தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், நவம்பர் 26, 2018

காளையார்கோவில், காலைவாறும் காளையன்



ஏங்க இந்த வேட்பாளர் எந்த ஊரு ?
தேவகோட்டை
அது எங்கிட்டு இருக்கு ?
காரைக்குடி பக்கத்துல...
காரைக்குடியா... அது எங்கிட்டு இருக்கு ?
தேவகோட்டை பக்கத்துல...
? ? ?
* * * * * 01 * * * * *

என்னய்யா சொல்றே... தாலி கட்டுனதுக்கு கைது பண்ணிட்டாங்களா ? விருப்பமானவளைத்தானே கட்டுனே...
ஆமாண்ணே... ரெண்டு பேருக்குமே விருப்பம்.
அப்ப யாரு கம்ப்ளைண்ட் பண்ணுனது பொண்ணோட அப்பாவா ?
இல்லைணே.. அவளோட புருசன்...
? ? ?
* * * * * 02 * * * * *

டேய் எங்க பரம்பரையப்பத்தி உனக்கு தெரியலை...
கொஞ்சம் சொல்லேன் தெரிஞ்சுக்கிறேன்.
நாங்கெல்லாம் சாக்ஸ் போட்டு செருப்பு போடுற பரம்பரையில வந்தவங்கே....
ய்யேன்... கால்ல.. குஸ்டமா ?
? ? ?
* * * * * 03 * * * * *

டிக்கெட் எந்த ஊருக்கு ?
கிளியூர்.
யோவ் என்னய்யா கிழிஞ்ச நோட்டை கொடுக்கிறே ?
கிளியூர்காரங்வுக கிழிச்சுதான் கொடுப்போம்.
? ? ?
* * * * * 04 * * * * *

மச்சான் ஒரு கணக்கு கேட்கலாமா ?
கேளேன் எனக்குத் தெரியாததா ?
மச்சான் எண்பது ரூபாய்ல, முப்பது ரூபா போனால் மிச்சம் எவ்வளவு ?
போயி கேணப்பயல்ட்ட கேளுடா இந்தக் கேள்வியை...
சரியாத்தானே மச்சான் கேட்கிறேன்.
? ? ?
* * * * * 05 * * * * *

தரகரே நான் சொன்ன பொண்ணு விபரம் என்னாச்சு ?
அதான் சொன்னேன்ல 22 வயசுப் பொண்ணுக்கு 25 பவுன் போடுவாங்க, 31 வயசுப் பொண்ணு இருக்கு அதுக்கு 30 பவுன் போடுவாங்க சொன்னால் கோவிக்ககூடாது உள்ளூருல ஒரு பொண்ணு 42 வயசாச்சு கல்யாணம் ஆகலை 50 பவுன் போடுவாங்க நீ என்ன சொல்றே ?
இன்னும் கொஞ்சம் வயசு கூடுன பொண்ணு பாருங்களேன்...
? ? ?
* * * * * 06 * * * * *

என்ன தம்பி சொல்றே... வேப்பமரத்துல ஏறி வெட்டுனதுக்கா உன்னை ஜெயிலுக்கு கொண்டு வந்தாங்க ?
ஆமாண்ணே...
சரி மரத்துக்கான பணத்தை நீ கொடுத்துருக்கலாம்ல... ?
நான் மரத்தை வெட்டலைணே.. மரத்துல ஏறி இருந்தவனைத்தான் வெட்டுனேன்.
? ? ?
* * * * * 07 * * * * *

ஸார் வணக்கம் நீங்க ஏர் இந்தியாவுலதானே... சென்னை போறீங்க ?
ஆமா, என்ன விசயம் ?
எனக்கு லக்கேஜ் வெயிட் கூடிருச்சு உங்கள்ட்ட லக்கேஜ் குறைவுதானே இந்த ஹேண்ட் பேக்கேஜை மட்டும் எடுத்துக்கிற முடியுமா ?
நீங்களே கொடுக்கும்போது எனக்கென்ன ? எடுத்துக்கிறேன்.
? ? ?
* * * * * 08 * * * * *

சாம்பசிவம்-
ரெண்டுமே நல்ல கிராக்கி.

Chivas Regal சிவசம்போ-
சாவு கிராக்கிதான்...

42 கருத்துகள்:

  1. ஆஆஆஆஆஆஆஆஅவ் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊ ஆனாலும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 கில்லர்ஜி... இன்று எதுக்கு ஏழியாப் போட்டீங்க? உகண்டா போனதன் எபெக்ட்டோ?:)

    பதிலளிநீக்கு
  2. ஹா ஹா ஹா அத்தனையும் சூப்பர்..
    கிழியூர் மட்டும் பெரிதா சிரிப்பு வரவில்லை:)

    பதிலளிநீக்கு
  3. 6,7,8 டாப்பூஊஊஊஊஊஊ ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  4. சிறீ சிவசம்போ அங்கிள் ஆரைத்திட்டுறார்ர்?:) கில்லர்ஜியை இல்லியே?:) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கு நன்றி.
      அதென்ன ஏழியா ?
      உங்க அங்கிள் என்னை எதற்கு திட்டணும் ?

