திரைப்பட நடிகர்களுக்கு நீங்கள் கண்டிப்பாக இந்த
ஏரியாவுக்கெல்லாம் வந்து படிக்க மாட்டீங்க... எனக்கு நல்லாத் தெரியும், இருந்தாலும்
என் மனதில் உள்ளதை கொட்டிவிட (கழட்டி) ஆசை, இந்த ரசிகர் மன்றம் அப்படின்னு
சொல்லிக்கிட்டு எந்த பொழப்பையும் பார்க்காம, உங்களுக்கு, கட்டவுட் வைக்கிறதும்,
பாலாபிஷேகம் செய்யிறதும், அப்புறம் உங்களிடம் இதையே காரணமாவச்சு உங்களை சீட்டிங்
போடுறதும்னு திரியிறவங்களை, நம்பாதீங்க... ஏன்னா உங்களுக்கு மவுஸ் உள்ளவரைதான்
இவங்கே இப்படி இருப்பாங்கே அப்புறம் அடுத்த நடிகரை தேடிப் போயிடுவாங்கே...
எனக்கு இதுதான், அம்மா, அப்பா, நிலா,
சூரியன், வானம், நிலம், தண்ணீர், நெருப்பு, மரம், மல்லிகைப்பூ, கள்ளிச்செடி,
குறிஞ்சிமலர், அரளிவிதை என எனக்கு விபரம் தெரிந்த நாள்முதல் இந்த மாதிரியான
செயல்களில் நான் ஈடுபட்டதில்லை, காரணம் எனது வளர்ப்பு அப்படி.
உங்க எல்லோருக்கும் தெரியும் ராமராஜன்
அப்படின்னு ஒரு கிராமத்து ராஜன் இவரு, திருச்செந்தூரின் கடலோரத்தில் பாராளுமன்ற
தொகுதிக்குகூட நின்று ஜெயித்தாரு, எல்லா தாய்மார்களுக்கும், நல்லாத் தெரியும், இவரு
பாட்டுப்பாடியே பால் கறக்கிறதுல (பசுமாட்டிடம்) வல்லவரு, நல்லவரும்கூட அவரு மிகபெரிய அளவில் பிரபலமாகி இருந்தவரு, பிரமாண்டமா
கல்யாணம் செய்தாரு, பிரமாதமா ரெட்டை பெண் குழந்தைகள் பெற்றாரு, பிரமாண்டமான மானாமதுரை
கடனா, கட்டியா, கர்த்தனா, தியேட்டரைக்கூட வாங்கினாரு, இவ்வளவு பிரமாண்டமா
வளர்ந்தவரு, இப்ப காணாமல் போயிட்டாரு, அவரு மனைவி நளினமானவரு அவரு மட்டும்,
பிரமாண்டமாயிட்டாரு, (அவரை விட்டு வந்த நேரமோ, என்னவோ) இப்படிப்பட்டவருக்குத்தான்,
எனது நண்பன் ஒருவன் பெயர் சோலையாண்டவர்,
ரசிகர் மன்றம் வைத்து எந்தநேரமும் சென்னைக்கு போறதும், வர்றதுமாக இருப்பான், கிராமராஜனையும் சந்திப்பான், தொழிலில் கவனம்
கிடையாது, அப்பா வைத்துக் கொடுத்த கடையும் காணாமல் போய் விட்டது, (ரா.ரா.போல) இதனால் சொந்த பந்தங்கள் பெண் கொடுக்க யோசித்து,
யோசித்து கடைசிவரை கொடுக்கவில்லை, வேறு வழியில்லாமல் நாடோடிகள் கூட்டத்தில் போய்
கல்யாணம் செய்து கொண்டான், (அவளும் பெண்தானே) அங்கும், இங்குமாய் வாழ்ந்து கடைசியில் அவன் மனைவியும் ஒருநாள் காணாமல்
போய் விட்டாள், (ரா.ரா.போல) இன்று அவன் மட்டும் தனிமரமாய்....
பிறகு ஒருநாள் அவனைப் பார்த்தேன்
உதவி கேட்டான், கேட்ட உதவியும் செய்கிறேன் எனச் சொல்லி அதற்கு முன் அவனிடம்
ஒரு காலத்தில் நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், என்னைப் புழுவைப்போல பார்த்தான்,
அதற்குப் பகரமாக அவனை நாக்கைப் புடுங்கிற மாதிரி நாலுகேள்வி கேட்டேன், பணம்
நாளைக்கு வாங்கிக்கிறேன்னு வீட்டுக்கு போனவன், அரளி விதையை அரைத்து குடிக்கப் போகும்போது....
யாரோ பார்த்து தடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள்.
மறுநாள் நான் போயி ஒன்றும் சொல்லாமல், பணத்தை
கொடுத்து விட்டு வந்தேன், என்றோ காணாமல் போன அவன் முகவரி இன்று காணப்படுகிறது.
CHIVAS REGAL சிவசம்போ-
இவருட்ட, பசின்னு சொன்னா விருந்தை வச்சுட்டு
சோத்துல மலத்தை அள்ளி வச்சுருவாரோ....
VIDEO






