தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, நவம்பர் 09, 2018

முடிந்தால் ரசிக்க...


ஒரே ஒருமுறை சொல்லி விடு கண்ணே என்றேன்
அவள் சொன்னாள் ஒரே ஒருமுறை நீ தூக்குப்போடு.

உன் விழிகள் வேல் போல் குத்துகின்றன என்றேன்
அவள் கேட்டாள் அப்ப நீ ஏன் இன்னும் சாகவில்லை ?

உனக்காக கயிறை மணலாக திரிக்கட்டுமா சொல் ? என்றேன்
அதெல்லாம் வேண்டாம் அந்த டவரில் ஏறி குதித்தால் போதும்.

கண்ணே நீ விஷம் கொடுத்தாலும் அமுதமாக மாறும் என்றேன்
அப்படியானால் இந்த சயனைட்டை குடி பார்க்கலாம் ?

உனக்காக தலை முடியைக் கூட தானம் கொடுப்பேன் என்றேன்
உனது தலை முடியும் எதற்கு... தலை மட்டும் போதுமே ? என்றாள்.

கண்ணே உனக்காக காட்பாடிக்கு ட்ரான்ஃபர் வாங்கி வந்தேன்.
வேண்டியதை கேள், அந்த ட்ரான்ஸ்ஃபார்மரில் ஏறு என்றாள்.

சிவாதாமஸ்அலி-
டிரான்ஸ்ஃபார்மரில் ஏறினால் பிறகு பாடியை காட்டுக்கு கொண்டு போக வேண்டியது வருமே...

42 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் கில்லர்ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
 2. கில்லர்ஜி நீங்களே தலைப்பு சொல்லிட்டீங்க முடிந்தால் ரசிக்க என்று...

  மனம் சங்கடப்பட்டது...

  உங்களின் காதல் கவிதைகள் கும்மி அடிப்பது ஐலேசா என்றெல்லாம் பார்த்துவிட்டு இது போன்றவற்றை ரசிக்க முடியலை

  உங்களுக்கு ஏன் இப்படி காதலையைச் சொல்லணும்னு தோணுச்சோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ஹா ஹா ஹா ஹா..

  கீதா


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படம் ரொம்ப நல்லாருக்கு...இப்படி அழகான ஒரு படம் போட்டுட்டு லவ்வி கவிதை போட்டிருக்கலாம்ல..இந்த அழகான பொண்ணா அப்ப்டிப் பேசிச்சுனு..தோணிடிச்சு...ஹிஹிஹிஹி...

   கீதா

   நீக்கு
  2. வருக இது 2014-ல் வலைச்சர ஆசிரியராக இருந்தபோது மீண்டும் ஆசிரியரானால் சொல்ல வேண்டிய துணுக்கு செய்திகளுக்காக...

   கொடூரமான கவிதை, கொடூரமான நகைச்சுவை, கொடூரமான குட்டிச்செய்தி, கொடூரமான குட்டிக்கதை இவைகளை எழுதி வைத்தேன்.

   ஆனால் வலைச்சரம் இயங்காமல் போனதால் அவைகளை இப்பொழுது பிரித்து வெளிட்டேன் இதில் நகைச்சுவையும், கவிதையும் வந்து விட்டது.

   நான்கு வருடங்களாக கிடப்பில் கிடந்தது.

   நீக்கு
 3. கில்லர்ஜி தப்பா எடுத்துக்காதீங்க...ஒரு வேளை என் மனது இதை உள்வாங்க மறுக்கிறதா இருக்கலாம்...

  கீதா

  பதிலளிநீக்கு
 4. வில்லி விஜயலலிதாவை எல்லாம் லவ் பண்ணினா இப்படிதான்! அல்லது விருப்பமில்லாத பெண்ணை துரத்தித் தொந்தரவு செய்தாலும் இப்படிதான்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ! இப்படியும் ஒன்னு இருக்கோ ஸ்ரீராம்....!!