      நீக்கு
    2. வழமையாக எங்கள் 7.30 க்குத்தான் போடுவீங்க போஸ்ட் ஆனா இம்முறை நேரம் நமக்கு மாற்றியதை மறந்திட்டேன் கணக்கு தப்பாகிட்டுது:) அதனால 6.30 க்கே போஸ்ட் வெளிவந்துவிட்டது:)... அதனால ஏழியா போஸ்ட் போட்டிட்டீங்க என்றேன்...

      ஜோக் எழுதியவரைத் திட்டுறார் அங்கிள்:)

      நீக்கு
    3. இல்லையே வழக்கமான நேரத்தில்தானே வெளியிட்டு இருக்கிறேன்.

      நீக்கு
    4. ஜி! அதிரடி அவங்க தேம்ஸ் நேரத்தை சொல்லுறாங்கோ...நீங்க எப்ப சிவாஸ் ஆனீங்க...சொல்லவே இல்ல...ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  5. காலைவேளையில் நல்ல சிரிப்புச் சிந்தனைகள். நன்றி கில்லர்ஜி!

    பதிலளிநீக்கு
  6. அனைத்தையும் ரசித்தேன்.

    ஏழாவது புதிதாக இருக்கிறது.

    ஆறாவது புன்னகைக்க வைத்தது. பெண் வேண்டுமாமா? பொன் வேண்டுமாமா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்தமைக்கு நன்றி ஜி

      அவன் பெண் என்று சொல்லாமல் பொண்'ணு என்று பொன்'ஐத்தானே சூசகமாக ஞாபகப்படுத்துகிறான்.

      நீக்கு
  7. ஹாஹா...

    அனைத்தும் ரசித்தேன் ஜி.

    பொன் வேண்டும் - ம்ம்ம்.. இன்னும் இப்படிச் சிலர்.

    பதிலளிநீக்கு
  8. அனைத்தையும் ரசித்தேன். "வயதான பொண்ணு"- ஆசைதான், பவுன் மேல. இந்த ஆசைக்கு, ஒவ்வொரு வயசுலயும் ஒருத்தியைக் கட்டிக்கிடுதேன் என்று சொல்லாமல் விட்டாரே

    பதிலளிநீக்கு
  9. கடைசி ஜோக் எனக்கு ஒரு அனுபவத்தை ஞாபகப்படுத்தியது.

    லண்டனுக்கு விமானத்தில் சென்னபோது அடுத்த இருக்கையில் ஒரு பெண் சிறு கைக்குழந்தையோடு பிரயாணம் செய்தார். (வேறு ஃப்ளைட்டிலிருந்து துபாய்ல ஜாயின் பண்ணியிருக்கிறார்). நெல்லையைச் சேர்ந்தவர் என்று தெரிந்ததனால் பேசிக்கொண்டு வந்தேன். சைவப் பிள்ளை, ஆனால் திருமணம் ஆனபிறகு, கணவர் அசைவம் சாப்பிடுவதால் தானும் பழகிக்கொண்டதாகச் சொன்னாள். விமானம் நின்றதும், என்னை விமானத்திலிருந்த இரண்டு பெரிய பையை கீழே பெல்ட் பகுதி (செக் இன் லக்கேஜ் வரும் ஹால்) வரை கொண்டுதர முடியுமா என்றாள். பைல என்ன இருக்குன்னு கேட்டதுக்கு, மூணு பை நிறைய கருவாடு கொண்டுபோறேன். என் கணவருக்குப் பிடிக்கும். அதுல ரெண்டு பை என்றாள். ஐயையோ என்று உதவ்வில்லை, ஏன்னா அது மட்டும்தான் விமானத,தில் வைத்திருந்தாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருந்தாலும் நெல்லைப்பெண் கருவாடு மூலம் அல்வா கொடுக்க முயன்றும் முடியலையே...

      உதவி இருக்கலாம் உள்ளே இருக்கும் பொருளை நீங்கள் தொடப்போவதில்லையே...

      நீக்கு
    2. செய்திருக்கலாம். இருந்தாலும் கில்லர்ஜி, எனக்கு எச்சரிக்கைக் குணம் ரொம்ப ஜாஸ்தி. அவள் ஒருவேளை கருவாட்டுக்குப் பதில் வேறு ஏதாகிலும் பொருள் வைத்திருந்து, அது என்னைச் சிக்கலில் கொண்டுபோய்விட்டால்? எதற்கு வம்பு என்ற எச்சரிக்கக் காரணமாக இந்த மாதிரி உதவிகளை நான் செய்வதில்லை.

