தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், மார்ச் 01, 2018

Dubai 25 Years

இவர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல உழைக்கப் போன தொழிலாளர்களே...

அயல் தேசங்களில் பல வருடங்களாக குடும்ப நலனுக்காக உழைத்து நாடு திரும்பிய பல தொழிலாளர்கள் பல நோய்களுக்கு ஆளாகியே இறக்கிறார்கள் சம்பாரித்ததில் ஒரு பங்கு கடைசி காலத்தில் மருத்துவச் செலவுக்கு கண்டிப்பாக தேவைப்படுகிறது இதிலும் அவரின் குடும்பத்தினர் பற்றுதல் இல்லாமலிருந்தால் விரைவில் குணமாக வேண்டியவர் விரைவில் போக வேண்டிய இடத்துக்கு போய் விடுவார். ஆம் இவைகள் எப்படியான வியாதிகள் என்று பார்ப்போம்.

அதாவது ஒருவன் சகோதரிகளுக்கு திருமணம் செய்வதற்காக உழைத்து பணம் சேர்த்து ஐந்து வருடம் கழித்து முதல் முறையாக ஊருக்கு வந்து செலவு செய்து திருமணம் முடித்து வைக்கிறான் அம்மாவுக்கு குடும்பச் செலவுகளுக்கு பணம் அனுப்புவதோடு (சில) டாஸ்மாக் தந்தைக்கும் சேர்த்து பணம் அனுப்புகிறான் ஒரு வழியாக தனக்கும் தாயார் பெண் பார்த்து வைக்க திருமணம் முடிக்க வருகிறான் முடித்து மூன்று மாதம் விடுமுறையில் சந்தோஷமாக வாழ்ந்து விட்டு வெளிநாடு செல்கிறான் அவன் மீண்டும் வருவதற்கு மூன்று வருடங்கள் ஆகும் பிறகு வருகிறான், போகிறான், வருகிறான், போகிறான் இப்படியே திருமணம் முடிந்தும் சகோதரிகளுக்கு செய்முறைகளும் தொடர்கிறது தனக்கென்று ஒரு இடம் வாங்க, பிறகு கொஞ்சம் கடனும் வாங்கி சிறிதாக ஒரு வீடு கட்ட, மகனை படிக்க வைக்க, மகளுக்கு திருமணத்துக்கு நகைகள் வாங்க பிறகு மகளுக்கு திருமணச்செலவு சீர் செலவுகள், பிள்ளைப்பேறு செலவுகள், இதெல்லாம் முடியும்போது இருபத்து ஐந்து வருடங்கள் வரை ஓடி விடும் இதில் இவனுக்கு SORRY இவருக்கு திருமணம் முடிந்து இருபது வருடம் ஆகியிருக்கும் இதில் வருடத்துக்கு மூன்று மாதம் வீதம்1 ¾ வருடம் மனைவியை சந்தித்து இருப்பார் இதில் ¾ வருடம் அதாவது ஒன்பது மாதம் மனைவியோடு வாழ்ந்திருக்கலாம் ? ? ? அதாவது இவரின் பிறவிப்பயனில் வாழ்ந்தது வெறும் ஒன்பது மாதங்களே பிறவிப்பயனில் முக்கியமானது எது ? தாம்பத்யம் அதையும் காலம் முழுவதும் பத்தியம் இருந்து வாழ்ந்த இப்பிறவி எதற்கு ? அதாவது சராசரி மனித வாழ்க்கையிலிருந்து எட்டில் ஏழு மடங்கு குறைந்து விடுகிறது தாம்பத்தியம் அற்ற சரீரம் என்னாகும் ? உடல் சூடாகி தனத்துக் கொண்டே இருக்கிறது இதன் காரணமாக எண்ணங்கள் சிதறுகிறது ஒழுக்கமானவன் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறான் முடியாதவன் பாதை மாறிப்போகும் போது ஊரும் வந்து சேராது என்பதுபோல் ஆகி விடுகிறது வேலை செய்யுமிடத்தில் மேலேயுள்ளவனின் தகாத வார்த்தைகள் ஊரைப்போல் மீறிப்பேச முடியாத சூழல் பேசினால் மறுநாளே ஊருக்கு அனுப்பி விடுவார்கள் அந்த நேரம் அடுத்த மாதம் மகளுக்கு பிரசவம் என்ற நினைவோட்டம் சிந்தனைகளால் முடி கொட்டுகிறது அல்லது விரைவில் வெளுத்து விடுகிறது, நம்மூரில் ஃபேன் இல்லாமல்கூட வாழமுடியும் அரபு நாட்டில் ஏசி இல்லாமல் வாழமுடியாது இரவில் ஏசியில் உறங்கியே பழகி விட்டதால் ரத்தம் இரவு நேரங்களில் உறைந்து காலையில் சாதாரண நிலைக்கு வருகிறது இப்படியே வாழ்ந்து பழக்கப்படும்போது செப்டிங் ப்ளட் மார்ளோங்ஸ் என்ற நோய் வருகிறது மேலும் நம்மூரில் வீட்டில் மொத்தமே நான்கு அல்லது ஐந்து பேர் உறங்குவோம் இங்கு சிறிய அறையில் குறைந்த பட்சம் பதினாறு பேர் உறங்கும்போது (லேபர் கேம்ப்களில் இப்படித்தான் வாழ்க்கை) சுவாசக்காற்றுகள் உள்ளுக்குள்ளேயே சுழன்று மூச்சுக்குழல்கள் பாதிக்கப்பட்டே வருகிறது காலையில் கழிப்பறைக்கு ஒருவர் போனால் ? மீண்டும் பத்து நிமிடம் கழித்தே மற்றவர் உள்ளே நுழைய வேண்டும் அப்பொழுதுதான் வியாதிகள் தொற்றுவதை தடுத்துக் கொள்ளலாம் என்பது மருத்துவர் ராமதாஸின் அறிவுரை ஆனால் இங்கு நிலையென்ன ? கழிப்பறை கதவுக்கு வெளியே பதினைந்து பேர் வரிசையில் சிறிது நேரமானாலும் டொக் டொக் என்று கதவைத்தட்டி
என்னாச்சு உள்ளே தூங்குறியா ?
க்யா கர்த்தா ஹை பாய் அந்தர் சோத்தா ஹே ?
ஆரடா பட்டி அகத்தே உறங்குனது ?
என்ற சப்தங்கள் வெளியிலிருந்து கேட்கும் கொடுக்கும் பத்து நிமிடத்துக்குள் பல் துலக்கி, காலைக்கடன் முடிந்து, குளித்து அனைத்து வேலைகளையும் முடித்து விடவேண்டும் அப்பொழுதுதான் அனைவருமே வேலைக்குப் போகமுடியும் காலையில் நான்கு மணிக்கு எழுந்து இரவு பதினொன்று மணிக்கு உறங்கும் இயந்திர மனிதன்.

இதுதான் இங்கு நடைமுறை வாழ்க்கை. உணவு ப்ரிட்ஜில் வைத்து, மிச்சப்படுத்தி, மீண்டும் ப்ரிட்ஜில் வைத்து இப்படியே இருபத்து ஐந்து வருடமும் தொடர்ந்து சாப்பிட்டால் என்னாகும் அவனது சரீரத்தின் நிலை ? அதாவது ஒரு உயிருள்ள ஜடம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்றுதான் சொல்லமுடியும் இவ்வளவும் முடிந்து போதும் என்று மனம் சொல்லாமல் முடியலை என்று உடல் சொல்லும்போது கேன்ஷல் செய்து ஊருக்கு வருகிறான் இருபத்து ஐந்து வருடம் கழிந்து ஒரு மாற்று வாழ்க்கைக்கு அவனது மனம் ஒத்துழைத்தாலும், உடல் ஒத்துக்கொள்வதில்லை பிறகு அடிக்கடி மருத்துவரை காணப்போக நல்ல மனைவி, நல்ல குழந்தைகள் என்றால் இவரைப் பூப்போல கவனித்துக் கொள்வார்கள் இல்லை என்றால் ஹூம் ஒரு வேலைக்கும் போறதில்லை வருமானம் இல்லாமல் இப்படி வைத்தியத்துக்கு செலவு செய்துக்கிட்டு இருந்தா எங்கே போறது ? என்று வார்த்தைகளால் கொல்வார்கள் என்னாகும் விரக்தியிலேயே பாதி உயிர் போக மீதி உயிரை கொடுத்தவனே எடுத்துக் கொல்வான் அதிலும் குழந்தைகளுக்காக வாழ்ந்து அவைகள் மதிக்காமல் பேசும்பொழுது அந்த தந்தையின் மனம் படும்பாடு இருக்கின்றதே... அது அனுபவித்தவருக்கே தெரியும். இதுதான் வெளிநாட்டில் வாழ்ந்த, வாழும் பேச்சளர்கள் பல பேருடைய உண்மை நிலை.