   கீதா

   நீக்கு
  2. ஆம் இப்படியும் புரிந்து கொ'ல்'ளலாம்

   நீக்கு
 5. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், என்ன ஆச்சு கில்லர்ஜி? ஆனாலும் பகிர்ந்த படம் நல்லாவே இருக்கு! :)

  பதிலளிநீக்கு
 6. காதலை மறுக்கும் பெண்ணை பழி வாங்கவில்லையே !
  நல்ல மனிதர்தான்.
  படம் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 7. திடீரென்று தங்கள் பதிவின் தன்மை மாறுவதுபோல் தோன்றுகிறது நண்பரே

  பதிலளிநீக்கு
 8. இந்தப் பெண்ணை விட்டுவிட்டு, வேறு பெண்ணை பாருங்கள், கில்லர்ஜி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் எதற்கு வேறு பெண்ணை பார்க்க வேண்டும் ?

   நீக்கு
 9. அத்தனையும் செஞ்சிடலாம்..
  ஆனால் அதற்குப்பின்
  அன்பு காட்ட யார்.. கண்ணே?..

  அட.. அசட்டு முண்டமே..
  அறிவு கெட்ட தண்டமே..
  அடுத்தது ஒரு ஆள் காத்திருக்கு...
  அவன்மேல் தான் என் உயிர் இருக்கு...

  இப்படி கூட முடித்திருக்கலாம் ஜி!...

  ஏறுக்கு மாறு எல்லாம் வாழ்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துரை அண்ணா கலக்கிட்டீங்க...கரீக்டு...

   நேற்றைய ஸ்ரீராமின் பதிவு சொல்முகூர்த்தத்தின் ஹேங்ஓவர் இன்னும் விட்ட பாடில்ல...விடியகாலைல இந்தப் பதிவை பார்த்ததும் அதுதான் மனசுல ஓடிச்சு....ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  2. வாங்க ஜி கலக்கல் ஹைக்கூ அருமையே...

   நீக்கு
 10. காதலன் சொல்வதெல்லாம் திருமணம்்ஆவதற்கு முன்பு. மனைவியின் பதில், அவன ட ஐந்து வருஷம் குப்பை கொட்டியபிறகு.

  சரிதானே கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் தமிழரே இதே கோணத்தில் பார்ப்போம்.

   நீக்கு
 11. முதல் படம் மிக அருமை... ரசித்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே...
   முந்தைய பதிவு "தீபாவளி வா(ழ்)த்து" சொன்னேன் வரவில்லையே...

   நீக்கு
 12. திகில் காதல் போல...

  பதிலளிநீக்கு
 13. அந்த கண்ணே...இரக்கமற்ற கொ.....கொடியரசியா இருக்கிறதே......................

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காதலுக்கு "ஓ" போடுபவளாக இருக்கலாம் நண்பரே

   நீக்கு
 14. கண்ணை மறைக்கும் காதல் இப்படியெல்லாம் பேச சொல்லும்

  பதிலளிநீக்கு
 15. படம் நன்றாக இருக்கிறது ஜி.

  பதிலளிநீக்கு
 16. தற்போதைய சமூக அவலங்களைக் கூறுவதுபோல உள்ளதே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் இப்படித்தான் இன்றைய காதல் வார்த்தைகள் இருக்கிறது.

   நீக்கு
 17. ஹா ஹா ஹா சூப்பர்ர்... இப்படித்தான் வரும் பதில்கள்.. மனம் பிடிக்காது விட்டால்:)..

  ஆனா இப்படிப் பதில் சொன்னாலும், சிலர் விடவே மாட்டேன் எனக் கலைக்கிறார்களே அவர்களை என்ன பண்ணுவது?:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படி உள்ளவர்கள்தான் ஆசிட் அடிக்கும் மடையர்களாக இருக்கின்றனர்.

   நீக்கு
 18. காத(லன்)ல் கசந்து விட்டது கவிதையில் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 19. ஆணின் ஒருதலை காதல் போல தெரிகிறதே நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே டி.ராஜேந்தர் உறவினராக இருக்கலாமோ...

   நீக்கு