தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஆகஸ்ட் 11, 2022

அண்ணன் நாகேந்திரன் (4)

 

முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...
இஸா (1) டலுவா (2) தட்லூ (3)
 
முன்பு... காத்திருந்தேன் ரோஸ்லின் வரவுக்காக....
 
சிறிது நேரத்தில் ரோஸ்லின் வந்தாள்..
ஹாய் அத்தான் கொமஸ்தகே ?
ஹாய் அத்தான் சௌக்கியமா ?
மபூத்தி அனோ சினாபி இகாவ் பிகோத்தில்யூ ?
நல்லாயிருக்கேன் என்ன பேசினே நீ மீசைக்காரரிடம் ?
பரசாட்டின், நையோன் பூவன் ஓலாபாங் சுவேல்டோ பயான் சினாபி, பாகெட் ?
எனக்கு, இந்தமாத சம்பளம் வரவில்லை அதான் கேட்டேன் ஏன் ?
நக்தானு லாங்
சும்மா கேட்டேன்
உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் அப்பாடா..... ஒன்றரை முழத்திற்கு பெருமூச்சு போனது.
 
அத்தான் இகாவ் டீ குஸ்தமோ ?
அத்தான் உனக்கு டீ வேணுமா ?
ஊ ஊ, சுவேல்டோ பாகெட் ஓலாபாங் ?  
ம் ம், சம்பளம் ஏன் வரவில்லை ?
ஓலா ப்ராப்ளமா, பூக்காஸ் தராட்டின்
பிரச்சனையில்லை நாளை வரும்
 
ஓகே சூசுநோன் இகாவ், லாகாத் லாங் பப்பாய ஹுவாக் சபிகின் ’’அத்தான்’’ யூன் ஹிந்தீபா மபூத்தி ப்ளீஸ் ரோஸ்லின்.
(சரி இனிமேல் நீயும், எல்லா பெண்களும் தயவு செய்து ’’அத்தான்’’ சொல்லாதீங்க அது சரியில்லை ரோஸ்லின்)
பாகெட் ? ஓலா ப்ராப்ளமா அத்தான்
ஏன் ? பிரச்சனையில்லை அத்தான்
? ? ?
 
லையில் கை வைத்து குனிந்து தரையில் மார்பிள்ஸ் போட்டிருந்த பூமாதேவியைப் பார்த்து உட்கார்ந்திருந்தேன் ’’டங்’’ என ஒரு சத்தத்துடன் தலையில் வலிக்க நிமிர்ந்து பார்த்தேன் எதிரில் சூப்பர்வைசர் நாகேந்திரன் அண்ட் இரண்டு பெண்கள் ஒருத்தி பிலிப்பைனி எல்வின், மற்றவள் ஸ்ரீலங்கா மெங்க்ளா, எனது தலைக்கு ’’டங்’’ கொடுத்தவள் எல்வின் தலையை தடவிக் கொண்டே...
 
பாகெட் ?
ஏன் ?
இகாவ் பகாலன் மோ அத்தான் ?
உனது பெயர் அத்தானா ?
ஓலா, அஹோ பகாலன் கில்லர்ஜி
இல்லை என் பெயர் கில்லர்ஜி
 
திரு திரு’’ என முழித்துக் கொண்டு புரியாமல் எங்களைப் பார்த்துக் கொண்டு நின்றனர் ஸ்ரீலங்கா மெங்க்ளாவும், சூப்பர்வைசர் நாகேந்திரன் அண்ணனும். பிறகு சூப்... சொன்னார்..
Ok Elvin next time don’t tell like that, Call him ‘Killergee’
No…
Why ?
Continue அத்தான் only
 
அண்ணன் சூப்பர்வைசர் நாகேந்திரன் தலையில் அடித்துக் கொண்டு கில்லர்ஜி எல்லாம் அவன் செயல் நான் வர்றேன் நீங்கதான் இவளுகளை சமாளிக்கணும் போயே.... விட்டார். நான் மீண்டும் தலையில் கை வைத்து குனிந்து உட்கார்ந்தேன், ’’டங்’’ என ஒரு சத்தம் நிமிர்ந்தால் ஸ்ரீலங்கா மெங்க்ளா எனது தலையில் கொட்டியதே அந்த சத்தம்.
 
ஐய் ?
ஏன் ? Language of Sin gala From Sri Lanka
மெங்க்ளா என்னை முறைத்து விட்டு...
ஹெட்டே, வரேங் உம்பவே....
நாளைக்கு வா உன்னை.....
மெங்க்ளா போயே... போயி....
பிலிப்பைனி ரோஸ்லினும், எல்வினும் ஸ்ரீலங்கா மெங்க்ளா பேசியது ஒன்றும் புரியாமல் ’’திரு திரு’’ என முழித்துக் கொண்டு நின்றனர்.
 
மறுநாள் முதல் நானும் எவ்வளவோ முயன்றும் வடிவேல் பாணியில் சொன்னால் முடியலை பிலிப்பைனிகள் அனைவரும் என்னை அத்தான் என்று சொல்வதை நிறுத்த முடியவில்லை அதற்கு அவர்கள் சொன்னது.
 