      அதுக்காக, உங்கள் பெண் திருமணத்தில், என்னிடம், ஸ்ரீராமுக்காக ஒரு பெட்டி நிறைய இனிப்புகள் கொடுத்தால், வாங்கிக்கொண்டு செல்லமாட்டேன் என்று சொல்லமாட்டேன். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

      நீக்கு
    3. எச்சரிக்கை நல்லதுதான் சாதாரண லட்டரைக் கொடுத்து, விமானம் இறங்கியதும் வெளியில் நிற்கும் நண்பரிடம் கொடுக்கச் சொல்லும் கவருக்குள்ளேயே ப்ரௌன் ஸுகர் வைத்து விடுகின்றார்களே...

      இருப்பினும் இதில் ஸ்ரீராம்ஜியை இழுப்பது பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்பது போல தெரிகிறதே...

      பரவாயில்லை விரைவில் வரவிருக்கும் மருமகள் வீட்டு பலகாரங்களை உங்களுக்கும் தருகிறேன் நண்பரே.

      நீக்கு
    4. அது ஒன்றுமில்லை.... அவ தன் கணவருக்கு கருவாடு எடுத்துப் போறா ., அதை நான் காவோணுமோ எனும் பொறாமைதான் நெ தமிழனுக்கு:) ... இவர் பாறைன் போய் தான் தானே சமைக்கோணும் ஹா ஹா ஹா...

      நெ த நீங்க எதுக்கு பேச்சுக் குடுத்தீங்க?. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:). பொது இடங்களில் நாமுண்டு நம்பாடுண்டு என இருந்திடோணும்..

      பேசியதற்காக உடனேயே வேலை வாங்க நினைத்த பெண்ணை என்ன பண்ணுவது... சிலர் இப்படித்தான் கொஞ்சம் நல்லவராகப் பேசிட்டால் உடனே தலையில் மிளகாய் அரைக்க வெளிக்கிடுவார்கள்... எனக்கு இப்படிப் பெண்களைப் பிடிக்காது.. உன்னால் காவ முடியாதெனில் எதுக்கு ஓவர் லக்கேஜ் கொண்டு வரோணும் கர்ர்ர்ர்ர்:)

      நீக்கு
    5. கில்லர்ஜி இனிப்பை மட்டும் நம்பி நெ தமிழனிடம் கொடுத்திடாதீங்க:) பாதி வழியிலேயே பாதி சாப்பிட்டு விடுவார் ஹா ஹா ஹா:)..

      நீக்கு
    6. ஏன் அவரிடம் கொடுத்து ஏமாந்தவர்கள் உண்டா ?

      நீக்கு
    7. இந்தக் கருவாட்டு கதை சிங்காரவேலன் கருவாட்டு சீன் நினைவுக்கு வந்துருச்சு...நெல்லை அங்க இருந்திருந்தா என்ன செய்திருப்பார்ன்னு கற்பனை தட்டி சிரித்துவிட்டேன்...

      கீதா

      நீக்கு
  10. எல்லா ஜோக்குகளையும் ரசித்தேன் ஏழாவதை அதிகம்

    பதிலளிநீக்கு
  11. அனைத்தும் சிரிக்க வைத்து விட்டது.
    தேவகோட்டை, காரைக்குடி ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோவின் வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி.

      நீக்கு
  12. அன்பின் ஜி...

    காலையிலேயே சுவைத்தேன்..
    சிரித்தேன்... ரசித்தேன்..

    வேறு வேலையாய் இருந்தேன்..
    கருத்துரையை எழுத மறந்தேன்..

    அடடா... என்றே உணர்ந்தேன்...
    என் பதில் இங்கே வரைந்தேன்...

    மகிழ்ச்சி.. நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி
      தங்களது கருத்துமழை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. முனைவர் அவர்களின் ரசிப்புக்கு நன்றி.

      நீக்கு
  14. அனைத்தும் அருமை நண்பரே.. இரண்டாவதாக வருவதில்.. புருசன்காரன் புகார் செய்தாலும் அந்த உறவு குற்றமில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்காம் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே அப்படீனாக்கா... புருஷன் புகார் செல்லாக்காசு என்று சொல்லலாமா ?

      நீக்கு
  15. எல்லா ஜோக்கும் ரசித்தோம் ஜி.

    துளசிதரன், கீதா

    கீதா: இதுக்குத்தான் சிவாஸ் மாதிரியான ஆளுங்களுக்குப் பொண்ணு தேடக் கூடாதுன்னு சொல்லுறது...எப்ப பாரு மப்பு...அதான் வயசான பொண்ணெல்லாம் பொன்னுக்காக கேக்குறாரு...பாருங்க...உங்களுக்கு தேவையா இது...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது நிலைமை பொன் போட்டால்தான் பெண் கிடைக்கும் போல...

      நீக்கு
  16. உண்மையிலேயே சிரிப்பு வந்துடுச்சு. ரிலாக்ஸ் ஆகறதுக்கு ஜோக்கா? ஜோக்கைப் படிச்சுட்டு ரிலாக்ஸ் ஆகலாமா?

    பதிலளிநீக்கு