தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, அக்டோபர் 07, 2022

உயர்ந்த உள்ளம்

   ஏழை எளியவர்களுக்கு உதவுவதற்கு அரசியல்வாதியாகவோ, திரைப்படக் கூத்தாடியாகவோ இருக்க வேண்டும் என்பது இல்லை. பணமும் முக்கியம் இல்லை. மனம் இதுதான் வேண்டும். சுயநலம், வறட்டு கௌரவம் பார்க்காது இருக்கும் உயர்ந்த உள்ளம் வேண்டும். இது எங்கு கிடைக்கும் ? லூலூ சூப்பர் மார்கெட்டிலா ? இல்லை நமது குருதியில் பிணைந்து ஓடுதல் வேண்டும்.

மேலும் பரம்பரை பணக்காரர்களுக்கு இந்த சிந்தனை வராது காரணம் அவர்களுக்கு வறுமையின் கொடுமை தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. திரு.கருணாநிதி அவர்களுக்கு பசியின் கொடுமை தெரியும், திரு.ஸ்டாலினுக்கோ, திரு.உதியநிதிக்கோ தெரியுமா ? வாய்ப்பு இல்லை ராஜா. திரு.டி.ராஜேந்தர் அவர்களுக்கு வறுமை தெரியும், அவரது வாரிசுகள் சிலம்பசனுக்கோ, குறளரசனுக்கோ தெரியுமா ? வாய்ப்பு நஹி ராஜா. திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு வறுமை தெரியும் அவரது மகள்களுக்கு தெரியுமா ? வாய்ப்பு லேது ராஜா.
 
ஆக அனுபவமே வாழ்க்கை, பள்ளிப் படிப்பைபிட அனுபவத்தின் வாழ்க்கை படிப்பே நம்மை செம்மைபடுத்துகிறது. ஆகவே பள்ளிப்படிப்பு தேவையில்லை என்று சொல்வதாக அர்த்தமில்லை. சொல்லப் போனால் இன்றைய படிப்பு தேவையேயில்லை. காரணம் ஓர் ஆடு மேய்க்கும் மனிதன் தனது பட்டறிவால் உணர்ந்து பிறகு ஆடுகளை பெருக்கும் தொழில் வித்தையை அறிந்து பெரிய செல்வந்தனாக முடிகிறது. நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் பட்டதாரியோ திரைப்படக் கூத்தாடிக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டு திரிகிறான்.
 
இன்று கிராமங்களில்கூட ரசிகர் மன்றம் என்ற அமைப்பு இருக்கிறது. இவர்களின் தொடக்கம் எது ? கல்லூரிதானே... மாணவர்கள் எல்லோருமே இங்குதான் கூடி விவாதித்து சங்கம் அமைக்கின்றார்கள். இதை ஆசிரியர்கள் கண்டித்து நல்வழிப்படுத்தலாமே ? நாம் இப்படியா ஆசிரியர்களை ஆதரிக்கின்றோம் ? இல்லையே... பையனைத் தொட்டே கையை வெட்டிப்புடுவேன் என்று பிள்ளைகள் முன்பே பேசிய பெற்றோரை பார்த்து இருக்கிறேன். இதோ அதன் பலன்.
 
மாதா, பிதா, குரு என்று தெய்வத்துக்கு முன்பானவர் என்று நாம் படித்து விட்டு இப்போது நாமே வறம்பு மீறலாமா ? நமக்கு இருப்பதே ஒரேபிள்ளை என்ற வெட்டிப்பாசம். ஆசிரியர்களும் இப்போது கை விட்டு விட்டார்கள். தனது கடமை போதிப்பது மட்டுமே... ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் அவர்கள் பொருப்பு நீதி போதனை என்பது இப்பொழுது இருக்கிறதா ? பிறகு எப்படி வாழ்க்கையில் ஒழுக்கம் வரும் ?
 
இதோ கீழ்காணும் காணொளியில் இருப்பவரின் படிப்பை கேளுங்கள் தலை சுற்றுகிறது உதவி தமிழ்ப்பேராசிரியர். தானுண்டு, தனது வாழ்க்கையுண்டு என்றில்லாமல். விடுமுறை தினங்களை எப்படி கழிக்கின்றார் ? பாருங்கள். இதற்கு எத்தனை உயர்ந்த உள்ளம் வேண்டும் ? நாம் இவரை எல்லாம் அரசாள்வதற்கு வாய்ப்பு கொடுத்தால் நாடு எப்படி இருக்கும் ? என்று கனவு காண்கின்றேன். நிச்சயமாக ஏழைகளின் வாழ்வு மலரும்.
 
