தமிழ்
திரைப்படங்களில் எவ்வளவோ கோமாளித்தனமான காட்சிகளைப் பார்த்து வெறுத்து இருப்போம்,
நூறு நபர்கள் மிஷின்கன் கொண்டு சுட்டாலும் கசாநாயகனின்
காலில்கூட குண்டு படாது காரணம் அவ்வளவு கனகச்சிதமாக ஓடுவார். அதிலும் ஒடிக்கொண்டே
தனது கையிலிருக்கும் சாதாரண ஆறு குண்டுகள் உள்ள துப்பாக்கியால் அத்தனை பேரையும்
சுட்டு விடுவது, பிறகு எத்தி விடும்போது அவ்வளவு பேர்களும் வானத்தில் பறந்து போய்
விழுவது. அப்படியே சிலர் ஈட்டியை நெஞ்சில் குத்தினாலும் பிடுங்கி எறிந்து விட்டு
மீண்டும் சண்டை போடுவது, இப்படி நிறைய சொல்லலாம்.
சமீபத்தில் வலையொலியில் ஒரு
தெலுகு டப்பிங் படம் பார்த்தேன் கசாநாயகன் நம்ம பாலகிருஷ்ணாகாரு... மருத்துவமனையில்தான் முதல்
காட்சி தொடங்குகிறது. கண் விழிக்கிறார் மருத்துவர் வரவும் நான் எங்கு இருக்கிறேன் ? என்று கேட்கிறார். நீங்க
கடந்த பதினெட்டு மாதமாக கோமாவில் இருந்தீங்க... இப்பத்தான் கண் விழிச்சீங்க
உங்களுக்கு நல்ல ஓய்வு தேவை அப்படினு சொல்றாரு... முகத்தை பார்த்தால் ஒரு
வாரத்துக்கு முன்பு சவரம் செய்தால் எப்படி இருக்குமோ ? அப்படி இருக்கிறார்.
உடனே அவரு எல்லா வயர்களையும்
புடுங்கி வீசுறாரு.. மருத்துவர்கள் இப்படி எல்லாம் செய்யக் கூடாது என்று சத்தம்
போடுகின்றார்கள். தடுக்க முயல்கின்றார்கள். அதீத மேக்கப்புடன் இருந்த அம்மாவையும்
உடனே முறைத்து பார்க்கிறார். நான் தெலுகுல எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் தெரியுமா ? என்று கேட்பது போல்தான்
எனக்கு பட்டது. உண்மைதானே...
அடுத்த நொடி விலை உயர்ந்த
பைக்கில் பறந்து செல்கிறார். பைக் யாருடையது ? என்று கேட்க நினைத்தாலும்
எனது அனுபவ அறிவையும், சிந்தனைத் திறனையும் கொண்டு நான் ஆலோசித்ததில் மனம்
சொன்னது, பைக் கம்பெனி விளம்பரத்துக்காக ஓசியாகவே வாங்கிட, இயக்குனர் ஐடியா
சொல்லி, தயாரிப்பாளர் வாங்கி கொடுத்து இருப்பார் என்று உண்மைதானே...
கோமாவில் இருந்தவர்
இரயில்வே கேட்டுக்கு வருகிறார், சடக்கென்று பைக்கை ஒடித்து இரயிலை விரட்டி
போகிறார். டிரைவரும் பாலகிருஷ்ணாவை பகைத்துக் கொள்ளக் கூடாது என்று நினைத்தாரோ
என்னவோ ? வேகமாக விரட்டுகிறார்.
ஆனாலும் நம்ம ஆளு பறந்து போய் இரயில் கூரை மீதே ஓட்டிச் செல்கிறார். மின்சார
கம்பியில் பட்டு செத்து விடமாட்டாரா ? என்று நீங்கள் என்னிடம் கேட்க நினைப்பது உண்மைதானே...
வந்தது பாலகிருஷ்ணாகாரு...
என்று அறிந்த மின்சாரக்கம்பிகள். அன்று வேலை நிறுத்தம் செய்தது. ஆனால் இரயிலுக்கு
மட்டும் ரகசியமாக மின்சாரம் கொடுத்தது. சட்டென பிரேக்கை பிடித்த நம்ம ஆளு ஒரே
மிதிதான். இரயிலின் கம்பார்ட்மெண்டுக்குள் நிற்கிறார். இரயில்வே நிர்வாகத்தில்
ஊழல் பெறுகி விட்டது. இவ்வளவு தரக்குறைவான இரயிலை வெளிநாடுகளிலிலிருந்து இறக்குமதி
செய்கின்றார்கள் உண்மைதானே...
மறுநொடி வில்லன் அங்கு
இருக்கிறார். உன்னைத்தான் எதிர்பார்த்து இருந்தேன் என்று சொல்கிறார். பதினெட்டு
மாதமாக இந்த ரயிலிலா ? வேறு வேலைக்கு போகலையா ? என்று மனம் கேட்க
நினைத்தது. ஆனாலும் கையில் ரிவால்வர் வைத்து இருந்ததால், பாலகிருஷ்ணாகாரு மேலுள்ள
கோபத்தில் நம்மை போட்டாலும் போட்டு விடுவான் என்ற பயத்தில் கேட்கவில்லை
உண்மைதானே...