ஆனால் பொரணி பேசுவோர் சொல்லும் வார்த்தைகள்.
அவனுக்கென்னப்பா ? துபாய்க்காரன் வெள்ளையும் சொல்லையுமா இருப்பான்.
அவளுக்கென்ன ? புருஷன் துபாய்க்காரன் அதான் சிலுத்துக் கிட்டுப்போறா.

சிவாதாமஸ்அலி-
இதுக்கு ஊருல ரிக்ஷா ஓட்டுறவன் பொண்டாட்டி கொடுத்து வச்சவதான்.

சாம்பசிவம்-
இதைப்படிச்சா.... யாரும் புருஷனை துபாய்க்கு அனுப்ப மாட்டாங்களோ ?

CHIVAS REGAL சிவசம்போ-
பட்டை நாத்தம் நாறுனாலும் ‘’வாழ’’ வைக்கிறோம்ல...

காணொளி

இவன் பங்களாதேஷி வீட்டு டிரைவராக இருக்க வேண்டும் முதலாளி அம்மாள் அரபி உடன் வரச் சொல்கின்றாள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன் இதோ வருகிறேன் என்று சொல்கிறான் அதற்குள் என்ன நடக்கிறது என்பதை பாருங்கள் இதைப்பார்த்து விட்டு தயவு செய்து சிரித்து விடாதீர்கள் இது காண்பிப்பதற்காகவே எடுக்கப்பட்ட காணொளியாயினும் உண்மை நிலையே... இப்படித்தான் பல வீட்டு டிரைவர்களின் வாழ்க்கை அதிலும் சரியாக பேசத் தெரியவில்லை என்றால் அவனது நிலை மோசம்.


ஐயா திரு. ஜியெம்பி அவர்கள் கேட்டுக்கொண்டதற்காக இப்பதிவு

87 கருத்துகள்:

  1. மிடில் ஈஸ்டில் வாழும் வாழக்கை மிக கொடுமையானதுதான் அதுவும் லேபராக.... அவர்கள் நரக வாழ்க்கையை நேரிலே அனுபபவிக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  2. நான் ஒரு சில நாட்கள் துபாயில் தங்கி இருந்தேன்.... என்ன கொடுமைடா சாமி.... ஒரு பில்டிங்கில் இருந்து அடுத்த பில்டிங்க் நடந்து செல்ல முடியவில்லை உடம்பெல்லாம் எரிகிறது. இதில் எப்படித்தான் மக்கள் வேலை செய்கிறார்களோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் தமிழரே நம்ம ஊரில் கோவில் திருவிழாக்கள் பார்த்து இருப்பீர்கள் அதில் பூக்குழி இறங்குவார்கள் (தீ மிதித்தல்) அதன் அருகில் நிற்கும் பொழுது முகத்தில் அனல் தாக்கும் அதைப்போல்தான் வெயில் காலம் முழுவதும்.

      இதில் கட்டிட தொழிலாளர்கள் வேலை மிகக் கொடுமையானது.

      இப்படி உழைத்து அனுப்பும் பணத்தை ஊதாரித்தனமாக சில வீட்டில் செலவு செய்வார்கள்.

      நீக்கு
    2. உண்மைதான் கெட்டிக்கார மனிவி எனில் சில வருடங்களிலேயே கடனை எல்லாம் முடிச்சு கணவரையும் ஊரோடு அழைச்சிடுவா.
      முன்பு பேஸ்புக்கில் ஒருவர் சொல்லி வேதனைப்பட்டார், சவூதியிலோ எங்கோ இருந்து உழைச்சு அனுப்ப அனுப்ப பணத்தை எல்லாம் மனைவி தன் குடும்பத்தினருக்கு குடுத்திட்டு, முடிவில் இவர்கள் குடும்பம் நடுத்தெருவிலாம்:(.

      நீக்கு
    3. ஆம் இதில் தீர்வு எடுப்பது மனைவியிடமே இருக்கிறது.

      அதிலும் சிலருக்கு வேறுவகையான துரோகங்கள் செய்வது மிகவும் வேதனையானது.

      நீக்கு
  3. ஓ மை கடவுளே.. இன்று மீ 1ஸ்ட்ட் இல்லை கர்ர்ர்:)).

    உண்மை நிலையைத் தெளிவாக எழுதியிருக்கிறீங்க.. நானும் இதுபற்றி கேள்விப்பட்ட்டிருக்கிறேன்.

    பணத்துக்காகத்தான் பலர் அங்கு போகிறார்கள், ஆனா நான் நினைப்பது திருமணம் முடித்திட்டால், கஸ்டப்பட்டாலும் பறவாயில்லை என ஊருடன் இருந்திடோணும்... இல்லை எனில் துன்பம்தான்...

    உண்மைதானே இவர்கள் வாழ்க்கையில் எதைக் கண்டு விட்டார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க்கை வாழ்வதற்கே என்பது புரியும் பொழுது பலருடைய ஆயுள் நிறைவு பெறுகிறது.

      நீக்கு
  4. எங்கள் ஒன்றுவிட்ட சித்தப்பா ஒருவர் கப்பலில் எஞ்சினியர்... அவர் மணம் முடித்த காலம் தொடங்கி 2 வருடத்துக்கு ஒரு முறைதான் வந்து போவார்... அல்லது கப்பல் இடையில் வந்தால் வர முடியுமோ என்னமோ...

    மூன்று பிள்ளைகள்... நாட்டுப் பிரசனையின் மத்தியில் சித்தி நல்லபடி பிள்ளைகளை படிப்பித்து முன்னுக்கு கொண்டு வந்திட்டா.. கொழும்பிலேயே, மூவருக்கும் ஒரே வளவில் வீடு கட்டி முடிச்சு.. மூத்த மகளுக்கு திருமணமும் முடித்த பின், இவர் றிரயர் ஆகி வர இருந்தார் ஊரோடு, அதற்குள் அவவுக்கு பிரைன் கியூமர் என பதறி அடிச்சு வந்தால் அவ சில மாதங்களில் இறந்திட்டா... இப்போ இவர் தனியே பிள்ளைகளோடு ஊரில் இருக்கிறார்...

    என்னத்தைக் கண்டிட்டினம் வாழ்வில்?... ஊரிலேயே தொழில் தேடியிருக்கலாம்.. கப்பலில் வந்த வருமானம் அங்கு கிடைக்காது என்பதாலோ என்னமோ தம் வாழ்க்கையை வீணடிச்சு விட்டனரே... இப்படி எத்தனை குடும்பங்கள் வாழ்க்கையைத் தொலைத்த நிலையில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // என்னத்தைக் கண்டிட்டினம் வாழ்வில்?//

      ஆம். எனக்கும் இந்தக் கேள்விதான் வந்தது. பணம்... பணம்... பணம்... நிம்மதி?

      நீக்கு
    2. பணம் மீது வைக்கும் மோகம் புத்தியை மழுங்கடிக்கிறது.

      பழைய மனிதர்களுக்கு நோய்கள் அண்டாமல் இருந்ததற்கு காரணம் அவர்கள் "வாழ்ந்து" இருக்கின்றார்கள்.

      நீக்கு
    3. ஸ்ரீராம் நேரம் கிடைக்கும்போது இதைக் கொஞ்சம் படிச்சுப் பாருங்கோ ஹா ஹா ஹா..

      என்னத்தைக் கண்டேன்?:)..

      http://gokisha.blogspot.com/2009/12/blog-post_26.html

      நீக்கு
  5. வீடியோ பார்த்தேன் அதில் எப்படி சிரிப்பு வரும்? மிகவும் வேதனையாக இருக்கிறது... எதுவும் வேண்டாம் ஒரு மனிதனுக்கு சாப்பிடும்போதாவது நிம்மதியாக சுகந்திரமாக சாப்பிட வேண்டுமல்லவா.. அதுக்குகூட விடாமல் சில மனித ஜென்மங்கள்.. சம்பளம் கொடுக்கிறோம் எனும் பெயரில் அடிமையாக நடத்துகின்றனர்... மிகவும் கஸ்டமாக இருக்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சம்பாதிப்பதே வயிற்றுக்கு சோறிடத்தான். அதுவே தடை என்றால்? எரிச்சல் வருவது இயற்கை. பாவம். கோபம் நமக்கே வருகிறதே...