சுமார் பதினேழு வருடங்களாக இந்த சேவையை தொடர்ந்து செய்து வருகிறார் என்றால் சாதாரண காரியமல்ல... இவரது உண்டியலில் பணம் போடுபவர்கள் சும்மா போட்டு போகக் கூடாதா ? இவர்களை படிக்காத கூமுட்டைகளாகவே நான் பார்க்கிறேன். ஓர் ஆசிரியரை எப்படி மதிக்க வேண்டும் என்பது தெரியாத ஜடங்கள். இவரைப் போன்ற மாமனிதர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும்.
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
காணொளி

35 கருத்துகள்:

  1. நல்ல மனிதர்.பாராட்டுவோம், போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    அருமையான மனிதர். கற்ற கல்விக்கும், பெற்ற உத்தியோகத்திற்கும் சிறிதும் கர்வம் ஏதும் கொள்ளாமல் இந்தப்பணி செய்து வருவது ஆச்சரியம்தான்.! அவரைப் பாராட்டுவோம். காணொளி பார்த்தேன். பிறகு கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஆம் இப்படிப்பட்ட மனிதர்களை காண்பது அரிது.

      நீக்கு
  3. நல்ல ஆசிரியர் . வணக்கத்திற்கு உரியவர்.
    வணங்கி வாழ்த்துவோம்.
    அந்த ஆசிரியர் சும்மா போடும் காசை ஏற்று கொள்ள மாட்டார் என நினைக்கிறேன்.
    அதனால் அவரிடம் செருப்பை துடைத்து கொண்டு உதவும் நல் உள்ளங்கள் காசு போட்டு விட்டு போகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அவர் தனக்காக செய்தால் பணத்தை வாங்காமல் இருக்கலாம்....

      இது பொதுசேவை பணத்தை உண்டியலில் போட்டு விட்டு போகலாமே... தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. பொதுசேவைக்கும் வேலை செய்துதான் பொருள் ஈட்ட வேண்டுமென்பது அவரின் உயரிய குறிகோள். பொது சேவைக்கு உண்டியல் வைத்து கொண்டு சும்மா உட்காராமல் சேவை செய்து காசு பெறுகிறார் உயர்ந்த மனிதன் அவர்.

      நீக்கு
    3. உயர்ந்த மனிதர் அவர்.

      நீக்கு
    4. இருக்கலாம் தங்களது மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  4. போற்றுதலுக்கு உரிய மனிதர்

    பதிலளிநீக்கு
  5. புதுமையான சிந்தனை!
    உண்மையான உதவும் கரங்கள் அவருடைய கரங்கள்!
    மனதார வாழ்த்துவோம்!

    பதிலளிநீக்கு
  6. அருமையான பணி... அந்த பேராசிரியருக்கு வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  7. வாழ்த்துகள்/பாராட்டுகள். தொண்டு தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  8. இவரைத்தான் கையெடுத்து வணங்க வேண்டும்..

    வாழ்க ஐயா..

    பதிலளிநீக்கு
  9. விருது இன்னும் டாமில் நாட்லருந்து கொடுக்கலை..

    அவரிடமிருந்து கட்டிங் கேட்காததே பெரிய விசயம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி இவரிடம் சாலையில் நிற்பதற்காக... லஞ்சம் கேட்காத வரையில் நன்று.

      நீக்கு
  10. ////திரைப்படக் கூத்தாடியாகவோ// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உப்பூடிச் சொல்லப்பிடாதாக்கும் கில்லர்ஜி:)).. பிக்கோஸ் இந்தியாவுக்குப் போய் வந்ததிலிருந்து நானும் நடிக்கப்போகலாமோ எனும் ஐடியாவில இருக்கிறேனாக்கும்:))).. ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா...
      //இந்தியாவுக்குப் போய் வந்ததிலிருந்து நானும் நடிக்கப் போகலாமோ எனும் ஐடியாவில இருக்கிறேனாக்கும்//

      அப்படியொரு நிலைமை வந்தால் நான் உகாண்டாவில் செட்டிலாகி விடுவேன்.