நாங்கள் பிழைப்பு தேடிவந்த இந்த நாட்டில் எவ்வளவோ இந்தியர்களிடம் பழகி இருக்கிறோம் யாருமே எங்கள் மொழி தகாலனை பேசியதில்லை அதேநேரம் எங்கள் நாட்டில் படிக்க, பிழைக்க வந்த இந்தியர்கள் கூட தகாலனை விரும்பாமல் ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள் ஆனால் நீ ஒருவன்தான் தகாலனை குறுகிய காலத்தில் எங்களோடு பழகி பேசுகிறாய், அது மட்டுமல்ல எங்களில் பலருக்கும் நீ அரபு பேச பழகி கொடுத்துள்ளாய் ஆகவேதான் நீ தப்பான அர்த்தத்தோடு பேசினாலும் எங்களிடம் தப்பாக நடந்து கொண்டதில்லை அதனாலதான் நாங்க எல்லோருமே உன்னை நேசிக்கிறோம் நீ ரொம்ம்ம்ம்ம்ப நல்லவேன்.....
 
என்று நெகிழ வைத்து விட்டார்கள் கடைசியில் எனது நெடுநாளைய முயற்சியில் அரசாங்க வேலை கிடைக்க சட்டென குரங்கு போல தா... இல்லை சிங்கம் போல பாய்ந்து விட்டேன் கம்பெனியை விட்டு... அத்தோடு அவர்களோடு பழகும் வாய்ப்புகள் குறைந்து, குறைந்து தகாலன் பேசும் வாய்ப்பும் குறைந்து, குறைந்து நின்றும் விட்டது
 
எப்படியோ திசை மாறிப்போக வேண்டிய எனது வாழ்வை அண்ணன் திரு.நாகேந்திரன் அவர்களின் நல்ல மனதால் விளையாட்டாக நான் செய்த தவறை கன்னட மேலாளருக்கு செல்ல விடாமல் மூடி மறைத்து தமிழனான என்னை காப்பாற்றிய  தமிழ் அண்ணனை நான் கடைசிவரை மறவேன் என்பதை இங்கு நினைவு கூர்கிறேன்..
 
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு
குறள் எண் - 110
 
என்ற வள்ளுவனின் குறளை
எனது இறுதி மூச்சுவரை மறவேன்...
 
அருமை நண்பர் திரு. ராஜமாணிக்கம் ஊர் நைனாமரைக்கான் தாங்கள் எங்கு இருக்கின்றீர்கள் ? உங்களை பார்த்து இருபத்து ஐந்து வருடங்கள் இருக்குமே.. உங்களையும் நான் மறக்க இயலுமா ? இதோ இங்கும் சொல்கிறேன் நன்றி
 

அதான் நன்றி சொல்லி பதிவு முடிஞ்சு போச்சுல கீழே போயி பதிவு ஸூப்பரா இருந்துச்சுனு கருத்துரை எழுதிட்டு போகாமல் ஏன் திரு திருனு முழிச்சுக்கிட்டு நிற்கிறீங்க ? ஓஹோ நம்ம அப்பாவி கில்லர்ஜியை ஸ்ரீலங்கா மெங்க்ளா செல்லமாக ’’டங்’’ கொடுத்துட்டு சிங்களத்துல திட்டிட்டு போனது ஏன் அப்படீனா ? ஏங்க நீங்க வேற பொழைச்சுக் கிடந்தா... அடுத்த சந்தைக்கு பார்க்கலாம்.
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
ChavasRegal சிவசம்போ-
நமக்கு யாரும் இப்படி சிக்கலையே...?

31 கருத்துகள்:

 1. முதல் புகைப்படம் போன புதிதில் எடுத்தது சீலா மீன் மாதிரி இருந்தேன், அடுத்த மூன்று மாதத்தில் நெத்திலி கருவாடு போல ஆனேன் (இரண்டாவது, மூன்றாவது படம்) வெயிலில் போட்டு வதக்கி விட்டனர், அதில்தான் தெரிந்து கொண்டேன் மொழியறிவு அவசியம் என்பதை... -கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
 2. மீசை குறைவாய் இருந்திருந்தாலும் அது ஒரு அழகாய் இருக்கிறீர்கள்.  பேகி பேண்ட்ஸ் போட்டு கலக்கலாய் இருக்கிறீர்கள் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி பதிவைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.
   இன்னும் படிக்கவில்லையோ... ?

   நீக்கு
  2. பதிவை படிக்காமல் கமெண்ட் போடும் வழக்கம் என்னிடம் ஒரு நாளும் இல்லை ஜி!  படித்து விட்டேன்.  பிலிப்பைனி பெண்களின் அலசிப்பார்க்கும் தன்மை தெரிந்து கொண்டேன்.  நல்லவர் யார், கெட்டவர் யார் என தெரிந்திருக்கிறது அவர்களுக்கு.

