தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், நவம்பர் 06, 2018

தீபாவளி வா(ழ்)த்துஹலோ யாரு... பேசுறது ?
நாந்தேன்.

நாந்தேனா ?
மானிட்டருல தெரியலையா ?

மாணிக்கமா... நல்லாயிருக்கீங்களா ?
ஹலோ மாணிக்கம் இல்லை மானிட்டருல தெரியலையானு கேட்டேன் ?

காலையிலேயே மானிட்டர் அடிச்சா... வீட்டுல பொம்பளையாளுக்கு யாரு... பதில் சொல்றது ?

சரியாப் போச்சு காலையிலே வாயைக் கொடுத்துட்டேனா ?
யாருயா... நீ காலையிலேயே.. வறுக்கிறே... ?

நாந்தாங்க...
அடடே நந்தனா பேசுறே இதை முதல்லயே சொல்லக்கூடாது... என்ன விசயம் ?

நந்தனா...... ?  தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல அடிச்சேன்.
தீபா வீட்ல வாத்து அடிச்சியா... எங்கே கிடைச்சுச்சு ஊரணியிலே புடிச்சியா ? சரி மத்தியானத்துக்கு சாப்பிட வீட்டுக்கு வந்துறேன்.

வாத்து அடிக்கலே... வாழ்த்து சொல்ல அடிச்சேன்
வாத்தியாரை அடிச்சியா... ஏன் ?

வாத்தியாரை அடிக்கலை தீபாவளிக்கூ...
இங்கே வெடிப்போடுற சத்தத்துல ஒண்ணும் கேட்கலை...

சரி நாளைக்கு போன் செய்யிறேன்.
நான் போன் செய்யவா ? எங்கிட்ட பேலன்ஸ் இல்லப்பா...

ஐயோ பேசியே கொல்றியேயா..
ஐயாட்டே பேசணுமா ? அவரு மாமா வீட்டுல இருக்காரு... அத்தையோட நம்பருக்கு அடி.

சரி வையி அடுத்து பொங்கலுக்கு அடிக்கிறேன்.
‘’டொக்’’‘’தீ’’பாவளிக்குளியல்

44 கருத்துகள்:

 1. நல்லது பொங்கலுக்கு தமிழர் திருநாள் வாழ்த்து சொல்லிக்கலாம்...

  பதிலளிநீக்கு
 2. உங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள் சகோ.

   நீக்கு
 3. காணொளியில் யாருங்க அந்த விஞ்ஞானி :)) அமெரிக்காவே அதிர்ந்திடும் இவர் டெக்னீக்கை பார்த்து :)

  பதிலளிநீக்கு
 4. ஹா.... ஹா... ஹா... ரசித்தேன்.

  தொலைபேசியவர் தொல்லை தாங்காமல் வைத்துவிட்டு ஓடி குளத்தில் குதித்திருப்பார்!

  பதிலளிநீக்கு
 5. இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள் ஜி

   நீக்கு
 6. ஹாஹா..... நல்ல ரவுசு தான் போங்க!

  இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரசித்தமைக்கு நன்றி ஜி தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

   நீக்கு
 7. இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் தீபத்திருநாள் வாழ்த்துகள் ஜி

   நீக்கு
 8. தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள் நண்பரே

   நீக்கு
 9. நமது தொலை பேசி உரையாடல் நினைவுக்கு வந்தது

  பதிலளிநீக்கு
 10. ஹா ஹா ஹா ஹா என்ன அல்டாப்பு!!

  இனிய தீபஒளித்திருநாள் வாழ்த்துகள்! கில்லர்ஜி!!

  மகளுக்கும் மருமகனுக்கும் இனிய தலைதீபஒளித் திருநாள் வாழ்த்துகள். அவர்கள் என்றென்றும் மகிழ்வுடன் வாழ்ந்திட பிரார்த்தனைகள் வாழ்த்துகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 11. ஹலோவ்... ஏப்பி டீ வாளி!...

  யாருங்க நீங்க... இங்கே சாம்பார் வாளிய காணோம்னு தேடிக்கிட்டு இருக்கோம்!..

  தீபாவளிக்கு வாழ்த்....

  நான் அப்பவே சொன்னேன்...
  பைக்குல ஏத்திக்கிட்டு போகாதே..ந்னு..
  இப்போ தீபாவுக்கு வலி..ந்னா!?...

  காலக் கெரகமடா.. கந்தசாமி!..
  டொடக்!...

  பதிலளிநீக்கு
 12. அன்பின் ஜி...

  தங்கள் இல்லத்தில் தலை தீபாவளி கொண்டாடும் இளந்தம்பதியர்க்கு
  அன்பின் இனிய நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி ஜி

   நீக்கு
 13. அருமையான நகைச்சுவை உரையாடல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 14. அருமையான நகைச்சுவை தீபாவளி.
  குழந்தைகள் தலைதீபாவளி அதனால் மகிழ்ச்சி பதிவு.
  வாழ்க தலைதீபாவளி மணமக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 15. தங்கள் இல்லக் குழந்தைகள் தலை தீபாவளி கொண்டாடும் இன்னாளில்
  அவர்களது நல்வாழ்க்கை மேலும் சிறக்க என் ஆசிகள்.

  தொலைதூரப் பேச்சு நகைச்சுவையை அள்ளித் தெளிக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா தங்களது வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 16. உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் மகளுக்கும், மருமகனுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! மகளுடைய தலைதீபாவளி சிறப்பாக நடைபெற்றிருக்கும் என நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது வாழ்த்துகளைப்போல நிகழ்ந்தது மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 17. இப்போ நீங்க என்னைத் தொலைபேசியில் அழைத்தால் நம் பேச்சு இப்படித் தான் இருக்கும்! அம்புட்டு சத்தம்! பட்டாசுச் சத்தம் நிக்கலை! :)))) ஜாஸ்தியாத் தான் ஆகி இருக்கு போல!

  பதிலளிநீக்கு
 18. கில்லர்ஜி தங்களுக்கும், தலைதீபாவளி கொண்டாடும் உங்கள் மகள் மற்றும் மருமகன், குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

  பதிவு ஹா ஹா ஹா....படங்கள் நன்றாக இருக்கின்றன. அந்த வாத்துவடிவம்...

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி. உங்களுக்கும் தீபாவளி வாத்து.

   நீக்கு
 19. ஹா ஹா ஹா அருமையான வா[ழ்]த்து...

  கடசி வீடியோ ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
 20. காலை சிரிப்புடன் தொடங்குகிறது வடிவேலு பார்த்திபன் நகைச்சுவையாய் திரைப்படத்தில் சேர்த்து விடலாம்.

  பதிலளிநீக்கு
 21. தீபாவளி வாத்து படம் ..ஹா ஹா

  பதிலளிநீக்கு