தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜனவரி 08, 2025

இருளை விட்டு வெளியேறு...


ணக்கம் நட்பூக்களே... வாழையடி வாழையாக இவர்கள்தான் இந்த நாட்டை ஆளவேண்டுமா ? மண்ணின் மைந்தர்களான நாமெல்லாம் ஆளக்கூடாதா ? நாமேன் இன்னும் இந்த வாரிசு அரசியலுக்குள் சிக்கி நம்மை மட்டுமல்ல நமது சந்ததிகளையும் சீரழித்து வாழ்கிறோம் ? இது மன்னர்கள் ஆட்சி இல்லையே.. பிறகு ஏன் நாம் சிந்தித்து வெளியேற முயலவில்லை ? நாம் இன்னும் தாமதித்தால் விரைவில் வடகொரியாவைப் போல் கொத்தடிமைகளாக வாழவேண்டிய நிலை வரலாம்.
 
அரபு நாடுகளில் மன்னர் ஆட்சிதான் நடக்கிறது மக்களிடம் எந்த எதிர்ப்பும் இல்லை காரணம் மக்களுக்கு வேண்டிய அனைத்தையும் அரசே செய்து கொடுக்கின்றது. நமது நாட்டில் அரசியல்வாதிகளின் வாரிசு அரசியல்வாதியாகவும், கூத்தாடிகளின் வாரிசு கூத்தாடிகளாகவும் தொடர்ந்து வாழ்வதுதான் சனாதனமா ? இன்றைய வாழ்வில் சாதாரண ரூபாய் ஐநூறு இதற்காக வாக்களிப்பது மடத்தனம் இல்லையா ?
 
நாம் பிறநாடுகளைப் பார்த்து உடையணிகின்றோம், அவர்களைப் போல் மது அருந்துகின்றோம், இரவு விடுதிகளில் நடனம் ஆடுகின்றோம், மேலும் கலாச்சாரம் மறந்து பிறர் மனைவியரோடு தெரிந்தே மாற்றி வாழ்ந்து கொள்கின்றோம் ஆனால் வாக்களிப்பது மட்டும் பழைய பண்டாரமாக இருப்பது ஏன் ? அன்றாவது படிக்காதவர்கள் அதிகம் இன்று எல்லோருமே பட்டதாரிகள். நாம் படித்ததின் அர்த்தம் என்ன ? நாளைய இந்தியாவின் தூண்கள் என்றும் சொல்லப்படும் மாணவர்களே... மாணவிகளே... சற்றே சிந்தியுங்கள்.  
 
நாம் மட்டும் கூலித்தொழிலாளியாக வாழவேண்டுமா ? நமது முன்னோர் கண்ட பழைய பொற்காலம் மீண்டும் வருமா ? என்று ஏங்க வேண்டாம் வரவைப்போம். நமக்காக அல்ல நாளைய நமது சந்ததிகளுக்காக... நேற்று என்பது கனவு, நாளை என்பது உத்திரவாதம் இல்லை, இன்றே நம் கையில் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு. வா வாழ்ந்து பார்க்கலாம்.
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
சிவாதாமஸ்அலி -
குடிகார கூதரைகளையும், கூத்தாடிகளின் அடிமைகளையும் நாடு கடத்தினால் மாற்றம் வரும்..
 
சாம்பசிவம்-
எல்லாப்பயலும் அரசியல்வாதிகளின் வாலைப்புடி வாலைனு வாழ்றாங்கே... மாற்றம் எப்படி வரும் 

3 கருத்துகள்:

  1. ஊ...ஹூம்...    இதெல்லாம் செவிடன் காதில் ஊதும் சங்குதான்.  மக்கள் மாறமாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    நல்ல பதிவு. தங்கள் எண்ணங்கள் புரிகிறது. கால மாற்றத்தினால் நாகரீகமும் மக்களிடையே மாறி விட்டது உண்மைதான். ஆனால், மக்கள் மனங்களும் மாற வேண்டுமே..! பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. ஆதங்கம்.... ஆனால் இங்கே ஒன்றும் மாறப்போவதில்லை ஜி. மக்கள் மாறுவதற்கு தயாராக இல்லை எனும்போது எத்தனை கதறினாலும் ஒன்றும் பலனில்லை.

    பதிலளிநீக்கு