தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜனவரி 02, 2022

தென்னவன் தந்தானடி தாலி

 

ணக்கம் நண்பர்களே... ‘’மன்னவன் வந்தானடி தோழி’’ என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்

இதோ எனது பாடல்

தொகையறா...

தலை மகள் இணை கண்டு சிலை ஒன்று
இகழ் கண்ட காதலன் வீழ்க வீழ்க
விலை மகள் தரம் கண்டு மாலை போன்ற
பாலம் கண்ட தென்னவன் வீழ்க வீழ்க
மருமகள் இருள் கண்டு மருள் கண்ட
கருவறுள் செங்கூவ வீழ்க வீழ்க

கயல் திசை கபடம் அமிலம்
கக்குகின்ற கலைஞனே வீழ்க வீழ்க
குடி'மாக்கள் இனம் போல குடியாட்சி
கண் கொன்ற ஒற்றவா வீழ்க வீழ்க
உன் கடி வீழ்க பாடை வீழ்க கூடி வீழ்க
களம் வீழ்க பலமும் எல்லாண்டும் வீழ்க

பாடல்...

தென்னவன் தந்தானடி தாலி
தென்னவன் தந்தானடி தாலி
கஞ்சத்திலே வளர்ந்து வஞ்சத்திலே கலந்த
தென்னவன் தந்தானடி தாலி
கஞ்சத்திலே வளர்ந்து வஞ்சத்திலே கலந்த
தென்னவன் தந்தானடி

மாதவனோ காதலனோ
நாய் அவனோ நீ அறிவாய்
மாதவனோ காதலனோ
நாய் அவனோ நீ அறிவாய்
தென்னவன் தந்தானடி தாலி

அமிலக்கல் எடுத்து ஓசை கொடுப்பேன்
கண்ண சத்தத்திலே காவிக்கரம் தடுப்பேன்
அமிலக்கல் எடுத்து ஓசை கொடுப்பேன்
கண்ண சத்தத்திலே காவிக்கரம் தடுப்பேன்
மூன்று அமில காலை கட்டிடுவேன்
மூன்று அமில காலை கட்டிடுவேன்
கனி இப்பொழுதும் அற்பனனாய்
பொற்பதமாய் வாய்த்திருக்கும்

தென்னவன் தந்தானடி தாலி
கஞ்சத்திலே வளர்ந்து வஞ்சத்திலே கலந்த
தென்னவன் தந்தானடி
துப்பிய நாவினில் மணிகள் பாடிட
காமுகன் காமுகி தவணை கட்ட வராத
தென்னவன் தந்தானடி

தத்தித் தாங்கிட தக தரிகிடதோம்
தித் தாங்கிட தக தரிகிடதோம்
தகதித் தாங்கிட தக தரிகிடதோம்
தித் தாங்கிட தக தரிகிடதோம்
தக தரிகிடதோம் தக தரிகிடதோம்
தக தரிகிடதோம் தக தரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம் தத்தா

ச... ரி... க... ம... ப... த...நி
சரிகமபதநி கரமோடு ஜாதியோடு
நாத்த கீத்த ராக்கி பாவி தான் பெறாத
தென்னவன் தந்தானடி
தக்க தின்னம் தரித
தகஜனுத துக்கு தரித
துக்கு தகிட தத்திங்கு
தக ஜனக்கு தத்தீம்
தத் தகிட கிடதக தரிகிட தோம்
தா கிட தோம்
கிட தத்தோம் கிட தத்தோம் த்த் தா
 
கதர் காவி மடலெனப் கருகிட
நாதர் தினமும் குயிலென கூவிடவே
தென்னவன் தந்தானடி
ததரி ததன தஜணு தஜணு
ஜணு தஜுணு தத்திமி
ஜுணு தகதிமி தரிகிட
தித் தாங்கிட தக தரிகிட தகதா
ஜுணு தாங்கிட தக தரிகிட தகதா
தகதித் தாங்கிட தக தரிகிட தகதா தத் தா

பெரு வளர் கனமொரு கரு குகை வளம் பெற
பலர்கிளி கருத்திட சனி இதழ் பணிந்திடவே
தென்னவன் தந்தானடி
திரிகிட தரிகிட தரிகிட திரிகிட
திரிகிட தரிகிட தரிகிட திரிகிட
திரிகிட தரிகிட தரிகிட திரிகிட
திரிகிட தரிகிட தத் தா