      நீக்கு
    2. எனது நண்பர்கள் சிலர் வீட்டு டிரைவர்களாக இருக்கின்றார்கள் அவர்களுக்கு வார விடுமுறை கிடையாது.

      24 மணிநேரமும் வேலைக்கு தயாராக இருக்க வேண்டும்.

      நீக்கு
  6. சிறீ சிவசம்போ அங்கிள் ஜொள்ளுறதுதான் கரீட்டூஊ:)) :)..

    சம்பசிவம் அங்கிள் சொல்வது டப்பூஊஊ:) புருசனை ஊருக்கு வரவிடாமல் தொடர்ந்து வெளிநாட்டிலேயே வைத்திருப்பது சில மனைவிமார்தானாமே... சில பெண்களுக்கு கணவன் தேவை இல்லை... பெயருக்கு இருந்தால் போதும்.. மற்றும்படி பணம்..பணம்..பணம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பணம் வேண்டும், நிறைய நகைகள், சொந்தவீடு இதை விரும்பும் மனைவியர்களே அதிகம்.

      ஒரு சில பெண்களே கணவன் தன்னுடன் இருந்தால் போதுமென்று நினைக்கின்றனர்.

      நீக்கு
    2. நான் துபாயில் இருந்தபோது 94ல் நடந்த சம்பவம். அங்கு ஜாக்கி எலெக்டிரானிக்ஸில் (அல்லது அடுத்த கடையில்) பலப் பலவருடங்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்த மும்பையைச் சேர்ந்தவரை 57 வயதில், அந்தக் கம்பெனி 'போய்ட்டு வா' என்று சொல்லிவிட்டது (வேலையை விட்டுத் தூக்கிவிட்டது). அவர் மும்பையிலிருந்த மனைவிக்கு தகவல் சொன்னபோது, அந்தப் பெண், 'இங்கு வராதே.. வேறு வேலை பார்க்க முயற்சி செய். மாதா மாதம் பணம் அனுப்பணும்' என்று சொன்னாளாம்.

      இன்னொருவர், 20+ வருடங்களாக நல்ல வேலை பார்த்தார். ஊரில் மனைவி குழந்தைகள். தன் 58 வயதில் ஊர் திரும்பியவர் (சென்னை), மனைவி குழந்தைகளுடன் ஒட்ட முடியவில்லை. அப்புறம் தனி வீடு பார்த்து தனியே சென்னையில் வசிக்கிறார்.

      நீக்கு
    3. wஎல்லைத்தமிழன் சொன்னதுபோலவும் பல கதைகள் கேள்விப்பட்டிருக்கிறேன், கணவர் வெளி நாட்டில் கஸ்டப்பட, மனைவி அங்கு வேறொருவருடன் மகிழ்ச்சியாக இருக்கும் பல கதைகள்.

      இலங்கையில் நடந்த ஒரு சம்பவம்.. திருமணமாகி சில மாதங்களில் இப்படி சவூதி/குவைத் எங்கோ கணவர் போய் விட்டாராம், மனைவி ஒரு ரீச்சர், தனியே வசிப்பவ ஸ்கூட்டரில் போய் வருபவவாம், அப்போ பெற்றோல் போட்டு விடுபவரோடு நட்பாகி, ஹோட்டலில் போய் தங்கும் நிலைமைக்கு ஆளாகிட்டா..

      இதை படு கேவலமாக எல்லொரும் விமர்சிக்கத் தொடங்கி விட்டார்கள்.

      அப்போ எங்களுக்கு படிப்பிச்ச ஒரு மாஸ்டர் சொன்னார்... பாருங்கோ பிள்ளைகள்.. எல்லோரும் அப்பெண்ணையே திட்டுகின்றனர், ஆனா என்னைப்பொறுத்து அடிப்படைத்தவறு அக்கணவனில்தான் இருக்கு, திருமணமாகி ஆசை காட்டி விட்டு சில மாதங்களில் விட்டுவிட்டுச் சென்றால்.. அவரால கட்டுப்பாடாக இருக்க முடிஞ்சிருக்கு ஆனா பெண்ணுக்கு ஒரு அன்பு அணைப்பு தேவைப்பட்டிருக்கலாம்.. அதில் பெரிய தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை, மணம் முடிச்சால் கூடவே இருக்கோணும் அல்லது இடைக்கிடை கூப்பிடும் வசதி ஆவது இருந்திருக்கோணும்.. இது 3 வருடம் காத்திருப்பு என்பது பெரிய இடைவெளிதானே என.

      ஒரு விதத்தில் அதுவும் சரியாகப் பட்டாலும்.. இதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.. அழுது குளறி சண்டைப்பிடிச்சு அவரை ஊரோடு கூப்பிட்டிருக்கலாம்.. உண்மையில் பிரிஞ்சிருக்கவே மாட்டேன் என ஒரு மனைவி அழுதால்.. எக் கணவனாலும் விட்டுவிட்டுப் போக மனம் வராது.

      நல்ல தொழிலில் இருப்பவர்கள்.. பிரச்சனை இல்லை இப்படி விசா இல்லாமல் தொழில் பார்ப்பவர்களின் நிலைமைதானே கவலைக்கிடம்.. பாஸ்போர்ட்டைப் பறிச்சு வச்சுக் கொள்வார்களாமே... சரிபிழை சொல்லத் தெரியவில்லை... அந்த அந்த நாட்டு அரசில் தான் கோபமாக வருகிறது.

      நீக்கு
    4. திரு. நெல்லைத்தமிழன் அவர்களுக்கு...
      ஆண்டுகள் பல கடக்கும் பொழுது பலருக்கும் இந்திய வாழ்க்கை ஒத்து வருவதில்லை நண்பரே...

      திருமிகு. அதிரா அவர்களுக்கு...
      உங்கள் மாஸ்டர் சொன்னதையே நானும் சொல்கிறேன் தவறுகளின் தொடக்கம் எங்கு என்பதை ஆராயாமல் பலரும் குற்றம் சொல்கிறோம் இது தவறு.

      பிழைக்கப்போன நாம் பிறநாட்டை குறை சொல்லத்தகுதி இல்லை என்பது எனது கருத்து தெரிந்துதானே போகிறோம்....

      நீக்கு
  7. சின்ன தம்பி ஒருவர் பேஸ் புக்கில் இருந்தபோது சொன்னார்.. கொன்ரக் சைன் பண்ணி வந்துவிட்டால்.. பின்பு அவர்கள் லேட்டாக வேர்க் பண்ணச் சொன்னாலோ.. லீவு நாட்களில் வேர்க் பண்ணச் சொல்லாலோ செய்தே ஆகோணுமாம்... ஆனா சம்பளம் மட்டும் பிக்ஸ்ட் ஆம்.. என்ன கொடுமை இது.. வன் அவர் அதிகம் வேர்க் பண்ணினாலே ஓவர் ரைம் எனக் கிடைக்குது நமக்கு இங்கெல்லாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சில கம்பெனிகள் லேபர்களை சக்கையாய் பிழிகின்றனர்.

      இந்திய தூதரகம் சென்றாலும் பயனில்லை காரணம் கம்பெனி முன்கூட்டியே "கவனித்து" இருக்கும்.

      நீக்கு
  8. பாவம் அங்கே வேலைக்கு போறவங்க குறிப்பா கடை நிலை ஊழியர்கள் படும்பாடு
    எங்களுக்கு தெரிந்த சில நட்புகள் பணியிடத்தில் மரணம்னு செய்தி வந்து உறவினர் ஓடுவாங்க :(
    எவ்வித காரணமும் சொல்லமாட்டாங்க .சில பெண்கள் ஹவுஸ் மெய்ட் வேலைக்கு போயிட்டு ஒரு மாதத்தில் ஓடி வந்திருக்காங்க .
    எத்த்னை சோதனை வேதனைகளை தாங்கி வாழறாங்க பாவம் .இவர்களது வசிக்கும் அறைகள் புறாக்கூண்டு போலிருக்குமாம் :(
    காணொளி :( பாவம் கஷ்டப்பட்டு உழைத்த காசில் உணவைக்கூட நிம்மதியா சாப்பிட முடியலையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் ஸ்ரீலங்கா பெண்கள் ஹவுஸ்மேட் வேலை பார்ப்பவர்களின் நிலை மிகவும் பரிதாபமானது.