      நீக்கு
    2. ஆஆஆஆஆங்ங்ங் கில்லர்ஜி, உகண்டாவுக்கு மட்டும் இனிப் போயிடாதீங்கோ:), பிக்கோஸ் உங்கட உகண்டா கொழுந்தியாழுக்கு கல்யாணம் ஆச்சாம் என பிபிசில படிச்சேன், இனிப்போய், நல்லாப் போய்க் கொண்டிருக்கிற குடும்பத்தில குழப்பத்தை உண்டுபண்ணிடாதீங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
    3. கொழுந்தியாளுக்கு கல்யாணம் ஆயிடுச்சா ?

      ஐயோ வடை போச்சே...

      நீக்கு
  11. வீடியோப் பார்த்தேன், நம்ப முடியவில்லை ஏதோ எடிட் பண்ணிப் போட்டிருப்பார்களோ எனக்கூட எண்ண வச்சுது. உண்மையில், வறுமையாக இருப்போர் தான் இப்படி அதிக பொதுச் சேவை செய்கிறார்கள்.. அதனாலதான் அவர்கள் முன்னேறாமலேயே இருக்கினமோ என்னவோ.. ஆனா, கோடி கோடியாகச் சம்பாதிப்போர், கீழே உள்ளவர்களைக் கவனிப்பது குறைவு, அப்படிக் கவனிச்சுச் சேவை செய்வோரும், தமக்குப் புகழ் கிடைக்கும் மக்கள் கூட்டம் தமக்கு கூடும் என்றெல்லாம் ஒரு சுயநல நோக்கத்துடனேயே செய்வதுபோல தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எடிட் செய்திருப்பது உண்மை அது படத்தொகுப்புக்கான அவசியம்.

      ஆனால் நிகழ்வு உண்மைதான். உங்கள் அங்கிள்கள் எவ்வளவு பேர் திரைத்துறையில் இருக்கிறார்கள் கொஞ்சம் எடுத்து சொல்லலாமே...

      நீக்கு
  12. கில்லர்ஜி.. உங்கட 1002 ஆவது போஸ்ட்டுக்கு வாழ்த்துக்கள்..

    ஆயிரத்தைவிட ஆயிரத்திரண்டு தான் பெரீசு தெரியுமோ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
      இது 1003-வது பதிவு
      வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  13. கில்லர்ஜி அன்று இட்டிருந்த கருத்து போகவே இல்லை போல...இங்கு வந்தது போலத் தெரிந்தது ஸ்பாமிலும் இல்லை போல!!! என்னவோ போங்க இந்த ப்ளாகர்...

    இப்பதிவை அன்றே படித்துவிட்டேன் அதாவது நான் இணையம் வந்த அன்றே...

    மிகவும் உயர்ந்த உள்ளம் படைத்த மாமனிதர். அதுவும் கடைசில சொல்லிருக்கீங்க பாருங்க அந்தக் கருத்தை டிட்டோ செய்கிறேன்.

    ஆனால் ஒரு வேளை அவர் அப்படிச் சும்மா வாங்குவதை விரும்பவில்லையோ என்றும் தோன்றுகிறது.

    எல்லாத் துறைகளில் இருப்பவர்களும் நல்லது செய்கிறார்கள்தான். சிலர் தங்கள் வரியைக் குறைத்துக் கொள்ள....சிலர் புகழுக்காக, சிலர் புண்ணியத்திற்காக(இதுவும் ஒரு வகை எதிர்பார்ப்போடு செய்வதுதான்...) சிலர் பரிகாரம் என்று....

    ஆனால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யும் இவ்வகை மிக மிக உயர்ந்த விஷயம், கில்லர்ஜி!

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்துரை வேறொன்றுமில்லை. ஆம் தன்னலம் கருதாத உள்ளம்தான் இவரைப் போன்ற மாமனிதர்கள் வாழ்த்துவோம். தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  14. உள்ளத்தால் உயர்ந்தவர் வாழ்க. போற்றுகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது வருகைக்கும், கருத்தை பதிவு செய்தமைக்கும் நன்றி

      நீக்கு