சிந்தித்தால் இது செம்பொன் கன்னம்
கத்தித் தாவிடும் மங்கல எண்ணம்
ததின்ன தங்க ததின்ன தங்க
ததின்ன தாங்கிட தரிகிட
ததின்ன தங்க ததின்ன தாங்கிட
தக தரிகிட தகதா

சத்தத்தால் இரு காவல் என்னும்
பத்தித் தாவென  பாவை இன்னும்
என்....  தென்னவன்....
தத்தித்தா கிடதக தரிகிட தோம்
தித்தா கிடதக தரிகிட தோம்
தா கிடதக தரிகிட தோம்
கிடதக தரிகிட தோம்
தாங்கிட தோம் தத்திம்
தகத தகஜம் தகிட தகஜுணு தகிட தத்தா

வரைதனில்நீ... நீ
மனவளர்தா... தா
இருதர்பாபா... பா
சம்மதமா... மா
குயிலென்கா... கா
வரைதனில்... நீ
மனவளர்... தா
இருதர்பா... பா
சம்மத... மா
குயிலென்... கா
நீ...தா...பா..மா...கா...
நீ...தா...பா..மா...கா...
ச... சந்தமது பெறவா
 
ச... சத்தமது தரவா
தரிகிட ஜம் தீங்கிட தாங்கிட
தக தரிகிட தகதா
ரி... ரிகமபதநிசா
தஜ்ஜம் தஜ்ஜம் தஜம் தரிகிட தா
க... கருணா தொலைவா
தாங்கிட தத்தீம்
கிட தத்தீம் கிடதத்தீம் ததா
ம... மிதி தகு முதல்வா
தரிகிட தோம் த தரிகிட
தோம் த தரிகிட தா
ப... பம்பரம் இருள் இறைவா
த... தண்ணியில் வரவா
நி... கரையருள் பெறவா

நாளும் கவி ஏழும் காதல் ஏழும் இடம்
நாடும் இடி தாராய் இருள் வாராய்
நாளும் கவி ஏழும் காதல் ஏழும் இடம்
நாடும் இடி தாராய் இருள் வாராய்
தரிகிட திம் திரிகிடதா தரிகிட திம் திரிகிடதா
மனு தினம் என்னை வலி இடும்
பாட குயில் தனி ஒரு
கலைஞனை அணிவதில்லை
தென்னவன் தந்தானடி
 
தகதித் தாங்கிட தக தரிகிட தக
ததித் தாங்கிட தக தரிகிட தக
திரிகிட தோம் திரிகிட தோம்
திரிகிட தோம் திரிகிட தோம் தா

பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி

வருடம்: 1967
படம்: திருவருட்செல்வர்
பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே. வி. மஹாதேவன்
பாடியவர்: பி. சுசீலா

இதோ யூட்டியூப் இணைப்பு

https://www.youtube.com/watch?v=Sew6sS-_8Lc

மிகவும் ஆலோசித்து எழுதி இருக்கிறேன் வரிகள் எனது மூளையை கசக்கி விரல்களை ஒடித்து விட்டது.  மேலும் பதிவு நீண்டதால் உண்மையான பாடல் வரிகளை நீக்கி விட்டேன். நன்றி கில்லர்ஜி தேவகோட்டை.

34 கருத்துகள்:

 1. பாடல் ஆச்சிரியர் இல்லை, ஆச்சரியர் கில்லர்ஜி அவர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!

   நீக்கு
 2. நல்லாருக்கு கில்லர்ஜி. உங்கள் கற்பனையும் திறமையும்!!!

  ஓரே ஒரு வேண்டுகோள். நல்ல பாடலை உல்டா செய்வதற்குப் பதில்...சமீபத்திய அர்த்தமில்லாத வரிகள் உள்ள பாடல்களை உங்கள் பாணியில் உல்டா செய்து அர்த்தமுள்ளதாக்கினாலோ?!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக உங்களது வேண்டுகோள் சிறப்பு ஆனாலும் என்னை இப்படி பழி வாங்க நினைப்பது நியாயமா ?
   இன்றைய பாடல் வரிகளில் தமிழ் வார்த்தைகள் இருக்கிறதா ?

   இருப்பினும் முயல்கிறேன்... நன்றி.

   நீக்கு
  2. ஹாஹாஹாஹ கில்லர்ஜி! பழியா!! ஆஆ.....உங்கள் திறமையைப் பாராட்டி சொல்லியிருப்பதன் அர்த்தமே அதுதானே!!!தமிழ்ச் சொற்கள் போட்டு எழுதிடுங்க!!

