அன்னலட்சுமி
அம்மா இந்த வார்த்தையை நகரின் காய்கறி மார்க்கெட்டில் உச்சரிக்காதவர்களே இல்லை.
சரியாக
12.00 மணிக்கு வந்து விடுவார் அன்னக்கூடையுடன்... மிகவும்
குறைந்த விலையில் மூன்று வகை கூட்டுகளுடன் தட்டில் வைத்து தருவார் இதை சாப்பிட்டு
காலம் ஓட்டுபவர்கள் நிறைய நபர்கள் இருக்கின்றார்கள். இதில் குடும்பம்
இல்லாதவர்களும் உண்டு.
கேட்காமலேயே சாப்பாட்டை அள்ளிக்
கொட்டுவார் அன்னலட்சுமி அம்மாள். பணம் கொடுத்தால் மட்டுமே வாங்குவார். இருப்பினும்
யாரும் பணம் கொடுக்காமல் செல்வதில்லை. காரணம் அம்மாவின் உபசரிப்பு அப்படி.
அம்மாவுக்கு ஒரு மகன் அவனும் மனைவியின் பேச்சைக் கேட்டு வெளியே போகச் சொல்லி
விட்டான். கணவரும் இறந்து பதினைந்து ஆண்டுகள் ஆகின்றது. வேறு வழியின்றி ஒரு சிறிய
வீட்டை வாடகைக்கு எடுத்து இப்படி சமைத்து நாலு பேரை சாப்பிட வைத்து ரசிப்பதில்
இவருக்கு ஓர் இன்பம்.
ஏம்மா விலையை கூட்டி விற்க வேண்டியதுதானே ? என்று யாராவது கேட்டால் எனக்கு எதுக்குப்பா பணம் ? இது வரவுக்கும், செலவுக்கும் சரியா போகுது. மீதப்பணம் எதற்கு ? நான் நாளைக்கு போயிட்டா... என்னை தூக்கிப்போட
நீங்கள்லாம் இருக்கீங்க இது போதாதா ? எனக்கு பணம் வேண்டாம்ப்பா.. இருந்தா கொடுங்க இல்லைனா
நாளைக்கு கொடுங்க முடியலைனா அதுவும் வேணாம்.
மார்க்கெட்டில் இவருக்கு அன்னமிட்டகை என்ற பெயரும் உண்டு.
இங்கு கூலி வேலை செய்யும் மதியழகன் இவனுக்கு குடும்பம் இல்லை, பத்து வருடங்களுக்கு முன்பு நாகபட்டிணத்திலிருந்து
வந்தவன் இந்த காய்கறி மார்க்கெட் வந்தவன் வேலை இல்லாமல் நின்றபோது அன்னலட்சுமி
அம்மாதான் அழைத்து சோறு போட்டார். தனது மகனைப் போலவே இருப்பதால் அவனிடம்
எப்பொழுதும் பணம் வாங்க மாட்டாள் காரணம் தனது மகனே சாப்பிடுவது போன்ற உணர்வு.
திடீரென்று அன்று அன்னலட்சுமி அம்மாள் வரவில்லை என்ன
ஏதென்று விசாரிக்க அருகிலிருந்த வீடு சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது. அவர்
காலையிலேயே இறந்து விட்டார் என்பது... எப்படியோ ஒரு நம்பர் கிடைக்க மகனுக்கு
அழைத்தால் அது ஸ்விட்ச் ஃஆப் என்றது. வேறொரு நம்பரை தொடர்பு கொண்டபோது மருமகள்
எடுத்து நாங்கள் திருப்பதி கோயிலில் இருக்கிறோம் வர நான்கு தினங்களாகும் என்று
சொல்லி கட் செய்து விட... உடன் காய்கறி மார்க்கெட் ஊழியர்கள் அனைவரும் பணம் வசூல்
செய்தார்கள். எல்லா வேலையும் நடந்தது.
மார்க்கெட் முழுவது கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டினார்கள்.
காரியங்கள் யார் செய்வது ? என்ற கேள்வி வந்தபோது மதியழகன்
முன் வந்தான் நான் செய்கிறேன் என்று மற்றவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல்
சரி ஏதோ நல்லபடியாக முடிந்தால் நல்லது என்று சம்மதித்தார்கள். மாலை ஆறு மணிக்கு
அன்னலட்சுமி அம்மா அன்ன வாகனத்தில் அன்னநடை போட்டு மயானம் புறப்பட்டார். அவரது
ஆன்மா சாந்தியடைய நாமும் பிரார்த்திப்போம்.
இது பெயர்கள் புனையப்பட்ட உண்மை நிகழ்வு.
புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025
கில்லர்ஜி தேவகோட்டை
உண்மைகதை மனதை கனக்க வைக்கிறது, அவருக்கு கஷ்டங்களிலிருந்து இறைவன் விடுதலை அளித்தார்.
பதிலளிநீக்குசில இடங்களில் இப்படித்தான் நடந்து கொண்டு இருக்கிறது. அன்னலட்சுமிகள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு மனபலம், தேகபலத்தை இறைவன் கொடுக்க வேண்டும்.
காலை முதலே பதிவு படிக்க முடியவில்லை. இல்லை இந்த பதிவு என்றது. இரண்டு , முறை வந்து போனேன்.
புத்தாண்டு வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதங்களுக்கு என் அன்பான ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இந்த உண்மைக்கதை மனதை வருத்தியது. வாழ்வில் நல்லவர்களுக்கு உறவில்லை என்பது நிதர்சனமாகி விட்டது. ஆனால், கூட பழகிய நல்லவர்கள் இறுதியில் உறவு போல் வேரூன்றி நின்று அன்னலட்சுமி அம்மாவிடம் காட்டிய பரிவு மெய்சிலிர்க்க வைத்தது. இறுதியில் படிக்கும் போது கண்களில் நீர் துளிர்த்து விட்டது. வாழ்க அந்த நல்ல மனங்கள் என வாழ்த்துவோம்.
நானும் காலையிலிருந்து உங்கள் பதிவுக்கு வரப் பார்த்தேன் இயலவில்லை. இப்போதுதான் உங்கள் வலைப்பூவிற்கு வழி விடுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநேற்றே ஒருமுறை தவறாக அவசரப்பட்டு பப்ளிஷ் ஆகி விட்டது போல. மறுபடி டிராப்டுக்கு சென்றிருந்தது, நான் வந்து பார்க்கையில்!!
பதிலளிநீக்குஅன்னலட்சுமி கதை மனதைத் தொட்டது.
பதிலளிநீக்குஇருப்பவருக்கு ஒரு வீடு. இல்லாதவர்க்கு பல வீடு...
கதையல்ல..
பதிலளிநீக்குமனதைத் தொட்டது..
நல்லவர்கள் எங்கும் உள்ளனர்
உண்மைக் கதை மனதைக் கனக்க வைத்துவிட்டது கில்லர்ஜி.
பதிலளிநீக்குநேற்று வந்ததை மீ ண்டும் எடுத்துவிட்டீர்கள் போலும். வந்து பார்த்தேன்.
கீதா
மனதை உருக வைத்தது...
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்...