      வீட்டிலிருக்கும் வாண்டுகள் முதல், கிழடுகள்வரை அவர்களின் தொந்திரவுகளை சமாளிக்க வேண்டும்.

      குடும்ப சூழல் பாவம் என்ன செய்வார்கள் ?

      நீக்கு
  9. கில்லர்ஜி ஆஜர்....ஒரே ஒரு கருத்து மட்டும் இங்கு சொல்லிவிட்டுச் செல்லுகிறேன். இன்னும் முழுவதும் வாசிக்கவில்லை....கொஞ்சம் வாசித்த வரையில் பின்னர் மாலை வருகிறேன்.

    கடை நிலை ஊழியர்களின் படு வேதனையான வாழ்க்கையை விவரித்துள்ளீர்கள் அதாவது கல்ஃப் நாடுகளில்...ஏசி ரூமில் உறங்கி காலை நார்மல் வெப்ப நிலைக்கு வருவது....அதனால் ஏற்படும் நோய்....அதே போன்று சமைத்த உணவை ஃப்ரிட்ஜில் வைத்து வைத்து சூடுபடுத்தி உண்பது எட்ஸட்ரா.

    கில்லர்ஜி இந்த இரண்டும் அங்கு கஷ்டப்படும் கடைநிலை ஊழியர்கள் அவர்களுக்கு வேறு வழியில்லாமல் நேர்கிறது...ஆனால் இதையே நம்மில் பலரும் கொஞ்சம் நன்றாக வாழ்பவர்கள் அதாவது இருவரும் வேலைக்குப் போய் குறிப்பாக இப்போதைய வாழ்க்கை முறையில் பல குடும்பங்கள் இதைத்தான் செய்து வருகிறார்கள். அதாவது அந்த ஊழியர்கள் கஷ்டப்படுகிறார்கள் ஆனால் இவர்கள் ஐடி மற்றும் வேறு சில துறைகளில் நன்றாகச் சம்பாதிப்பவர்கள் பெரும்பான்மையோர் ஏசி ரூமில்தான் உறங்குகிறார்கள் காரிலும் ஏசி வீட்டிலும் ஆஃபீசிலும் ஏசி....

    அப்புறம் சாப்பாடு ஒரு வாரத்திற்குத் தேவையானவற்றைச் சமைத்து வைத்து விட்டு எடுத்து எடுத்து ரீஹீட் பண்ணித்தான் சாப்பிடுகிறார்கள். சொகுசு வாழ்க்கை...ஆனால் வியாதிகள்..அந்த ஊழியர்கள் கஷ்டப்பட்டு நோயை வரவழைத்துக் கொள்கிறார்கள்...இவர்கள் மிக எளிதில் சொகுசாக நோயை வரவழைத்துக் கொள்கிறார்கள்....இரண்டிற்கும் அடிப்படையில் என்ன வித்தியாசம் கில்லர்ஜி?!!!! நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறது இல்லையா..!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களது கேள்வி புரிகிறது...
      ப்ரீஸரில் வைப்பதும் அதையே மீண்டும் சூடாக்கி உண்பதும் இது மனிதனுக்கு மிகப்பெரிய ஆபத்து.

      நான் மேலே சொன்னதுபோல இவர்கள் வீட்டுக்குள் இரண்டு அல்லது மூன்று நபர்கள் விஸ்தாரமாக சுவாசித்து வாழ்பவர்கள்.

      தொழிலாளர்கள் சிறிய அறைக்குள் 16 நபர்கள் உறங்கி எழவேண்டும்.

      ஐ.டி. தம்பதியினர் நோய் வந்தால் அப்பல்லோ போவார்கள்.
      தொழிலாளர்கள் நோய் வந்தால் அரசு மருத்துவமனைக்கே போக முடியும்.

      நீக்கு
    2. கீதா ரங்கன் - இதில் பல்வேறு கருத்து வித்யாசங்கள் இருக்கின்றன. நாம எல்லோரும் இயற்கையை விட்டு வெகு தூரம் வந்துவிட்டோம்.

      இந்த நாடுகளில், சுமார் 9 மாதங்கள், 90% ஏசியில்தான் வாழ்கிறோம் (வாழ்ந்தேன்). ஆபீசுகளில் 100% ஏசிதான். வெயில் உடம்பில் படுவது அரிது.

      வெளியில் வேலை செய்பவர்களுக்கு கடும் வெயிலில் பணி இருக்கும்.

      ஜுன்-ஆகஸ்டு மூன்று மாதங்கள், வெளியில் 300 மீட்டர் நடந்தாலே தொப்பலாகிவிடும்.

      இங்கு, இரண்டுபேரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களில், வெள்ளி/சனி, வாரம் முழுமைக்குமான உணவு செய்து-கறி, கூட்டு, குழம்பு, அன்றன்று சாதம் செய்து அல்லது சப்பாத்தி வாங்கி தொட்டுக்கொண்டு உண்பவர்களும் நிறைய இருக்கிறார்கள். இந்த அனுபவங்களெல்லாம் எழுத எழுத நீண்டுகொண்டே செல்லும்.

      எனது வெளி நாட்டு வாழ்க்கை இப்போது அனேகமாக முடிவுக்கு வந்துவிட்டது.

      நீக்கு
    3. தங்களது வெளிநாட்டு வாழ்க்கை விரைவில் முடித்து நலமுடன் இந்தியாவில் வாழ எமது வாழ்த்துகள் நண்பரே...

      நீக்கு
  10. கடைநிலை ஊழியன் பரிதாபத்திற்குரியவன்....இவர்கள்??!!!கொழுப்பெடுத்து... சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்பவர்கள் எனலாமா? ஜி?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடையை நீக்களே சொல்லி விட்டீர்கள்.

      இதனைக்குறித்து எனது உறவினர் பற்றிய உண்மை வாழ்க்கையை விரைவில் பதிவாக தருகிறேன்.

      பணம் படுத்தும்பாட்டை...

      நீக்கு
    2. கீதா ரங்கன் - உங்கள் அனுமானம் தவறு.

      நிறைய சமயம் வேறு வழியில்லாததால்தான் இவை நேர்கின்றன. நம்ம ஊரில், வெளியில் இறங்கினால் காய்கறி (ஏதாவது ரூபத்தில் கிடைக்கும்). ஆனாலும் நாம் ஃப்ரிட்ஜ் உபயோகப்படுத்துகிறோம். சமைத்ததை ஃப்ரிட்ஜில் வைக்காதவர்கள் மிகக் குறைவு.

      பல சமயம், நமக்கு ரெஸ்ட் வேண்டும் என்பதற்காகவும் இவ்வாறு செய்ய நேர்ந்துவிடுகிறது.

      நீக்கு
    3. இதற்கு அடிப்படை நாம் நமது ஓட்டுரிமையை சரியாக பயன்படுத்தாததுதானே...

      நீக்கு
    4. நெ த நான் உங்கள் கருத்தை அப்படியே ஏற்கிறேன்....நான் சொன்னதில் சில வரிகள் விடுபட்டு விட்டது எனப்தை விட சொல்லாமல் சென்றுவிட்டேன் அவசரத்தில்...அதாவது நம்மூரில் அப்படி இருப்பவர்களை நான் குறையாகச் சொல்லவில்லை ஆனால், அப்படி வாழ்பவர்களின் மீது எனக்கு என் வருத்தம் ஏற்பட்டது என்றால் எனக்கு நேர்ந்த அனுபவம். எங்கள் வீட்டில் அத்தனை வசதிகள் இல்லை..அதாவது நெருங்கிய உறவினர்களுக்கே!!! எங்களைப் பொருத்தவரையில் எங்களுக்கு இதுவே சொர்கம். ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் வசதிகள் கிடையாது. எப்போதும் ஏசி என்பவை...தனி ரூம்கள்...என்று அதனாலேயே எங்கள் வீட்டில் தங்க மாட்டார்கள். எல்லோருக்கும் கட்டில் பெட் வேண்டுமென்றால்?...இப்போதெல்லாம் வருவதும் இல்லை என்பது வேறு விஷயம்....நான் அதிகமாக அன்பு வைத்திருந்த நபர்கள்...அது ஒரு காலத்தில் மனதை ரொம்ப வருத்தியது...அதாவது வசதி வாழ்க்கை அடிப்படை அன்பைத் தகர்க்கிறது. நான் யார் வீட்டிற்குச் சென்றாலும் அங்கு இடம் இல்லை என்றாலும் அவர்களோடு படுப்பதில் எனக்கு எந்தவிதப் பிரச்சனையும் கிடையாது...எதைப்பற்றியும் நான் கவலைபப்டுவதில்லை. அன்பு அந்த மனங்களில் இருக்கும் அன்பு அது ஒன்றைத்தான் பார்க்கிறேன்....

