தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், நவம்பர் 13, 2018

மேகத்தை தூது விட்டேன்...என் காதலை வாழ வைக்க
மேலத்தெரு மேகலாவுக்கு...

மேகத்தை தூது விட்டேன்
மோகத்தை விரட்டி விட்டது

நிலவை தூது விட்டேன்
உளவு சொல்லி விட்டது

மழையை தூது விட்டேன்
உலை வைத்து விட்டது

காற்றை தூது விட்டேன்

காத்தாட வைத்து விட்டது

தென்றலைத் தூது விட்டேன்
தெறிக்க வைத்து விட்டது

மயிலைத் தூது விட்டேன்
உயிலை எழுத வைத்து விட்டது

குயிலைத் தூது விட்டேன்
பெயில் ஆக்கி விட்டது

மைனாவை தூது விட்டேன்
நைனாவை தூக்கி விட்டது

குருவியை தூது விட்டேன்
கருகிப் போய் விட்டது

புறாவைத் தூது விட்டேன்
உருவை மாற்றி விட்டது

காகத்தை தூது விட்டேன்
தாகத்தை கெடுத்து விட்டது

வண்டை தூது விட்டேன்
குண்டை போட்டு விட்டது

கழுகைத் தூது விட்டேன்
கழுவி ஊத்தி விட்டது

ஈயைத் தூது விட்டேன்
ஈயத்தை காய்ச்சி விட்டது

கொசுவைத் தூது விட்டேன்
குசுவிக் கெடுத்து விட்டது

முடிவில் காசு கொடுத்து மனிதப்
புரோக்கரைத் தூது விட்டேன்

புரோகிதரோடு நடத்தி வைத்தார்
எங்கள் கோலாகலத் திருமணத்தை...

சாம்பசிவம்-
மேலத்தெரு மேகலாவுக்குனு சொன்னது சரி, அவ மேகநாதன் பொண்டாட்டிதானே... இது அநியாயம் இல்லையா ?

Chivas Regal சிவசம்போ-
இது தப்பு இல்லைனு நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியாச்சே... நாங்க நீதியை மதிக்கிறவங்க... அதனாலதான் கொக்கு மாதிரி இத்தனை வருசமா காத்து இருந்தோம்.

44 கருத்துகள்:

 1. 🌚🌚🌚🌚🌚ஆஆஆஆஅ மீதான் 1ச்ட்டூஊஊஊ.... குதிரை ஒன்று புகையாப் பறக்கிறதே வானத்தில... இது தேவகோட்டை வெரி சோரி நியூயோர்க் வானமோ?:)...

  பதிலளிநீக்கு
 2. முடிவில் செய்ததை ஆரம்பமே செய்திருக்கலாமே:).. அனுபவப்பட்ட பின்புதானே வாழ்க்கையே புரியுது:).

  ஓ இது கள்ளக்காதல் பற்றிய பாட்டோ.. ஹா ஹா ஹா ஜொள்ளவே இல்ல:).. காதல்ல ஏது நல்ல காதல்... கள்ளக்காதல்....:)😺😺😼😽

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்க அங்கிள் சிவசம்போவிடம் கேட்கிறீங்களோ...

   நீக்கு
 3. ஏதேது இதுக்குள்ள ஏகப்பட்ட சங்கதி ஒளிஞ்சிருக்கும் போல!...

  எப்படியானாலும்
  காசு தான் முக்கியம்...ந்னு
  நிரூபிச்சிட்டீங்க!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி
   காசு இருந்தால்தானே கோவில்களிலேயே தெய்வங்களுக்கு திருக்கல்யாண வைபவங்கள் நடக்கிறது.

   நீக்கு
 4. நான் கூட நெனச்சேன்...

  மேலத்தெரு மேகலா இல்லேன்னா
  கீழத்தெரு சீதளா...ந்னு!...

  அவ புருசன் இன்னும் ஜெயில்ல தான் இருக்கானாம்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீழத்தெரு சீதனாதான், சிலுக்குவார்பட்டி சிங்காரத்தோட செட்டில் ஆகிட்டாளாமே...

   நீக்கு
  2. நுண்ணிய விவரங்கள்!

