையும் தெய்வம் எனத்தானே சொல்கிறார்கள்:).

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி
      அவர் தன்னை கடவுள் என்று அழைக்க சொல்லவில்லைதான் அதேநேரம் குரு வணக்கம் சொல்லும்பொழுது ஷூக்காலை உயர்த்திக் காட்டலாமா ? அது அகம்பாவம் இல்லையா ?

      நீக்கு
  7. நீங்க செய்தது மிகவும் சரி ..இசையை ரசிப்பதென்பது சரி ஆனால் அதற்காக நானே கடவுள் எனும் சிந்தனையோடு யார் இருந்தாலும் எனக்கும் பிடிக்காது யாரவது மனிதரை கடவுள் ஸ்தானத்தில் உயர்த்தி வைத்தாலும் பிடிக்காது .ஒரு பாடகராக இசையமைப்பாளராக எனக்கும் அவர்மேல் மரியாதையுண்டு அதற்காக கடவுள் என்றெல்லாம் சொல்ல மாட்டேன் ..இப்படி நேர்மையாக நீங்க இருப்பதால் நிச்சயம் பல அல்லல்களை சந்தித்திருப்பீர்கள் இல்லையா .போலியாய் விருப்பமின்றி நடிப்பதைவிட நேருக்குநேர் உண்மையை சொல்லிவிடுவது மேல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச்சரியாக முடிவில் சொன்னீர்கள் இப்படிப் பேசுவதால் நான் பலருக்கும் பிடிக்காதவனே...

      இருப்பினும் என் மனசாட்சிக்கு நான் நல்லவேனே... வருகைக்கு நன்றி

      நீக்கு
  8. கதை சொல்லி
    நன்றே சிந்திக்க வைக்கிறீர்
    கேள்வி கேட்டே
    உள்ளங்களைத் துளைக்கின்றீர்
    வாசகர் சிந்தனைக்கு விருந்தாக...

    பதிலளிநீக்கு
  9. ஜீவராசி என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது நிர்வாண நகரம்! ஜீவராசி, பெரியவர் பற்றி எல்லாம் சொன்னீர்கள். பாடகர் யார் என்று சொல்லவில்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது குழப்பம் தீர அந்தப் பாடகரைப் பற்றியே ஒரு பதிவு தங்களுக்காக விரைவில் வரும் நன்றி ஸ்ரீராம் ஜி

      நீக்கு
  10. மதுரையில் தல்லாக்குளம் பெருமாள் கோவிலுக்கு அடிக்கடி செல்லும் வழக்கம் இருந்தது. அங்கு ஒரு நண்பரைச் சந்திப்பேன். என்னைவிட வயதில் மூத்தவர். என்னைப் பார்த்ததும் கைகூப்பி "ஆன்மாவை ஆன்மா வணங்குகிறது" என்பார். என்னிடம் என்றில்லை, தினமும் வந்தோ, எப்படியோ அவரிடம் பழகிய அத்தனை பேர்களிடமும் அப்படித்தான் சொல்வார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர் சொல்வதிலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது ஒவ்வொரு மனிதனுள்ளும் ஆன்மா இருக்கிறதுதானே...

      நீக்கு
  11. அருமையாகச் சொன்னீர்கள்
    ஆம் சுய நலத்திற்காக ஒருவரைக்
    கடவுள் அளவு கொண்டு செல்வது
    கண்டிக்கத் தக்கதே
    வாழ்த்துக்களுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் கருத்துரை கண்டு மகிழ்ச்சி

      நீக்கு
  12. 'செம்பை' தூக்கி உள்ளே வைடா யோக்கியன் வர்றான் என்று கூறும் அளவுக்கு கேவலப் படுத்த வேண்டியதில்லை ,திறமைக்கு மதிப்பளிக்கலாம் .கடவுளே கேள்விக் குறி ,மனிதன் மட்டும் ஆச்சரியக் குறியாகலாமா:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி இன்று உங்களது கடவுளே கேள்விக்குறிக்கு, கேலிக்குறிக்கு ஆளாகி விட்டார்

      நீக்கு
  13. ஆழம் தெரியாமல்.....

    அது போகட்டும்.. நாட்டில் பல வேலைகள் இப்படித்தானே நடக்கின்றன... தேவையில்லாத அடிவருடிகள் தான் திறமையாளர்களை அவமதிக்கின்றன..

    அந்த சி.பா.. சொன்னதைக் கேட்டு எழுந்து நின்றதே தவறு..

    அப்படி எதற்கு ஒளி வட்டம் காட்ட வேண்டும்?..

    பதிவு அருமை ஜி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இந்த நாட்டில் அடிவருடிகள் ஒழிந்தால்தான் நாடு நலம் பெறும் வருகைக்கு நன்றி

      நீக்கு
  14. உண்மைதான் நண்பரே
    திறமையைப் போற்றுவோம்
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே திறமையை மட்டும் போற்றுவதில் தவறில்லை வருகைக்கு நன்றி

      நீக்கு
  15. ஜி தொடர்ந்து உங்கள் அனுபவங்களை பகிர்க ..அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தோழரே எனது அனுபவங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றது நன்றி தோழர்.