      நானும் மீறுவதை ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிடுபவள்தான்...ஆனால் வேண்டுமென்றே நம்மால் தவிர்க்க முடிந்தாலும் தவிர்க்காமல் செய்து ஏன் நம் உடல்நிலைக்குக் கேடு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால்...விளைந்த எண்ணமே அல்லாமல் தவறான சிந்தனையில் அல்ல...

      கீதா

      நீக்கு
  11. படிக்கவே கஷ்டமாக இருக்கிறது அங்கு வாழும் முறை பற்றி படிக்க. உடனடியாக எனக்கு பரிவை குமாரும், துரை செல்வராஜூ ஸாரும் நினைவுக்கு வருகிறார்கள். நண்பர்களில் இன்னும் எத்தனை பேரோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல லட்சம் மனிதர்களின் நிலை இதுதான் ஸ்ரீராம்ஜி

      நீக்கு
  12. காணொளி... எவ்வளவு நேரம்தான் அவரும் பொறுமைகாக பதில் சொல்வார்! பாவம் எரிச்சலில் தன் செல்லை தானே உடைக்கிறாரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்ணக்கூட இயலாத வாழ்வு காரணம் குடும்ப சூழலே...

      நீக்கு
  13. அங்கு சம்பள வகை எப்படி? ஆண்டுக்கு ஆண்டு எவ்வளவு கூடும்? எப்படி ப்ரமோஷன் வகைகள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு அடி மட்ட தெருக்கூட்டல், கழிவறை சுத்தம் செய்தல் இதற்கு முன்பு தமிழர்கள் அதிகம் இருந்தனர் தற்போது தமிழர்கள் படிப்பறிவால் ஃபேமிலி ஸ்டேடஸோடு விசாவில் வருகின்றார்கள். நல்ல சம்பளம் நல்ல வாழ்க்கை என்று சொல்வதைவிட ராஜவாழ்க்கையே... இதில் வருத்தமானது நாளடைவில் கலாச்சாசத்தை மறந்து விடுகின்றனர்.

      தற்போது பங்களாதேஷிகள் எவ்வளவு சம்பளம் குறைத்து கொடுத்தாலும் தெருக்கூட்டும் வேலைக்கு வருகின்றனர் இதற்கு அவர்களது பணமதிப்பு நமது நாட்டைவிட இருமடங்கு இதுவும் ஒரு காரணமே...

      இந்த வேலைக்கு இருவேளை உணவுடன் உணவின் தன்மை (?) உறங்குமிடம் கொடுத்து மாதச்சம்பளம் முன்னூறு திர்ஹாம்ஸ். அப்படியானால் ஒரு நாள் சம்பளம் வெறும் பத்து திர்ஹாம்ஸே...

      ///ஒரு திர்ஹாம்ஸ் என்பது இந்திய மதிப்புக்கு பதினேழு ரூபாய்///

      ஒரு காலைநேர சாண்ட்விச்சை நாற்பது திர்ஹாம்ஸ் கொடுத்து வாங்கி கடித்து விட்டு பகுதியை குப்பைத் தொட்டியில் வீசிச் செல்லும் அமெரிக்கர்களும், அரேபியர்களும் இங்கு உண்டு.

      அந்த தருணங்களில் நான் இறைவனிடம் கேட்ட கேள்வி
      மனிதர்களின் ஏனிந்த வித்தியாசம் ?

      ஸ்ரீராம்ஜி கேட்டதற்காக சம்பள விபரம் விரைவில் பதிவாக்குகிறேன்.

      நீக்கு
    2. ஸ்ரீராமோட வயிற்றெரிச்சலையும் சம்பாதித்துவிடுவோமே.

      20 வருடத்துக்கு முன்னால் மோர் வாங்க எவ்வளவு பணம் செலவழித்தேனோ கிட்டத்தட்ட அதேதான் இன்றும் செலவழிக்கிறேன் (தேன்). விலை ஏற்றம் என்பது அவ்வளவாக இல்லை. இந்த ஊரில், தினார்-அமெரிக்க டாலர், 30 வருடங்களாக ஒரே அளவுதான்.

      வெறும் ரொட்டி, கபூஸ் எனப்படும் சுட்ட ரொட்டி ('நான் போன்று), 20 வருடங்களாக ஒரே விலைதான். கோதுமை மாவு, ரவை - 20 வருடங்களாக அதே விலை.

      இங்கு, வீடு வாடகை மட்டும், கடந்த 10 வருடங்களில் அதிகமாகிவிட்டது.

      நீக்கு
    3. நண்பரே யூ.ஏ.ஈ. நாட்டைப் பொருத்தவரை எல்லாமே மாறிவிட்டது நான் தொடக்கத்தில் 0.50 ஃபில்ஸுக்கு டீ குடித்தேன் இன்று 2.00 திர்ஹாம்ஸ் ஆகிவிட்டது.

      தற்போது ஜி.எஸ்.டி. போன்று வரி வந்து விட்டதாம் ஐடியா உபயம் திரு. மோடி அவர்கள் என்று கேள்விப்பட்டேன்.

      நீக்கு
    4. கடந்த 10 ஆண்டுகளாக விலையேற்றம் யூஏயிலும் இருக்கிறது. அங்கு வாடகை எக்கச்சக்க ஏற்றத்தினால்தான் பொருட்கள் விலை உயர்ந்தது. 94ல், போதும் போதும் என்று நான் சொல்லும்வரை உணவு, சப்பாத்தி, இனிப்பு போட்டுக்கொண்டிருந்த (வெள்ளி, இனிப்பு ஜாமூன். மதிய உணவு விலை 4 திர்ஹாம்) குஜராத்தி உணவுக் கடை, சில வருடங்களுக்கு முன்பு நான் போயிருந்தபோது, ஒரு ஜிலேபியை எடுத்ததற்கு, உங்களுக்காக ஓகே, இல்லைனா 1 திர்'ஹாம் சார்ஜ் பண்ணியிருப்பேன் என்றான், மதிய உணவும் 11 திர்'ஹாமாக ஆகிவிட்டது. கொடுமை.

      நீக்கு
    5. ஆம் வாடகை நான் கம்பெனியை விட்டு போன 2003-ல் பெட்டுக்கு 75.00 திர்ஹாம்ஸ் கொடுத்தேன்.

      2016-ல் 1200.00 திர்ஹாம்ஸ் கொடுத்தேன்
      குப்பூஸ் ஜாத்தர் 0.50 ஃபில்ஸ் இன்று 4.00 திர்ஹாம்ஸ்

      நீக்கு
    6. நெல்லை ஆ!! ஆ!!!!! நிஜமாவா தயிர் விலை!! அவ்வளவுதானா விலை ஏற்றம் இல்லைஅய..

      கில்லர்ஜி கூடிருக்குனு சொல்றாரே!!

      கீதா

      நீக்கு
    7. திரு. நெ.த. அவர்கள் சொல்லி இருப்பது பஹ்ரைன் நாட்டு நிலவரம்.

      நீக்கு
  14. ஒரு வெளிநாட்டு வாழ் மனிதனின் வாழ்க்கை இத்தனை கொடுமையா...!
    இதற்கு நரகம் பரவாலை போலையே ...!

    காணொளி பார்த்தேன் முதலில் சிரித்தேன் பிறகுதான் சிந்தித்தேன்.
    அவர்கள் படும் கஷ்டத்தை பதிவில் ஆழமாய் சொல்லியிருக்கிறீர் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இன்னும் எவ்வளவோ கஷ்டங்கள் உண்டு இங்கே...