   கீதா

   நீக்கு
  3. மீள் வருகைக்கு நன்றி முயல்கிறேன்...

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  பதிவின் பாடல் அருமை. தங்கள் கற்பனையும், அதற்கு தகுந்தாற் போன்ற எழுத்தாற்றலும் வியக்க வைக்கிறது. உண்மையிலேயே இந்த பாடலுக்கு தகுந்தாற் போல வரிகளை போட்டு,இணைத்திருப்பது சிரமமான வேலைதான். உல்டா வரிகளை ரசித்தேன். ஒரு தடவை மனதுக்குள் பாடியும் பார்த்தேன்.நன்றாக வந்திருக்கிறது. தங்களது திறமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பாடல் வரிகளை கவனித்து படித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சியும், நன்றிகளும்...

   நீக்கு
 4. பாலம் ---> பாவம் என்று இருக்கலாமோ...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி

   கவிஞரின் வரிகள்
   //பலம் கொண்ட மன்னவன் வாழ்க வாழ்க//

   உல்டா வரிகள்
   //பாலம் கண்ட தென்னவன் வீழ்க வீழ்க //

   நீக்கு
 5. கவிதையை ரசித்தேன். கீதாஜி சொல்லியிருப்பது போல இன்றைய பாடல்களை மாற்றி எழுதலாம். உங்களால் முடியும்.

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது வருகைக்கும், புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் நன்றி.

   தங்களது கருத்தை ஏற்று முயல்கிறேன்.

   நீக்கு
 6. நல்ல முயற்சி. ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 7. இப்புத்தாண்டும் இனி வரும் ஆண்டுகளும் எல்லோருக்கும் இனிய நினைவுகளை வழங்கி நல்ல ஆரோக்கியத்தை வழங்கி மகிழ்ச்சி ஏற்படுத்திட இறைவனிடம் பிரார்த்தனைகளோடு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் அன்பான புத்தாண்டு வாழ்த்துகள்!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள்.

   நீக்கு
 8. அன்பின் தேவகோட்டைஜி,
  என்றும் நலமுடன் இருங்கள்.
  இனிய ஆங்கிலப் புத்தாண்டு தங்களுக்கும்
  குடும்பத்துக்கும் நன்மையே தருக.

  அற்புதமான சொல்லாடல். பலர் மனக் குமுறல் பாட்டாகத்
  தங்கள் மொழியில் வெளிவந்திருக்கிறது.
  மிகமிக ரசித்தேன். தங்கள் திறமை அளவிடற்கரியது.

  அறம் பாடியது போல அமைந்திருக்கிறது,.
  தர்மம் வாழ்க. நன்றி ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா தங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   பதிவை ரசித்து கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 9. கவியரசர் இருந்திருந்தால் நேரில் அழைத்து பாராட்டியிருப்பார்...

  வாழ்க புலவரே வாழ்க..

  பதிலளிநீக்கு
 10. "ஆச்ச"ரியமான "ஆச்சி"ரியர் அவர்களுக்கு வாழ்த்துகள். ஜிந்தனைச் சிற்பி! :))))))

  பதிலளிநீக்கு
 11. தீட்ட தீட்டதான் கூர்மை பெறும் என்பது புலவருக்கு தெரியாமல் இருக்காது... நன்றி! கவிஞர்க்கும், புலவர்க்கும்,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இதில் கவிஞர் யாரு... புலவர் யாரு ?

   நீக்கு
 12. இந்த பாட்டு பாடவே மிகவும் சிரம பட்டதாக சுசீலா அம்மா சொல்வார்கள்.
  அது போல அந்த வரிகளை மாற்றி அமைக்க நீங்கள் நிறைய யோசித்து இருப்பீர்கள்.
  கண்ணதாசன் பாடலை மிக அருமையாக மாற்றி எழுதி இருக்கிறீர்கள்.
  உங்கள் திறமை வியக்க வைக்கிறது.

  வாழ்த்து கவிதையாக நிறைய எழுதுங்கள். பகைவனையும் வாழ்த்த வேண்டும் என்று வேதாத்திரி மகரிஷி சொல்வார். அப்படி சொன்னால் அவர்கள் திருந்துவார்கள் என்பார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பதிவு ரசித்து கருத்தை பதிவு செய்தமைக்கும், தங்களது மேலதிக தகவல்களை தந்ததமைகும் மிக்க நன்றி.

   நீக்கு