   நீக்கு
  3. தங்களது மீள் வருகைக்கு நன்றி ஜி

   நீக்கு
 3. பதிவை ரசித்தேன். நாம் எவ்வளவு கள்ளங்கபடமில்லாமல் பழகுகிறோம் என்பது பெண்கள் நம்மீது கொண்டிருக்கும் அன்பை வைத்துப் புரிந்துகொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே மிகச் சரியாக கணித்து இருக்கிறீர்கள். அதிலும் பிலிப்பைன்ஸ் பெண்கள் இப்படித்தான். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. உண்மையான அன்பை அறிபவர்கள் அரிது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி உண்மைதான். வருகைக்கு மிக்க நன்றி

   நீக்கு
 5. முடி கொண்டான் படங்களை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 6. என்னைய ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாய்ங்கையா சொல்லிட்டாய்ங்க!!!!!

  நல்ல நட்புகள், கில்லர்ஜி. அதற்குக் காரணம் உங்களின் ஒழுக்கமும்தான். அதனால்தான் இத்தனை உரிமையோடு, அன்பாகப் பழகியிருக்காங்க அத்தனை பெண்களும்.

  சூப்பர்!! ஆனா அதுக்கப்புறம் அந்த நட்புகள் தொடரமுடியாமல் போய்விட்டதே...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஆம் பழகும் விதத்தில்தான் ஒரு மனிதனின் சுபாவம் தெரியும். இதில் அத்தனை பெண்களுமே ஒரே மாதிரி இருந்தது எனது நல்ல நேரம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 7. கில்லர்ஜி எல்லாப் படத்துலயும் நல்லாதான் இருக்கீங்க...அதென்ன காய்ஞ்ச மீன்னு...எல்லாத்துலயும் நல்லா இருக்கீங்க..அதுவும் அந்த முதல் படத்துல பேன்ட் சூப்பர். அந்தக்காலத்து ஸ்டைல்.

  பல மொழிகள் பழக்கம் உங்களுக்கு நல்ல அனுபவம்.

  இப்போது நீங்கள் தேடும் நண்பர் பற்றி வேறு யாரிடமும் தகவல் இல்லையோ? யாரேனும் இதை வாசித்தால் ஒரு வேளை தகவல் கிடைக்குமோ? நீங்கள் முகநூலிலும் கூடத் தேடிப் பார்க்கலாமே கில்லர்ஜி. சீக்கிரமே தொடர்பு கிடைக்கட்டும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக அந்த நண்பர் திரு.ராஜமாணிக்கம் அலைபேசி வராத காலத்திலேயே பிரிந்து விட்டார். (கம்பெனி டிரான்ஸ்ஃபர்) நினைத்தால் ஆளைப் பிடித்து விடலாம்.

   நீக்கு
 8. உங்கள் நல்ல குணத்தை புரிந்து கொண்ட பெண்கள்.
  நல்ல நட்பு நாகேந்தரன் வாழ்க வளமுடன்.
  பழைய படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
  நிறைய மொழி கற்றுக் கொண்டதற்கு பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வருகைக்கும், விரிவான கருத்துக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி.

   நீக்கு
 9. நல்ல அனுபவங்கள் உங்களுக்குக் கிடைத்துள்ளன. உங்களைப் புரிந்து கொண்டார்களே! அது மிகவும் நல்லது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 10. உண்மையான அன்பு புரிகிறது. நன்றி

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. தங்களின் நல்ல குணம், நல்ல நடவடிக்கை அவர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளதே.. அதனால் அவர்கள் உங்களை ஏதும் தவறாக நினைக்க சாத்தியமில்லை என்றுதான் நானும் ஊகித்தேன். அதன்படியே எல்லாம் நல்ல விதத்தில் முடிந்தது. தங்களுக்கு கிடைத்த நட்புறவுகள் நல்ல மனதுடன் அமைந்ததற்கும் இறைவனுக்கு நன்றி.

  இதற்கு முன் அளித்த கருத்து என் கைப்பேசியின் குளறுபடியால் மாயமாகி விட்டது. தாமத வருகைக்கு மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கும் பாராட்டியமைக்கும் நன்றிகள் பல!

   நீக்கு
  2. நல்ல நட்புகள் தொடர்வதற்குக் காரணம் ஒழுக்கமும் அன்பும் தான்..

   நெகிழ்ச்சியான தருணங்கள் நெஞ்சில் நினைவுப் பூக்களாக மலர்கின்றன..

   நீக்கு
  3. வாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி

   நீக்கு
 12. திரு திருன்னு முழிக்கலங்க.... இப்ப உள்ள நண்பர்க்கும் அப்ப உள்ள நண்பர்க்கும் என்ன வித்தியாசமுன்னு யோசிச்செனுங்க......இப்பவும் அந்த நண்பர்கள் தொடர்புல இருக்காங்கலா நண்பரே!!!

  பதிலளிநீக்கு
 13. பணிபுரியும் பெண்களுடான நல்ல நட்பு. அவர்களும் உங்களுடன் மிக இயல்பாகப் பழகியிருக்கிறார்கள்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 14. பட்லதிவு நட்லல்லா இட்லுருந்தது கிட்லல்லர்ஜி சட்லார். ஏதோ எனக்கு தெரிந்த ட்ல பாஷை. மனசுலாயோ. ஷுக்ரியா. will meet you in next post.

  பதிலளிநீக்கு