   நீக்கு
  3. ஆம் உண்மைதான் ஜி

   நீக்கு
  4. துரை சார்... நான் இதை ரசித்தேன். ஆனா இந்த மாதிரி மேகலா, சீதளா ஸ்டாடிஸ்டிக்ஸ்லாம் விரல் நுனில வச்சிருக்கீங்களே... கில்லர்ஜிக்கும் உங்களுக்கும் ஏதாவது டீலா? ஹா ஹா ஹா

   நீக்கு
 5. தூது செல்ல ஒரு தோழர் இல்லையென துயர் கொண்டாரோ தலைவர்....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஹா அருமையான பாடலை இங்க சொல்லிட்டீங்களே ஸ்ரீராம்...சூப்பர்...

   கீதா

   நீக்கு
  2. சரியான பாடல் வரிகளை சொன்னீர்கள் ஜி

   நீக்கு
  3. ஸ்ரீராம்... இப்போதான் பார்த்தேன் உங்க கமெண்டை.

   காதல்ல, காதலிக்கு நண்பரைத் தூதுவிட்டால் என்ன ஆகும்னு உங்களுக்குமா தெரியாது? தூது செல்ல ஒரு தோழிதான் காதலனுக்கு வேணும். இல்லாவிட்டால் பொடிப் பசங்க அல்லது வயதானவங்க. நண்பரைத் தூதுவிட்டால் அவங்க லவட்டிக்கினு போயிடுவாங்க. அனுபவஸ்தன் சொல்றேன். கேட்டுக்குங்க.. ஹாஹா

   நீக்கு
  4. நெல்லைத்தமிழருக்கு..
   லவட்டிக்கினு போயிடுவாங்க அனுபவஸ்தன் ஆஹா பழையது வெளியாகுதே.... (பூனைக்குட்டி வெளி வரட்டும்)

   எப்பவுமே எனக்கும், குவைத்ஜி அவர்களுக்கும் காமினேஷன் ஒத்துப்போகும்...

   நீக்கு
  5. கில்லர்ஜி.. இந்தச் சம்பவத்தை கதையா எழுதத் தெரியலை. ஆனால் நடந்ததை ஸ்ரீராமுக்கு சம்பவங்களாக அனுப்பினதை, புரியலை கதை வடிவத்துல இல்லைன்னுட்டார். ஹாஹா. அதுக்கு அப்புறம் அதனைச் செப்பனிட்டு கதை வடிவத்தில் எழுத இன்னும் வேளை வரவில்லை...

   நீக்கு
  6. எழுதுங்கள் காவியங்களை மறைக்ககூடாது.

   நீக்கு
 6. குதிரை பாய்ச்சல்ல போயிருக்காரு போல ஆளு!! ஹா ஹா ஹா

  பாட்டெல்லாம் நல்லா கீது...

  ஆனா விலங்குகள் நல அமைப்பு எங்க் முக்கியமான ஆளு வந்தாங்கனா உங்கள கோர்ட்ல கேஸ் போட்டுறலாம் போல..ஹா ஹா ஹா விலங்குகள் பறவைகள் எல்லாம் அப்பாவிங்க் மனுஷன் தான் ஏமாத்துற ஆளு...அதுங்கனால காதல் கருகிச்சு, கவுந்துச்சுனு சொன்னதுனால அதுங்க மான நஷ்ட ஈடு கேட்டு போராட்டம்...ஹா ஹா ஹா

  ஸ்ரீராம மட்டும் அன்னிக்கு கோர்ட்ட்ல இழுத்தீங்கல்ல...ஹா ஹா ஹா ஹா...அந்த முக்கியமான ஆளு கரீக்டா வர மாட்டேன்றாங்க...ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீதிமன்றம் இப்படி எல்லாம் தீர்ப்பு கொடுக்குமா ?

   அடியாத்தி பீப் பாடல் பாடுனவங்களெல்லாம் சுதந்திரமாக திரியிறாங்களே...

   நீக்கு
 7. ப்ரித்தானிய நீதிபதிக்கு ஏனோ கண்ணுல படலை போல

  ஹிஹிஹிஹி


  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... கொளுத்திப்போட்டு விட்டீர்களா...?

   நீக்கு
 8. தூது வேறு வகையான சிக்கலை உங்களுக்கு உண்டாக்காமல் இருந்தால் சரி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே உண்மை அவ்வகையில் நலமே...

   நீக்கு
 9. கற்பனைக் குதிரை வானத்தில் பறக்குதுதே!