மறுநொடியே நம்ம ஆளு பறந்து,
பறந்து அடித்தார் பாருங்க... அடியாட்கள் இருநூறு பேர்களும் இரயிலை விட்டு
பறக்கின்றார்கள். பிறகு அவர்களின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை. இறுதியாக
வில்லனை அடிக்க வரும் பொழுது அவர் துப்பாக்கியை வைத்து நேருக்கு நேராக
சுடுகின்றார். ஐயோ நம்ம பாலகிருஷ்ணாகாரு செத்துருவாரே என்று எனது மனம் பதை
பதைத்தது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் இல்லையா ? உண்மைதானே...
குண்டு வெளியேறிய மறுநொடி
நம்ம பாலகிருஷ்ணாகாரு... நெஞ்சில் பட்டு தெறித்து வில்லனின் நெஞ்சை துளைத்தது.
கண்ட எனக்கு வந்த கோபத்தில் போங்கடா நீங்களும், உங்க சினிமாவும் அப்படினு
கையிலிருந்த ரிமோட்டை தூக்கி அடித்தேன். அது தலையணையின் மேல் பட்டு எனது மூக்கில்
வந்து அடித்தது. ச்சே எனக்கு வேணும், எனக்கு வேணும் என்று வடிவேலு சொன்ன மாதிரி
மூக்கு புடைத்து நின்றேன். எப்படித்தான் இந்த ஆந்திர மக்கள் இவ்வளவு வருடங்களாக
திரைப்படம் பார்க்கின்றார்களோ... தேவுடா...
கில்லர்ஜி தேவகோட்டை
சிவாதாமஸ்அலி-
அவங்கே...
திரைக்கு சூடம் காண்பிக்கிற பரம்பரையில் வந்தவங்கள்ல...
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை.
/குண்டு வெளியேறிய மறுநொடி நம்ம பாலகிருஷ்ணாகாரு... நெஞ்சில் பட்டு தெறித்து வில்லனின் நெஞ்சை துளைத்தது. கண்ட எனக்கு வந்த கோபத்தில் போங்கடா நீங்களும், உங்க சினிமாவும் அப்படினு கையிலிருந்த ரிமோட்டை தூக்கி அடித்தேன். அது தலையணையின் மேல் பட்டு எனது மூக்கில் வந்து அடித்தது. ச்சே எனக்கு வேணும், எனக்கு வேணும் என்று வடிவேலு சொன்ன மாதிரி மூக்கு புடைத்து நின்றேன். /
ஹா ஹா ஹா. படித்து ரசித்தேன். உண்மைதானே... உண்மைதானே.. என நீங்கள் கேட்டவை அனைத்தும் ரசிக்க வைத்தது. நல்ல நகைச்சுவை பதிவு.
நம் பொழுது போவதற்காகத்தான் இப்படி படங்களை பார்க்கிறோம். அது உண்மைதானே..! :)) பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எப்படியோ நீங்களும் பாலகிருஷ்ணன் நடித்த படத்தை பார்த்து விட்டீர்கள் .
பதிலளிநீக்குநன்றாக விமர்சனம் செய்து விட்டீர்கள்.
நடைமுறை வாழ்க்கையில் முடியாதவற்றை சினிமாவில் காண்பிக்கபடும் போது அதை விரும்பும் மக்கள் இருக்கும் வரை இது போல சினிமாக்கள் வந்து கொண்டுதான் இருக்கும்.
ஆந்திராவில் வன்முறை காட்சிகள் அதிகம் தான். இப்படி எல்லாம் நடக்குமா? என்று பார்க்கும் போது பயமாக இருக்கும்.
மிகவும் ரசித்துச் சிரித்த பதிவு இது. தெலுங்கு படங்களே நடைமுறையை மீறி எடுக்கப்படுபவை. அவைகளைக் காப்பி அடித்துத்தானே தமிழில், கதாநாயகன் ஒரு குத்து விட்டால் பதினைந்து பேர் பறந்து பரலோகம் போகின்றனர்.
பதிலளிநீக்குநல்லவேளை நீங்கள் படம் பார்க்கும்போது நான் வரவில்லை. வந்திருந்தால் என்னிடமும் வீரத்தைக் காண்பித்துப் பார்த்திருப்பீர்கள்
சிரித்து விட்டேன். தமிழ்ப் படங்களும் குறையாமல் நகைச்சுவைக் காட்சிகளை வைத்து வருகின்றன!
பதிலளிநீக்குஹாஹா... பல தெலுங்கு படங்கள் இப்படியானவை தான் - அதிலும் குறிப்பாக பாலகிருஷ்ணா நடிக்கும் படங்கள்! உங்கள் பதிவை ரசித்தேன்.
பதிலளிநீக்குஅவரின் படங்கள் அனைத்தும் இப்படித்தான் இருக்கும்...
பதிலளிநீக்குநம்மை எரிச்சலின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் இத்தகைய படங்கள். ஒல்லிப்பிச்சான் சித்தார்த் கையை நீட்டுகிறார், வாட்டசாட்டமான வில்லன்கள் பறக்கிறார்கள்.
பதிலளிநீக்கு