      நீக்கு
  15. நிறைய கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் தொழிலாளர்கள்.
    என்ன செய்வது தன் குடும்பத்தை காக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் அந்நிய நாடு போக வேண்டிய நிர்பந்தம் ஏற்படுது.

    நம் நாட்டில் கூழோ கஞ்சியோ குடித்துக் கொண்டு குடும்பத்துடன் இருந்தால் என்ன? பணம் பணம் அது படுத்தும் பாடு

    முன்பு கோபி என்ற "தம்பி எடக்கு மடக்கு" என்ற தன் வலைத்தளத்தில்

    துபாய் பற்றி தொடர் கட்டுரை எழுதினார். கட்டிட தொழிலாளி படும் துனபங்கள் , விடுமுறையில் செல்லும் போது அவர்கள் படும் அவதிகள் மேலும் மேலும் கடன் வாங்கி அதை அடைக்க ஓடும் தொழிலாளி

    அதிலும், ரோடு வேலை செய்யும் தொழிலாளிகள் படும் பாடு, சொல்லி மாளாது... நம்மூர் போல, நிழலுக்கு ஒதுங்க பெரிய அளவிலான மரங்கள் கூட இங்கு இல்லை. இப்படி அவர் சொல்லி இருக்கிறார்.

    டிரைவரின் கோபம் ! பாவம் சாப்பட்டை நிம்மதியாககூட சாப்பிட முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உண்மைதான் குடும்பபாசம் வைத்தவர்களின் நிலைப்பாடு கடைசிவரை கஷ்டமானதே...

      நானும் ஒரு காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டவன்தான் எனினும் நான் முயற்சித்து ராஜவாழ்க்கையையும் பிடித்து விட்டேன்.

      இருப்பினும் கடைசிவரை மகிழ்ச்சியை மட்டும் தொட இயலவில்லை.

      நீக்கு
  16. பதிவின் ஆரம்பத்தில் உள்ள படமும் செய்தியும் மனதை நெகிழவைத்தன. அவரவர்களுக்குத்தான் வாழ்க்கையில் தாம் எதிர்கொண்ட சிரமங்கள் தெரியும். பலர் அதனைப் புரிந்துகொள்வதில்லை. பார்ப்பவர் கோணங்கள் தற்போது வேறு விதங்களில் உள்ளன என்பது வேதனையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் ஆத்மார்த்தமான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  17. கில்லர்ஜி எழுதியிருப்பது ஓரளவு உண்மை நிலைதான். 3000 திர்'ஹாமுக்கு மேல் சம்பாதிப்பவர்கள் ஓரளவு நன்றாகத்தான் இருக்கிறார்கள். மனைவியுடன் சேர்ந்து இங்கு இல்லாதவர்கள்பாடு திண்டாட்டம்தான்.

    ஆபீசில், முன்பெல்லாம் (20-25 வருடங்களுக்கு முன்பு) மெயின்டெனென்ஸ் டிபார்ட்மென்டில் ஓரிருவர் ஆபீசை கிளீன் செய்யும் வேலைக்காக நியமிக்கப்பட்டிருப்பர். பிறகு இதற்கு என்று பல கம்பெனிகள் தோன்றிவிட்டன. அவர்களுக்கு ஒரு தொகையைக் கொடுத்துவிட்டால், தினமும் ஆபீஸைச் சுத்தமாக்கிவிட்டுச் சென்றுவிடுவர். அப்படி வேலை செய்பவர்களுக்கு, (அந்த கம்பெனிக்கு) ஒருவருக்கு 2500 திர்'ஹாம் வீதம் கம்பெனி கொடுத்துவிடும். ஆனால் அந்தக் கம்பெனி, 500-900 வரை தங்கள் வேலையாட்களுக்குக் கொடுக்கும். இது தவிர, தங்குவதற்கு பலர் பகிர்ந்துகொள்ளும் அறை (சிங்கிள் இரும்புக் கட்டிலைக் கற்பனை செய்துகொள்ளுங்கள்-ஒரு ஆள் மட்டும் படுக்க முடியும். அதன் மீது இன்னொரு கட்டில், அதன் மீது இன்னொரு கட்டில். இதுபோல் அந்த அறையில் 3 கட்டில்கள். ஒரு அறையில் 9-10 பேர் தூங்கலாம். அவர்களின் சொத்து ஒரு பெட்டி, கைப் பெட்டி. அவ்வளவுதான். வெள்ளி விடுமுறை நாட்களில் பொதுவாக இருக்கும் வாசிங் மெஷினில் துணி துவைத்துக்கொள்ளணும். சாப்பாடு மூன்று வேளையும் கிச்சனில் கிடைக்கும். அதன் தரம் வெகு சுமார். அதன் காரணம், கிச்சனில் வேலை செய்பவர்கள் 14 மணி நேரம் வேலை செய்யணும். இந்த கிளீனிங் வேலை செய்பவர்கள் காலை 4 மணிக்கு ரெடியாகிவிடவேண்டும். வேன் அவர்களை அவர்களுக்கு உரிய ஆபீசுகளில் விட்டுவிடும். 3 மணி நேரம் சுத்தமாக்கியதும் அடுத்த இடம். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் சர்வ சாதாரணமான வேலை. ஓவர் டைம் என்று சொன்னாலும் மிக மிகக் குறைவான பணம்.

    இப்படி சம்பாதிப்பவர்கள், ஊருக்கு மாதம் 5000 ரூ அனுப்புவார்கள். ஊரில் உள்ளவர்களுக்கு இவர்களைப் பற்றிய சிந்தனை இருக்காது. அவர்கள் அவரவர் தேவைக்கு செலவழித்துக்கொண்டு இருப்பர். இதையெல்லாம் பல இடுகைகளாக எழுதலாம்.

    மற்றபடி சாதாரண சம்பளத்தில் வேலை பார்ப்பவர்கள் (பியூன் போன்று), 6-8 பேர் ஒரு அறையில் தங்குவதும், தங்கள் மனைவியிடம் பேச, பூங்காவுக்கு ஒதுங்குவதும், நாளை காலாவதியாகும் சிக்கன் போன்றவற்றை அடிமாட்டு விலைக்கு வாங்கி அதனை ஃபிரிட்ஜில் வைத்திருந்து உபயோகப்படுத்துவதும், வேறு வழியில்லாமல், ஊருக்குப் போகும்போது மட்டும், ஜில் ஜில் துணிகள், சிலர் கோட்டெல்லாம் போட்டுக்கொண்டு போவதும் நடந்துகொண்டே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி தாங்கள் சொன்ன இருநிலைப்பாட்டிலும் நான் வாழ்ந்து விட்டேன்.

      என்னவொன்று மனைவி இருந்திருந்தால் எல்லாம் நிறைவு பெற்றிருக்கும்.

      நீக்கு
  18. 89ல் நம்ம ஊரில் என் நண்பி வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவருடைய சித்தப்பாவின் மனைவி (26 வயசு?) ஒரு சிறு குழந்தையோடு இருந்தார். அவர்களெல்லாம் என்னிடம் ரொம்ப சகஜமாக பேசுவார்கள். ('நான் வில்லங்கம் பிடித்தவனல்ல. நல்ல பெயரை மெயின்டெயின் செய்வேன்). அந்தப் பெண் என்னிடம், என் நண்பி இல்லாத சிறிய இடைவெளியில் சொன்னாள் (ர்), 'எந்தக் காரணம் கொண்டும் மனைவியை இங்கு விட்டுவிட்டு வெளி நாட்டு வேலை என்று போய்விடாதீர்கள். என் கஷ்டம் யாருக்கும் தெரியாது' என்று கண்ணீர் விட்டாள். அப்போது, வெளி நாட்டு வேலை என்ற எண்ணம் துளிர் விட ஆரம்பித்திருந்த நேரம்.

    ரொம்ப எழுதலாம் இதனைப் பற்றி. பிறகு ஒரு சந்தர்ப்பத்தில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் சொன்னது மிகச் சரியானதுதான் நண்பரே.... வாழ்க்கை வாழ்வதற்கே... பணம் 90 வயதில்கூட சம்பாரிக்கலாம் ஆனால் இளமை குறுகிய காலமே....

      ஆண்டொன்று போனால்
      வயதொன்று போகும்
      அதற்கு முன்னாலே
      வா... வா... வாவா...

      நீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    தங்கள் பதிவையும், காணொளியையும், அதற்கு வந்த கருத்துரை பதில்களையும் படித்ததும் மனதிற்கு வேதனையாக இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் பணந்தான்! அதைவிட மூலம் ஆசை. வெளிநாடு சென்றால் நிறைய சம்பாதிக்கலாம் ஒரளவு கடன்களை அடைத்து விட்டு செளகரியமாக வாழலாம் என்ற நியாயமான ஆசைகள்தான். ஆனால் அங்குபோன பிறகுதான் கஸ்டங்கள் என்னவென்று புரிகிறது. இங்குள்ள உறவுகளுக்கு கணவனோ, சகோதரனோ, படும் சிரமங்கள் புரியாது சற்று அகல கால்களுடன் செலவுகளுக்கு வழி வகுத்துவிட்டால் அங்குள்ளவருக்கு கஸ்டங்கள் தொடர்கதை ஆகிவிடும். சில இல்லங்கள் விதிவிலக்காயிருக்கலாம். மொத்தத்தில், இந்த ஆசையும்.அதன் தேவையை பூர்த்தி செய்வதற்காக உண்டான பணமும் இரு பயங்கர ஆயுதங்களாக ஒவ்வொரு மனிதரையும் குத்தி கிழித்துக் கொண்டிருப்பதென்னவோ உண்மை. தாங்கள் பதிவில் எழுதியிருக்கும் விசயங்கள் ஆணித்தரமான வருந்தக் கூடிய உண்மைகள். சாப்பிட கூட இயலாமல் அந்த டிரைவர் படும் பாடு வருந்த வைக்கிறது.பாவம்!

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஆம் ஆசைதானே இதற்கெல்லாம் மூலகாரணம் எனது வருத்தம் என்னவெனில் இப்படி இளமையை தொலைத்து விட்டு கஷ்டப்பட்டு சம்பாரிக்கும் பணத்தை பலரது குடும்பங்கள் ஊதாரித்தனமாக செலவு செய்வது கண்டு கோபம் வருகிறது.

      எனக்கு தெரிந்தவன் குடும்பத்தில் நான் தலையிட்டு சொன்னேன் அவன் அங்கு கஷ்டப்படுகின்றான் செலவுகளை கட்டுப்படுத்துங்கள் என்று அதற்கு நீ மட்டும் வசதியாக வாழுறே எங்களைக் கண்டு பொறாமையா ? என்றார்கள்.

      நான் இப்பொழுது பெரிய லெவலில் நல்ல சம்பளம் வாங்குகிறேன் அரசாங்க வேலை அவன் சின்ன சம்பளம் வாங்குகிறான் என்றதற்கு...

      அதெப்படி ரெண்டு பேரும் ஒன்றாகத்தானே போனீங்க.... உனக்கு மட்டும் எப்படி அரசாங்க வேலை பெரிய சம்பளம் ?

      நீக்கு
  20. எனது வீட்டுக்கு வார இறுதி நாளில் சுத்தம் செய்வதற்காக ஒரு பையன் வந்தான். ரொம்ப நல்லா வேலை பார்ப்பான் (3 மணி நேரம்). நான் அவனுக்காக ஏதேனும் சமைப்பேன். அவன் கிளம்புவதற்கு 1/2 மணி முன்னால் சாப்பிடுவான். நல்ல பையன் (தேனியைச் சேர்ந்தவன் என்று நினைக்கிறேன்). இங்கு 900 திர்'ஹாம்தான் சம்பாதித்தான். அப்புறம் ஊருக்குப் போய், ஸ்டேஷனரி கடை ஆரம்பித்து, 4 வருடங்களில் 2 பேருக்கு சம்பளம் கொடுக்கிறான். ஆனால் இது மாதிரி எல்லோருக்கும் சாத்தியமல்ல. நம்ம ஊரில் வேலை இல்லாததாலும், வெளி நாட்டு வாழ்க்கை என்றால், நல்லா சேமிக்க முடியும் என்ற நினைப்பாலும்தான் சாதாரண வேலைகளுக்கு அங்கிருந்து ஆட்கள் வருகின்றனர். நிறைய ஆட்கள் வர ரெடியா இருப்பதால், சம்பளம், வசதிகள் போன்றவை போகப் போகக் குறைகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் தேனி நண்பரைப்போல எல்லோரும் சுறுசுறுப்பாக உழைத்து முன்னேரும் எண்ணம் வரவேண்டுமே.... இதுதானே நமது நாட்டில் பிரச்சனை.

      நீக்கு
  21. வெளிநாட்டில் அதுவும் தனியாக வாழ்ந்தவருக்கே அது என்னமாதிரி நரகமென்பது தெரியும், புரியும்... அந்த காணொளியில் நடந்த அதே மாதிரியான சம்பவம், என்ன அவன் நேர்ல வந்து சொல்லிட்டுப்போனான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது முதல் வருகைக்கு வந்தனம் தாங்களும் அனுபவசாலி என்று நினைக்கிறேன் வாழ்க நலம்

      நீக்கு
  22. வெளி நாட்டுக்கு போயியும் கஷ்டப்படக்கூடாதுன்னுதான் நண்பரே! நான் உள்நாட்டிலே கிடைக்கும் இம்சைகளை பெற்று கஷ்டமில்லாமல் இருக்கிறேன் நண்பரே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வகையில் தங்களுக்கு மதுரை மீனாட்சி அருள் இருக்கிறது நண்பரே எனக்குத்தான் வாழ்வில் இருள் கவ்விக் கொண்டது வாழ்க நலம் இம்சையின்றி

      நீக்கு
  23. என்னுடைய உலகளாவிய பயண வாழ்வில் மிடில்-ஈஸ்ட் பிரதேசம் போனதில்லை. அதாவது, தவிர்த்திருக்கிறேன். ஆயினும் துபாய், அபுதாபி வழி சின்ன ஹால்ட் கொடுத்துப் பயணித்திருக்கிறேன். ஆங்காங்கே கண்டது கேட்டதிலிருந்து, இந்திய உபகண்ட நாட்டுத் தொழிலாளர் படும்பாட்டை அறிவேன். இப்போது நீங்கள் ஒரு க்லோஸ்-அப் ஷாட் கொடுத்து திக்குமுக்காட வைத்திருக்கிறீர்கள்.

    சரியான படிப்பின்றி சிறு சிறு வேலைகளில் சிக்கி, அதுவும் இத்தகைய பிரதேசங்களில் வாழ்வின் கொடுமையை அனுபவித்து, இந்தியாவில் திரும்பியவுடன்
    ஒருவன் அலட்சியப்படுத்தப்பட்டாலோ, அல்லது நோய்வாய்ப்பட்டு சொச்ச காலத்தைக் கழிக்க நேர்ந்தாலோ கொடும்பாவமது. அதுவும் புரிந்துகொண்டு பாசம் காட்டவேண்டிய பெற்ற பிள்ளையே அவமதித்தால் என் செய்வான்.. எங்கேபோய் முட்டிக்கொள்வான் அவன் ..

    அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
    இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா
    சோதனை மேல் சோதனை..
    போதுமடா சாமி

    எனத் துவண்டு ஓரத்தில் வீழ்ந்துமுடிவான் அவன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அருமையான மேற்கோள் காட்டி நல்ல பாடலையும் குறிப்பிட்டீர்கள்

      தாங்கள் சொன்னதுபோல குழந்தைகள் புரிந்து கொள்ளாமல் போனதற்கு காரணம் அந்த பேதை மனம் குழந்தைகளுக்கு கஷ்டத்தை கொடுத்து பணத்தின் அருமையை உணர்த்தாததே...

      என்று ஒரு தந்தை தனது மகன் கஷ்டப்படக்கூடாது என்று நினைக்கின்றானோ... அன்று அந்த மகன் நாசமாவதற்கு அடிக்கல் நாட்டப்படுகின்றது

      நீக்கு
  24. மிகவும் வேதனையாக உள்ளது உங்கள் பதிவு.

    "என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்."

    நான் தவறாக இதை கூற வில்லை. இது எனக்கும் பொருந்தும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      நல்ல பாடல் வரிகளை நினைவூட்டினீர்கள்.

      இருப்பினும் நமது கையை வெளிநாட்டில் ஏந்த விட்டது அறுபது ஆண்டுகளாக... நம்மை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழும் அரசியல் வியாதிகள்தானே ?