  பதிலளிநீக்கு
 10. கில்லர்ஜி நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்பு கிளம்பியதா? இல்லை என்றே தோன்றுகிறது... ஏன் கேக்கறேன்னா சுப்ரீம் கோர்ட்டின் நல்ல தீர்ப்புகளான பொது இடங்களில் புகைப்பிடிக்கக் கூடாது என்ற தீர்ப்புகளை மக்கள் கடைபிடிக்காத போது இது மிக மிக அசிங்கமான ஒன்று தப்பில்லை என்று சொல்வது எவ்வளவு முரண் இல்லையா...

  அது போல சபரிமலை தீர்ப்பு எதிர்ப்பு என்று கிளம்பியது ஆனால் இந்த அசிங்கமான தீர்ப்புக்கு யாரும் பெரிய அளவில் கிளம்பாதது ஆச்சரியாமான ஒன்று என்றாலும் சொல்வதற்கில்லைதான் ஏனென்றால் பல பெரும் புள்ளிகள், புள்ளிகள் மற்றும் தவறு செய்யும் ஆண்களுக்கு சப்போர்ட்டிங்காக இருப்பதால்....இதற்கு முலாயம் சிங்க் யாதவின் கமென்ட்ஸ் மிக மிக மிக மிக அசிங்கமான ஒன்று...

  பெண்களும் கிளம்பாதது ஆச்சரியமாக உள்ளது... எது எதெற்கெல்லாமோ போராட்டக் கொடி பிடிக்கிறார்கள்...எனக்கு ஒன்னும் புரியலைகில்லர்ஜி...

  இன்று நானும் மகனும் பேசியது பல விஷயங்கள் அதில் முதலில் வழக்கம் போல இசை பற்றி தொடங்கி நான் செய்யும் பணிகள் பற்றி ப்ளாக் எல்லாம் சொல்லிவிட்டு நீங்க பேசின விஷயம் பற்றி சொல்லி...அவனும் உங்களைப் போல பொருமி... அப்புறம் அவன் இவ்வளவு நால் பிசியாக இருந்ததால் இந்த மீ டூ பற்றி அப்புரம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பற்றி எதுவும் தெரியலை...நான் அப்டேட் பண்ணியதும் அவன் கூகுள் பார்த்து என்னம்மா இது இப்படி அசிங்கமா இருக்கே, முலாயம் இப்படி பேசிருக்காரு என்று தொடங்கி...நம்ம ஊரு உருப்படறாப்ல தெரியலை என்று சொல்லிட அவனுக்கு எமர்ஜென்சி கால் வர முடிச்சுட்டோம்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைய நாட்டு நடப்பு மக்களுக்கு பயனாகும் என்பதுபோல் இல்லை இதுதான் உண்மை.

   நீக்கு
 11. நீங்கள் தூது அனுப்பிய எதுவுமே டிராவலிங்கு அலவன்சு கேக்காது என்பதே ...........ஹைலயிட்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மேடம் அதனாலதான் மனிதன் மொத்தமாக பணம் வாங்கிட்டான்.

   நீக்கு
  2. அருமையான தாதுக்கள் பாராட்டுக்குரியது

   நீக்கு
  3. கவிஞரின் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 12. குதிரை பாய்ந்து சென்று தூது சொல்லி இருந்தால் ஒருவேளை உடனே நடந்திருக்குமோ என்னமோ! நீங்க ஒவ்வொண்ணாப் பார்த்து தூது விட்டு லேட் ஆக்கிட்டீங்க! :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க இந்த ஓசன முன்னாடி இல்லாமல் போச்சே...

   நீக்கு
 13. காதலை தூது விட்டுச் சொல்லக் கூடாது நேரிலேயே சொல்வதுதான் உத்தமம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா சிலருக்கு இது தாமதமாகவே தெரிகிறது.

   நீக்கு
 14. ஆக...மனிதர்களை தூதுவிட்டால்தான் காரியம் நடக்கிறது..என்பதை தெரிந்துகொண்டேன்.. நண்பரே.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே இடைத்தரகரின் துணை தேவைதான்.

   நீக்கு
 15. அசராமல் தொடர்ந்து தூதுவிட்டிருக்கிறீர்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 16. புதிய தூது இலக்கியம். யார் அதிர்ஷ்டசாலி தூதுவிட்டவரா அல்லது மேகலாவா? எதை எதைத் தூதுவிடலாம் என்று புரியாமல் இருந்தால் இந்த வலைப்பதிவும் கவிஞரும் உங்களுக்கு உதவக்கூடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது கருத்தை ரசித்து சிரித்தேன்.

   நீக்கு