      நீக்கு
  16. ஆறறிவால் ஐயமற அறியப்படுகிற மனிதனையும் அதே அறிவால் அனுமானம் செய்யப்படுகிற கடவுளையும் ஒப்பிடுவது தேவையற்றதுதான்.

    பயனுள்ள விவாதம். பாராட்டுகள் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அருமையான கருத்து வருகைக்கு நன்றி

      நீக்கு
  17. சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ நடந்த சம்பவமே... வருகைக்கு நன்றி

      நீக்கு
  18. என்னதான் திறமை வாய்ந்த இசைமேதையாக இருந்தாலும் அவரை இசைக்கடவுள் என குறிப்பிட்டது தவறுதான். தங்களின் கருத்து சரியே. அது சரி. யார் அந்த ‘இசைக் கடவுள்’ என சொல்லவில்லையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வகுக நண்பரே கருத்துரைக்கு நன்றி அவர் யார் என்பதை அறிவதற்கு ஒரு பதிவு வரும்.

      நீக்கு
  19. எல்லோருள்ளும் கடவுள் "உள்"ளான் என்பதைச் சொல்லி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தன்னை கடவுள் என்று சொன்னதற்காக ஷூக்காலை வணங்க சொல்வது தலைக்கனம்தானே... வருகைக்கு நன்றி

      நீக்கு
  20. அருமை...நானும் பழக்க தோசத்தில்...தெரியாதவர்களுக்கெல்லாம் எழுந்திருக்கேன்..உட்காரச் சொன்னாலும் எவனாவது வருவான் அவனுக்கும் எழுந்திருக்க வேண்டுமே..உட்காருவதும் இல்லை நண்பரே.............

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பிடுவதற்காகவும் உட்கார மறந்து விடாதீர்கள் நண்பரே

      நீக்கு
  21. பாடல் பகிர்வு அருமை. எனக்கு பிடித்த பாடல்.
    பள்ளியில் படிக்கும் போது வரலாற்று ஆசிரியர் இந்த பாடலை நன்றாக பாடும் ஒரு பெண்ணை அழைத்து பாடசொல்லி கேட்டு மகிழ்வார்,
    கிறித்துவமதத்தை சேர்ந்த அந்த ஆசிரியர். மதம் கடந்த இசைபிரியர் டி.எம்.எஸ் அவர்களின் இந்த பாடலுக்கு ரசிகை அவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நல்ல கருத்துரை
      மதம் மறந்து பக்தி பாடல்கள் கேட்டால் பழைய பாடல்கள் அனைத்துமே பொக்கிஷம்தான் எனக்கு இது மிகவும் பிடித்த பாடல் அடிக்கடி கேட்பேன் காரணம் உச்சரிப்பு.

      இதில் ஒரு வரி பாருங்களேன்

      //குக்கு குகுகுகு//

      நீக்கு
  22. உங்கள் விஷயத்தில் இந்த விவாதம் ஒரு புரிதலோடு முடிந்தது.என் அனுபவம் இவை பெரும்பாலும் மனக்கசப்பிலேயே முடிகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இந்த புரிதலுக்குள் அவரும் நானே ஒரே மன ஓட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது பிறகு நான் பழகியபோது புரிந்து கொண்டேன்

      இப்படிப்பட்டவர்கள் நட்பாக கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து வருகைக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  23. கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்பணியாக வெளியூர் சென்றிருந்தேன். தற்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம். /// ஒவ்வொரு பதிவின் மூலமாக ஒரு பாடத்தைத் தந்துவிடுகின்றீர்களே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே வாழ்க்கை முழுவதும் பாடம் கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  24. திறமையை மதிக்க வேண்டும் மற்றும் படி அதிக வஞ்சகப்புகழ்ச்சி தேவையில்லை ஜீ! நலமா ஜீ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா நலமே...
      அருமையான கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

      நீக்கு
  25. வாழ்த்துக்கள் , உங்கள் அனுபவங்களை தொடர்ந்து எங்களோடு பகிருங்கள் தோழரே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோழரின் முதல் வருகைக்கு பூங்கொத்து.

      நீக்கு
  26. உங்கள் கருத்துடன் டிட்டோ!! ஜி! யாரந்த பாடகர்..பூட்ஸ் கால் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஷூ போடும் அந்தப் பாடகர் யார்??!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  27. நாம் ரசிக்கும் திறமையாளர்கள் பண்பானவர்கள் என்று நினைத்து விடுகிறோம்.உண்மையில் பல சமயங்களில் சாதரண மனிதனுக்கும் கீழான பண்புகளை வெளிக்காட்டி நம்மை வெட்கப் பட வைப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச்சரியாக சொன்னீர்கள் நண்பரே அடுத்த பதிவுக்கு வந்து அவர் யாரென்று காணுங்கள்.

      நீக்கு