      ஆனாலும் இந்த சொறி சிறங்குகளை ஒட்டிக் கொண்ட நாம்தான் அடிப்படை குற்றவாளிகள்.

      வருகைக்கு நன்றி நண்பரே.

      நீக்கு
  25. நெய்வேலிக்கு என் மச்சினன் வீடுக்கு சென்றபோது அவரது அடுத்த வீட்டில் இருந்தவர் துபாய் அரசுக்கு ஒரு மனு எழுதிக் கொடுக்கக் கேட்டார் அவரதுகணவன் சிறியில் இருந்தார் அவர் ட்ரைவர் ஒரு விபத்தில் உள்ளே தள்ளி விட்டார்கள் ஏதாவது பண்டிகை சமயம் மன்னிப்பு கிடைக்கலாம் என்பதால் கேட்டு ஒருமனு. துபாயில் கைதுசெய்யப்பட்டவர்கள்ன் பெயர்களைக் கூட அவர்களது இனிஷியல் மூலம்தான் பத்திரிகையில் வெளியிடுவார்கள் உறவுகளுக்கு தெரிவதும் காலம் கடந்தே என்று கேள்விப்பட்டிருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா என்னைப் பொருத்தவரை ஏதோ கிடைத்ததை வைத்து மனைவி, மக்களோடு வாழ்வதே நல்லது.

      எனது மகனை இதற்காகவே வெளிநாட்டு ஆசையை தொடக்கம் முதலே நிராகரித்தேன்.

      நீக்கு
  26. வீட்டு வேலைக்காக செல்லும்பெண்களின் நிலையும்மோசமானதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா அது வெளியில் சொல்ல இயலாத கொடுமை.

      நீக்கு
  27. மனம் கனத்துப் போய்விட்டது நண்பரே
    தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னையே தியாயம் செய்வோர் இவர்கள்
    தாங்களும்தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே தியாக வாழ்க்கை தவறல்ல!

      ஆனால் அது நிராகரிக்கப்பட்டு உதாசீனப்படுத்தும் போதுதான் வேதனையாக இருக்கிறது.

      நீக்கு
  28. அன்பின் ஜி..
    தங்களுடைய பதிவினைக் கண்டு பதைபதைப்புக்குள்ளாகி எல்லாரும் சொல்லி விட்டார்கள்...

    இதற்குமேல் நான் சொல்வதற்கு என்ன இருக்கின்றது?..

    ஆனாலும்,

    இருக்கின்றன - ஒரு சில!..

    சனிக்கிழமைக்குப் பிறகு தொடர்கின்றேன்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      உங்களை ஆவலுடன் எதிர் பார்த்திருந்தேன் சனிக்கிழமை தங்களது பதிவை இடுங்கள்.

      மற்ற கொடுமைகளையும்...

      நீக்கு
  29. மனம் வேதனையில் ஆழ்ந்து விட்டது. ஓரளவுக்கு இவற்றைப் பற்றிக் கேட்டு அறிந்திருந்தாலும் சாப்பிடக் கூட விடாமல்! :( நீங்கள் சொல்வது போல் தொழிலாளர்கள் பாடு கஷ்டம் தான். மனைவி, குடும்பத்தை விட்டுவிட்டு அங்கே தொலைபேசிப் பேச்சுக்காக மட்டும் காத்திருந்து கொண்டு, உயிர் ஊரில், உடல் வேலை செய்யுமிடத்தில் என்று இருந்து வாழ்க்கை நடத்த வேண்டும். என்றாலும் எவ்வளவு சம்பாதித்துக் கொடுத்தாலும் போதாது என்பவர்கள் இருந்தால் என்ன செய்ய முடியும்! :( உண்மையை அப்பட்டமாக எடுத்துச் சொல்லும் பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  30. நான் 2தரம் வந்துபார்த்து கருத்தெழுதாமல் சென்றுவிட்டேன். என் கூடபடித்த தோழியின் அம்மாவின் கதை ஞாபக்த்தில்.மனம் கவலையாகிவிட்டது. கணவர் இறந்து,குடும்பபாரம் தலையில். குவைத் வந்து அனுபவித்த துயர் கொஞ்சநஞ்சமல்ல. ஊர் வந்து உயிர் மாய்த்து 3குழந்தைகளை அநாதையாக்கியது தான் மிச்சம்.
    ஊரிலிருந்தாவது பத்துபாத்திரம்,கூலி வேலை செய்து ஒருவேளை கஞ்சி குடித்திருக்கலாம்.
    உண்மைநிலையை நீங்க எழுதி விட்டீங்க அண்ணா ஜீ.இன்னும் என்னென்ன சொல்லமுடியா துயருடன் அவரவர் குடும்பத்துக்காக உழைக்கிறார்களோ..
    அதனை தெரிந்து கொள்ளா நிலையில் ஊதாரித்தனமாக,யோசிக்காமல்,கவலைப்படாமல் செலவு செய்யும் குடும்பத்தினரை நினைத்தால்.... 😡
    காணொளி பற்றி சொல்லமுடியல அண்ணா ஜீ. அவ்வளவு கஷ்டமா இருக்கு பார்க்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக இதனைப் போன்று பல சம்பவங்கள் உண்டு தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  31. பாலைவனத் தேசத்தில் அத்தேசத்தின் நிலைத்தைப் போல இப்படி வெறுமைதான் போல வாழ்க்கை!!! அடிகள் எல்லாம் விழுமா ஹையோ!!! ஏன் கேள்வி கேட்பார் இல்லையா....கடைநிலை ஊழியர்களின் வாழ்க்கை வேதனைதான் அங்கு என்பது முன்பே பல செய்திகளில் வாசித்ததுண்டு. அதுவும் ஊருக்கு வெளியே அடைத்துப் போட்டு ஜெயில் போல இருக்கும் அறைகளைக் கூடப் படங்களாகப் போட்டிருந்தார்கள் அதன் ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கும் அந்த வேதனையான முகங்கள் இன்னும் கண்ணில்..ஜி இதையேதான் அங்கு துரை அண்ணாவுக்கும் இடுகிறேன்...நேற்று இங்கு இட நினைத்து இட முடியாமல் போனது..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்வி கேட்க ஆள் இல்லையா ?

      போலீஸ் ஸ்டேஷன் போனாலும் கதை திறித்து விடப்படும் திருடி விட்டான் என்று...

      நீக்கு
  32. அரபு நாட்டு வாழ்க்கை அதுவும் தொழிலாளர்களின் வாழ்க்கை பற்றி நன்றாகவே தெரியும். கேரளத்தில் இருந்து அங்கு அதிகம் பேர் இருக்கிறார்களே. அதில் பல வகையறாக்கள் உண்டு...கூலித் தொழிலாளிகளாகச் செல்வதிலிருந்து உயர்தர வேலைக்குச் செல்பவர்கள் வரை..இதில் அதிகம் கஷ்ட்ப்படுபவர்கள் கூலி வேலைக்குச் செல்பவர்கள்...பாவம்...இதில் சில தில்லுமுல்லுக்கள் நடந்து ஏமாறுபவர்களும் உண்டு...பணத்தை பாஸ்போர்ட்டை இழப்பவர்களும் உண்டு. வேதனை அதைக் கேட்கும் போது.

    உங்கள் படங்கள் அனைத்தும் அழகு..ரசனை மிக்கதாக இருக்கிறது...

    துளதிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அடிமட்ட தொழிலாளர்களுக்கே கூடுதல் கஷ்டங்கள்...

      நீக்கு
  33. கிடைப்பதை வைத்துக்கொண்டு நம்மூரிலேயே வாழ்வது நல்லது என்பதை சொல்லாம்ல் சொல்லிவிட்டீர்கள்.

    காணொளி மனதை என்னவோ செய்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே இந்த வார்த்தையை நான் நேரடியாக சொல்ல தகுதி இல்லாதவன்.

      நீக்கு
  34. வணக்கம் நண்பர்களே.. !

    தமிழுக்கான புதிய திரட்டியாக http://gossiptamil.com/aggre/ வெளிவந்துள்ளது. உங்களது இணையத்தளங்களின் பதிவினை இத் திரட்டியினூடாக பகிர்ந்து கொள்ளவதன் மூலம் உங்கள் இணையத்தளதிற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    நன்றி
    http://gossiptamil.com/aggre/

    பதிலளிநீக்கு